Friday, December 31, 2010

இவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.                                                                                                                                        
பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் தலித்துகள், சாக்கடை-மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள், இயற்கை மற்றும் அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சுயநலமின்றி கிராமப்பகுதிகளில் ஆசிரியர் பணியை வேலையாக கருதாமல் சேவையாக, கடமையாக செய்துவரும் அரசு, அரசு சார்பு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் இன்று வரை பணி புரியும் அரசு அதிகாரிகள்-மருத்துவர்கள், உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடமில்லாமல் பிச்சைக்காரர்களாக மாறிய பிரஜைகள், போன்றவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!Wednesday, December 15, 2010

சோனியா காந்தி, ராகுல் காந்தி - ரஷ்ய உளவாளிகளா?
டாக்டர். யெவ்கெனியா அல்பாட்ஸ் (Dr.Yevgeniya Albats) என்ற ரஷ்ய பெண் பத்திரிகையாளர் The State within a State: KGB and its Hold on Russia என்ற தன் புத்தகத்தில் சில உண்மைகளை எழுதியுள்ளார். 1991-ல் ரஷ்ய அதிபர் யெல்ட்சின் (Yeltsin) ரஷ்ய உளவு துறைக்கான (KGB) அதிகாரப்பூர்வமாக கமிஷன் ஒன்றை அமைத்தார். அதில் இந்த பத்திரிகையாளர் ஒரு அங்கத்தினர் ஆவார். அங்கத்தினர் என்ற முறையில் கே.ஜி.பி-யின் அனைத்து ரிக்கார்டுகளையும் பரிசீலிக்கும் பொறுப்பும் உரிமையும் உண்டு.

கே.ஜி.பி-ன் தலைமை அதிகாரி "விக்டர் செப்ரிகோவ்" (Victor Chebrikov) என்பவர் டிசம்பர் 1985-ல், சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டிக்கு(CPSU), "ராஜிவ் காந்தியின் குடும்ப அங்கத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தியின் தாயார் பாலா மெய்னோ ஆகிய முவருக்கும் அமெரிக்க டாலரில் பணம் வழங்க அத்தாட்சி வழங்க வேண்டும்" என கடிதம் எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் "CPSU/CC/No 11228/3 dated 20/12/1985"-ன் படி அங்கீகாரம் அளிக்கப்பட்டு, பின் "Directive No. 2633/Rs dated 20/12/1985" என்ற அமைச்சர்கள் குழுவின் முடிவுப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பண பட்டுவாடா 1971 வருடத்திலிருந்து வழங்கப்பட வேண்டியதாகும் ஆகும். இந்த பணம் சோனியா காந்தியின் குடும்பத்தாரால் பெறப்பட்டுள்ளது பணம் கொடுக்கப்ட்டது தொடர்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் கணக்கு தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. CPSU/CC resolution No. 11187/22 OP dated 10/12/1984.

1992-ல் ஊடகங்கள்  "The State within a State: KGB and its Hold on Russia" என்ற புத்தகத்தில் அல்பாட்ஸ் எழுதியுள்ள இந்த விஷயங்கள் உண்மையா என ரஷ்ய அரசிடம் கேள்வி எழுப்ப, உண்மை என ரஷ்யா ஒப்புக்கொண்டதுடன் இதை நியாயப்படுத்தும் வகையில் " It is necessary for Soviet ideological interest" என கூறியது. நவம்பர் 1991-ல்  சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் "Schweitzer Illustrate" என்ற பத்திரிகையில் " ராஜிவ் காந்தி பெயரில் உள்ள சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளில் சுமார் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் உள்ளது" என்ற தகவலை வெளியிட்டது. இந்த தகவலை இந்து பத்திரிகை 1992 ஜூலை 4-ம் தேயிட்ட தனது பதிப்பில் வெளியிட்டுள்ளது. இது பற்றி அவுட் லுக் பத்திரிகையில் 28 ஏப்ரல் 2009 பதிப்பில் ராஜின்டர் புரி  (Rajinder Puri) என்பவர் கட்டுரையை எழுதியுள்ளார்.

2.5 பில்லியன் சுவிஸ் பிராங் என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  சமம் ஆகும். ஒரு பில்லியன் என்பது  100 கோடி. அதாவது 200 கோடி அமெரிக்க டாலர். இன்றைய கணக்குபடி டாலர் 45 ரூபாய் 85 காசு ஆகும். அப்படியென்றால்  200 கோடி டாலர் என்பது 9170 கோடி ரூபாயாகும்.
எழுத்தாளர் அல்பாட்ஸ் தனது புத்தகத்தில் ராஜிவ் காந்தி குடும்பத்தினர் ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றார்கள்  என குறிப்பிட்டுள்ளது பொய்யானது என்றால், சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மறுப்பு தெரிவிப்பதோடு  சம்பந்தப்பட்ட புத்தக ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இது பற்றி மூச்சே விடவில்லை!

அதோடு ராஜிவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்குகளில் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் இருக்கிறது என்று "Schweitzer Illustrate"என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியையும் காங்கிரஸும், சோனியாவும் மறுக்கவே இல்லை.

பொதுவாக  கே.ஜி.பி., சி.ஐ.ஏ போன்ற உளவுத்துறைகள் மற்ற நாட்டின் ரகசியங்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஏஜெண்ட்களை வைத்திருப்பார்கள். உளவு பார்க்கும் வேலைக்காக அவர்களுக்கு பணம் வழங்கப்படும். ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி ராஜிவ் காந்தி  குடும்பத்திற்கு பணம் கொடுத்துள்ளது.அப்படியென்றால் ராஜிவ் காந்தியும், சோனியாவும் ரஷ்ய உளவாளிகளா?
ஆண்டவனே இந்தியாவை இந்த தேசத்துரோகிகளிடமிருந்து காப்பாற்று!

 இதன் ஆதார கட்டுரையை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆதாரம் : http://www.outlookindia.com/article.aspx?240332. 


Thursday, December 2, 2010

நமக்கு எப்போது புத்தி வரும்?

உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டதும், அதிகமாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பின் விளைவுகளை கொண்டது "எண்டொ சல்ஃபான்" எனப்படும் பூச்சி கொல்லி ஆகும். இது பெரும்பன்மையான மேலை நாடுகளில் ஒட்டு மொத்தமாக உற்பத்தி மற்றும் உபயோகம் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில உற்பத்தி செய்யப்படுவதுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கெலிகாப்டர் மூலம் அரசு முந்திரி தோட்டத்தில் 1978 ல் இண்டோசஃல்பானை தெளித்தது. இம்மருந்து மண், தண்ணீரில் கலந்து அப்பகுதி மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதை உபயோகப்படுத்தி பயிரடப்பட்ட உணவுப்பொருட்களிலும் இதன் நச்சு தன்மை கலந்துள்ளது. இதன் பாதிப்புக்கு உள்ளான காசகோடு பகுதிமக்கள் இதுவரை 500 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிப்பை கீழே உள்ள படங்கள் விளக்கும்பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக கேரள அரசு, இதன் உபயோகத்தை தடை செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நிவாரணம் கொடுக்க உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் இது தடை செய்யப்படவில்லை. எல்லா விவசாயிகளும் இதன் நச்சுத்தண்மையை உணராமல் உபயோகித்து வருகிறார்கள். அதனால் நாம் நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகளையே உண்டு வருகிறோம். என்றைக்கு தமிழக அரசு விழித்துக்கொள்ளும் என தெரியவில்லை.
Wednesday, December 1, 2010

யார் அப்பன் வீட்டு பணம்?

இந்தியாவில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டிருக்கிறது. 

பாராளுமன்றத்தின் மழைக்கால தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றம் நடக்கவில்லை. 

பாராளுமன்ற கூட்டு குழு அமைத்து 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க முடியாது. பாராளுமன்ற கணக்கு குழு விசாரிக்கட்டும் என ஆளும் கட்சி காங்கிரஸ் கூறுகிறது.

பராளுமன்ற கணக்கு குழுவின் அதிகாரம் குறைவு. ஆனால் பாராளுமன்ற கூட்டு குழுவின் அதிகாரம் அதிகம். அதன் மூலமே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எதிர்கட்சிகளின் வாதம்.

ஐ.பிஎல் விவகாரத்தில் சசிதரூரை மந்திரி பதவியிலிருந்தும், காமன் வெல்த் கேம் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடியை கட்சி பதவியிலிருந்தும், ஆதர்ஷ் வீட்டு சங்க ஊழல் விவகாரத்தில் அஷோக் சவானை முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலக்கினோம். ஆனால் கர்நாடகாவில் நில ஊழலில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவை பதவி விலக செய்ததா பாரதிய ஜனதா கட்சி? என எதிர்வாதம் செய்கிறது காங்கிரஸ். 1,76,000 கோடி ஊழல் விவகாரத்திற்கு கூட்டு குழு அமைப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை.

பாராளுமன்றம் செயல்படாததினால் இதிவரை 25 கோடி ரூபாய் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிவிட்டது. தினசரி அலவன்ஸ் ரூ.2000 /- காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்க மாட்டார்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ். ரூ.25 கோடிக்கே கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் ஏன் 1,76,000 கோடிக்கு பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க தயங்க வேண்டும்?

இறுதியாக "பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கவேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் நோக்கம். அதற்காகவே ஜே.பி.சி வேண்டும் என கேட்கிறார்கள். நாங்கள் அனுமதிக்க முடியாது" என காங்கிரஸ் கூறுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கும் உரிமை ஜே.பி.சி-க்கு இருக்குமானால், அதற்கு பிரதமரும் கட்டுபட்டவரே!. இதை எப்படி கவுரவ பிரச்சனையாக கருதமுடியும்?  கவுரவம்தான் முக்கியம் (?) என்றால் மன்மோகன் சிங் பதவியை தூக்கி எறிய வேண்டியதுதானே? 

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, அவர் பெயரில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த போது எங்கே போயிற்று இவர்களின் கவுரவம்? கவுரவம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதிக்க வேண்டியதுதானே?

கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் பணம் இந்திய மக்களின் பணம். இந்த ஊழலில் காங்கிரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் ஏன் ஜே.பி.சி அமைக்க பயப்படவேண்டும்? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்?

ஊழலில் பறிபோன பணம் ஏதோ சிறிய தொகை அல்ல. இந்திய ஆண்டு பட்ஜெட்டில் 25% அல்லது ஓராண்டு ராணுவத்திற்கு செலவிடப்படும் மொத்த செலவு தொகை!

நீ என்ன யோகியனா என எதிர்கட்சிகளை பதில் கேள்வி கேட்பதால்  காங்கிரஸ் யோக்கியராக முடியாது. காரணம் இது ஆளும் கட்சி, எதிர்கட்சி சம்பந்தபட்ட பிரச்சனை அல்ல. இந்திய பிரஜைகளாகிய எங்கள் பிரச்சனை. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் அரசுக்கு உண்டு. நாங்கள் வந்து பாராளுமன்ரத்தில் ஜே.பி.சி அமையுங்கள் என கேட்க முடியாது. எங்கள் குரலாக எதிர்கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள்.

காங்கிரசுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஜே.பி.சி என்ன அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கே தயார் என தன் பரிசுத்தத்தை நிருபிக்க முன் வரவேண்டும். Monday, November 29, 2010

எங்க போய் முட்டிக்கிறது? - சட்டம் நம் கையில்.

"காங்கிரஸ் என்றாலே ஊழல்" என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாக  2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டு வகித்த அரசு வங்கிகளின் விபரம் இப்பொழுது வெளி வந்துள்ளது. பொதுவாக வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடனுதவி வழங்கும்  முன் அதன் தலைவரான நிர்வாவாக இயக்குனர் அனுமதி பெறவேண்டும். வங்கியின் தலைவர் பதவி என்பது பதவி உயர்வு பெற்று வரும் பதவி அல்ல. மத்திய நிதி அமைச்சகத்தால் நேரடியாக குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் நியமனமாகும். எதன் அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு எவ்விதமான வழிகாட்டுதல் நெறிமுறைகள்  கிடையாது.

2G ஊழலில் தொடர்புடைய 5 நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய் அரசு வங்கிகள் நிதியுதவி செய்துள்ளது. அவை

1. Swan Telecom
2.Unitech.
3.Loop Telecom.
4.Datacom ( Videocon)
5.STel

நிறுவனங்கள், நிதியுதவி செய்த வங்கிகள், தொகை விபரமும்.

Swan telecom:    
 ஸ்டேட் பாங்க்                       =  747 கோடி
பஞ்சாப் நேஷ்னல் பாங்க்    = 500 கோடி
பாங்க் ஆஃப் பரோடா             = 400 கோடி
ஐ.டி.எப்.சி                                  = 200 கோடி
IL & FS                                         = 70 கோடி          

UNITECH :
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா     = 2,500 கோடி

STel:
ஐ.டி.பி.ஐ வங்கி    = 1538 கோடி

Datacom ( Videocon):   
ஸ்டேட் பாங்க்:       = 8,150 கோடி

Loop Telecom 
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  = 400 கோடி

இந்த கடன் அனைத்துமே ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தாள்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இதற்கு தொலை தொடர்புதுறையே ஜாமின் கையெழுத்து போட்டுள்ளதுதான் கொடுமை. இத்துறை அதிகாரிகள்  A. K. Srivastha , P.K. Mittal ஆகிய இரு தொலை தொடர்பு அதிகாரிகளும் சி.பி.ஐ வளையத்தில் உள்ளனர்.

1,76,000 கோடி ஊழல் செய்ய அரசாங்க வங்கிகளே ஊழல் கம்பெனிகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து இந்த ஊழலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது. 

வாழ்க காங்fகிரஸ் ஆட்சி! 


நாடு நாசமாக போக மறக்காமல் வரும் சட்டசபைதேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள். நமக்கு வாய்க்கரிசி நிச்சயம்!

 

Friday, November 26, 2010

அஞ்சலி

தீவிரவாதிகளின் மும்பை தாக்குதலின் இரண்டாவது நினைவு நாள். அதில் உயிர் நீத்த நம் சகோதர சகோதரிகளுக்கு நம் கண்ணீர் அஞலியை செலுத்துவோம்.
 

Thursday, November 25, 2010

முக்கிய அறிவிப்பு.

 அறிவிப்பு!


எண்1, காந்தி இல்லம், காந்தி நகர், சொர்க்கம் என்ற முகவரிதாரராகிய காமராஜ், வயது 107, த/பெ. குமாரசாமி என்ற எனது கட்சிக்காரர் சார்பாக தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,

15 ஜூலை 1903 முதல் 2 அக்டோபர் 1975 வரை இந்தியாவில், தமிழ் நாட்டில் எனது கட்சிக்காரர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் மோகன்லால் கரம் சந்த் காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார். அதன் பின் காங்கிரஸ் இயக்கம் 1950-ல் காங்கிரஸ் கட்சியாக மாறியது. அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருந்தார். 1969 ல் காங்கிரஸ் பிளவு பட்ட பொழுது, இந்தியன் நேஷ்னல் காங்கிரஸ் (O) வின் தலைவரானார்.அவர் இந்தியாவில் வசிக்கும் வரை அதாவது 2 அக்டோபர் 1975 வரை அவர் அக்கட்சியின் தலைவராகவே இருந்தார்.

காங்கிரஸ் பிளவு பட்டபோது ஏற்பட்ட மற்றொரு கட்சி இந்திரா காங்கிரஸ் ஆகும். அந்த கட்சிக்கும் காமராஜருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஆனால் இப்பொழுது இருக்கும் இந்திரா காங்கிரஸ் எமது கட்சிக்காரர் தங்கள் கட்சிக்காரர் என்பது போல சித்தரித்து, தேர்தல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

எனது கட்சிக்காரருக்கும் இபோழுது இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே பொது மக்கள் யாரும் பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரியப்படுத்தப்படுகிறது.

Dr.அம்பேத்கார்
வழக்கறிஞர்
காந்தி நகர்
சொர்க்கம்.


Monday, November 22, 2010

2-ம் சுதந்திர போராட்டம் எப்போது?

ஐய்யோ இந்த கொள்ளைக்காரர்களிடமிருந்து என்பாரதத்தை காப்பாற்றுங்கள்.

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்நீரா: ஹலோ?
 

ராசா: ராசா பேசுகிறேன்.
 

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.
 

ராசா: ஆ?
 

நீரா: பர்கா தத்
 

ராசா: அவர் என்ன சொல்கிறார்?
 

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.
 

ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.
 

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.
 

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.
 

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?
 

ராசா: ஆ?
 

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
 

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
 

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...
 

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.
 

நீரா: தனியாகவா?
 

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.
 

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?
 

ராசா: ஆம்.
 

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.
 

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...
22.5.2009 மதியம் 2 மணி 29 நிமிடம் 41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?
 

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?
 

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.
 

ராசா: ம்ம்...
 

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...
நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.
 

ராசா: ம்ம்.
 

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....
 

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...
 

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?
 

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...
 

நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.
 

ராசா: ம்ம்.
 

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.
 

ராசா: ஓஹோ! ஓஹோ!
 

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...
 

ராசா: ம்ம்.
 

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...
 

ராசா: ஓ...
 

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
24.5.2009 காலை 11 மணி 5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
 

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.
 

நீரா: தெரியும் அல்லவா?
 

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.
 

நீரா:ம்ம்..
 

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
 

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.
 

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...
 

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?
நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?
 

ராசா: எனக்குத் தெரியாதே.
 

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.
 

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...
 

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.
 

ராசா: ஆ, இருக்கலாம்

கனிமொழி - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்
கனிமொழி: ஹலோ
நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...
கனி: ம்ம்
நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...
கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?
நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...
கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.
அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?
நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.
கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.
நீரா: ம்ம்..
...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.
நீரா: ஓகே.
கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.
22.5.2009  மதியம் 2 மணி 46 நிமிடம்15 விநாடிகள்
கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?
 
நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.
 
கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)
 
நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?
 
கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.
 
நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?
 
கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.
 
நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?
 
கனி: ஆம், ஆம்.
 
நீரா: இதுதான் அரசியல், மை டியர்.
22.5.2009 இரவு 8 மணி 04 நிமிடம் 19 விநாடிகள்
நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
 
கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...
 
நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.
 
கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...
 
நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.
23.5.2009 காலை 9 மணி 59 நிமிடம்2 விநாடிகள்
நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.
 
கனி: அது சரி.
 
நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.
 
கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
 
நீரா: ஆம், சரிதான்.
 
கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.
 
நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
 
கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை. 

பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்


பர்கா: ஆ, நீரா?
 
நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
 
பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.
 
நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.
 
நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?
22.5.2009 காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.
 
பர்கா: ஆம்.
 
நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.
 
பர்கா: ஆம்.
 
நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.
 
பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?
 
நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.
 
பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?
 
நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.
 
பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.
 
நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.
 
பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?
 
நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிடவேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.
 
பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
 
நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும்.  காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.
 
பர்கா: சரி.
... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.
 
நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...
பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.
 
நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.
 
பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?
 
நீரா:  அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

நன்றி : அவுட்லுக், தினமணி.Friday, November 19, 2010

சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.

நாம் கேட்டால் " இதெல்லாம் அரசின் செயல்பாடுகள் ரகசியமானது. ரகசிய தகவல்களை தரமுடியாது"  என கூறிவிடுவார்கள்!. நாம் என்ன பாகிஸ்தான் உளவாளிகளா? சரி விட்டு தள்ளுங்கள். 2G விவகாரத்தில் சி.பி.ஐ-க்கும் வருமானவரித்துறைக்கும் நடந்த கடித பரிவர்த்தனைகள் அதாவது கடிதங்களின் நகல்கள் (அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்) இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு வரவேண்டிய 1,76,000 கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது, இந்த நாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகும். எனவே அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டு என்பதால் அவை இங்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிட்டு பகிரங்கப்படுத்திய தளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

 இந்த கடிதங்களின் நகல்களை நிச்சயம் சாதாரண பாமரனால் பகிரங்கப்படுத்தியிருக்க முடியாது. நாட்டுப்பற்றுள்ள, ஊழலை சகித்து கொள்ள முடியாத, சூழ்நிலை கைதியாக இருக்கும் ஒரு நேர்மையான சி.பி.ஐ -யை சார்ந்தவர் ஒருவர் தான் இதை செய்திருக்க முடியும். நம் நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.


Thursday, November 18, 2010

எப்படி கொள்ளையடிக்கப்பட்டது?

 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு வரவேண்டிய 1,75,000 கோடி ரூபாய் எப்படி அரசியல்வாதிகளால் ( குரூப் A + B ) கொள்ளையடிக்கப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வ ஆடிட் ரிப்போர்ட் மூலம் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.அதன் பின் இந்த கொள்ளயர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.
Monday, November 15, 2010

ஜாலியா விளையாட வாருங்கள்! . - சட்டம் நம் கையில்.

இதுவரை நீங்கள் விளையாடாத விளையாட்டை உங்களுக்கு சொல்லி தருகிறேன். அனுபவம் எதுவும் தேவையில்லை. அதிக பணம் எதுவும் செலவு செய்ய வேண்டாம். அதேபோல நேரத்தையும் அதிகமாக செலவு செய்ய வேண்டாம். இது மத்திய அரசால் சட்ட பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டு!. நாம் விளையாடுவதால் இந்த சமுதாயத்திற்கே பலன் கிடைக்கும். இனி விளயாட்டிற்கு வருவோம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005.
( Right to Information Act 2005.)

நம் தமிழ் நாட்டை பொறுத்த வரையில் இச்சட்டத்தை அதிக அளவில் யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், காசை விட்டெறிந்தால் காரியம் நடக்கிறது. இதுக்கு போய் நேரத்தை வேஸ்ட் பண்ண முடியுமா? என்ற மன நிலையும் ஒரு காரணம். இதுவே ஊழல் மேலும் பெருக வழி வகுக்கிறது. வட இந்தியாவை பொறுத்த வரை நன்காகவே இச்சட்டம் பயன் படுத்தப்படுகிறது. 

டெல்லியில் ஒரு பழைய பேப்பர் பொறுக்கும் ஒருவர், ரேஷன் கார்டு கேட்டு விணப்பித்தார். மாதம் பல ஆகியும் கார்டு கிடைக்கவில்லை. " என்னுடைய  ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ,  வழங்கப்படாதன் காரணம் இவை பற்றி தகவல் தரவும் " என ஆர்.டி.ஐ ஆக்ட் படி  விண்ணப்பித்தார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த அதிகாரி இரண்டே நாளில் ரேஷன் கார்டை அவர் வீட்டிற்கே கொண்டு போய் கொடுத்துவிட்டு டீயும் வாங்கி கொடுத்து சமாதானம் செய்துவிட்டு வந்தார். இது ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்திற்கு இச்சட்டம் பயன்பட்டது.  இனி ஊழலை வெளிக்கொண்டுவந்ததை பார்ப்போம்.

1. இச்சட்டத்தின் மூலம் தகவலை பெற்று தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் காமன் வெல்த் கேம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது.

2. மகாராஷ்டிராவில் முதலமைச்சரை பதவியிலிருந்து தூக்கி எறிந்த ஆதார்ஷ் கூட்டுறவு வீட்டு சங்க ஊழல்.
                                                                                                        
நம்மால் இந்த அளவுக்கு பெரிய ஊழலை அம்பலப்படுத்த முடியாவிட்டாலும், ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல நம் லெவலுக்கு சிறிய ஊழலை அம்பலப்படுத்தலாம். எப்படி, யாரிடம் விண்ணப்பிக்கவேண்டும், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விலா வாரியாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தொடர் பதிவாக பதிவிடப்படும்.  அதற்கு முன்பு இச்சட்டத்தின் நகலை இங்கு கிளிக் செய்து டவுன் லோடு செய்து கொள்ளவும்.

இந்த தொடர் பதிவுக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். மேலும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள், பொது விஷயங்கள் இவை தொடர்பாக யாருக்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரத்தை பெற உங்கள் கேள்விகளை தெளிவாக பின்னூட்டமாக கொடுங்கள். அடுத்த பதிவில் அதற்கான விளக்கம் கொடுக்கப்படும்.

ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம். வாரீர்.

ஜெயலலிதா நகர்த்திய காய்

ஒரு வழியாகா ஸ்பெக்ட்ரம் ராஜா அமைச்சர் பதவியை ராஜினா செய்துவிட்டார். 

" நான் பதவி விலக மாட்டேன்"
"என்னை பிரதமர் பதவி விலக சொல்லுவார் என நினைப்பது கற்பனையே" என்றெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பேட்டி கொடுத்தார் ராஜா.

"ராஜா தலித் இனத்தை சார்ந்தவர். அவர் முன்னேற்றத்தை சகிக்க முடியாத உயர் சாதியினரின் குற்றச்சாட்டு"
" ராஜா எந்த ஊழலும் செய்ய வில்லை"
" மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நான் பார்ப்பேன்"
"மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெறும் அறிக்கைதான். அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது"
"ராஜா ஊழல் செய்யவில்லை. அவர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை" என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறிவந்தார்.

ஆனால் நடு இரவில் பிரதமர் இல்லம் சென்று, ராஜா தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டு, "தி.மு.க தலைவரின் அறிவுரையின் படி பதவியை ராஜினா செய்து விட்டேன்"  என நிருபர்களிடம் கூறினார்.

"பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பற்காகாவே ராஜா பதிவி விலகினார்" என தி.மு.க மீடியாவுக்கு தகவல் தந்தது. ஆனால் இந்த காரணத்தை சிறு பிள்ளைகூட ஏற்றுக்கொள்ளாது என்பது நன்றாகவே தி.மு.க விற்கு தெரியும்.


இதற்கிடையில், ஓய்வுக்காக கொடை நாடு செல்லும் முன்பாக பத்திரிகை ஒன்றிற்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அதில், "ராஜாவை பதவி நீக்கம் செய்தால், தி.மு.க மத்திய அரசிற்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி விடும். அதனால் மந்திரி சபை கவிழ்ந்து விடும் என பயப்படவேண்டாம். 18 எம்.பிக்களின் ஆதரவை நான் தருகிறேன்" என கூறினார்.

ஒரு சில மணி நேரத்தில் கருணாநிதி ஏன் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பது சுவாரசியமான விஷயம்.

சியோலிலிருந்து இந்தியா திரும்பிய மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் "இந்த நிமிடம் வரை தி.மு.க உடனான கூட்டணி தொடருகிறது". "ஜெயலலிதாவின் ஆதரவை பற்றி காங்கிரஸின்  தலைமைதான்  தீர்மானிக்கும்".  இந்த பதிலில், தேவைப்பட்டால் ஜயலலிதாவின் ஆதரவை பெறும் வாய்ப்பு காங்கிசுக்கு உள்ளது என்பதாகும்.  ராஜாவை பதவி விலக்கினால், நாங்கள் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி கொள்வோம் என திமு க, காங்கிரஸை பிளாக்மெயில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதற்கிடையில் காங்கிரசின் உயர் மட்ட குழு  ஞாயிறு காலையில் கூடியது. இக்கூட்டத்தில் மிஸ்டர் கிளீன் மன்மோகன் சிங் சோனியாவிடம் "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜாவை தனது அமைச்சரவையில் வைத்திருக்க முடியாது. கல்மாடி, சவான் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல இதிலிலும் எடுக்கப்பட வேண்டும். ஊழலுக்கு நான் ஆதவளிக்க தயாராக இல்லை" என தெளிவாக சொல்லி விட்டார். இதில் சரியான நடவடிக்கை எடுத்து கட்சியின் பெயரை காப்பாற்றாவிட்டால், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருமே ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால் ராஜவை பதவி விலக சொல்லுவது என ஒருமனதாக முடிவு செய்தனர்.

காங்கிரஸின் இந்த முடிவை சிதம்பரம், ஏ.கே அந்தோணி, பிரணாப் முகர்ஜி ஆகிய எல்லோருமே  கருணாநிதியிடம் தொலைபேசியில் விளக்கமாக பேசி நிலைமையை புரிய வைத்தனர். இதற்கு மேலும் முரண்டு பிடித்தால்,  மத்தியில் அமைச்சர்கள் பதவியையும், வரும் சட்ட சபை தேர்தலில் காங்கிரசின் ஆதரவையும் இழக்கவேண்டிவரும். உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா எனற நிலை ஏற்படும் என்பதை புரிந்து கொண்டார் கருணாநிதி வேறு வழியின்றி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

 ஆக இவ்வளவுக்கும் காரணம் ஜெயலலிதா நகர்த்திய காய் தான் காரணம்!

அரசியலில் காய் நகர்த்துவதில் தான் மட்டுமே கில்லாடி என இறுமாப்புடன் இருந்த கருணாநிதிக்கு இது ஒரு பெரிய மரண அடி தான்!


Saturday, November 13, 2010

ஏதோ நம்மால முடிஞ்சது இது தான் சாமி! - சட்டம் நம் கையில்.

 ஏழைக்க்கு ஏத்த எள்ளுருண்டை என்ற பழமொழிக்கேற்ப, என்னால் முடிந்தது இந்த பதிவு தான்!.


யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க,
 

மயிரை கட்டி மலையை இழுத்த கதைதான், பார்க்கலாம்!


 தெரியாத்தனமா அரசியலுக்கு வந்துட்டேன், மன்னிச்சுடுங்க!

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கை விபரம்.

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2008ல் நடந்த 2ஜி ஏலம் மிக மிக மட்டமான விலைக்கு விடப்பட்டது. ஆனால் அதை ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றவர்களுக்கு பல மடங்கு விலை வைத்து விற்று விட்டனர். இந்த வகையில் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பெரும் தேசிய நஷ்டத்துக்கு அமைச்சர் ராஜாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ராஜாவின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

2ஜி ஏலம் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் உள்ள அனைத்துமே ராஜாவுக்கு எதிரானதாக உள்ளது.

அறிக்கையின் சில முக்கியப் பகுதிகள்...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக பிரதமர், சட்ட அமைச்சர், நிதியமைச்சர், தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரை என எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அனைத்தையும் நிராகரித்து விட்டார் அமைச்சர் ராஜா.

மிக மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க தன்னிச்சையாக இதை அவர் செய்துள்ளதால் இந்த பெரும் தேசிய நஷ்டத்திற்கு ராஜாவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

அதேபோல தனது பரிந்துரைகளை தொலைத் தொடர்பு அமைச்சகம் அப்பட்டமாக மீறி செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது டிராய் அமைப்பு. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயலை அது தடுத்து நிறுத்த முயன்றிருக்க வேண்டும்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 2ஜி ஏலத்தின்போது மொத்தம் 122 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டன. அதில் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 85 உரிமங்கள் தொலைத் தொடர்புத்துறை நிர்ணயித்திருந்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நஷ்டத்தை கணக்கிட்டது எப்படி

மொத்தம் 3 வழிகளில் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ஏற்பட்டநஷ்டத்தைக் கணக்கிட்டுள்ளது கணக்கு தணிக்கை அலுவலகம்.

முதல் வழி - 2ஜி ஏலத்தில் பங்கேற்ற எஸ் டெல் நிறுவனம் 2007ம் ஆண்டு பிரதமருக்கும், பின்னர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் அனுப்பிய ஆஃபர் கடிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி பார்த்தால், 122 புதிய உரிமங்களின் மதிப்பு ரூ. 65,725 கோடியாக வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்புத் துறை வெறும் ரூ. 9013 கோடியை மட்டுமே இந்த உரிமங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலித்துள்ளது.

அதேபோல எஸ்.டெல் நிறுவனம் டூயல் டெக்னாலஜிக்கான கட்டணமாக ரூ. 24,591 கோடி தர முன்வந்துள்ளது. இதையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ. 90,316 கோடியாக வருகிறது.

2வது வழி - 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கிடைத்த தொகையை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 2ஜி ஏலத்தால் ஏற்பட்ட நஷ்டமாக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 511 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

டூயல் தொழில்நுட்ப கட்டணம் மட்டும் ரூ. 40,526 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் கிடைத்ததுவெறும் ரூ. 3372 கோடி மட்டுமே. எனவே மொத்த நஷ்டத்தின் அளவு ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 652 கோடியாகும்.

6.2 மெகாஹெர்ட்ஸுக்கும் மேற்பட்ட அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருப்பதை வைத்து கூட்டிப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு நஷ்டத் தொகை வந்து நிற்கிறது.

இதன் மூலம் முன்பு கணித்ததை விட பல ஆயிரம் கூடி கூடுதல் நஷ்டக் கணக்கு வருகிறது.

உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியா முழுமைக்குமான உரிமக் கட்டணம் ரூ. 7442 கோடி முதல் ரூ. 47,918 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதை வெறும் ரூ. 1658 கோடிக்கு மட்டுமே கொடுத்துள்ளார் ராஜா.

கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்தியஅரசை கடுமையாக சாடியிருந்தது சுப்ரீம் கோர்ட்.

ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானையும், காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியையும் காங்கிரஸ் கட்சி உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சியான திமுகவை சேர்ந்த ராஜா மீது கை வைக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது மத்திய அரசு. ஆனால் கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கையில் நஷ்டக் கணக்கு 1 லட்சம் கோடிக்கும் மேல் காட்டப்பட்டிருப்பதால் ராஜா மீதான நெருக்குதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது

.

Thursday, November 11, 2010

என்கவுண்டரும் தப்பு தாளங்களும்! - சட்டம் நம் கையில்

கோயம்புத்தூரில் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்ட மோகன்ராஜ் விஷயம் பத்திரிகைகளிலும், வலையுலகிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக "உண்மைதமிழன்", "வினவு", "சவுக்கு" ஆகிய பிளாக்குகளில் வந்துள்ள பதிவுகளுக்கு கிடைத்துள்ள மைனஸ் ஓட்டு மற்றும் எதிர் கருத்து கொண்ட பின்னூட்டங்கள், பெரும்பாலான பதிவர்களின்/ வாசகர்களின் மன நிலையை தோலுறித்து காட்டுவதாகவே உள்ளது.

Tuesday, November 2, 2010

நம்ம கஷ்ட காலம். வேற எதை சொல்ல?

கஷட காலம் வந்துட்டா, அது எப்படி வேண்டுமானாலும் வரும். அந்த நேரத்தில என்ன செய்தாலும் வேலைக்காகாது. சும்மா வேடிக்கைதான் பார்க்கனும். அதைத்தான் நாம இப்ப செய்திட்டு இருக்கோம்!.

விலைவாசி உயர்வு . சும்மா ஜிவ்வுன்னு தூளை கிளப்பிட்டு ராக்கெட் மாதிரி மேலேயே போகுது. நாம கூப்பாடு போட்டா, பிரதமரும், நிதி அமைச்சரும் என்னமோ ஜி.டி.பி அது நல்ல யிருக்கு, விலைவாசி குறையும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஒன்னும் நடக்கல.

பாராளுமன்றத்தில இதுக்காக வெட்டு தீர்மானம் கொண்டுவந்தப்போ, அதுல இருந்து ஆட்சிய காப்பாத்த, லாலு பிரசாத், மாயாவதி மேலே இருந்த வழக்குகளுக்கு ஆதாரம் இல்லன்னு  சி.பி.ஐ.-ஐ சொல்லவச்சு, வழக்கை வாபஸ் வாங்கி, ஆட்சியை காப்பாத்திக்கிட்டாங்க.

நாட்டில நூறு பேருக்கு ஒருத்தன் பட்டினியா கிடக்கிறான். கிலோ ரூ 15 / 16  என்ற விலையில் வரிப்பணத்தில் கோதுமையை கொள்முதல் செய்து, திறந்த வெளியில குப்பைய கொட்டுறமாதிரி கொட்டி அதை நாசமாக்கி, பலமடங்கு வீண் ஆனதா கள்ள கணக்கு காட்டி இந்திய உணவு கழகம் ஊழல் செய்கிறது. இதில் அரசியல்வாதிக்கும் பங்கு. இதை தனியார் தொலைக்காட்சி வீடியோ எடுத்து டி.வி யில போட்டு அம்பலப்படுத்தியது. சொரண கெட்டவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?  "போதுமான கிடங்கு வசதி இல்லை. அதான் காரணம்" உணவு அமைச்சர் இப்படி சொன்னார். அப்ப ஏன் அதிகப்படியா கொள்முதல் பண்ணனும்? இந்த அறிவு ஏன் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் வரல? வீணாக போகும் கோதுமையின் அளவு 168 லட்சம் மெட்ரிக் டன். இவற்றின் மதிப்பு 28,000 கோடி ரூபாய். இந்த கோதுமையை கொண்டு, ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு உணவளிக்க முடியும். அதாவது இப்பொழுது பட்டினியாக இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் 2 வருடத்திற்கு போதுமானது. ஒரு புண்ணியவான்  உச்சநீதிமன்றத்தில பொதுநல வழக்கு போட்டான். அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம், உடனடியாக வீணாகப்போகும் கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்கள் என கூறியது. அதுவரை வாயை திறக்காமலிருந்த பிரதமர் " அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது" என திருவாய் மலர்ந்தார். மக்கள் பணத்தில் வாங்கிய கோதுமையை வீணாக்குவது, அரசின் கொள்கையாம்!

ஒரு பொருளை விற்கும் போது, அதிக விலைக்கு கேட்பவனுக்கு தானே விற்கனும்? ஆனா, நம்ம தி.மு.க அமைச்சர்  ராஜா '" முதலில் வருபனுக்கு முன்னுரிமை " என்ற வினோத முறையை கொண்டு வந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று 70,000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும். அதனால் ராஜா இன்னும் அமைச்சராகவே உள்ளார்.

காமன் வெல்த் கேமை இந்தியாவில் நடத்த 2003-ல் வாஜ்பாய் அரசு முடிவு செய்து, அனுமதி பெற்றது. அப்போது அதற்கான மதிப்பீடு வெறும் 450 கோடி ரூபாய் மட்டுமே. 2004-ல் பதவிக்கு வந்த காங்கிரஸ், அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் வேண்டும் என்றே கிடப்பில் போட்டது.காரணம் கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்தால் தானே ஊழல் செய்யமுடியும்? ஐந்து ஆண்டுகள் தூங்கிவிட்டு, 2009 கடைசியில் வேலையை ஆரம்பித்தது. இறுதியில் ரூ70,000 கோடி செலவில் ஊழல் விளையாட்டை காங்கிரஸ் நடத்தி முடித்தது. ஊழல் பற்றி ஆணிவேறா, அக்குவேறா மீடியாக்கள் கிழி கிழி என்று கிழித்தவுடன் வேறு வழியில்லாமல், விசாரணை நடத்தப்படும் என கண் துடைப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ். 

இதையெல்லாம் விட மிக கேவலமான ஊழலை ம்காராஷ்டிரா காங்கிரஸ் செய்துள்ளது இப்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. கார்கில் யுத்தத்தில் வீர மரணமடைந்த வீரர்களின் மனைவிகளுக்கு வீடு கட்டும் திட்டம் எனக்கூறி " ஆதார்ஷ்" என்ற அமைப்பு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, மகாராஷ்டிரா அரசிடம்,  நிலம் வாங்கியது. இடம் எந்த பகுதியில் உள்ளது என்று தெரியுமா? மும்பையில் மிகவும்  விலைமதிப்புள்ள " கொலாபா". அதுவும் கடற்படை தளத்திற்கு அருகாமையில்.முதலில் 6 மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் 31 மாடிக்கட்டிடமாக கட்ட அனுமதிக்கப்பட்டது. கடற்படை தளத்திற்கு அருகாமையில் சட்டப்படி இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கமுடியாது!.மேலும் சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெறப்படவில்லை.

இந்த அடுக்குமாடி வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? 85 லட்சம். ஆனால் அதன் மார்க்கெட் ரேட் 8.5 கோடி. இங்குள்ள 104 வீடுகளை பெற்றுள்ளவர்களில் 3 பேர் மட்டுமே உண்மையிலேயே மரணமடைந்த கார்கில் வீரகளின் மனைவிகள். மீதி உள்ள வீடுகள் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் அஷோக் சவான் உறவினர்கள் (செத்துப்போன அவர் மாமியார் உட்பட) 3 பேருக்கு, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர்களின் உறவினர்கள், அமைச்சர்களின் உறவினர்கள், ராணுவ தளபதிகள், மத்திய காங்கிரஸ் அமைச்சர், ஐ. ஏ. எஸ். அதிகாரிகளின் உறவினர்கள் என வி.ஐ.பி.களால் பங்கு போடப்பட்டுள்ளது.இந்த விஷயத்திலும் காங்கிரஸ் கண்துடைப்புக்காக, அஷோக் சவானிடமிருந்து பதவி விலகல் கடிதம் வாங்கியுள்ளது. பிராணாப் முகர்ஜி, ஏ.கே அந்தோனி ஆகிய இருவரையும் இது பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறது.  இந்த ஊழலில் பங்குள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால், மகாராஷ்டிரா காங்கிரஸில் எந்த தலைவரும் தப்ப மாட்டார்கள். இப்பொழுதே சவானுக்கு பதில் ஒரு நபரை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லல் படுகிறது காங்கிரஸ்.

பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. நாம் வேறு என்ன செய்யப்போகிறோம்?.  நமக்குத்தான் சொரணையே கிடையாதே!Saturday, October 30, 2010

கிள்ளுருண்டை - சமையல் பகுதி.

கிள்ளுருண்டை என்ற பெயரையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது எங்க ஆச்சி (திருநெல்வேலி மாவட்டத்தில் பாட்டியை ஆச்சி என்றுதான் சொல்லுவோம்) காலத்திலிருந்து எங்க வீட்டில் செய்யப்படும் பலகாரமாகும். நான் சிறுவனாக இருந்த பொழுது பள்ளிக்கூடத்திலிருந்து மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் காப்பியுடன் சாப்பிட பண்டம் எதுவும் இல்லை என்றால் 
இன்ஸ்டண்ட் ஆக என் அச்சி இதை செய்து தருவாள். இது 50 வருடத்திற்கு முந்தய கதை. அது இப்பொழுதும் தொடருகிறது.  ஆச்சி, அதற்கு பின்  அம்மா ,இப்பொழுது மனைவி. அப்பொழுதெல்லாம் மதியம் 3 மணி அளவில்தான் தோசைக்கு அரைப்பார்கள்.


அந்தக்காலத்தில் கிரைண்டர், மிக்ஸி எல்லாம் கிடையாதே. ஆட்டுரலில் தான் அரைப்பார்கள். அரிசி, உளுத்தம் பருப்பு இவற்றை தனித்தனியே ஊற வைத்திருப்பார்கள். காரணம் உளுந்து மாவு நன்றாக அரைபட்டிருந்தால்தான் இட்டலி/ தோசை மிருதுவாக இருக்கும். அதே நேரம் அரிசியை நன்றாக அரைக்க கூடாது. ரஃப் ஆக இருக்க வேண்டும். இல்லை என்றால் இட்டலி/தோசை பசைபோல் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே தேவைப்படும் பக்குவத்தில் அரைக்கவேண்டும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகவே ஊற வைத்து அரைக்கிறார்கள்!.

தயார் செய்யும் முறை

தோசைக்கு உளுந்தை முதலில் அரைக்கும் பொழுது தண்ணிர் குறைவாக சேர்த்து அரைக்கவேண்டும். நன்றாக அரைபட்ட பின் ஒரு கை அளவு ( தேவையான  அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியையும் இதைப்பொலவே தண்ணீர் சேர்த்து அரைத்து பிரு பிரு என அரைபட்டவுடன் ஒரு கை அளவு  (தேவையான அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்.

1. உளுந்து மாவு   -  1 கப்.
2. அரிசி மாவு  - 1 கப்.
3. உப்பு  - தேவையான அளவு.
4. பச்சைமிளகாய் - 1
5. சிறிய வெங்காயம் - 4
6. கறிவேப்பிலை - தேவைப்பட்டால்.

அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாக போட்டு நன்கு பிசையவும். அதில் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சிறியதாக வெட்டிக்கொள்ளவும். விரும்பினால் ஒன்றிரண்டு கறிவேப்பிலை இலையையும் கிள்ளி எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் இருப்பு சட்டியை (கடாய்) வைத்து, அப்பளம் பொறிக்க எந்த அளவு எண்ணை ஊற்றுவோமோ அந்த அளவிற்கு ரீபைண்ட் ஆயிலை ஊற்றி சுடாக்கவும். எண்ணை நன்கு கொதித்தவுடன், உழுந்தவடை போட எப்படி கையால் மாவை எடுப்போமோ அதுபோல கையால் எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக  கொதிக்கும் எண்ணையில் போட்டு வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான். எழுத்து வடிவில் இது பெரியதாக இருந்தாலும் நொடியில் இதை எளிதாக செய்யலாம்.

இந்த பதிவிற்காக புகைப்படம் எடுக்க கிள்ளுருண்டை நேற்று செய்தோம்.

இதை செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள்.பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!

"பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு" என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.


 ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. "நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்' எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். 
நீதிபதிகள் என்ன வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, அங்கிருந்து நீதிமன்றத்திற்கு வருபவர்களா? இங்கு நடப்பது எதுவும் தெரியாமலிருக்க?  இங்குள்ள லட்சனம்தான் அவர்களுக்கு நன்கு தெரியுமே! அதான் இப்படி போட்டு கிழித்திருக்கிறார்கள்.

Thursday, October 28, 2010

மசாலா காராமணி - பெண் பதிவர்களுக்கான பதிவு.

பயறு வகைகள் மிகவும் சத்து நிறைந்த ஒன்றாகும். தற்காலம் நவ நாகரீக உணவு முறையில் அவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பயறு வகைகளில் காராமணி அல்லது பெரும்பயறு -ஐ கொண்டு செய்யப்படும் மசாலா காராமணியின் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் " பயறு கறி" என கூறுவார்கள்.


  
தேவையான பொருட்கள்

1. காராமணி ( சிகப்பு)    -  1 கப்.
2. தேங்காய் பூ   -  1/4 கப்.
3. சிறிய வெங்காயம்    -  3
  ( சாம்பார் வெங்காயம்)
4. இஞ்சி   - 1 சிறிய துண்டு.
5. பூண்டு   -  2 பல் ( flakes)
6. பச்சை மிளகாய் - 1
7. மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்.
8. மிளகாய் தூள் -  1/2 டீ ஸ்பூன்.
9. எண்ணை  - 1 டீ ஸ்பூன்.
10. கறி வேப்பிலை.
11. உப்பு - தேவையானது.

செய்முறை

காராமணியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின் தண்ணீரை கொட்டிவிட்டு, காராமணியை குக்கரினுள் தேவையான தண்ணீரை சேர்த்து அதன் பின் சிறிது ( தேவையானது) உப்பை போட்டு வேகவைக்கவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக்கொள்ளவும். சிறிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வானலி அல்லது பேன் -ஐ அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடு செய்யவும். அரைத்த இஞ்சி, பச்சமிளகாய், பூண்டு, வெட்டப்பட்ட வெங்காயம் இவற்றை அதில் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேங்காய் பூ இவற்ரையும் போட்டு வதக்கவும். பிறகு குக்கரில் வேகவைத்த காராமணியை அதில் போட்டு  கிளறி விடவும். இப்பொழுது மசாலா காராமணி ரெடி!.

Tuesday, October 26, 2010

டெஸ்டிங்

இன்று காலையில் தமிழ் மணத்தில் இணைத்த பதிவை காணோம்! தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்

நான் எடுத்த குறும்படம்

Monday, October 25, 2010

சாண்டில்யனின் கடல் புறா - மலரும் நினைவுகள்!

சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல் குமுதம் வாரப்பத்திரிகையில்  தொடராக வெளிவந்தது 1965-ல் அல்லது 1964 இறுதியில் என நினைக்கிறேன். அப்பொழுது நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்க வீட்டில் என் அண்ணன் மூத்தவன். எனக்கும் அவனுக்கும் 8 வயது வித்தியாசம். அடுத்து என் அக்கா. அவளுக்கும் எனக்கும் 3 வயது வித்தியாசம். நான் தான் கடைக்குட்டி. கடைக்கு போவது இது மாதிரி வேலையெல்லம் எனக்கு தான். ரெம்ப சந்தோஷமா செய்வேன்.நான் தான் பஸ்டாண்டில் இருக்கும் பேப்பர் கடைக்கு போய் வாங்கி வருவேன். மாலையில்  5-6 மணி வாக்கில் வரும். ஆனால் என்ன கிழமை என்பது நினைவில்லை. அனேகமாக வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன்.அப்பொழுது குமுதத்தின் விலை 25 காசுகள் தான். நம்ப முடியலையா? சந்தேகம் வேண்டாம் இந்த படத்தை பாருங்கள்!.கீழ் பக்கம் அதன் பிரசுர தேதியும், விலையும் போட்டிருக்குது.


 எங்க வீட்டிலிருந்து பஸ்டாண்டுக்கு நடந்து போக 15 நிமிஷம் ஆகும். வேக வேகமா போய் வாங்கிவிட்டு,  கடல்புறா தொடரை படித்துக்கொண்டே ஆடிஅசைந்து  நடந்து வீட்டுக்கு வருவேன். அதுக்குள்ளாக கடல்புறாவை படித்து முடித்துவிடுவேன். வீட்டுக்கு வந்தால்  குமுதம் உடனடியாக படிக்க கிடைக்காது. முதலில் எங்க அம்மா, அதன் பின் என் அண்ணன் என சீனியாரிட்டி கிரமத்தில் தான் கிடைக்கும். சனி, ஞாயிற்று கிழமையில் தான் என் டர்ன் வரும். யாரு பொறுமையா இருக்கிறது? அதான் இந்த குயூக்தி!.

20-25 இதழ்கள் சேர்ந்தவுடன், லீவு நாளில் உக்கார்ந்து, அதில் தொடர் வந்துள்ள பேப்பர்களை எல்லாம் புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்து இதழ் வாரியா அடுக்கி கட்டி வைத்துவிடுவேன். இதர தாழ்களை மட்டும் பேப்பர்காரனிடம் போட தனியாக வைத்துவிடுவேன். தொடர் முடிந்த பின்னோ அல்லது ஒரு பாகம் முடிந்த வுடன், அதை நானே பைண்டிங் செய்வேன். இது நானாக கத்துக்கிட்டது. பைண்டிங் அட்டையில் அந்த தொடரின் முதல் இதழ் அட்டை படத்தை ஒட்டிவிடுவேன். எப்படி நம்ம வேலை?

இப்படி பைண்டிங் செய்த, குமுதத்தில் வந்த கடல் புறா, யவணரானி ஆகியவைகள் இன்றும் என்னிடம் உள்ளது. மாதம் ஒரு முறையாவது இரண்டையும் படிப்பேன். கீழேயுள்ள படம் கடல் புறா முதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.கடல் புறா மொத்தம் மூன்று பாகங்கள். அதை நான்கு புத்தகங்களாக பைண்டிங் செய்துள்ளேன்.


எனக்கு அப்பப்ப கொஞ்சம் கொஞமா படித்தா, கதை படித்த மாதிரி இருக்காது. அதுனால, ராத்திரி 10 மணிக்கு கடல் புறாவை எடுத்து முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தால், 3 அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டுதான் தூங்குவேன். எப்படியும் இரவு 3-4 மணி ஆகிவிடும். 

சரி வேலை வெட்டி இல்லாம இருந்தால் இப்படி படிக்கலாம்ன்னு நீங்க முனுமுனுக்கிறது எனக்கு கேக்கத்தான் செய்ய்து. என்ன செய்ய? பழக்க தோஷம்!

இந்த பதிவுக்காக ப்த்தகத்தை எடுத்து போட்டோ எடுத்தப்பவே கண் உறுத்திச்சு. அனேகமா இன்னைக்கு ராத்திரி சிவராத்திரி தான்!

மீண்டும் சந்திப்போம்!