Thursday, August 27, 2009

இப்போது நீங்கள் ?

இதற்கு முந்தைய பதிவில், சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் நகலை கொடுத்திருந்தேன். அதற்கு காரணம், நீதிமன்றம் எப்படி வழக்கை பரிசீலிக்கிற்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இப்பொழுது தீர்ப்பின் அடிப்படையில் உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

A. சென்னை, வேளச்சேரியை சார்ந்த K.S. Sriram என்பவர், சென்னை அடையாரி லிருக்கும் விவேக் அன்கோ -வில் ஒரு கெல்வினேட்டர் ரெப்பிரிஜியேட்டர் ஒன்றை வாங்கினார். ஆனால் அது ஆரம்பம் முதலேயே சரியாக வேலை செய்ய வில்லை. எனவே அவர் உடனடியாக் விவேக் அன்கோவின் சர்வீஸ் செண்டருக்கு புகார் செய்தார். அவர்கள் மேற்படி பழுதை சரி செய்ய முடியாது என கூறி விட்டனர். எனவே அவர் சர்வீஸ் செண்டருக்கு ஈ- மெயில் மூலம் புகார் செய்துவிட்டார். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில் எதுவும் கொடுக்காததால், அவர் கீழ் கண்ட கோரிக்கைக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1. இந்த ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்று மாற்றி தரவேண்டும்.
2. மன உளைச்சல் போன்றவைகளுக்காக Rs. 15,000 / - நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
3. வழ்க்கு தொடர ஆகும் செலவுக்கு வழக்கு தொகையாக Rs. 1,000 /- வழங்கவேண்டும்.
மேற்படி மனு ( Complaint ) அதற்கு ஆதாரங்களையும் ( Proof Affidavits ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆதாரங்கள் தீர்ப்பின் நகலில் Complainant Doccuments என குறிப்பிடப்பட்டுள்ள ( EX. A1 to EX. A6) ஆவணங்களின் நகல்களாகும்.

மேற்படி மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர் மனுதாரர்களுக்கு (Opposite Party) நீதி மன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

B. எதிர் தரப்பினர் அதாவது விவேக் அன் கோ, மேற்படி குற்றச்சாட்டைமறுத்து பதில் மனு ( Version ) தாக்கல் செய்தனர். அதில், மனுதாரருக்கு ரெப்பிரிஜி யேட்டர் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தாங்கள் விற்பனையாளர் என்றும், உற்பத்தியாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. எனவே இந்த குறைபாட்டிற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்புக்கு ஆதாரமாக் எவ்வித ஆவணங்களும் ( Proof affidavit - Opposite Party Doccuments ) கொடுக்கப்படவில்லை.

C. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரின் ஆட்சேபணையை, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை மேற் கோள் காட்டி நிராகரித் தது.

1. மனுதாரருக்கு, எதிர் மனுதாரர் பழைய ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்றை மாற்றி கொடுக்க வேண்டும்.
2. நஷ்ட ஈடாக மனுதாரருக்கு Rs. 5,000 /- வழங்கவேண்டும்.
3. நீதிமன்ற செலவாக Rs.1000 /- வழங்கவேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப் பதிவின் மூலம் தாங்கள் வழக்குக்கு தேவையாக எந்தெந்த ஆவணங்களை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும், வழக்கை நீதிமன்றம் எவ்விதம் பரிசீலிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதோடு சில நீதிமன்ற சொற்களையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

நுகர்வோர் வழக்கு எண்:------------------ C C No.
மனுதாரர் ----------------------------------- Compainant.
எதிர் மனுதாரர்------- -----------------------Opposite Party.
மனு ------------------------------------------ Petition.
எதிர் மனு------------------------------------- Version.
ஆதார ஆவண பிரமாண வாக்குமூலம் -- Proof Affidavit.
ஆதார ஆவணங்கள்------------------------- EX ( Exhibit ).

இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தாரளமாக் கேளுங்கள்.

இப்பொழுது நீங்கள் நுகர்வோர் வழக்கு தொடரும் அளவிற்கு விஷயங்களை அறிந்து விட்டீர்கள் !. இப்பொது நீங்கள் பாதி வழக்கறிஞர் தான்.

மீண்டும் சந்திப்போம்.........


4 comments:

 1. You have good teaching skills. The post shows that. It is useful for everybody that you take important words and explain them in Tamil in such a way even common man should/can understand.

  Thanks for that.

  ReplyDelete
 2. தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் இவை இரண்டையும் நாம் தெரிந்துகொண்டாலே நடை முறை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். தாங்கள் தொடர்ந்து இதை படியுங்கள். உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் இது பற்றி சொல்லுங்கள்.

  ReplyDelete
 3. உங்களுடைய விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

  வேறு மாநிலத்தில் நாம் இருக்கும் பொது இந்த சட்டதிட்டங்கள் எந்தளவுக்கு உதவும்.

  ReplyDelete
 4. நண்பர் தாமஸ் அவர்களே!
  தங்கள் வருகைக்கு நன்றி. எனது அனைத்துப்பதிவுகளையும் நீங்கள் படித்திருந்தால், இந்த சந்தேகம் உங்களுக்கு வர வாய்ப்பில்லை. இது மத்திய அரசின் சட்டமாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இது பொதுவானது.ஒரே ஒரு வித்தியாசம் தான் உண்டு. வழக்குகளை அந்தந்த மாநில மொழியில் நடத்த வேண்டும் அல்லது பொது மொழியாகிய ஆங்கிலத்தில் நடத்தவேண்டும். சட்டம் மற்றும் விதிகள் பொதுவானையே!

  ReplyDelete