Monday, June 21, 2010

நீங்களும் ருசியாக சமைக்கலாம்! - ஆண்களுக்கான சமையல் பகுதி - 2

ருசியான மணம் நிறந்த தேநீர் தயாரிப்பது - செய்  முறை விளக்கம்

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் சுவை, மணம் நிறைந்த தேநீர் போடுவது எப்படி என்பதை விளக்கப்போகிறேன்.

தேவையான பொருட்கள்;

1.  தேயிலை ( டீ தூள்)
2. சர்க்கரை ( சீனி)
3. ஏலக்காய் & கிராம்பு
4. காய வைக்கப்பட்ட கமலா ஆரஞ்சு தோல்

காய்ச்சப்பட்ட பால் ஒன்றரை ( 1 1/2 ) கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதி கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இரண்டு கப் தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் இருக்கும். அதை பாத்திரத்தில் ஊற்றில், அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். இப்பொழுது ஒரு ஸ்பூன் தேயிலையை அதில் போடுங்கள். நன்றாக கொதித்து, பால் மேல் நோக்கி வர ஆரம்ம்பிக்கும் பொழுது, அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு தட்டால் பாத்திரத்தை நன்றாக மூடி விடுங்கள்.

ஐந்து  நிமிடங்கள் கழித்து தட்டை எடுத்து விட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். தேயிலை சல்லடை ( டீ பில்டர்) மூலம் வடிகட்டுங்கள். ஒரு கப் டீ க்கு ஒன்றரை ஸ்பூன் என்ற கணக்கில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது சாதா டீ ரெடி!

உங்களுக்கு ஏலக்காய் டீ வேண்டும் என்றால், பால் கொதித்தவுடன் ஒரு ஏலக்காய மற்றும் ஒரு கிராம்பை  நன்றாக சிதைத்து அதில் போடுங்கள்.பின் தட்டால் மூடி விட்டு ஐந்து நிமிடம் கழித்து அதை வடி கட்டுங்கள். பின் மேலே குறிப்பிட்டுள்ள படி சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஏலக்காய் டீ ரெடி!

உங்களுக்கு ஆரஞ்சு மணம் கொண்ட டீ வேண்டு மென்றால்  காய வைக்கப்பட்ட கமலா ஆரஞ்சு தோலில் சிறிதளவு எடுத்து அதை கையால் தூளாக்கி  ஏலக்காய்க்கு பதிலாக போட்டு விடுங்கள். இப்பொழுது  ஆரஞ்சு டீ ரெடி!

போட்டு குடித்து விட்டு உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்.
நன்றி.

15 comments:

  1. இன்னைக்கே போட்டு பார்த்திடுறேன்

    ReplyDelete
  2. ஏன் சார், ஏஏன்ன்?. இந்த பொம்பள பசங்கதான் டெய்லி நாலு பதிவ போடுறாங்கலே, நீங்கலுமா சார்.

    ReplyDelete
  3. இல்ல தம்பி! அவங்க போடட்டும். இதை நாமும் தெரிஞ்சு வச்சுகிட்டா அவசரத்துக்கு உதவுமில்லையா?

    ReplyDelete
  4. என்ன ஒரே சமையல் பதிவா இருக்கே! என்ன ஆச்சு?

    ReplyDelete
  5. மூன்று வித‌மான‌ டீ....ம்ம்ம் போட்டு பார்த்திட‌ வேண்டிய‌து தான்.. ந‌ன்றி சார்

    ReplyDelete
  6. காபி , டீ போட்டாச்சு..... அடுத்தது கேசரி, பஜ்ஜி, வடையா? ஓகே.....!!!

    ReplyDelete
  7. என்ன ஊரில இருக்கீங்களா? பூரி-கிழங்கு, எங்க ஊரு பேமஸ் அடை. என்ன சித்திரா? என் பக்குவம் சரியா இருக்கா?

    ReplyDelete
  8. hai wat is happenning?

    ReplyDelete
  9. ஆகா மணக்கும் டீ கமகமக்குதே! நல்ல டிப்ஸ்கள் அச்சா.

    அச்சா. என் மற்ற தளங்களுக்கும் தங்கள் வருகைதரவேண்டும். தங்களின் கருத்துக்களையும் தரவேண்டும்.

    http://niroodai.blogspot.com/

    http://fmalikka.blogspot.com

    ReplyDelete
  10. மகளே! இந்த அச்சனின் ஆசிவாதம் என்றும் உனக்கு உண்டு! வருகிறேன் உன் எல்லா தளங்களுக்கும்.

    ReplyDelete
  11. சூப்பரா இருக்கு டீ!

    ReplyDelete
  12. //திரவிய நடராஜன் said...
    எங்க சவுதியா? ///

    ஆமா சார்.... ந‌ம்ம‌ சொந்த‌ ஊரு நாக‌ர்கோவில்..

    ReplyDelete