Sunday, April 4, 2010

நீயா?........ நானா? சரியான போட்டி!

இலவச கல்வி உரிமை சட்டம் 2009 -  யுத்தம் ஆரம்பித்து விட்டது !

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி "இலவச கல்வி உரிமை சட்டம்"-தை மாநிலங்கள் அமுல்படுத்துவது தொடர்பான ஆட்சேபணையை குறிப்பிட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
1.  மத்திய அரசு மக்களுடைய நலனுக்காக இதை செய்ய  உண்மையிலேயே விரும்புமானால், இச்சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ஏற்படும் செலவு தொகையை, மத்திய அரசே வழங்க வேண்டும்.
2.  இச்சட்டத்தை அமுல் படுத்த  உ.பி மாநிலத்திற்கு சுமார் ஆண்டு ஒன்றுக்கு 18,000 கோடி ரூபாய் தேவை. இதில் 45% தொகையான ரூபாய் 8,000 கோடியை உ.பி. அரசு செலவு செய்ய வேண்டும். இது மாநில அரசிற்கு கஷ்டமான காரியமாகும்.
3. இச்சட்டத்தை அமுல் படுத்துவதற்கு முன்பே மாநில அரசுகளுடன் கலந்து பேசி, தேவையான நிதியை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் செய்யப்படவில்லை.
4. இச்சட்டத்தை அமுல்படுத்த அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
5. இதனை அமுல்படுத்த 4,596 தொடக்க பள்ளிகளையும்( PRIMARY SCHOOLS) , 2,349 நடு நிலை பள்ளிகளையும் (UPPER PRIMARY SCHOOLS)  புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு 3,800 கோடி ரூபாய்கள் தேவை.
6. 3.25 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும் .
7. நடு நிலை பள்ளிகளுக்கு 67,000 நிரந்திர ஆசிரியர்களையும், 44,000 பகுதி நேர ஆசிரியர்களைய்ம் நியமிக்க வேண்டியுள்ளது. இதனால் ஊதிய செலவாக ஆண்டு ஒன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
8. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய சுமார் 3,000 கோடி வழங்கவேண்டும்.
இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
ஏன் இந்த எதிர்ப்பு?
இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த தன்னிடமும் நிதிவசதி இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்பது தெரிந்திருந்தும், மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்துள்ளது.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இது சாதனை பட்டியலில் சேர்க்கப்படும். எதிர்கட்சியான மாயாவதி எப்படி இதை ஒப்புக்கொள்வார்?
மத்திய அரசும் மாநில அர்சுகளும் இணைந்து நிறைவேற்றப்படவேண்டிய இத்திட்டத்தை பற்றி மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்தாமல், தன்னிச்சையாக செயல்பட்டது தவறு 
இது ஆரம்பம் தான். விரைவில் மேற்கு வங்கம், கேரளா என ஒவ்வொரு மாநிலமும் ஆட்சேபணை குரல் எழுப்பும். .

ஆக மொத்தத்தில்  இச்சட்டமும்  ஏட்டு சுறைக்காயே என்பதில் சந்தேகம் இல்லை.



2 comments:

  1. திரவியம் அய்யா நலமா.. நல்ல பயனுள்ள சட்ட குறிப்புகள்..

    நான் இப்பதான் உங்கள் பக்கம் பார்த்தேன். தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.. படிக்க ஆவலாக உள்ளோம் ஐயா.

    ReplyDelete
  2. அன்பு தம்பி,
    எனது தளத்திற்கு வருகை தந்ததிற்கும், தொடர்பதிவுக்கு அழைப்பதாக கூறியதிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete