Wednesday, June 23, 2010

வயிறு பத்தித்து எரியுது! சத்தியமா உருப்பட மாட்டீங்க!

நேற்று இரவு ஏஸியாநெட் மலையாள சானலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் காட்டப்பட்ட ஒரு செய்தி தான் என்னுடைய இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம்.

 21-06-2010 அன்று, கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில், கோடன்சேரிக்கு அருகாமையில் உள்ள கல்லந்தாராமேடு என்ற இடத்தில், ஒரு பி.எஸ்.சி நர்ஸிங் மாணவியின் தந்தை  விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,  காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கு காரணம், அவர் மகள் படிப்புக்காக,  கோடன்சேரியில் உள்ள ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் கிளையில் கல்விக்கடனுக்காக விண்ணப்பிருந்தார். பல மாதங்களுக்கு பின் எவ்வித காரணமும்  காரணமும் காட்டாமல்  அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கல்விக்கடன் பெற சட்டப்படியான தகுதிகள் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. கழிந்த ஆண்டு கேரளாவில், சலவை தொழிலாளியின் ஒரே பெண்ணும், பொறியியல் மாணவியுமாகிய  ஒரு இளைஞி, அரசு அலுவலக பல மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள். புண்ணியத்தை தேடிக்கொண்ட வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!

இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போது என்னை அறியாமலேயே எனக்கு ஆத்திரமும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.

மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை தான் அரசு வங்கிகள். அரசு என்ன சொல்ல்கிறதோ அதை செய்யவேண்டியது மட்டுமே வங்கிகலின் வேலை.

இன்னன்ன தகுதிகள் உள்ள மாணவ, மாணவியருக்கு உயர் கல்விக்கு கடன் வழங்குங்கள் என திட்டத்தை கொடுத்திருக்கும்பொழுது, எப்படி இவர்கள் மறுக்க முடியும்?

அரசாங்கத்தை மீறி செயல் பட இவர்களுக்கு சூப்பர் பவர் எங்கிருந்து வந்தது?

தகுதியுடைய மாணவர்களுக்கு கடன் ஏன் மறுக்க வேண்டும்? இவரகள் அப்பன் வீட்டு பணத்திலிருந்தா கடன் கேட்கிறார்கள்?

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு கடனை கொடுத்தால், அதற்கு நாங்கள் அல்லவா பொறுப்பு என்று இவர்கள் சொல்லவும் முடியாது. காரணம் அரசால் விதி முறைகள் வகுக்கப்பட்டு, வங்கியால் செயல் படுத்தப்படும் திட்டமாகும். எனவே வங்கிகளுக்கு பொறுப்பு கிடையாது.

இல்லாத ஒரு அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள்?

மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கும் நீங்கள், உங்கள் கடமையை சரியாக செய்ய துப்பில்லை. இந்த லட்ச்சனத்தில்,
 
" ஊதிய உயர்வு கொடு"

' வெளிநாட்டு வங்கிளுக்கு அனுமதி கொடுக்காதே. மக்கள் பாதிக்க படுவார்கள்"

என்று வருடந்தோறும் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ் எனபது போல, ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை வேலை நிறுத்தம்!

வெட்க்கமா இல்லை?

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகிய பொழுது, வங்கியின் செயல்பாட்டை கண்டித்து கிழி கிழி என்று கிழித்தும் இவர்களுக்கு அறிவு வரவில்லை!

வலையுலக நண்பர்களே! கழிந்த மூன்று வருடங்களாக பதிக்கப்படும் மாணவர்களுக்காக சட்ட ரீதியாக குரல் கொடுத்து அவர்கள் பிரச்சனையை தீர்த்து வருகிறேன். கழிந்த வருடம், சேலம் வட்டத்தில் செயல்படும்  வங்கி ஒன்று, தன் கிளைகளில் பெறப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை, நிராகரித்த விஷயம் என் பார்வைக்கு வந்தது. அதில் ஒரு மாணவர் எனக்கு தெரிந்தவரின் உறவினர். அவரிடமிருந்து தகவல்களை பெற்று,  ரிஸர்வ் வங்கிக்கும், சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதற்காக விணணப்பங்கள் நிராகரிக்கப்பட்டூள்ளது என்பதற்கான காரணத்தை கேட்டேன். அத்துடன் ஏன் பொது நல வழக்கு தொடரக் கூடாது என நோட்டீசும் அனுப்பினேன்.

அதன் பின் நிராகரிக்கப்பட்ட விணப்பங்களுக்கு ( சட்டப்படி தகுதியுள்ள) கடன் வழங்கப்பட்டது.

எனவே வலையுலக நன்பர்களே! தயவு செய்து, உங்கள் பகுதியில் உள்ள தகுதியான மாணவ மாணவியர்களுக்கு, கடனுதவி பெறுவதில் பிரச்சனை இருக்குமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள்.

அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.

அடுத்த பதிவில் கல்விக்கடன் பற்றிய முழு தகவல்களையும் தருகிறேன்.

நன்றி


77 comments:

 1. \\அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.//

  சபாஷ் சார்

  ReplyDelete
 2. உங்க‌ளின் இந்த‌ ச‌ட்ட‌உத‌வி ப‌ல‌ருக்கு உப‌யோக‌மாக‌ இருக்கும் சார்.... தொடார‌ட்டும் உங்க‌ள் முய‌ற்ச்சி.....

  ReplyDelete
 3. Let us Please send bulk emails here= http://finmin.nic.in/contact/officerslist.pdf

  ReplyDelete
 4. அதன் பின் நிராகரிக்கப்பட்ட விணப்பங்களுக்கு ( சட்டப்படி தகுதியுள்ள) கடன் வழங்கப்பட்டது.


  ..... very nice!

  உண்மையில் இந்த பிரச்சினை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.... நல்ல பதிவு!

  ReplyDelete
 5. நடராஜன் சார் இந்த வங்கி ஆளுங்க பண்ணற அநியாயம் சொல்லி மாளாது ..பெரிய பணகாரர்கள்கு தான் இவங்க லோன் கொடுப்பாங்க ஏன் என்ன அப்போ தான் லஞ்சம் கிடக்கும் ..படிப்புகாகே லோன் கொடுக்க மறுக்கும் பேங்க் மேனேஜருக்கு நல்ல தண்டனை கொடுத்தா தான் இவங்கள் எல்லாம் திருந்துவா

  ReplyDelete
 6. /அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.//

  மகிழ்வாக இருக்கிறது சார். நன்றி!

  ReplyDelete
 7. ரோமியோ தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. நாடோடி தங்கள் ஊக்கத்திற்கு நன்றி

  ReplyDelete
 9. sema article sir :) gme ur bumber sir :) i gs u r thoughts must be very useful for ma show :)

  ReplyDelete
 10. ராம்ஜீ தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. தங்கள் வருகைக்கு நன்றி சித்ரா!

  ReplyDelete
 12. தங்காள் வருகைக்கு நன்றி சந்தியா1

  ReplyDelete
 13. sema article sir :) gme ur mobile Number sir :) i gs u r thoughts must be very useful for ma show :) on hello fm (daily thanthi group )

  ReplyDelete
 14. வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா!

  ReplyDelete
 15. பத்திரிகையாளர் சொர்னவள்ளி தங்கள் வருகைக்கு நன்றி. என தொலைபேசி எண்ணை மெயில் செய்கிறேன்

  ReplyDelete
 16. மிகவும் உபயோகமான விஷயங்கள்.பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அந்த பெண்களின் நிலையும், பெற்றவர்களின் நிலையும் மிகவும் வேதனைக்குறியது. கண்டிப்பாக தண்டிக்கபடவேண்டியவர்கள் விண்ணப்பத்தினை நிராகரித்த இந்த வங்கி அதிகாரிகள்...

  ReplyDelete
 18. அரசு அந்த லட்சணத்தில் இருக்கு!, எதாவது கம்ப்ளையண்ட் கொடுத்தா உடனே நடவடிக்கை எங்க எடுக்குறாங்க!

  ReplyDelete
 19. வேதனையா இருக்கு.

  25000 பேருக்கு மேல சாகக் காரணமாயிருந்த Union Carbide நிறுவனத்தார் யாருக்கும் தண்டனை கிடைக்கலையே, கேரளாவில் அந்த ஏழைகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற காரணத்துக்காக வங்கி அதிகாரிகளை தண்டிக்கவா போகிறார்கள்?

  நம்ம நாட்டு நீதித்துறை ரொம்ப கேவலமாயிருக்கு!

  ReplyDelete
 20. பாலாசி, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 21. வால்! பாத்திரமறிந்து நாம் பிச்சை ( ஓட்டு) போடதால் வந்த வினை

  ReplyDelete
 22. தங்களை நினைத்தால் மிகவும் பெருமையாகவுள்ளது!!

  ReplyDelete
 23. உண்மைதான்.ஜோயி.யூனியன் கார்பைடுக்கு உரிய தண்டனை கிடைக்க வில்லை என்பதற்காக நீதித்துறையை தாங்கள் குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிராக்சிகியூசன் அதாவது போலீஸ் எப்படி வழக்கு தொடுக்கிறதோ அதன் அடிப்படயில்தான் தண்டனையை நீதிமன்றம் வழங்கமுடியும். போலீஸ் வேலையை அது செய்ய முடியாது. முதலமைச்சர் அர்ஜுன்சிங் ஆண்டசனை அரசு விமானத்தில், ராஜீவ் காந்தியின் ஆலோசைனையின் பேரில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த பொழுது எப்படி சி.பி.ஐ. முறையாக வழக்கு தொடரும்? இந்தியர் களின் எதிரி, அமெரிச ஏஜண்ட் இந்திரா காங்கிர்ஸ். அதுதான் உண்மை.

  ReplyDelete
 24. தங்கள் வருகைக்கு நன்றி முனைவர்.இரா. குணசீலன் அவர்களே>

  ReplyDelete
 25. தங்கள் வருகைக்கு நன்றி மின்னுது மின்னல் அவர்களே.

  ReplyDelete
 26. சில நேரங்களில் சில மனிதர்களை பார்த்து வியந்ததுண்டு ..
  இந்த காலத்தில் நமக்கேன் என பொத்திக்கொண்டு போவோர் மத்தியில் சும்மா பொளந்து கட்டுறீங்க இல்லையா ?
  அதான் இப்போ உங்களை பார்த்து வியப்பாய் உள்ளது..
  வளர்க உங்கள் பணி....

  ReplyDelete
 27. வாருங்கள் யூர்கன் கருகியர், ஏன் வியப்படைகிறீர்கள்? எல்லொருக்கும் உள்ள உணர்வுகள்தான் எனக்கும் இருக்கிறது. நம் தகுதிக்கேற்ப அநீதிக்கு குரக் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். ஆட்டோ வந்தால் என்னால் சமாளிக்கும் வயது எனக்கு இல்லை. இவர்களெல்லாம் எனக்கு தூசு மாதிரி அவ்வளவுதான்.

  ReplyDelete
 28. திரவியம் அய்யா, இதுவருந்ததக்க நிகழ்வு. கேரளா நண்பர்கள் அந்த சேனலில் ஒளிபரப்பட்ட அந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு வருத்தத்துடன் கூறினார்கள். ஏன் இந்தமாதிரியெல்லாம் செய்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி அவர்கள் நிராகரிக்குமளவுக்கு அந்த தந்தை என்ன குற்றம் செய்தார்?.. நிதிஉதவி செய்யமுடியாதாள்வுக்கு அவர்களுக்கு எப்படி பவர் எங்கிருந்து கிடைக்கிறது..

  நல்லதொரு பகிர்வு.. உங்களின் சேவை என்றென்றும் காலத்தால் அழியாதது.. நீதிக்காக குரல்கொடுக்கும் உங்களின் குரல் அவர்களின் செவிப்பறையை தாக்கி செவிப்பறை கிழிந்து தொங்கட்டும்.

  ReplyDelete
 29. உங்க முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது ஐயா.

  ReplyDelete
 30. நன்றி ஸ்டார்ஜன்.தங்கள் வருகைக்கு.

  ReplyDelete
 31. திரவியம் அய்யா,
  என் பெயர் ஜோ, ஜோயி அல்ல!

  காவல் துறையை கடுமையாக கண்டிக்கவும், தனது வேலையை விரைவாகவும் திறம்படவும் செய்ய பணிக்கவும் நீதித்துறைக்கு அதிகாரமில்லையா என்ன? கொடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து 26 வருடம் நடந்த ஒரு வழக்கில் எவருக்குமே தண்டனை கிடைக்காதது வெட்கக்கேடு.
  அரசியல்வாதிகளின் தவறினால் தான் இவ்வளவு சேதமும் என்று அறிந்தும் கூட, அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்பது வேதனை தருகிறது.

  உங்களால் முடிந்த அளவுக்கு ஏழை மக்களுக்கு உதவி செய்கிறீர்கள், வாழ்த்துக்க்கள் அய்யா!

  ReplyDelete
 32. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமைதிசாரல். என்னால் முடிந்ததை செய்கிறேன் அவ்வளவுதான்

  ReplyDelete
 33. இது வருந்ததக்க சம்பவம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

  ReplyDelete
 34. வருகைக்கு நன்றி கட்டபொம்மன் அவர்களே

  ReplyDelete
 35. சட்ட பூர்வமாக முயற்சி செய்து வெற்றி பெற ப்ரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 36. //எனவே வலையுலக நன்பர்களே! தயவு செய்து, உங்கள் பகுதியில் உள்ள தகுதியான மாணவ மாணவியர்களுக்கு, கடனுதவி பெறுவதில் பிரச்சனை இருக்குமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள்.

  அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.//

  அப்படிப்போடுங்க!, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. எத்தனை முறை சொன்னாலும் அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் உறைக்காது.

  - ஜெகதீஸ்வரன்
  sagotharan.wordpress.com

  ReplyDelete
 38. இரண்டு வருடங்களுக்கு முன் சிக்கிச் சின்னாபின்னமான தந்தையாக உங்களுக்கு நன்றி. முடிந்தால் நாளையே இவர்கள் நம்மை அலக்கழிக்கும் கண்றாவியை இடுகையில் சொல்கிறேன்.

  ReplyDelete
 39. நல்ல பதிவு சார்....உங்களின் கோபம் நியாயமானதுதான்...

  ReplyDelete
 40. ஐயா, மிகவும் அவசியமான பதிவு. Bank of Punjab - Education Loan Division ல கொஞ்ச நாள் இருந்த காரணத்தினால் இது பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும். உண்மையிலேயே லோன் தேவைப் படாத பணக்காரர்களுக்கு மட்டுமே லோன் கிடைக்கும். அவங்க எதுக்கு லோன் எடுக்கறாங்க என்பது ஒரு பெரிய கதை. சாமானியர்கள் பலர் உரிமைகளைப் பத்தி தெரியாம இருக்காங்க. இது பத்தி நீங்க விவரமா எழுதினா பலருக்கும் உபயோகமா இருக்கும்.
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 41. வலைப்பதிவுகளின் பலனை இன்றுதான் காண்கிறேன்.

  ReplyDelete
 42. Sir,

  A kind request. You should also extend your help to the victims of the corporate hospitals who simply overcharge the patients and also on their medical negligence part.

  There are many horror stories from these hospitals.

  regds,
  Prabhu

  ReplyDelete
 43. சத்தியமா உருப்படவே மாட்டங்கா சார்.

  நல்ல பதிவு.
  உங்களுடைய இந்த சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. தங்களின் சேவை மனப்பான்மை மகிழ்ச்சியளிக்கிறது, வாழ்த்துக்கள் அய்யா.

  ReplyDelete
 45. அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.
  ////////


  nantri
  thakaval ariyum saddam paRRi konjam theliva sollunga

  ReplyDelete
 46. வலைப் பூக்களின் மூலம் சேவை செய்யமுடியும் எடுத்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 47. எனவே வலையுலக நன்பர்களே! தயவு செய்து, உங்கள் பகுதியில் உள்ள தகுதியான மாணவ மாணவியர்களுக்கு, கடனுதவி பெறுவதில் பிரச்சனை இருக்குமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள்.

  அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.////


  சும்மா வெளுத்து வாங்கிட்டிங்க , நிறைய பேருக்கு இது உதவும் சார்

  ReplyDelete
 48. நிச்சியமாக இது நல்ல முயற்சி உங்களின் செயல்பாடுகளுக்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்

  ReplyDelete
 49. are the following details corect:

  Address: P.B.NO.1, ST.MARYS CHURCH BLDG, KODENCHERRY, KOZHIKODE DIST.-673580

  Phone: (495) 2236233

  Email: sbi.08628@sbi.co.in

  ReplyDelete
 50. mr ramji, i hav to check it. but the district collecter has asked explanation from sbi wy the application was delayed & rejected. so i think there is no need to contact the branch in this regar. thanks for ur information

  ReplyDelete
 51. சார், உங்களின் செயல் மேன்மையானது, எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு, please go ahead.

  ReplyDelete
 52. அருமையன பணி. தொடரட்டும் உங்கள் சேவை..

  ReplyDelete
 53. பயனுள்ள பதிவை தந்திருக்கிறீர்கள். தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது.தங்களின் முயற்சி மென்மேலும் தொடர எங்களை போன்றவர்களின் ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 54. தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஜே!

  ReplyDelete
 55. அமுதா கிருஷ்னா தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 56. நண்பர் அபுல் பசர் அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete
 57. தங்களின் சேவை சிறப்பானது.
  நிச்சயம் தொடருங்கள் சார்.
  அவசியம் உங்களுக்கு
  நற்கூலி உண்டு, இறைவனிடத்தில்.

  ReplyDelete
 58. நிஸாமுதீன் அவர்களே உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete
 59. படிக்கும் போதே பெருமையா இருக்குங்க . உங்களப்போல ஓரிருவர் இருப்பதால தான் மழை வருது போல ..!! வாழ்த்துக்கள்...!!

  ReplyDelete
 60. தங்கள் வருகைக்கு நன்றி ஜெய்லானி. நீங்கள் புகழும் அளவிற்கு நான் எதையும் செய்ய வில்லை. என்னால் முடிந்ததை தெரிந்ததை செய்கிறேன் அவ்வளவுதான்.

  ReplyDelete
 61. மிக்க நன்றி ஐயா,உங்களைப்போன்றவர்களை பார்ப்பதே அபூர்வம்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 62. தங்கள் வருகைக்கு நன்றி asiya omar அம்மா!

  ReplyDelete
 63. தங்கள் பயனுள்ள் பணிகள் மென் மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 64. தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நிலாமதி.

  ReplyDelete
 65. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.பாராட்டுக்கள்!

  ReplyDelete
 66. வருகை தந்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 67. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 68. அய்யா வணக்கம்..அடிக்கடி வருவோம்.

  ReplyDelete
 69. இளம் தூயவன், தாராபுரத்தான் அவ்ர்களே தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete
 70. முதல் பதிவெ சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு அருமை . அதிகாரம் சீர்திருத்தாத பல துறைகளை நமது எழுத்துக்கள் சீர்திருத்தாதட்டும் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 71. நீங்க நல்லா இருக்கணும் சார்.
  இது போன்ற சிக்கல்களை தெரியப்படுத்துகிறோம்.

  ReplyDelete
 72. ரோஸ்விக் தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 73. பனித்துளி சங்கர் அவர்களே தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete