Monday, June 14, 2010

பாஸ்போர்ட் தொடர்பான விளக்கம்

 பாஸ்போர்ட்டில் எழுத்து பிழை - என்ன செய்ய வேண்டும்?

"சார் நான் இப்போது UAE- ல்.என் மனைவியின் பாஸ்போர்டில் என் பெயரில் எழத்து பிழை உள்ளது அதனால் என் மகனுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வருமா?என் மனைவியின் பாஸ்போர்ட் மட்டும் வைத்து என் மகனுக்கு விண்ணப்பிக்க முடியமா?அல்லது என் பாஸ்போர்டும் தேவைபடுமா?" என நண்பர் FAIDH விளக்கம் கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார். அவருக்கு கூறும் ஆலோசனையே இப்பதிவு. அவர் பின்னூட்டத்திலிருந்து அவர் குடும்பம், அதாவது மனைவியும், மகனும் இந்தியாவில் உள்ளனர் என தெரிகிறது.

1. அவர் தன் மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால், மகன் பெயருக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவம்  "Application Form No.1"   -ல் விண்ணப்பிக்க வேண்டும். அதில்  3-வது பக்கத்தில்  வரிசை எண் 16 ஐ பூர்த்தி செய்யும் பொழுது, தாய் தந்தை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றால் பாஸ்போர்ட் எண் மற்றும் அது வழங்கப்பட்ட நாள், இடம் இவற்றை குறிப்பிடவேண்டும். அல்லது விண்ணப்பித்திருந்தால்,  பைல் எண், நாள், விண்ணப்பித்த அலுவலகம் (இடம்) குறிப்பிடவேண்டும். அவ்வளவுதான். நண்பருடைய மகன் 18 வயதுக்கு உட்ட்பட்டவராக இருந்தால்,  கீழ் கண்டவாறு  ANNNEXURE - H ல் குறிப்பிட்டுள்ளபடி வெள்ளை காகிதத்தில்  தாயாரோ அல்லது தந்தையோ அல்லது லீகல் கார்டியனோ ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்.
ANNEXURE - H

DECLARATION OF APPLICANT PARENT OR GUARDIAN IF PASSPORT IS FOR MINOR: ON PLAIN PAPER
                              I/We affirm that the particulars given above are in respect of (name of the child) …………………………………… son/daughter of Shri. ………………………………………………… and  Shrimati ……………………………………………………… of whom I/we am/are the Parents/Single Parents/Applicant Parent/Guardians. He/She is a Citizen of India. His/Her date of birth/place of Birth is ----------. I/We undertake the entire responsibility for his/her expenses.  I/We solemnly declare that he/she has not lost, surrendered or been deprived of his/her citizenship of India and that the information given in respect of him/her in this application is true.  It is also certified that I/we am/are holding/not holding valid Indian passport(s) and the name of the child mentioned is not included in Passport of either parent.                 
_____________          /                 _________________            OR___________________
Father (Signature)                       Mother (Signature)             Legal Guardian (Signature)

************
அவருடைய மகனுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட், விண்ப்பத்துடன் கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையிலேயே. எனவே நண்பரின் மனைவி பாஸ் போர்ட்டில், குறிப்பிடப்பட்டுள்ள நண்பரின் பெயரில் உள்ள எழுத்துப்பிழை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.

அவர் மனைவியின் பாஸ்போர்ட் வழங்கப்பட்டவுடனேயே, அந்த எழுத்து பிழை ஏற்பட்டது,பாஸ் போர்ட் அவுவலகத்தின் தவறாக இருக்குமானால் (விண்ணப்பத்தில் பெயரில் எழுத்துப்பிழை இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால்) அதை சுட்டிக்காட்டி திருத்தப்பட்ட பாஸ்போர்ட் வழங்குமாறு விண்ணப்பித்து இருக்கலாம் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியிருந்திருக்காது. ஆனால் இப்பொழுது அதை சரி செய்ய வேண்டுமானால் மீண்டும் பாஸ்போர்ட் கட்டணத்தொகை ரூ.1000 செலுத்த வேண்டும்.
இந்த தகவல் நண்பருக்கு போதுமானது என நினைக்கிறேன்.

நன்றி
பி. திரவிய நடராஜன்.

8 comments:

 1. வணக்கம் அய்யா ,
  என் பெயர் நந்தகுமார். நான் ஆப்கானில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.அய்யா என்னுடைய பாஸ் போர்ட் முன்பக்க அட்டையில் உள்ள lamination முழுவதுமாக வெளியே வந்துவிட்டது.ஆனால் என்னுடைய பாஸ்போர்டில் உள்ள என்னுடைய படம் மற்றும் அனைத்து விவரங்களும் சேதாரமாகாமல் உள்ளன. இதன் காரணமாக நான் மீண்டும் இந்தியா செல்லும் போது ஏதும் பிரச்னை வருமா? நான் இந்தியா சென்று புதிய பாஸ்போர்ட் எடுக்க உத்தேசித்து உள்ளேன் .அல்லது நான் இங்கேயே எடுக்க வேண்டுமா? ஆனால் என்னுடைய பாஸ்போர்ட் போட்டோ ஸ்கேன் பாஸ்போர்ட்.அதனால் பிரச்சினை இல்லை என்று நான் நினைக்கிறன். அல்லது நான் ஏதும் முனஎச்சரிக்கை ஏதும் எடுக்க வேண்டுமா எனக்கு நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. நல்லதொரு விளக்கங்கள் திரவியம் அய்யா.

  ReplyDelete
 3. Hi.. I need a clarification. I have my passport issued from Chennai. Right now for the last one year I work in Delhi. I will be back to TN in another 4 months.

  My passport has expired..
  1. Where should I apply? In chennai or in
  Delhi?
  2. Do I need to go personally to apply?
  3. Can I apply saying I am still in TN?

  ReplyDelete
 4. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  \\ நல்லதொரு விளக்கங்கள் திரவியம் அய்யா // நன்றி ஸ்டார்ஜன் தம்பி. இந்த " அய்யா" என்ற வார்த்தை என்னை அந்நியப்படுத்துவதாகவே தோன்றுகிறது. இனி உபயோகிக்காதீர்கள். நன்றி

  ReplyDelete
 5. ஐயா,எனது சந்தேகங்களுக்கு தெளிவான விரிவான விளக்கம் அளித்தீர்.மிக்க நன்றி.நான் RTI மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளேன்.பதில் வந்ததும் தொடர்புகொள்கிறேன்.நன்றி

  ReplyDelete
 6. மிக்க நன்றி.எனக்கு மிக தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 7. faidh said...

  மிக்க நன்றி.எனக்கு மிக தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்.
  July 6, 2010 5:54 PM /////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete