Tuesday, June 15, 2010

சட்டம் - பாஸ்போர்ட் - கேள்வி, பதில்.1

பாஸ்போர்ட் சம்பந்தமான்  கேள்வி - பதில் 

கேள்வி:1. என் பெயர் நந்தகுமார். நான் ஆப்கானில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.அய்யா என்னுடைய பாஸ் போர்ட் முன்பக்க அட்டையில் உள்ள lamination முழுவதுமாக வெளியே வந்துவிட்டது.ஆனால் என்னுடைய பாஸ்போர்டில் உள்ள என்னுடைய படம் மற்றும் அனைத்து விவரங்களும் சேதாரமாகாமல் உள்ளன. இதன் காரணமாக நான் மீண்டும் இந்தியா செல்லும் போது ஏதும் பிரச்னை வருமா? நான் இந்தியா சென்று புதிய பாஸ்போர்ட் எடுக்க உத்தேசித்து உள்ளேன் .அல்லது நான் இங்கேயே எடுக்க வேண்டுமா? ஆனால் என்னுடைய பாஸ்போர்ட் போட்டோ ஸ்கேன் பாஸ்போர்ட்.அதனால் பிரச்சினை இல்லை என்று நான் நினைக்கிறன். அல்லது நான் ஏதும் முனஎச்சரிக்கை ஏதும் எடுக்க வேண்டுமா எனக்கு நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

பதில்:  உங்கள் பாஸ்போட்டில் உள்ள எழுத்துக்கள் (வார்த்தைகள்) அழியாமல் இருக்கும் பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை.அது செல்லுபடியாகும் காலம் இன்னும் எத்தனை வருடங்கள் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். பாஸ்போர்ட்டின் முன் பக்க லாமினேஷன்  முழுவதுமாக வெளியே வந்து விட்டது என்பதற்காக நீங்கள் அதை மாற்ற விரும்பினால், டூப்பிளிகேட் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணம் ,
1. Duplicate Passport (36 Pages) in lieu of lost, damaged, or stolen passport  - Rs.2,500 /-
2. Duplicate Passport (60 Pages) in lieu of lost, damaged, or stolen passport - Rs.3,000 /-
டூப்ளிகேட் பாஸ்போர்ட்க்கு நீங்கள் ஆப்கான் அல்லது இந்தியாவில் விண்ணப்பிக்கலாம். இது தங்கள் வசதியை பொருத்தது.

கேள்வி 2.  
Anonymous said... Hi.. I need a clarification. I have my passport issued from Chennai. Right now for the last one year I work in Delhi. I will be back to TN in another 4 months.

My passport has expired..
1. Where should I apply? In chennai or in Delhi?
2. Do I need to go personally to apply?
3. Can I apply saying I am still in TN? 


பதில்:  நீங்கள் டெல்லி அல்லது சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்னப்பிக்கலாம். அதற்கான படிவம். Application Form No.1 (EAP-1).காலாவதியாகி 1 வருடம் ஆகியிருப்பதால், போலீஸ் வெரிபிகேஷன் தேவைப்படலாம்.

நேரடியாக சென்றால் உங்களின் டாக்குமெண்ட்களை சரிபார்த்து விட்டு திருப்பி தந்து விடுவார்கள். நீங்கள் தபாலில் விண்ணப்பித்தால், எல்லாவற்றிற்கும்  கெஸ்டட் (Gazzetted) அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட இரு பிரதிகளை இணைக்க வேண்டும்.


இத்ற்காக நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான தபால் அலுவலகங்களில் இதற்கான கவுண்டர்கள் உண்டு.


எப்படியும் 1 மாத காலமாகும். சென்னையில் 1 மாதகாலத்திற்கு மேல் தங்கி யிருந்தால், டெல்ல்யில் தற்காலிகமாக வசிப்பதை பற்றி குறிப்பிட வேண்டாம். அவ்வாறு குறிப்பிட்டால் டெல்லி முகவரிக்கான அத்தாட்சி கொடுக்கவேண்டும்


டெல்லியில் விண்ணப்பித்தால், தற்காலிக முகவரிக்கு அத்தாட்சி கொடுக்க வேண்டியிருக்கும். அங்குள்ள காவல் துறை மூலமாக வெரிபிகேஷன் செய்வார்கள்.
 
இதில் எந்த ஊர் வசதியோ அங்கு புதுப்பித்து கொள்ளுங்கள்


நன்றி

 

14 comments:

 1. தங்களது பதில்கள் மிக பயனுள்ளவை சார்.

  @ நந்தகுமார்.

  என்னுடைய பாஸ்போர்ட்டிலும் லேமினேஷன் பேப்பர் தனியாக வந்தது. அதைவைத்து இருமுறை ஊர் சென்று வந்தேன். கடைசி முறை வரும் போது. அது டூப்ளிகேட் பாஸ் போர்ட் என்று நிறுத்திவைத்து விட்டார்கள். ரெண்டு ஆபிஸர்கள் செக் செய்து அது ஒரிஜினல் என்று சொல்லியும் என்னை சோதித்த அதிகாரி வேண்டுமென்றே அதை ஒப்புக்கொள்ளவில்லை. என்னை ஓரத்தில் நிற்கவைத்துவிட்டு, எல்லோரையும் அனுப்பியபிறகு கடைசியில் இமிகிரேஷன் சீல் அடித்து தந்தார் வேண்டுமென்றே. அதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

  என்னதான் சட்டப்படி சரியாக இருந்தாலும். நாம் செல்லும் அதிகாரி நல்ல மூடில் இல்லை என்றால் அதோ கதிதான். சில வேலை ப்ளைட்டை மிஸ் செய்யவும் வாய்ப்பு உண்டு.

  எனவே உடனடியாக பாஸ்போர்ட் புதிப்பித்தல் நன்று.

  ReplyDelete
 2. நன்றி அய்யா தங்கள் ஆலோசனைக்கு நன்றி

  ReplyDelete
 3. வடுவூர் குமார் said...

  Useful info.Thanks.

  மிக்க நன்றி வடுவூர் குமார்

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி அகபர் அவர்காளே!

  ReplyDelete
 5. மேலும் ஏதாவது தகவல் வேண்டுமென்றால் கேளுங்கள் நந்த குமார்.

  ReplyDelete
 6. பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தேவை, படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது தொடர்பான விளக்கத்தை ஒரு பதிவாக் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 7. அனைவருக்கும் பயனுள்ள மிகவும் சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. தங்கள் வருகைக்கு நன்றி, பனித்துளி சங்கர், சிங்காரம் அவர்களே.

  ReplyDelete
 9. வணக்கம்
  நான் இருமுறையும் என் நண்பர்கள் சிலர் சிங்கப்பூர் embassy இல் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் பொது கடைசி பக்கம் சரியாக ஒட்டவில்லை, உடனே திரும்ப கொடுத்து நன்றாக ஒட்டி வாங்கினோம்.

  Renga

  ReplyDelete
 10. தங்கள் வருகைக்கு நன்றி ரெங்கா அவர்களே

  ReplyDelete
 11. ஐயா வணக்கம் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் பாஸ்போட் பெற இயலாதா? என்ன என்ன வழக்கு
  இருந்தால் பெறமுடியாது என்ன மாதிரி வழக்குகள் இருந்தால் பாஸ்போட் பெறமுடியும்

  ReplyDelete