Saturday, June 26, 2010

" ஆப்பு வைக்கனுமா ஆப்பு?" - பி.எஸ்.என்.எல் - க்கு ஆப்பு வச்ச கதை

பிராட்பேண்ட் அறிமுகப்படுத்திய பொழுது  BSNL  CHENNNAI  TELEPHONES ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. அதாவது, பிராட்பாண்ட் இண்டெர்நெட் இணைப்பு பெறுபவர்களுக்கு, மாதாந்திர தொலைபேசி கட்டணம் கிடையாது. ஒரு அழைப்புக்கு 1 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதுதான் திட்டம். எனவே இத்திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட்க்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப படிவத்தில், இணப்பு தொலைபேசி கருவியுடனா?, உட்புற வயரிங்குடனா? என கேட்கப்பட்டிருந்தது. தொலைபேசி கட்டணம்=250 ரூபாய், வயரிங் =500 ரூபாய்.  எனக்கு இரண்டுமே தேவையில்லை என்பதை படிவத்தில் குறிப்பிட்டு விட்டேன். ஆக இணைப்பு கட்டணமாக ரூபாய் 50 மட்டுமே நான் செலுத்தினால் போதும்.


பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஸெராக்ஸ் எடுத்து விட்டு, வின்ணப்பத்துடன், டெப்பாசிட் தொகைக்கான பாங்க் டிராப்டையும் இணைத்து அவர்கள் அலுவ்லகத்தில் கொடுத்து விட்டேன். பத்து பதினைந்து நாட்கள் கழித்து எக்சேஞ்சிலிருந்து ஜூனியர் என்ஜினீயர், லைன் மேன் உட்பட ஒரு பெரிய பட்டாளமே, கையில் வயர், புதிய தொலைபேசி கருவியுடன் வந்தது.என் வீட்டிற்கு பக்கத்திலேயே போஸ்ட்டும், டி.பி யும் இருந்ததால் அதில் வயரை இணைத்து, என் வீட்டின் ஜன்னல் வழியாக இணைப்பை கொண்டு வந்து, அதில் தொலைபேசி கருவியை இணைத்து செக் பண்ணினர்.


ஏற்கனவே, நான் ஒரு தொலைபேசி இணைப்பு வைத்திருந்த காரணத்தால், நான் சம்திங் கொடுக்கும் வழக்கம் எனக்கு கிடையாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் கிளம்பி விட்டார்கள். தொலைபேசி கருவியை அவர்கள் எடுக்கவில்லை. நான் தொலைபேசி கருவி, மற்றும்  உட்புற வயரிங்  இல்லாமல்தான் இனைப்பு வேண்டும் என விண்ணப்பித்துள்ளேன். எனவே  தொலைபேசி கருவியை  எடுத்துக்கொள்ளுங்கள்  என  ஜே. இ. யிடம் கூறினேன். அவரோ, தனக்கு  தொலைபேசி இணைப்பு கொடுக்குமாறு  ஆடர் வந்துள்ளது. அதன்படி இணைப்பு கொடுத்துவிட்டேன் என்றார்.   உடனே டி.ஜி.எம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட பொழுது, எக்சேஞ்சுக்கு வேறு ஆடர் அனுப்புவதாகவும், அதன் பின் அவர்கள் வந்து தொலைபேசியை எடுத்துக்கொள்வார்கள் என கூறிவிட்டனர்.


அதன் பின்பு பல நாட்களாகியும், தொலைபேசியை எடுக்க வரவே இல்லை. எனவே டி.ஜி.எம் அலுவலகத்திற்கு பேக்ஸ் மூலம் புகார் செய்தேன். அதற்கும் பலனில்லை. மொத்த தொகை ரூபாய் 800 க்கும் சேர்த்து பில் வந்தது. ஆப்பு வைக்காம இவங்க வழிக்கு வர மாட்டாங்கன்னு முடிவு செய்து, 750 ரூபாயை குறைவு செய்து திருத்தப்பட்ட பில் வழங்க வேண்டும் என்றும், அவ்விதம் வழங்கப்படாவிட்டால், இணைப்பு துண்டிப்பை தவிப்பதற்காக் பில் தொகை முழுவதும் செலுத்தப்படும் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் அனைத்து கஷ்ட நஷ்டங்களுக்கும் பி.எஸ்.என்.எல்-லே முழு பொறுப்பு என்றும் நோட்டீஸ் ஒன்றை பேக்ஸ் மூலம் டி.ஜி.எம்-க்கு அனுப்பினேன்.அதன் பின் எக்சேஞ்சிலிருந்து ஆட்கள் வந்து தொலைபேசியை எடுத்து சென்று விட்டனர்.


அதற்கு பின்னும் திருத்தப்பட்ட பில் அனுப்பப்படவில்லை. எனவே பில்படியுள்ள தொகையை செலுத்திவிட்டேன். அதிகப் படியாக என்னிடம் வசூலிக்கப்பட்ட தொகை, அதற்கு பின் அனுப்பட்ட பில்களில் குறைவு செய்யப்படவில்லை. இதற்குள் சுமார் 4-5 மாதங்கள் ஆகிவிட்டது.எனவே  கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக  நோட்டீஸ் அனுப்பினேன்.காலையில் பேக்ஸ்-ஐ பெற்றவர்கள் அன்று மாலையே ரூபாய் 750 க்கு காசோலையை எனக்கு ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பி வைத்தனர். மறு நாள் எனக்கு கிடைத்து. உடனே அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டேன்.


பி.எஸ்.என்.எல் தனது  குறைபாடான செவைக்காக ரூபாய் 5000 நஸ்ட ஈடு வழங்குவதுடன், நீதிமன்ற செலவு மற்றும்  அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையையும் வழங்கவேண்டும் என மாவட்ட கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.  

வழக்கறிஞர்  இல்லாமல் நானே வழககை தமிழில் தாக்கல்  செய்து  வாதாடினேன். என் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  அதிகப்படியாக வசுலிக்கப்பட்ட தொகை ரூபாய் 750-ஐ திருப்பி அளிக்க வேண்டும் எனவும், நஷ்ட ஈடாக ரூபாய் 2000, மற்றும்  நீதிமன்ற செலவாக ரூபாய்  500 வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பி.எஸ்.என்.எல் மேல் முறையீடு செய்தது. அதிலும் எனக்கே வெற்றி!  அதன் பின் வாடிக்கையாளர்கள பிரச்சனையை தீர்ப்பதில் சில முன்னேற்றம் காணப்பட்டது. என்னை பொறுத்தவரை, என் பெயரை சொன்னாலே  சீப் ஜெனரல் மேனேஜர் அலுவலகம் கூட அலறும். காரணம் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல. இதோடு சேர்த்து மொத்தம் மூன்று வழக்குகளை ஒரே சமயத்தில் போட்டு அவர்களை திக்கு முக்காட வைத்தது தான். இது ஒரு ரிக்கார்டு பிரேக்! 

43 comments:

 1. நல்ல ஆப்புங்க. அடிக்க்கடி வையுங்க.

  ReplyDelete
 2. ஆப்பு கரெக்டா வச்சி இருக்கீங்க சார் .

  ReplyDelete
 3. உண்மையிலேயே வாழ்த்துக்கள். ஆனாலும் சமயம் கிடைக்கும்போது அவர்கள் வஞ்சம் தீர்ப்பார்கள். ஜாக்கிரதை.

  ReplyDelete
 4. அனானி நண்பரின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. சீனியர் சிங்காரம் said...

  நல்ல ஆப்புங்க. அடிக்க்கடி வையுங்க
  நன்றி த்ங்கள் வருகைக்கு

  ReplyDelete
 6. ♥ ℛŐℳΣŐ ♥ said...

  ஆப்பு கரெக்டா வச்சி இருக்கீங்க சார்

  நன்றி த்ங்கள் வருகைக்கு

  ReplyDelete
 7. Blogger சு.பரணி கண்ணன் said...

  Very Good. Please keep doing

  நன்றி த்ங்கள் வருகைக்கு

  ReplyDelete
 8. தனியார் கொள்ளை அடிக்கும் சேவைகளை ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை. இங்கு நல்ல உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே இருந்து வரும் அழுத்தம் தெரிந்து இருப்பதால் நானும் பலமுறை இதே போல் முயன்று பரிதாபப்பட்டு வந்து விடுகின்றேன்.

  ReplyDelete
 9. ரமேஷ் கார்த்திகேயன் said...

  வாழ்த்துகள் அய்யா

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. Blogger Robin said...

  Well done
  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. ஒரு ஊருக்கு பத்து பதினைந்து பேர் உங்களைப் போல போராட்டக்குணம் கொண்டபவர்களாக இருந்தால் அலட்சியமாக இருந்தால் ஆப்பு நிச்சயம் என்பது அழுத்தமாக உணர வைக்கப்படும். தொடரட்டும் உங்கள் சேவை. மக்கள் சேவையில் எப்படியாவது நல்ல மாற்றங்கள் வெளி நாடுகளைப் போல வர வேண்டும்.

  ReplyDelete
 12. ramalingam said...

  உண்மையிலேயே வாழ்த்துக்கள். ஆனாலும் சமயம் கிடைக்கும்போது அவர்கள் வஞ்சம் தீர்ப்பார்கள். ஜாக்கிரதை///

  நம்மிடம் தவறுகள் இல்லாத பட்சத்தில் நம்மை எப்படி பழீ வாங்க முடியும்?

  ReplyDelete
 13. வாழ்த்துக்க‌ள் அய்யா.... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ணி..

  ReplyDelete
 14. Blogger ஜோதிஜி said...

  \\ தனியார் கொள்ளை அடிக்கும் சேவைகளை ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை. இங்கு நல்ல உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே இருந்து வரும் அழுத்தம் தெரிந்து இருப்பதால் நானும் பலமுறை இதே போல் முயன்று பரிதாபப்பட்டு வந்து விடுகின்றேன்//

  தவறு செய்பவர்களில் அரசு தனியார் என்ற பாகுபாடு ஏன்?

  ReplyDelete
 15. அருமை மற்றும் வாழ்த்துக்கள் அய்யா..

  தங்களின் இவ்விடுகையை பண்புடன் குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். நன்றி!

  ReplyDelete
 16. nonymous said...

  ஒரு ஊருக்கு பத்து பதினைந்து பேர் உங்களைப் போல போராட்டக்குணம் கொண்டபவர்களாக இருந்தால் அலட்சியமாக இருந்தால் ஆப்பு நிச்சயம் என்பது அழுத்தமாக உணர வைக்கப்படும். தொடரட்டும் உங்கள் சேவை. மக்கள் சேவையில் எப்படியாவது நல்ல மாற்றங்கள் வெளி நாடுகளைப் போல வர வேண்டும்//

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 17. நாடோடி said...

  வாழ்த்துக்க‌ள் அய்யா.... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ணி..//

  வருகைக்கு நன்றீ

  ReplyDelete
 18. Blogger சென்ஷி said...

  அருமை மற்றும் வாழ்த்துக்கள் அய்யா..

  தங்களின் இவ்விடுகையை பண்புடன் குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். நன்றி//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 19. நல்ல பகிர்வு!!
  நீங்கள் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறீர்கள்..
  உங்கள் மேல் உள்ள மரியாதை ஒவ்வொரு பதிவிலும் கூடிகொண்டே போகிறது..
  உங்கள் போராட்ட குணத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..

  ReplyDelete
 20. யூர்கன் கருகியர் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 21. நானும் இதுபோல பி.எஸ் .என்.எல் உடன் பெரும் பிரச்னையில்தான் இருக்கிறேன்.Consumer courtஇல் எப்படி வழக்கு தொடுப்பது என்ற விபரங்கள் அவ்வளவாகத் தெரியாதென்ற காரணத்தால் அப்படியே விட்டு விட்டேன்.

  ReplyDelete
 22. வாங்க!
  ஆப்பு வைக்க நான் சொல்லி தாரேன்..
  விபரத்தை எனக்கு மெயில் பண்ணுங்க்க.
  ஏம்மா! எவ்வள்வு சந்தோஷமான காரியம். கம் ஆன். நான் ரெடி.. நீஙக ரெடியா?

  ReplyDelete
 23. Blogger அன்புடன் அருணா said...

  நானும் இதுபோல பி.எஸ் .என்.எல் உடன் பெரும் பிரச்னையில்தான் இருக்கிறேன்.Consumer courtஇல் எப்படி வழக்கு தொடுப்பது என்ற விபரங்கள் அவ்வளவாகத் தெரியாதென்ற காரணத்தால் அப்படியே விட்டு விட்டேன்/////

  !
  ஆப்பு வைக்க நான் சொல்லி தாரேன்..
  விபரத்தை எனக்கு மெயில் பண்ணுங்க்க.
  ஏம்மா! எவ்வள்வு சந்தோஷமான காரியம். கம் ஆன். நான் ரெடி.. நீஙக ரெடியா?

  ReplyDelete
 24. வச்சீங்க பாருங்க ஆப்பு., செம டாப்பு..

  ReplyDelete
 25. என்னை பொறுத்தவரை, என் பெயரை சொன்னாலே சீப் ஜெனரல் மேனேஜர் அலுவலகம் கூட அலறும். காரணம் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல. இதோடு சேர்த்து மொத்தம் மூன்று வழக்குகளை ஒரே சமயத்தில் போட்டு அவர்களை திக்கு முக்காட வைத்தது தான். இது ஒரு ரிக்கார்டு பிரேக்!

  .....பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.

  ReplyDelete
 26. வச்சீங்க பாருங்க ஆப்பு., செம டாப்பு..

  June 26, 2010 7:31 PM
  Delete
  Blogger Chitra said...

  என்னை பொறுத்தவரை, என் பெயரை சொன்னாலே சீப் ஜெனரல் மேனேஜர் அலுவலகம் கூட அலறும். காரணம் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல. இதோடு சேர்த்து மொத்தம் மூன்று வழக்குகளை ஒரே சமயத்தில் போட்டு அவர்களை திக்கு முக்காட வைத்தது தான். இது ஒரு ரிக்கார்டு பிரேக்!

  .....பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.///

  நம்ம ஊரு ஆயுதம் எது?
  வீச்சு அறுவா, பேனா.
  பேனாவை எடுத்திட்டேன்.

  ReplyDelete
 27. கலக்கல் சார்! இதைப்போல அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நம்ம நாடு எப்பவோ முன்னேறி இருக்கும்.. பிரச்சனை என்னவென்றால் இதன் பிறகு இவர்கள் தரும் குடைச்சல் காரணமாக பயந்து யோசிக்கிறார்கள்.

  இருக்கிற பிரச்சனயில் இது வேறயா! என்பது தான் பலரின் எண்ணமாக உள்ளது.

  ReplyDelete
 28. கிரி said...

  கலக்கல் சார்! இதைப்போல அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நம்ம நாடு எப்பவோ முன்னேறி இருக்கும்.. பிரச்சனை என்னவென்றால் இதன் பிறகு இவர்கள் தரும் குடைச்சல் காரணமாக பயந்து யோசிக்கிறார்கள்///

  போராட்டம் இல்லாத வாழ்க்கை ராசிக்காது. இயங்கினால் தான் இயந்திரம். இல்லை என்றால் பழைய இரும்புதான்

  ReplyDelete
 29. ஆ.ராசா வரைக்கும் இழுத்து நாரடிச்சிருக்கனும் தல!

  ReplyDelete
 30. முன்னுதாரணம்....

  ReplyDelete
 31. வால் தம்பி, அரசியல்வாதிய பற்றி எழுத ஆரம்பிச்சா, ஒரு நாளைக்கு பத்து பதிவு போடனும். அதனால அடக்கி வாசிக்கிறேன் அவ்வளவுதான்.

  ReplyDelete
 32. பாராட்டுக்கள் பாஸ்..

  ReplyDelete
 33. வாங்க பட்டாபட்டி, என்னை பாஸ் ஆக்கிட்டீங்க!

  ReplyDelete
 34. தமிழானாய் நெஞ்சம் நெகிழ்கிறேன்

  ReplyDelete
 35. வாங்க காவேரி கணேஷ். தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 36. ஆப்பு கரெக்டா வச்சி இருக்கீங்க சார்

  ReplyDelete