Thursday, June 10, 2010

பாஸ்போர்ட் தொடர்பான பிரச்சனை - விளக்கம்

பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம்

கடலூர் மாவட்டத்தை சார்ந்த  வெங்கடேசன் என்ற ஒரு நண்பர் மெயில் மற்றும் சாட்டில் இன்று தொடர்பு கொண்டு அவர் பிரச்சனையில் உதவுமாறு கேட்டார். அவருக்கு கொடுக்கும் ஆலோசனையை அப்படியே பதிவாக இங்கே போட்டுள்ளேன். காரணம் இதே நிலை மற்ற வாசகர்களுக்கு ஏற்படும் பட்ச்சத்தில், அவர்கள் யாருடைய உதவியுமின்றி அதை அணுக முடியும் என்பதே.

இவர் 18-02-2010 அன்று சென்னை ரீஜினல் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதை பெற்றுக்கொண்டதற்கான ரசிது வழங்கப்பட்டு உள்ளது..

27-03-2010 அன்று அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய காவல் நிலையத்திலிருந்து, போலீஸ் வெரிபிகேசன் என்ற விசாரணையும் செய்யப்பட்டு விட்டது.ஆனால் இன்றைய தினம் வரையிலும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை . பாஸ் போர்ட் ஆபீஸ் வெப் சைட்டில்  ஸ்டேட்டஸ்  பார்த்தால் "Police report has not been received " என்று வருகிறது.  அவர் சம்பந்தப்பட்ட  காவல் நிலையத்தில் விசாரித்த பொழுது, ரிப்போர்ட் விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டருக்கு  28-03-2010 அன்று அனுப்பப்பட்டு விட்டது  அனுப்புகை பதிவேட்டு எணையும் கொடுத்து உள்ளனர். மேலும் இந்த ரிப்போர்ட் விருதாச்சலம் இன்ஸ்பெக்டரி டமிருந்து கடலூர் அனுப்பப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது தான் விஷயம்.

அவர் மெயிலில் விண்ணப்ப பதிவு எண்ணை கொடுத்திருந்ததால், நானும் இப்பொழுது செக் பண்ணி பார்த்தேன். அவர் கூறுவது சரி தான்.

1. பாஸ்போர்ட் விண்ணப்பததை நன்கு பரிசீலித்து அதில் எந்த குறைபாடுகள் இல்லாத பட்ச்சத்தில் தான் போலீஸ் வெரிபிகேசனுக்கு அனுப்புவது நடைமுறை. எனவே  போலீஸ் ரிப்போர்ட் கிடைத்தவுடன் பாஸ் போர்ட் வழங்கிவிடும்.

2. போலீஸ் ரிப்போர்ட் சம்பந்தப்பட்ட  காவல் நிலையத்திலிருந்து  அனுப்பப்பட்டுவிட்டது. இது விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் பெண்டிங்கில் இருக்கிறதா அல்லது மாவட்ட காவல் துறை அதிகாரி ( எஸ். பி ) அலுவலகத்திலா? அல்லது பாஸ் போர்ட் அலுவலகத்தில் பெறப்பட்டும் கவனக்குறைவால் இந்நிலையா? என்பதை பார்க்க வேண்டும்.

3. விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் அலுவலகம் >>>> கடலூர் எஸ்.பி அலுவலகம் >>>> பாஸ்போர்ட் அலுவலகம் என விரட்டிப்பிடித்தால் காலதாமதமாகும். இதற்கு சுலபமான ஒரே வழி தகவல் அறியும் உரிமை சட்டமே.

4. காவல் துறையை பொறுத்தவரை, மாவட்ட எஸ்.பி யே  பொது தகவல் அதிகாரியாவார். எனவே அவருக்கு இச்சட்டதின் கீழ் தகவல் கேட்டு ஒரு மனுவும்,  பாஸ்போர்ட் அலுவலக பொதுத்துறை அதிகாரிக்கு ஒரு மனுவும் செய்ய வேண்டும். இந்நிலையில் எங்கு தவ்று நடந்திருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டு விடும்.

5. எப்படி மனு செய்ய வேண்டும் என்ற விபரத்தை பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். அதை பார்க்கவும்.

இத் தகவல் அவருக்கு போதுமானது என நினைக்கிறேன்.

குறிப்பு:  மனுவில் பொது தகவல் அதிகாரி என்றே முகவரியிட வேண்டும். எஸ்.பி என்றோ, பாஸ்போர்ட் அலுவலர் என்றோ குறிப்பிட்டால் அது சாதரண மனுவாகவே கருதப்படும்.

அன்புடன்
திரவிய நடராஜன்.


13 comments:

  1. சார் இதுதான் சார் பொது சேவை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைவருக்கும் பயன்படும் தகவல்கள்..

    வாழ்த்துகள் நண்பரே

    தொடரட்டும் நண்பரே

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு நன்றி. மேலும் 1989 க்கு பின்பு பிறந்த எனது மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும் என்று கூறுகிறார்களே அப்படி பிறப்பு சான்றிதழ் இல்லையேன்றால் அப்ளை செய்யமுடியாது என்கிறார்களே வேறு சான்றிதழ் ( ட்ரிவிங் லைசன்ஸ், குடும்ப அட்டை ) போதாதா ? தயவுசெய்து தெரிந்தால் விளக்கவும். நன்றி

    ReplyDelete
  4. வருகை தந்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  5. அனானியாக வந்து தகவல் கேட்டிருக்கும் நண்பருக்கு. தங்கள் மகன் பிறந்த்தது எங்கு என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. பிரப்பு சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக எந்த ஒரு பிரஜைக்கும் பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது.அது உரிமையாகும்.1989 க்கு பின் பிற்ந்தவராக இருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சியில் முறைப்படி விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம்.ஒருவருடம், அதற்கு மேற்பட்டு காலதாமதமாக பதிவு செய்பவர்கள் என ரூ.10 செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி வெப் சைட்டில் கூறப்பட்டுள்ள்து. இந்த நடமுறை பொதுவானதே. எனவே சம்பத்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெறவும் என ஆலோசனை வழங்கப்படுகிறது.
    நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் சார். மிக்க நன்றி.

    ReplyDelete
  7. பயனுள்ளத்தகவல்... மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  8. சார் நான் இப்போது UAE- ல்.என் மனைவியின் பாஸ்போர்டில் என் பெயரில் எழத்து பிழை உள்ளது அதனால் என் மகனுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வருமா?என் மனைவியின் பாஸ்போர்ட் மட்டும் வைத்து என் மகனுக்கு விண்ணப்பிக்க முடியமா?அல்லது என் பாஸ்போர்டும் தேவைபடுமா?

    ReplyDelete
  9. சி. கருணாகரசு said...

    >> பயனுள்ளத்தகவல்... மிக்க நன்றிங்க <<

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. அக்பர் said...

    >>> பயனுள்ள தகவல் சார். மிக்க நன்றி <<<

    வருகைக்கு நன்றி அக்பர்.

    ReplyDelete
  11. faidh said...

    >>> சார் நான் இப்போது UAE- ல்.என் மனைவியின் பாஸ்போர்டில் என் பெயரில் எழத்து பிழை உள்ளது அதனால் என் மகனுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வருமா?என் மனைவியின் பாஸ்போர்ட் மட்டும் வைத்து என் மகனுக்கு விண்ணப்பிக்க முடியமா?அல்லது என் பாஸ்போர்டும் தேவைபடுமா? <<<

    தங்கள் கேள்விக்கு தங்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என விளக்கமான பதில் தருகிறேன்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. மிக்க நன்றி ஐயா..உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்குறேன்

    ReplyDelete