Thursday, August 27, 2009



பாராட்டுவோம் !

பெரும்பாலும் நாம் செல்லும் இடங்களில் அதாவது அலுவலகங்களில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் நம்மை மிகவும் கடுப்பேற்றி விடும். சில இடங்களில் கட்டுப்படுத்த முடியாமல், பிரச்சனை பண்ணி விடுவோம். சில இடங்களில், தலைவிதி என நம்மையே நொந்து கொண்டு சிவனே என்று இருப்போம். இந்த சூழலில் ஒரு அதிகாரி மிகவும் சுறு சுறுப்பாக , நமக்கு கால தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, நடை முறை சிக்கல்களை களைந்து செயல்படும் பொழுது நம்மை அறியாமலேயே அவ்ர் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படும். அதை மனத்தளவில் வைத்துக்கொள்ளாமல் அவரை பாராட்டுவது நம் கடமை !
இதில் சுயநலமும் உண்டு. இதனால் அவர் ஊக்குவிக்கப்பட்டு மேலும் செயலாற்ற, அதனால் நமக்கு மேலும் நன்மையே !

இந்த வகையில் என்னை மிகவும் சமீபத்தில் கவர்ந்த ஒருவரை உங்களிடம் சுட்டி காட்டப்போகிறேன்.. அவர்தான் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் நீதிபதி (பிரசிடெண்ட்) திரு. S.A. Sreeramulu., B.Com, B.L அவர்கள். நான் நுகர்வோர் குறை தீர் மன்றங்களின் தீர்ப்புகளை தொடர்ந்து , அதன் வெப் சைட்டில் தினமும் பார்த்து வருபவன்.

அதன் அடிப்படையில், என்னை கவர்ந்தது கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம். வழ்க்குகளை பைசல் செய்யும் வேகம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. உண்மையிலேயே இது ஒரு இமாலய சாதனை !.

நம் நாட்டைப்பொறுத்தவரை எல்லாமே ரெண்டு பொண்ட்டாட்டிகாரன் கதை தான். அவனுக்கு என்ன இரண்டு வீடு என்பார்கள். ஆனால் பாவம் ஒரு வீட்டிலும் சோறு கிடைக்காது. அது மாதிரி சட்டமும் அப்படித்தான். நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும், தகவல் அறியும் சட்டமும் மத்திய அரசின் சட்டங்களாகும். இச்சட்டம் மக்களுக்கு பயனுள்ள சட்டங்களாகும். அமுல் படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. ஆனால் தன் பங்குக்கு மத்திய அரசு அதற்காக ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் மாநில அரசுக்கு பணம் கொடுத்து விடும். மாநில அரசுகள் தனது பங்கு தொகையை ஒதுக்காததுடன், மத்திய அரசு வழங்கிய தொகையையும் பயன்படுத்தாது. இது நம் நாட்டின் சாபக்கேடு. அதனால் பெரும்பாலான மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் போதுமான ஊழியர்கள், கட்டட வசதி, போதுமான் நிதி ஒதுக்கீடு இவை இல்லாமல் இயங்கி வருகிறது. இதில் நீதிபதியாக ( பிரஸிடெண்ட்) பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஆவார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கவுரவ சம்பளம் போன்றது தான். உண்மையிலேயே இவர்கள் சேவை மனப்பாண்மையுடதான் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் ஒரு நீதி மன்றம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் அது அந்த நீதிபதியின் தனிப்பட்ட ஆர்வத்தாலும், ஊழியர்களின் ஒத்துழைப்பலும் தான் என்றால் அது மிகையாகாது.

அந்த பெருமை கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு உண்டு. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில மாதத்திலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது ரிக்கார்டு பிரேக். எனவே மேற்படி நீதிமன்றத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, நீதிபதியவர்கள் வழக்கு விசாரணையில் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. இரண்டு மூன்று முறை முயன்றும் முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் தொடர்பு கொள்ளும் பொழுது, என்னிடம் பேசிய ஊழியர்களிடம் எனது பாராட்டை தெரிவித்துள்ளேன். இன்று நீதிபதி அவர்களிடமே பேசும் வாய்ப்பு கிடைத்தது.

சில தீர்ப்புகள் தமிழில் வெப்சைட்டில் போடப்படுகிறது. அதை படிக்க முடியவில்லை. அவர்கள் என்ன பாண்ட் -ல் போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இன்று காலையில் 11.30 மணிக்கு போன் செய்தேன். எப்பொழுதும் போல ஊழியர்தான் பேசுகிறார் என்று நினைத்து, எந்த பாண்ட் ( FONT) உபயோகப்படுத்த்ப்படுகிறது என்பதை கேட்டேன். எதிர் தரப்பில் பேசியவர் ஐஸ்வரியா பாண்ட் என கூறியதுடன், நான் யார் என்ற விபரத்தையும் கேட்டார்.
என்னைப்பற்றி கூறியதுடன், நீதிமன்றத்தின் சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தேன். அதன் பின், பல முறை தொடர்பு கொண்டும் என்னால் பிரசிடெண்ட் அவர்களிடம் பேசி என் பாராட்டுதலை தெரிவிக்க முடியவில்லை என்ற என் ஆதங்கத்தை கூறினேன்.

அவரோ சிரித்துக்கொண்டே பிரசிடெண்ட் தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார். எனக்கு தலையே சுற்றியது!. வரும் போன் கால்களை அட்டெண்ட் பண்ணுவதும், எதிர் தரப்பில் கேட்க்கப்படும் தகவல்க்ளுக்கு பதிலளிப்பதும் ஒரு நீதிபதி என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதற்குள் அவரே என்னிடம் " நீங்கள் பல முறை போன் செய்து பாராட்டியதாக என்னிடம் கூறியுள்ளனர். உங்கள் பாராட்டுக்கு நன்றி" என்றவர், கோயம்புத்தூருக்கு வந்தால் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அவரிடம் நன்றி கூறி அத்துடன் தொலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. கோயம்புத்தூர் நுகர்வோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!

மீண்டும் சந்திப்போம்.........

2 comments:

  1. படிக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.. நல்ல விஷயம் ..தொடருட்டும் அவர் பணி

    ReplyDelete
  2. கோவை குறைதீர்மன்றத்தில் தற்போது தண்டபானி என்பவர் தலைவர். மிகவும் மோசமான முறையில் விசாரணை செய்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார். இவர் மீது தக்க நடவடிக்கையை எடுத்துள்ளேன். நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர்கள் ஓய்வு பெற்ற பிறகு நியமிக்கப்படுவதால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பென்சனை நிறுத்தி, பதவி உயர்வுகளை தடுக்க முடியாது என்பதால், துணித்து லஞ்சம் வாங்கி கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள் என்பது எனது ஆராய்ச்சி முடிவு.

    மாநில ஆணையத்தில், 2002 ஆம் ஆண்டு வாக்கில் தலைவராக இருந்த ஜெனார்தனன், நுகர்வோர் குழுக்கள் ஆஜராகி வாதாட முடியாது என்று தீர்ப்பளித்ததும், விபச்சார தொழில் செய்யும் வக்கீல்களை வாழ வைப்பதற்குதாம். அவ்வுத்தரவு சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய குறைதீர் ஆணையத்தால் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, அதுவரை நுகர்வோர் குழுக்களுக்கான உரிமை பறிக்கப்பட்டது.

    ReplyDelete