Saturday, August 15, 2009

நம்பிக்கையூட்டும் ஓரு நுகர்வோர் வழக்கு

கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் திரு. A.S. ரவி எனபவர் தொடர்ந்த வழக்கை பற்றி இப்பொழுது பார்க்கலாம். இவர் 22-1-2007 ல் கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு லைன் டெஸ்டர் ( LINE TESTER ) ஒன்றை வாங்கினார். அதன் விலை ரூபாய் 33 /- என கூறி பணத்தை பெற்றுக கொண்டு ள்ளனர். அதற்கான ரசீதும் பெறப்பட்டது. ஆனால் அதன் அட்டை பெட்டியில் " Maximum Retail Price Rs. 32 /- including all taxes ) " என அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியும் அதிகப்படியாக வசூலித்த் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவில்லை.
தன்னிடம் அதிகப்படியாக வாங்கிய ஒரு ரூபாயை திருப்பி தருமாறு 31-1-2007 மற்றும் 11-2-2007 ஆகிய தேதிகளில் கடிதங்களை அனுப்பியுள்ளார். மேற்படி கடையினர் ஒரு ரூபாயை திருப்பியளிக்கவும் இல்லை. கடிதத்திற்கு பதிலும் அளிக்கவில்லை.
பாக்கிங்கில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக எந்த ஒருபொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். இதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில தொழிலாளர் நலத்துறைக்கு என்பதால், அப்பகுதியிலுள்ள தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளருக்கு 22-2-2007 ல் புகார் செய்துள்ளார். அதன் பின் 19-3-2007 ல் நினைவூட்டல் கடிதமும் அனுப்பி யுள்ளார். நடவடிக்கை விபரம் எதுவும் ஆய்வாளரால் தெரியப்படுத்தப்பட வில்லை. எனவே தொழிலாளர் நலத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பித்தார். மேற்படி கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1800 /- அபராதம் விதிக்கப்பட்டதாக, தகவல் அளிக்கப்பட்ட்து. இருப்பினும் ஒரு ரூபாய் கடைக்காரரால் திருப்பி கொடுக்கப்படவில்லை.
எனவே திரு. ரவி தன்னிடம் பெறப்பட்ட அதிகப்படியான தொகையான ரூபாய் ஒன்றை திருப்பியளிக்கவும், நஷ்ட ஈடு மற்றும் வழ்க்குக்கான தொகையை வழங்ககோரியும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை க்குப்பின் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய் ஒன்றை மனுதாரருக்கு திருப்பியளிக்கவேண்டும்.
2. வழக்கு செலவுத்தொகையாக 1000 /- வழங்கவேண்டும்.
3. நுகவோர் நல நிதிக்கு 5,000 /- வழங்கவேண்டும் என கண்ணன் டிபார்ட் மெண்டல் ஸ்டோருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இது எப்படி இருக்கு? செம ஆப்பு !


2 comments:

  1. ஆமாங்க நிறை நிறுவனத்திடம் சொன்ன மாதிரி சர்வீஸ் இல்ல!

    அதுக்கும் எதாவது சட்டம் இருக்கா!?

    ReplyDelete
  2. பல்கலைகழக கட்டணம் படிப்பு மையங்களில் அதிகமாக வசூலிக்கபடுகிறது இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியுமா ? எனக்கு தெளிவு படுத்துங்கள் உங்கள் கருத்துக்கு நன்றி .

    ReplyDelete