Saturday, June 19, 2010

நீங்களும் ருசியாக சமைக்கலாம்! - ஆண்களுக்கான சமையல் பகுதி - (பெண்களுக்கு அனுமதி இல்லை)

கழிந்த ஒருமாத காலமாக, என்னை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் நூற்றுக்கணக்கான  ஆண்பதிவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆண்பதிவர்களில் வயது, அனுபவம் இவற்றில் சீனியர் (?) என்பதால் அவர்களுக்கு நான் உதவ வேண்டுமாம். என்ன செய்ய? நான் பாரி மன்னன் பரம்பரையில் வந்தவனாயிற்றே!

குமார் ( உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பதிவர் கூறுவதை கேளுங்கள். " அய்யா, எனக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது. இப்பொழுது சென்னைக்கு குடித்தனம் வந்து விட்டோம். என் மனைவி போடும் காப்பி, நாயர் கடையில் டீ கிளாஸை கழுவி கீழே கொட்டுவார்களே, அதைவிட கேவலமாக இருக்கும். வேறு வழியில்லையே என்று குடித்து விடுவேன். இந்த லட்சனத்தில் "காப்பி எப்படி?" என்று அவள் பெருமையாக கேட்கும் பொழுது  சூப்பர் என   சி.பி. ஐ. மாதிரி சர்ட்டிபிகேட் வேற கொடுப்பேன். இதிலிருந்து மீள ஏதாவது வழி சொல்லுங்களேன்."

நண்பரே,  விதி யாரை விட்டது என மனதை தேற்றிக்கொள்ளுங்கள். இதற்கு ஒரே வழி நீங்கள் சுவையான காப்பி போட கற்றுக்கொள்வதுதான். தரமான காப்பியை நீங்கள் தயாரித்து உங்கள் மனைவிக்கு கொடுங்கள். அதை ருசிபார்த்த பின் அவர் தன் தவறை உணர்ந்து, நல்ல காப்பியை போட முயற்சிக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு ஆபத்தும் உண்டு. ஆகா! நன்றாக காப்பி போடுகிறீர்கள். இனி நீங்களே போடுங்கள் என கழன்று கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். கழனி தண்ணி போன்ற காப்பியை குடிப்பதை காட்டிலும் காப்பி போடுவது மேல் அல்லவா?

 காப்பி போடுவது எப்படி? - செய்முறை விளக்கம்.

தேவைப்படும் பொருட்கள்:
1.  பால்
2. காப்பித்தூள்.
3. சர்க்கரை ( சீனி)

முதலில் பால் பாக்கட்டை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அது ரூம் டெம்பரேச்சருக்கு வர 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகும். அதுவரை காத்திருங்கள். குளிந்த நிலையில் இருக்கும் பாலை அப்படியே காய்ச்சினால், குளிர் நிலையிலிருந்து திடீர் என வெப்ப நிலைக்கு மாறும் பொழுது பால் கெட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும் குளிர் நிலையிலிருந்து கொதி நிலைக்கு வர அதிக நேரம் எடுக்கும் இதனால் காஸ் அதிகமாக செலவாகும்.

பால் பாக்கட்டை எடுத்து அதன் ஒரு முனையில் சிறிதாக ஓட்டை ஏற்படும் வகையில் கத்தரியால் வெட்டுங்கள். பின் நன்காக கழுவப்பட்ட மில்க் குக்கர் அல்லது பாத்திரத்தில் ஊற்றுங்கள். பி. கு. குக்கர் என்றால் அது விசில் அடிப்பதற்கு தேவையான நீர் உள்ளதா என்பதை, குக்கரை குலுக்கி பார்த்து விட்டு, அதன் பின் பாலை ஊற்றுங்கள். பால் கவ்ரினுள் அரை தம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக குலுக்கி அந்த தண்ணீரையும் பாலுடன் சேர்த்து விடுங்கள்.

கேஸ் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் பால் பாத்திரத்தை (அல்லது குக்கர்) வையுங்கள். அடுப்பில் பாத்திரம் சரியாக அமர்ந்திருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள். அதற்குள், காப்பி பொடி, சர்க்கரை, டம்ளர், காப்பி போட பாத்திரம் இவற்றை எடுத்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். பால் காய்ச்சுவது பாத்திரத்தில் என்றால், பாத்திரத்தையே கவனித்து கொண்டு இருங்கள். பால் சூடு ஏற ஏற சிறிது சிறிதாக முட்டை முட்டையாக (பபிள்ஸ்)
தோன்ற ஆரம்பிக்கும். அதன் பின் வேகமாக மேல் நோக்கிவரும். அதவது இப்பொழுது பால் காய்ந்து விட்டது. கொதி நிலைக்கு வந்து விட்டது என அர்த்தம்.  குக்கராக இருந்தால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விசில் அடித்து விட்டால், பால காய்ந்து விட்டது என அர்த்தம்.உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்பொழுது அடுப்பிலிருந்து, பாலை கீழே இறக்கி விடுங்கள். ஒரு தம்ளர் காப்பி என்றால், முக்கால் தம்ளர் பாலையும், கால் தம்ளர் தண்ணீரையும் சேர்த்து காப்பி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். பின் அதை இறக்கி வைத்து விட்டு. அதில் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரையையும், ஒரு அரை ஸ்பூன் காப்பித்தூளையும் ( சன்ரைஸ், புரு) சேர்த்து நன்றாக கலக்குங்கள். இப்பொழுது மணம், சுவை நிறைந்த காப்பி ரெடி!

போடுவதுதான் போடுகிறீர்கள் இரண்டு தம்ளர் ஆக போட்டு உங்கள் மனைவிக்கும் கொடுங்கள்!.

பல மணங்களில் ருசியான டீ போடுவது பற்றிய பதிவில் உங்களை சந்திக்கிறேன்

17 comments:

 1. அய்யா, அப்படியே சமையலை சொல்லி கொடுத்திடுங்க. புண்ணியமா போகும்

  ReplyDelete
 2. காப்பியோட மணம் சவூதிவரைக்கும் அடிக்குது.. தூள்.

  ReplyDelete
 3. வாருங்கள் ஸ்டார்ஜன்! நீங்க எப்படி அங்க. சொந்த சமயலா?

  ReplyDelete
 4. அனானி, சிங்காரம் தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. மேலும் பல சமையல் கலைகளை சொல்லி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் பின் தொடர்கிறேன்..
  நன்றி அய்யா.

  ReplyDelete
 6. தம்பி! தங்கள் பின்னூட்டத்திலிருந்து தாங்கள் ரெம்பவும் நொந்து போயிருக்கிறீகள் என நினைக்கிறேன். என்னால் முடிந்த உதவி இது.

  ReplyDelete
 7. சட்டம் மட்டும் அல்ல, காபி பொடியும் உங்கள் கையிலா? பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு!

  சார், Thank you for inviting me to visit your blog. உங்கள் ப்லாக் follow பண்ண கிளிக்கியாச்சு. ஒரு கப் காபி கிடைக்குமா? :-)

  ReplyDelete
 8. நீங்க நம்ம ஊரு பொண்ணாச்சே! உங்களுக்கு இல்லாத் காப்பியா?

  ReplyDelete
 9. நீங்க எப்படி இது மாதிரிதான் காப்பி போடுவீங்களா?

  ReplyDelete
 10. suuppara irukku coffee!

  ReplyDelete
 11. வீட்டை விட்டு வெளியில‌ வேலைக்கு வ‌ந்த‌தில் இருந்து காப்பி குடிப்ப‌தையே நிறுத்தி விட்டேன்.. உங்க‌ள் செய்முறை ஆசையை தூண்டிவிட்ட‌து..

  ReplyDelete
 12. வாருங்கள் நாடோடி. நேரம் இருக்குமானால், ஹோட்டலில் சாபிடுவதற்கு பதிலாக நாமே தயாரித்து சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியமானது. அதோடு செலவும் பாதியாக குறைந்து விடும். முயற்சி செய்யுங்கள்

  ReplyDelete
 13. ///பி.திரவிய நடராஜன் said...

  வாருங்கள் ஸ்டார்ஜன்! நீங்க எப்படி அங்க. சொந்த சமயலா? ///

  ஆமா அய்யா.. எல்லாம் நம்ம கைவண்ணம்தான்.

  ReplyDelete
 14. காப்பி வாசனை சூப்பர் ஜோரு.. :-))

  ReplyDelete
 15. தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி அமைதிச்சாரல்!

  ReplyDelete