Sunday, March 28, 2010

தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?

சட்டம் என்பது பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று. உதாரணத்துடன் சொல்லப்போனால், மருந்து பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் மாதிரி. அதில், என்னென்ன மூலப்பொருட்கள் கலந்துள்ளது, அதன் விகிதாச்சாரம், உபயோகப்படுத்தும் முறை, பதுகாப்பு, உற்பத்தி செய்த தேதி மற்று காலாவதியாகும் தேதி, விலை, உற்பத்தியாளர் விபரம் போன்றவை இருக்கும். உபயோகிக்கப்போகும் நமக்கு தேவையானது  உபயோகிக்கும் முறை ( DOSAGE  ) ,  காலாவதியாகாத மருந்தா? என்ற விபரங்கள் மட்டுமே. சட்டத்தில் இருக்கும் எல்லா விபரங்களும் நம்மை போன்றவர்களுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே இச்சட்டத்தின் மூலம் என்னென்ன  தகவல்களை யாரிடமிருந்து  எப்படி பெறலாம் என்பதை மட்டும் புரியும் விதத்தில் எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.

1.    தகவல்கள் (  Information ) என்றால் என்ன? 

SEC 2.  ( f ) "information" means any material in any form, including records, documents, memos, e-mails, opinions, advices, press releases, circulars, orders, logbooks, contracts, reports, papers, samples, models, data material held in any electronic form and information relating to any private body which can be accessed by a public authority under any other law for the time being in force;
அதாவது, கிட்டத்தட்ட நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் இச்ச்ட்டப்படி பெற முடியும்.

2.  யாரிடமிருந்தெல்லாம் பெறமுடியும்? 

பொது அதிகார அமைப்பு  எனப்படும்  PUBLIC AUTHORITY.
எதெல்லாம் பொது அமைப்பு என்ற கேள்வி எழுவது சரியே. சட்டம் என்ன சொல்கிறது?
2. ( h ) "public authority" means any authority or body or institution of self- government established or constituted— (a) by or under the Constitution; (b) by any other law made by Parliament; (c) by any other law made by State Legislature; (d) by notification issued or order made by the appropriate Government, and includes any— (i) body owned, controlled or substantially financed; (ii) non-Government organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government;
அதாவது, அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், அரசின் நியுதவி பெறும் அமைப்புகள், மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவைகள்.

3.  யாரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்? 

 மத்திய அரசு மற்றும் மாநில அரசின்  ஒவ்வொரு துறையும்  பொது அதிகார அமைப்பு ஆகும்.  இச்சட்டப்படி ஒவ்வொரு அதிகார அமைப்பும் " பொது தகவல் அதிகாரி ( PUBLIC INFORMATION OFFICER)" மற்றும்  " மேல் முறையீட்டு அதிகாரி  ( APPELLATE AUTHORITY )"  களை நியமித்துள்ளது.
உதாரணம் 1   
நீங்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்க்ளாகியும் வழங்கப் படவில்லை என வைத்துக்கொள்வோம். அது பற்றிய தகவல் அறியவேண்டும். இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசின் சிவில் சப்ளை இலாகாவே பொது அதிகார அமைப்பாகும். எனவே இந்த இலாகாவின் பொது தகவல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும். அப்படி தரவில்லையெனில், அந்த இலாகாவின் மேல் முறையீட்டு அதிகாரிக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதன் பின்பும் தகவல் வழங்கப்படவில்லை என்றால் மாநில தகவல் ஆணைய்த்திடம் 2-ம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
உதாரணம் :2
அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியிடமிருந்து தகவல் பெறவேண்டும் என வைத்துக்கொள்வோம். இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. வங்கியில் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல் முறையீட்டு அதிகாரி இருப்பார். அதற்கு மேல் மத்திய தகவல் ஆணையம் உண்டு.

வெப் சைட்டில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அதிகாரி மற்றும் அப்பீலேட் அதாரிட்டி பற்றிய விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இத் தகவல்கள்  சம்பந்தப்பட்ட  அலுவலகங்களிலேயே  அறிவிப்பு பலகையில் போடப்பட்டிருக்கும்.

மீதி, அடுத்த பதிவில் தொடரும்............ 

6 comments:

  1. நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. ஐயா,வணக்கம்.தங்களிடம் ஒரு ஆலோசனை தேவை.AIRTEL தொலைபேசி சேவையில் DO NOT DISTAP என்ற சேவையை பெற நான் AIRTET மொபைலில் டயல் செய்தால் CAL எடுத்த உடன் பாரதி ஏர்டெல் வரவேற்கிறது என்று கூறி CAL CUT ஆகிவிடுகிறது.இது குறித்து AIRTEL CUSTOMAR CAREஐ தொடர்புகொன்டு கேட்டபோது
    1.1909 என்பது TRAI என்ற அரசு அமைப்பின் பொது எண்.அது வேலை செய்யவில்லை என்றால் நாங்கள் பொருப்பல்ல.என்றனர்
    2.நான் கேட்டேன் ,அப்படி எனில் அது மற்ற BSNL,AIRCEL...பொன்றவற்றில் ஒழுங்காக வேலை செய்கிறது.மேலும் கால் எடுத்த உடன் ஏர்டெல் உங்களை வரவேற்கிறது என்றIVRS வாசகம் வருகிறது எனவே இந்த கால் உங்கள் கட்டுப்பாட்டில் தானே வருகிறது என்ற போது,அதற்கு அவர்கள் முன்னர் கூறிய பதிலையே கூறி அழைப்பை துண்டித்தனர்.
    எனவே இந்த ப்ரச்சனையில் தவறு யாருடையது?

    ReplyDelete
  3. ஐயா,வணக்கம் ஏர்டெல் பற்றிய கேள்வியை கேட்டது நான் தான்.எனது பெயர் வெங்கடேசன்,ஊர் விருத்தாசலம்.நான் நுகர்வோர் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மீது அதிக ஆர்வமுள்ளவன்.எனக்கு பல சந்தேகங்கள் உள்ளன.தங்கள் இமெயில் முகவரி அளித்தால் எனது சந்தேகங்களை கேட்க எளிதாக இருக்கும்.எனது வலைப்பதிவு முகவரி aagamakadal.blogspot.com ஆன்மீக சம்மந்தமான வலைப்பதிவு.எனது மெயில் tvetsi@gmail.com.எனது முதல் கேள்வி
    1.LIC மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்.எனவே தகவல் உறிமைச்சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தை கேள்வி கேட்கலாமா?

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே!
    தங்களுடைய கேள்விகளுக்கான பதிலை கீழே தந்துள்ளேன்.
    1. TRAI என்பது இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகும்.இது தொலைபேசி வடிக்கையாளர்களுக்கு, DO NOT CALL REGISTRY என்ற வசதியை 1909 என்ற டோல் ஃபிரி நம்பர் மூலம் வழங்குகிறது.இது பொதுவான எண் ஆக இருந்தாலும், நீங்கள் எந்த நிறுவன தொலைபேசியிலிருந்து டயல் செய்கிறீர்களோ அந்த நிறுவனத்துடனேயே தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
    நீங்கள் ஏர்டெல் மொபைல் போன் வாடிக்கையாளர் என்பதால், உங்கள் தொலைபேசியிலிருந்து " START DND " என 1909 க்கு SMS செய்யுங்கள்.
    அல்லது போன் செய்யலாம். அப்பொழுது கூறப்படும் ஆப்ஷன் படி நீங்கள் பதிவு செய்யலாம். இச்சேவை அந்தந்த நிறுவனத்தாலேயே செய்யப்படுகிறது."1909 என்பது TRAI என்ற அரசு அமைப்பின் பொது எண்.அது வேலை செய்யவில்லை என்றால் நாங்கள் பொருப்பல்ல." என அவர்கள் கூறுவது தவறு. SMS அனுப்புங்கள்.ஆக்டிவேட் ஆக அதிக பட்சம் 45 நாட்கள் எடுக்கும்.

    2. LIC யிடமிருந்து "தகவல் அறியும் உரிமை சட்டம்"-ன் படி தகவல் பெற முடியும்.

    3. என்னுடைய இ மெயில் முகவரி "thiravianatarajan@gmail.com

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஐயா,வணக்கம்.என்னுடைய ஐயங்களுக்கு தெளிவான பதில் அளித்தமைக்கு நன்றி.நான் தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்கிறேன்.நன்றி.தங்களின் இந்த சேவை மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. அன்புடையீர் வணக்கம் ! தகவல் அறியும் சட்டம் 2005ன் படி கும்பகோணம் பொதுதகவல்
    அலுவலர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களிடமிருந்து என் நில சம்பந்தமான தகவல்கள் பெற எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் ?எம்முறையில் செலுத்தவேண்டும்? டி.டி. எங்கு எப்படி எடுப்பது?

    ReplyDelete