Thursday, September 3, 2009

உச்ச நீதி மன்ற நீதிபதி தொடர்பான தீர்ப்பு


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே!


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் , 77 வயதான் டால்மியா என்பவர் உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு தகவல் கேட்டு விண்ணப் பித்தார். அதாவது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான தனது புகாரின் மீது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கை என்ன என்பது தான் அவரால் கேட்க்கப்பட்ட விபரம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சட்டத்தின் கீழ் வருபவர் இல்லை. எனவே தகவல் தர இயலாது என பொது தகவல் அதிகாரி மறுத்து விட்டார். எனவே டால்மியா, உச்ச நீதிமன்ற அப்பீலேட் அத்தாரிட்டிக்கு மேல் முறையீடு செய்தார்.
மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே டால்மியா மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் மேல் முறையீடு ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியும் இச்சட்டத்தின் கீழ் வருவதால், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தமாக டால்மியா அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை மனு தாரருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற பொதுதகவல் அதிகாரி அப்பீல் செய்தார். அதை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் " உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும் இச்சட்டத்திற்கு உட்பட்டவர் தான். எனவே டால்மியா கேட்டிருக்கும் தகவல்களை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயக உண்மையை வலியுறுத்தியுள்ளது.

ஜன நாயக அரசு ஊழலற்று செயல் பட வெளிப்படையான செயல்பாடு வேண்டும். அத்துடன் என்ன நடக்கிறது என்பது பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக பல நிர்பந்தங்களின் காரணமாக " தகவல் அறியும் உரிமை சட்டம் " நம் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான, பல ஓட்டைகளுடன் அதாவது பதவியில் இருப்பவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தப்பித்து க்கொள்ள வசதியாக சில பிரிவுகளை உளடக்கியிருக்கிறது. இருப்பினும் சட்ட வாசகங்களின் அர்த்தம் என்பது , "வாதம் மற்றும் வழக்கின் சாராம்சம் இவற்றின் அடிப்படையில் புதிய விளக்கங்கள் பெறும்" என்பதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம்.

" Right to Information Act " என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் ? அதனால் நமக்கு என்ன பலன் ?என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் சந்திக்கிறேன்.............

3 comments:

  1. நியாயமான தீர்ப்பு!

    நீதிபதியாக இருந்தாலும் அவர்கள் மக்களிடம் எவ்வளவு வெளிப்படையாக நடந்து கொள்கிறார்களோ அதை பொறுத்து தானே மக்களிடம் நம்பிக்கை இருக்கும்!

    இவர்கள் மட்டும் என்ன அந்த கால நாட்டாமைகளா?

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  3. http://blog.tamilish.com/pakkam/5 தமிழிஷ்ல போடுங்க. செமயா ஹிட் வரும். - மணி

    ReplyDelete