Sunday, August 30, 2009

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1

Consumer Protection Act 1986

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

மீதி தகவல்கள் அடுத்த பதிவில்........

இப்பதிவில் தங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். விளக்கம் கிடைக்கும்.

4 comments:

 1. Please i want to know how do apply ration card

  ReplyDelete
 2. Dear Sir,

  I am using AIRCEL mobile and I registered National Do not Disturb on July 2009 so far I haven't any disturbers but for the past three months I am getting calls and more than 10 SMS per day from the third party. Even now I complained to AIRCEL tee callers but my problem was not cleared.

  I need your advice on this.

  Thanks & Regards,

  R.Balasankar.

  Email. rbalasankar@gmail.com

  ReplyDelete
 3. அன்புள்ள ஐயா அவர்களுக்கு
  நான் 15-01-2011 அன்று Onida 29 True Slim TV வாங்கினான் அது பைதாகி விட்டது ( 3 )
  இலவச சர்வீஸ் பன்னும் போது தான் அது போலி
  என்று தெரிந்தது

  ReplyDelete
 4. அய்யா ,நான் தனியார் நகை அடகு கடையில் நகை அடகு வைத்தேன்.ஒரு மாதம் கழித்து என்னிடம் நாங்கள் வைத்த நகை காரட் குறைவு ஆகவே நகையை திரும்ப எடுத்து கொள்ளுங்கள் இல்லையேல் போலீசில் சொல்லி கேஸ் போடுவதாக மிரட்டினார்கள்.வீட்டுக்கு காலை 6 .45 மணிக்கு வந்து மிரட்டினார்கள்.நான் என்னிடம் பணம் இல்லை கடன் வாங்கித்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் போனில் மற்றும் வீட்டில் வந்து நான் இல்லாதபோது அப்பா மனைவி ஆகியோரை மிரட்டி பயமுருதுகிறர்கள்.நான் என்ன செய்வது.

  ReplyDelete