Thursday, August 20, 2009

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ... பகுதி 2.

இதற்கு முந்தைய பதிவுகளில், நுகவோர் பாதுகாப்பு சட்டம், நீதிமன்றங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் யார் யார் மீது வழக்கு தொடர முடியும் என்பதையும் எப்படி வழக்கு தொடர முன்னோடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங் கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.........

7 comments:

  1. எல்லாமே உபயோகமான தகவல்கள்!
    ரொம்ப நன்றி தல!

    ReplyDelete
  2. நன்றி வால்பையன்!
    தகால்களை நான் தந்தாலும் அதை படிக்க யாரும் இல்லை என்பதுதான் வேதனை. இதுக்கு கூட அரசியல் கட்சிகள் கூலி கொடுத்து கூட்டம் சேர்ப்பது போலத்தான் செய்யனும் போல இருக்கு!

    ReplyDelete
  3. ஐயா.. அப்படி சொல்லாதீர்கள். உங்கள் தகவல்கள் எங்களுக்கு மிக முக்கியமானது. இப்படி ஒரு வெப்சைட் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அப்படி தெரிந்தாலும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முன் வருவதில்லை. நீங்கள் மனம் தொய்வடையாமல் தொடர்ந்து தகவல்களை தாருங்கள். நன்றி. -பரிவர்த்தன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தியாகராஜபுரம். தஞ்சாவூர் மாவட்டம்

    ReplyDelete
  4. மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்று உயர் தர திருட்டு அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இரண்டு பேர் சாப்பிட சென்றோம். ஒரு சாப்பாடு 90 ரூபாய் என்று இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தோம். இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்தோம். இலையை விரித்தார்கள். சாதத்தை வைத்தார்கள். இரண்டு கூட்டு வைத்தார்கள். எங்களை கேட்காமலே இரண்டு கோலா உருண்டைகள் வைத்தார்கள். குழம்புக்காக காத்திருந்தோம்.
    சர்வர் : என்ன குழம்பு வேண்டும் சார்?
    நாங்க : என்ன குழம்பு இருக்கு?
    சர்வர் : குடல், ஈரல், தலகரி, மட்டன் சுக்கா……
    என்று பெரிய பட்டியலயே சொன்னார்.
    நாங்க : அதெல்லாம் வேண்டாங்க நார்மலா நீங்க குடுக்குர குழம்ப குடுங்க.
    சர்வர் : இல்லங்க குழம்பு தனியாதான் வாங்கனும்
    எங்களுக்கு லேசான அதிர்ச்சி.
    நாங்க : அப்போ 90ரூபாய் சாப்பாடு என்பது வெறும் வெள்ளை சாப்பாடுக்கு மட்டும்தானா?
    சர்வர் : ஆமா சார்
    நாங்க : குழம்பு எதுவுமே குடுக்க மாட்டீங்களா?
    சர்வர் : அப்படி இல்ல சார் புலிக்குழம்பு குடுப்போம்.
    நாங்க : அப்ப அதையாவது குடுங்க
    சர்வர் : இல்ல சார் நீங்க தனியா எதாவது குழம்பு வங்குனாதான் அதுவும் குடுப்போம்.
    குழம்பு வகைகள் எல்லாம் 100 150 க்கு மேல். எதை நீங்கள் வாங்குவீர்கள். கூட்டு பொறியலை வேர லைட்டாக நக்கி விட்டோம். இனி எழுந்து போனாலும் சரியாக இருக்காது. பல்லை கடித்துக்கொண்டு ஒரு குழம்பு ஆர்டெர் செய்தோம். அது 140 ரூபாய். வெரும் வெள்ளைச் சோரு 90 ரூபாய். குழம்பு 140 ரூபாய்.
    சர்வர் : உங்களுக்கு என்ன சார் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நாங்க : இல்ல ஒரு குழம்ப நாங்க பிரிச்சுக்குறோம்.
    சர்வர் : இல்ல சார் அது ஒருத்தருக்குதான் சரியா வரும். உங்களுக்கு பத்தாது என்றார்.
    சற்று அமைதியாக இருந்து விட்டு வேறு வழியில்லாமல் இன்னொரு குழம்பை ஆர்டர் செய்தேன். வயித்தெறிச்சலோடு சாப்பிட்டு முடித்தோம். பிறகு சர்வர் பில்லை கொண்டு வந்தார். 480 ரூபாய் இரண்டு சாப்பாடு. 5Star Hotel-ல் கூட இப்படி இருக்குமா என்மது தெரியவில்லை. சர்வரிடம்,
    மிரட்டுரீங்கலேங்க. இதெல்லாம் ஓனர்கிட்ட சொல்ல மாட்டீங்கலா என்றேன்.
    அவர் சலித்துக்கொண்டே சொல்லியாச்சு சார் அதுக்கு மேல நாங்க என்ன சார் பன்ன முடியும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படித்தினார்..
    ஓனரிடம் பில் கொடுக்க சென்றேன். அவரிடம் பில்லை கொடுத்துவிட்டு இதுவரைக்கும் எந்த ஓட்டல்லையும் இப்படி சோற குடுத்துட்டு குழம்பு தனியா வாங்கணும்னு கேள்விப்பட்டதே இல்ல என்றேன். கையை உயர்த்தியபடி இங்க இப்படித்தான் என்று திமிராகவே சொன்னார். பல பேர் சொல்லி இருப்பார்கள் போல. கோபமாகவே சொன்னார். வயிற்றெரிச்சலுடன் வெளியேரி விட்டேன். இன்னும் அடங்க வில்லை. இதை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லலாமா? அல்லது சாதாரண விசயத்தை நான் பெருசு படுத்துகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. சரி FaceBook மூலமாகவாவது ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொள்வோம் என்று இந்த பதிவை ஏற்றம் செய்கிறேன். யாராவது ஒருத்தர் Share செய்தால் கூட வயிற்றெரிச்சல் குறையும் என்று நினைக்கிறேன். இதை பொறுமையாக நன்றி.
    ‪#‎நெற்றிக்கண்_திறப்பினும்_குற்றம்_குற்றமே‬
    சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
    சந்திரன் மெஸ் செல் எண்களான 9842104950 9842118990 என்பதை உங்கள் பதிவில் சேருங்கள்.
    நன்றிகள் பற்பல நட்பிற்கு Ragav Endhiran, itharku yena nadavadikai yedukalam, pathil kurungal ( கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள்) yendra facebook thalathil veliyaki ullathu.

    ReplyDelete
  5. very very useful information sir, useful to write my home works .

    ReplyDelete
  6. sir, we purchased one new machine in calcutta before 10 month back. machine is not working properly still beginning. We call many times to the company representative but still now they will not solve the problem in machine. the cost of machine is 2150250 and another wood grapper cost is 528750. we asked get back our money but they told simply extending the date.

    ReplyDelete
  7. sir vanakm naan oru led tv vangi irukean ipo antha tvla sound varamattuthu custamercareku call panni peasiyum purojanm illai tv vanguna dilardaiyum peasiyum purojanm illai ipo naan enna pannanum sir

    ReplyDelete