Friday, July 30, 2010

நாம எல்லோரும் கேணப்பயலுகளா?

ஆக்கங்கெட்ட அரசாங்கமும், அருள் வாங்கிய பூசாரிகளும் !
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் (குறைவான மதிப்பீடு) என்ற கணக்கில் ஒருவேளை சோத்துக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள், பட்டினி சாவு கணக்கில் அடங்காது. இந்நிலையில், மத்திய அரசாங்கம் என்னத்தை கிழித்து கொண்டிருக்கிறது?

இந்திய உணவு கழகத்தின் பஞ்சாப் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் கோதுமை இது மகாராஷ்டிராவில் கிடங்கில் போடப்பட்டிருக்கும் கோதுமை !


இது மத்திய பிரதேசத்தில்

இது ராஜஸ்தான்
இது உத்திரபிரதேசம்
பொது வினியோக திட்டத்திற்காக மத்திய அரசு வட மாநிலங்களில் கொள்முதல் செய்யும் கோதுமைகளில் மூன்றில் ஒன்று பங்கு அளவை மழை, வெயில் இவற்றால் கெட்டுப்போகும் வகையில் திறந்த வெளியில் வைத்துள்ளது. அதாவது 168 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை. இவற்றின் மதிப்பு 28,000 கோடி ரூபாய். இந்த கோதுமையை கொண்டு, ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு உணவளிக்க முடியும்.

இவ்விதம் பாதுகாப்பற்று திறந்தவெளியில் சேமிக்கப்படுவதற்கு மூல காரணம், தேவையான பாதுகாப்பான கிடங்குகள் இல்லாதது தான். இதில் கொடுமை என்னவென்றால், சில இடங்களில் இருக்கும் குடோனில் மதுவகைகளை அடுக்கி வைத்து விட்டு, உணவுப்பொருளை வெளியே வைத்திருப்பதும், சில குடோன்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பதும் தான்!.

545 லோக் சபா தொகுதிகளில் 206 -ல் மட்டுமே வெற்றி பெற்ற இந்திரா காங்கிரஸ் அரசு அமைக்க கூடிய பெரும்பான்மை கட்சி இல்லை. ஆனால் மற்ற சில கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. அதன் ஒரே நோக்கம் சுயலாபம் மட்டுமே. ஆட்சி அமைத்து, உலக வங்கி மற்றும் அமெரிக்காவின் விருப்பப்படி நாட்டை நடத்துவது மட்டுமே !. அதனால் ஆட்சி அமைக்க உதவிய இதர கட்சிகளுக்கு  சில துறைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளது. அதில் ஏற்படும் எந்த குளறுபடியையும் கண்டுக்காது.

அவ்விதம் இந்திரா காங்கிரஸ், துறைகளை தாரை வார்த்து கொடுக்க அவற்றை பெற்றுக்கொண்ட கட்சிகளில் தேசியவாத காங்கிரஸூம் ஒன்று. கட்சி தலைவர் சரத்பவாருக்கு உணவுத்துறையும், பிரபுபடேலுக்கு  சிவில் விமான போக்குவரத்து துறையும்.

தனியார் தொலைகாட்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு பொருள் கழகம் இவ்வாறு உணவு பொருட்களை வீணாக்குவதை வீடியோ போட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பின் நமது அமைச்சர் கூறியது என்ன தெரியுமா? "போதுமான குடோன்  இல்லாதது தான் காரணம்". இதை வழிப்போக்கன் கூட சொல்லி விடுவான். இதை கண்டுபிடித்து சொல்ல ஒரு அமைச்சர்!

துடைப்பம் முதல் பங்களா, கார், தொலைபேசி, துப்பாக்கி ஏந்திய காவலர் பட்டாளம், மனைவியோடு உள்நாடு- வெளிநாடு செல்ல விமானப்பயணம், இத்தியாதி ....இத்தியாதி. இதுபோக மாதாமாதம் தண்ட சம்பளம். ஆக மக்கள் வரிப்பணத்தில் ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என தீபாவளி கொண்ட்டாடும் அமைச்சர், வருடா வருடம் எவ்வளவு உண்வு தானியம் கொள்முதல் செய்யப்படுகிறது, அது எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை தன் அமைச்சகத்திடம் கேட்டிருந்தால், இந்த அவல நிலை தெரிந்திருக்கும். அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் ஏது? ஐ.பி.எல்-ல் எவ்வளவு ஷேர் வாங்குவது, மற்றும் கிரிகெட் விஷயங்களுக்கே நேரம் பத்தவில்லை.

இவர் என்ன,  அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்காக பதவியை. ராஜினாமா செய்த லால்பகதூர் சாஸ்திரியா,.பதவி விலக?  பதவிக்காகத்தானே இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைச்சது.

திரு மன்மோஹன் சிங் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இவர் என்ன தேர்தலில் நின்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகி அதன் பின் பிரதமராக ஆகியவரா? இல்லையே. உலக வங்கியில் வேலை பார்த்தார், ரிசர்வ் வங்கியின் கவர்னராக வேலை பார்த்தார். இப்பொழுது சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்பட்டு ஆறு வருட காலமாக வேலை பார்த்து வருகிறார். தானாக இவர் எப்படி பேசமுடியும்? அந்த தைரியம் எப்படி வரும்? எம் பி தேர்தலில் நின்று நூறு ஓட்டு வாங்கும் சுயேச்சைக்கு இருக்கும் தைரியம் கூட இவருக்கு கிடையாது. பின் வாசல் வழியாக பாராளுமன்றததி ற்குள் நுழைந்தவர் தானே!

சரி இந்திரா காங்கிரசின் நிலை என்ன? பேச்சு மூச்சே இல்லை. அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, சரத்பவாரை பற்றி பேசி, அவர் கூட்டணியில் இருந்து விலகி ஆட்சியே கவிழ்ந்து விட்டால் என்ன செய்வது?..

ஆக மொத்தத்தில் வம்பன் சொத்து வீணன் கையில்

ஆக் எப்படியோ உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு இது வந்தது,  நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா அடங்கிய பெஞ்ச் உடனடியாக அரசு இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வழக்கம் போல ஆல் இன் ஆல் அழகு ராஜா ப. சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் அடங்கிய அமைச்சர் குழு கூடி விவாதித்து  டி.வி சானல்களுக்கு சோகமாக பேட்டி அளிப்பார்கள். போபால் சம்பவத்திற்கு செய்தது போல.

இந்தியர்களாகிய நாம தான் கேணப்பயலுகளாச்சே!  சொரணை கெட்டுப்போய் அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணியே அரசு அமைக்க ஆதரவு கொடுக்கா மலா இருக்கப்போறேம்.

வாழ்க இந்தியா!  வாழ்க இந்திய ஜனநாயகம்!!  வாழ்க சொரணை கெட்ட இந்திய மக்கள் !!!

Thursday, July 22, 2010

ஐயையோ! ஆளை விடுங்க சாமி. இந்த விளையாட்டுக்கு நான் வரல...... பகுதி 1

நேற்று மதுரையிலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. பேசிய இளைஞன் என்னுடைய ஆலோசனை தேவை என்றான். ம்ருத்துவ படிப்புக்கு அவனால் சேர முடியவில்லையாம். அவன் மார்க் 98.7%. மேனேஜ்மெண்ட் சீட் கூட கிடைக்கவில்லையாம். இது என்னாடா .அநியாயமா இருக்கே! என ஆச்சர்ய பட்டு அவனிடம் கேட்ட பொழுது அவன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப்போட்டது. அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா? என உங்களை கேட்டிருந்தேன். உங்கள் யாராலும் ஊகிக்க முடியவில்லை. காரணம் அவன் சொன்ன பதில் யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று.  

அப்படி என்ன பதில் சொல்லிவிட்டான்?  

அவன் பிளஸ் டூ வில் 48.7% மார்க் வாங்கியிருக்கானாம். அவன் நண்பன் 50% மார்க் வாங்கியிருக்கானாம். ரெண்டும் சேர்ந்து 98.7% ஆகிறதாம். அப்படி இருக்கும் போது தங்களுக்கு எப்படி மெடிகல் சீட் மறுக்க முடியும்? என்பது அவன் கேள்வி!

" தம்பி. அதெல்லாம் முடியாது. ரெண்டு பேர் சேர்ந்து  எடுத்த மார்க்கை வச்சு மெடிகல் சீட் தரமாட்டாங்க"  நான்.

" அதான் ஏன்."  அவன்.

" டாகடர் தொழிலுக்கு நல்ல திறமையானவங்களாலதான் படிக்க முடியும். இல்லைனா நோயாளிகளுக்கு சரியா வைத்தியம் செய்யாம செத்து போயிடுவாங்க. அதுனால ரெண்டு பேர் மார்க்கை வைச்சு ஒரு மெடிகல் சீட் தரமாட்டாங்க"

" அது எப்படிங்க?. நான் பாதி போர்ஷனை படிப்பேன். அவன் மீதியை படிப்பான். ஆக மொத்தத்தில நாங்க ரெண்டு பேரும் முழுசா படிச்சுதானே பரீட்ச்சை எழுதப்போறோம். பாஸாகி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வைத்தியம் பார்த்தா எப்படி நோயாளி செத்துப்போவான்?"

"இந்தா பாரு. சொன்னா கேக்கனும். அதெல்லாம் அரசாங்கம் ஒத்துக்காது. பேசாம எதோ ஆசைக்கு பி.ஏ எக்கனாமிக்ஸ் அல்லது கிஸ்டரி எடுத்து படி."

"ஏதோ பெரியவரு. கொஞ்சம் சட்டம் பற்றி தெரிஞ்சவர்ன்னு  அபிப்பிராயம் கேட்டால், இப்படி எங்களை டிஸ்கரேஜ் பண்ணுரீங்க."

" இல்லைப்பா. சொல்லுததை கேளு."

"சரி. இந்த அட்வைஸ் எல்லாம் வேண்டாம். நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க."

" நம் நாட்டு சட்டப்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமம். எல்லோருக்கும் சம உரிமை தானே?"

"ஆமாம்".

" இது போதும். நான் சும்மா விடமாட்டேன்".

"என்ன செய்ய போற?"

"கவர்மெண்ட் மேலே கேஸ் போடப்போறேன்"

"கேஸ் போட்டா?. கவ்ர்மெண்ட் சொல்றது சரின்னு கோர்ட் சொல்லப்போவுது. அவ்வளவு தான்!"

"அதான் முடியாது. நான் பண்ணப்ப போற ஆர்கியூமெண்டில் கோர்ட்டே அசந்து போயிடும். ஆமாம்."

" அப்படி என்ன பாயிண்ட்ஸ் வைத்திருக்க?"

அப்படி கேளுங்க! பாராளுமன்றத்தில (லோக் சபா)எத்தனை எம்.பி இருக்கா ங்க?"

"545 சீட் உண்டு"

" சரி அரசாங்கம் அமைக்க ஒரு கட்சி எவ்வளவு சீட் ஜெயிக்கனும்ன்னு தெரியுமா?. 273 சீட். அதாவது 50% மேலே. ஆனா 206 தொகுதியில மட்டும் ஜெயிச்ச (37.93%) இந்திரா காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைச்சிருக்கு? திமுக, திரினாமுல் காங்கிரஸ், போன்ற சில்லரை கட்சிகளையும் சேர்த்துக்கிட்டு, தான் பெரும்பாண்மைன்னு சொல்லி ஆட்சி அமைச்சிருக்கு இல்லையா?"

" ஆமாம். இப்ப அதுக்கென்ன?"

இருக்கு விஷயம். தமிழ் நாட்டில எத்தனை சட்டசபை தொகுதி? 235. இதில தி.மு.க ஜெயிச்சது 99 இடங்கள். அதாவது, 42.13% சதவிகதம் இடங்கள் மட்டுமே!. ஆட்சி அமைக்க 50% மேல் இடங்களில் ஜெயிக்க வேண்டிய  தி.மு.க, 15.31% இடங்களில் ஜெயிச்ச காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து கொண்டு தான் மெஜாரிட்டி என அரசாங்கம் அமைச்சிருக்கு இல்லையா?. இது சட்டப்படி சரியானது தானா?"

"ஆமாம். அதிலென்ன சந்தேகம்?"

"இன்னுமா புரியல? சரியான டியூப் லைட்டா இருக்கீங்க!. அரசு அமைக்க 50% மேலே இடங்களில் ஜெயிக்கவேண்டிய நிலையில், 37.93% இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தையும், 42.13% ஜெயிச்ச திமுக மாநில அரசாங்கத்தையும் கூட்டணி அமைத்ததின் மூலம் அமைத்தது  சரின்னா, 48.7% மார்க் வாங்கிய நானும், 50% மார்க் வாங்கிய என் நண்பனும் சேர்ந்து ஏன் எம்.பி.பி.எஸ் படிக்க முடியாது?. நீங்க தானே சொன்னீங்க. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று. அதனாலதான் நியாயம் கேட்டு, கோர்ட்டுக்கு போகப்போறேன்".

" என்ன வேணும்னாலும் செய்துக்கோ. ஆளை விடு. நான் இந்த விளையா ட்டுக்கு வரல சாமி!"

"அதெப்படி விடமுடியும்?. சும்மா சிவனேன்னு ஏதோ எழுதி பதிவு போட்டிருந்த எங்களை, சட்டம், உரிமை, விழிப்புணர்வு என்று சொல்லி கிளப்பி விட்டுட்டு இப்ப நைசா நழுவினா விட்டிடுவோமா?  நானே கோர்ட்டிலே கேஸ் தாக்கல் பண்ணி வாதாடப்போறேன். நீங்க கோர்ட் பெட்டிஷன், அபிடவிட், புரூப் அபிடவிட் எல்லாம் டிராப்ட் போட்டு தயாரா வையுங்க. இன்னும் ரெண்டு மூனு நாள்லே மறுபடியும் போன் பண்றேன். என்ன?  பை. பை...." போனை வைத்துவிட்டான்.


Wednesday, July 21, 2010

ஆப்புக்கே ஆப்பு வைத்த இளஞன்!

நேற்று மதுரையிலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. பேசிய இளைஞன் என்னுடைய ஆலோசனை தேவை என்றான். ம்ருத்துவ படிப்புக்கு அவனால் சேர முடியவில்லையாம். அவன் மார்க் 98.7%. மேனேஜ்மெண்ட் சீட் கூட கிடைக்கவில்லையாம். இது என்னாடா .அநியாயமா இருக்கே! என ஆச்சர்ய பட்டு அவனிடம் கேட்ட பொழுது அவன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப்போட்டது. அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா?

Tuesday, July 20, 2010

சீ.சீ இப்படியும் ஒரு மானெங்கெட்ட பொழைப்பு வேணுமா?

இந்தியாவை வெள்ளைக்காரனே ஆண்டு தொலைக்கலாம்! இதை விட ஒன்னும் குடி மூழ்கிவிடப்போவதில்லை

மாதம் ஒரு மாபெரும் ரயில் விபத்து

இந்திரா காங்கிரசின் மாபெரும் சாதனை !!

கூட்டணி ஆட்சி என்ற பெயரில் குத்தகைக்கு விடப்பட்ட இலாகா.
இலாகா:  ரயில்வே துறை
குத்தகைதாரர் :   மம்தாபானர்ஜி
குத்தகை காலம் : 5 வருடங்கள் ( ஆட்சி கவிழ்ந்தால் உத்திரவாதம் இல்லை)
குத்தகை தொகை: 5 வருடங்கள் அரசுக்கு ஆதரவு கொடுப்பது.

இந்த மாத ஸ்பெஷல் ரயில் விபத்து.

மேற்கு வங்கம் - செயிந்தியா.
உயிர் பலி - 60. காயம்பட்டவர்கள் = 90.
நஷட ஈடு தொகை. 5 லட்சம்.

 .

ரயிலில் பயணம் செய்யுங்கள்! உங்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் கொடுத்து உதவுங்கள் !!

Monday, July 19, 2010

சவால்! ஒரு லட்சம் பரிசு !!

இந்த குழந்தை ஒரு அனாதை. இது எந்த ஜாதியை சேர்ந்தது என்பதை அறிவு பூர்வமாக ( ஸ்கேனிங், டி.என்.ஏ டெஸ்ட் போன்ற லொட்டு லொசுக்கு மூலமாக்) நீங்கள் நிருபிக்க தயாரா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு லட்ச்ம் ரூபாய் பரிசு காத்திருக்கிறது!


கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? பகுதி-1

இந்த கல்வியாண்டில் நீங்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளீர்களா? உண்மை யிலேயே உங்களுக்கு கல்விக்கடன் தேவைப்படுகிறதா? அப்படியானால் சரியான ஒரு வங்கியை தேர்ந்தெடுத்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பியுங்கள். அதற்கு முன் எனது பதிவு ஒன்றையும் படித்து சில விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். அதன் லிங்க் இதோ... 

http://lawforus.blogspot.com/2010/06/blog-post_24.html

வங்கியை தேர்ந்தெடுப்பது எப்படி?   இது மிகவும் முக்கியமான விஷய மாகும். உங்கள் பகுதியில், பல வங்கிகள் தங்கள் வங்கியின் கிளைகளை திறந்திருப்பார்கள். முதலில் எந்த வங்கி, கல்விக்கடன் வழங்குவதை சிறப்பாக செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின் அந்த வங்கியின் கிளையில் விண்ணப்பிப்பது என முடிவு செய்யுங்கள். அதன் பின் வங்கியின் கிளைக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று முழுமையாக, தவறில்லாமல் பூர்த்தி செய்யுங்கள். இதற்கு வங்கி அதிகாரியே பெரும்பாலும் உதவுவார்கள். அதன் பின் அத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகலையும் இணைத்து விண்ணப்பியுங்கள். விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கையொப்பம் இடும் போது தவறாமல் தேதியையும் குறிப்பிடுங்கள்.


உங்களிடமிருந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட வங்கி கிளை, அதை தங்களின் வட்டார அலுவலகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு தான் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கடன் அனுமதிக்கப்படும். ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள தகுதிகள் உங்களுக்கு இருக்குமானால் கடன் அனுமதிக்க வேண்டிய பொறுப்பு சட்டப்படி வட்டார அலுவலகத்திற்கு உண்டு. கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள, கல்விக்கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், புத்தக விலை, உபகரணங்கள் போன்றவற்றை தங்கள் விருப்பப்படி நீக்கி அல்லது குறைத்து கல்விக்கடன் அனுமதிக்க வங்கிகளுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. இதைபற்றி எனது மேற்படி பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


இது விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அல்லது வங்கிகிளை கடன் விண்ணப்பத்தை வழங்க மறுத்து வேறு வங்கிக்கு போகுமாறு கூறினால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.,                               


1. வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு இது பற்றிய புகாரையும், அதன் நகலை வட்டார அலுவலகத்திற்கும் அததாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் (இருவருக்கும்)அனுப்புங்கள்

2. அதன் பின்பும் பிரச்சனை தீரவில்லை என்றால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்கு புகார் அனுப்புங்கள். அதன் நகலை வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும் அனுப்புங்கள்.. எந்த கடிதமாக இருந்தாலும் அதை அதாட்சியுடன் கூடிய பதிவுத்தபாலில் தான் அனுப்ப வேண்டும் 

 ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலக முகவரி
Regional Director, Reserve Bank of India, Fort Glacis, Rajaji Salai, Chennai-600 001, Tel:  (044) 25361631. 
  
தமிழ்நாட்டில் பல வங்கிகள் எல்லா ஊர்களிலும் தங்கள் கிளைகளை வைத்துள்ளது. அதில் தமிழகத்தில் தலைமை அலுவலகத்தை வைத்து செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வாடிக்கையாளர் சேவையில் முன்னனியில் (அனுபவ பூர்வமாக) உள்ளது. இதன் வட்டார அலுவலகங்களின் முகவரி, தலைமை அலுவலக முகவரி இவற்றை கீழே தருகிறேன்.
இந்தியன் வங்கி.
தலைமை அலுவலகம்:  Chairman & Managing Director, Indian Bank, PB No. 1384, No. 66, Rajaji Salai, Chennai -600 001. Ph. (044) 25233231, Fax. 25231278. Toll Free No. 1800 - 425 - 1400.
வட்டார அலுவலகங்கள்.
 CHENNAI:  General Manager, Indian Bank Circle Office, 55, Ethiraj Salai, Chennai -600 008.Ph. 2825 6886. Fax. 2825 6668. 

COIMBATORE: General Manager, Indian Bank Circle Office, 359, Dr.Nanjappa Road, Coimbatore - 641 018. Ph. (0422) 2231650, Fax. (0422) 223115.

CUDDALORE: Deputy General Manager, Circle Office, Indian Bank, 4, Bharathi Road, Cuddalore -6007 001. Ph.(04142) 220143, Fax. 222718.

DHARMAPURI:  Deputy General Manager, Indian Bank, Circle Office, Plot No.3, DDDC Buildings, 91, Ponnagaram Road, Dharmapuri - 636702.

KANCHEEPURAM: General Manager, Indian Bank, Circle Office, 510/511, Gandhi Road, First Floor, Kancheepuram - 631 501. Ph. (044) 2722 3763, Fax. 2723 2431.

KUMBAKONAM: Deputy General Manager, Indian Bank, Circle Office, Dr.Besant Road, Moopanar Archade, Kumbakonam - 612 001.Ph. (0435) 2431172, Fax. 2431172.

MADURAI: Deputy General Manager, Indian Bank, Circle Office, 100,East Avana Moola Street, Madurai -625 001. Ph. (0452) 2327170, Fax. 2327327.

SALEM:  Deputy General Manager, Indian Bank Circle Office, L R N Colony, Saradha College Road, Salem - 636 007. Ph. (0427) 2318168. Fax. 2313799.

TIRUNELVELI:  Deputy General Manager, Indian Bank Circle Office, 1 st Floor, M K M Complex, 21- C/1, S N High Road, Tirunelveli - 627 001. Ph. (0462) 2330891. Fax. 2330891.

TIRUCHIRAPALLI: Deputy General Manager, Indian Bank Circle Office, Jenne Plaza, 5 - E, Bharathiyar Salai, Cantonment, Tiruchirapalli - 620 001. Ph. (0431) 2415823, Fax. 5411632.

VELLORE: Deputy General Manager, Circle Office, Indian Bank, 2 & 3 Floor, 46 - 51 T K M Complex, Katpadi Road, Vellore - 632 004. Ph. (0416) 2332639, Fax. 2332817.

CUDDALORE: Deputy General Manager, Indian Bank, Circle Office, 4, Bharathi Road, Cuddalore -607 001. Ph. (04142) 220143, Fax. 222718.
மீதி அடுத்த பதிவில்.........

Sunday, July 18, 2010

கல்விக்கடன் - சில தகவல்கள்

நண்பர்களே!  கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதில் உள்ள சிரமத்திற்கு வழிகாட்டும் வகையில் ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன். அச்சமயம் கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. அவர் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த பதிவில் தகவல்களை தருகிறேன்.

****************************************************
Prabakaran  webprabu@gmail.com
tothiravianatarajan@gmail.com
dateSat, Jul 17, 2010 at 5:03 PM
subjectவாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!
mailed-bygmail.com
 பெரும் மதிப்பிற்குரிய நடராஜன் அய்யா அவர்களுக்கு,

 வணக்கம்.  உங்களின் வலைத்தளத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டு உங்களின் இடுகைகளை தொடர்ந்து ஆர்வமுடன் படித்து  வருகிறேன்.   உங்களின்  இடுகைகள் அனைத்தும், அனைத்துதரப்பினர்க்கும் பயனுள்ளவையே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  மக்களின், மக்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத உரிமைகளை  பற்றிய விழிப்புணர்வை தங்களின் பங்களிப்பாகவும், ஆலோசனையாகவும் மிகவும் தெளிவாகவும், திறமையுடனும் நம்  சமுதாய மக்களுக்கு வழங்கிவருகிரீர்கள்.  உங்களின் சேவைக்கு என்றும் தலைவணங்குகிறோம்.  உங்களின் சேவையை தொடர்ந்து நம் சமுதாயத்திற்கு வழங்க என் நன்றிகள் அடங்கிய  வாழ்த்துக்கள் கோடி. 
ஒரு மாணவனாக உங்களுக்கு  ஒரு வேண்டுகோள்.  நான் கல்விக்கடனை பெற்றே படித்து வருகிறேன்.  மேலும் எங்கள் பகுதி கிராமப்புறம்.  நான் கல்விக்கடன் பெற எங்கள் ஊர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  வங்கிக்கு  கல்விக்கடனை விண்ணப்பிக்க சென்றபோது, வங்கியில்  நீங்கள் சார்ந்துள்ள பகுதி எங்கள் கடன்கொடுக்கும் எல்லைக்குள் இல்லை என்றனர். ஆனால் வங்கியின் மேலாளரை கைக்குள் போட்டுவைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின்(சன்மானம் இல்லாமல் தான்)  உதவியுடன்  அதே வங்கியில் என்கல்வி செலவில் எழுபது விழுக்காடு தொகையை  கடனாக பெற்றுவிட்டேன்.  மேலும் நான்வாங்கிய  எழுபது விழுக்காடு என்பது மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும்  போது  தொகை ஒரு பத்திலிருந்து பதினைந்து விழுக்காடு அதிகமான தொகையே.  அதனுடன் கிட்டத்தட்ட  ஒருவார  காலத்திற்குள்  கடன்தொகை கைக்கு வந்துவிட்டது.
என்னுடய கேள்வி என்னவென்றால், கல்விகடன் வாங்க சரியான  தகுதிகளிருந்தும்  இப்படி நாள்தோறும், மாதகணக்காகவும்  வங்கி அதிகாரிகளாலும், இடைதரகர்களாலும் அலைகழிக்கபட்டும்,  காலம்தாழ்த்தப்பட்டும், ஏமாற்றப்பட்டும் இருக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களில் இருக்கும் மாணவர்களின்,பெற்றோர்களின்  நிலைமையை வார்த்தைகளாய் விவரிக்க முடியாது.  இத்தனைக்கு பிறகும் கல்விபயில முடியாதவர்கள், பாதியில் கல்லூரி படிப்பை  நிறுத்தியவர்களின்  நிலைமையும் பார்க்கும்போது  மனம்கொள்ளா  நிலையில் ஆட்சியதிகாரத்தின் மேல்   வரும்  இனம்புரியாத கோபகங்களை அடக்கவேண்டியது அவசியமாகிறது.   அவர்களின்  ஏமாற்றங்களும், மன உளைச்சல்களும் மற்றும் இன்னபிற  கஷ்டங்களும் கடவுளுக்கே வெளிச்சம்.  இது இவ்வர்கத்தினற்கே கடவுள் கொடுத்த பரிசு போலும்! 

அப்படியே கல்விகடன் கொடுத்தாலும்  இதற்குமேல் கொடுக்க முடியாது, உங்களின் கல்விகட்டணமாக  அரசு நிர்ணயித்துள்ள நாற்பதாயிரத்தை மட்டுமே அல்லது  (உறுதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி)   இவ்வளவுதான் கொடுக்கமுடியும், உண்டி,உறையுள்,புத்தக மற்றும் இன்னபிற கட்டணங்கள் எல்லாம் தரமுடியாது, எங்களுக்கு வழங்க அதிகாரமில்லை என்று ஏதாவது சாக்குபோக்கு கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.  மேலும் இவற்றை கொடுப்பதற்கே வீடு,நிலம் மற்றும் இன்னபிற பத்திரங்கள் ஏதாவது  இருந்தால்  பெரும்பாலும் அவற்றை  வாங்கிவைத்து கொண்டே  கடனை   வழங்குகின்றனர். 
 இதற்கு தீர்வுதான்  என்ன?  பெரும்பாலும் இந்தமாதிரியான  நேரங்களில்   யாரை அல்லது எந்த உயரதிகாரியை தொடர்புகொண்டு  உதவிக்கு அழைப்பது? அல்லது  புகார்  தெரிவிப்பது?  இந்த சரியான தருணத்தில் உங்களின் பதில்கள்  அனைவரும் சுவாசிக்க வேண்டிய காற்று.    இதன்மூலம் ஓரிருவர் பயனடைந்தாலே உங்களுக்கே மாபெரும் வெற்றி!!!.  உங்களின்  பதில்கள் பலரின் கனவுகளை மெய்ப்பிக்கட்டும், புதிய  புரட்சியையும், மறுமலர்ச்சியையும் ஒரு சிறிய மெழுகுவர்த்தி  அளவிற்காவது சமுதாயத்திற்கு  ஒளிவீசட்டும்.
              
                                                             மிக்கநன்றி!!! 

     இப்படிக்கு.,
    தி.பிரபாகரன்.
பி.கு:  மேலும் தாங்களுக்கு ஏதேனும் சந்தேகம்  தோன்றினால் என்னை இந்த மின்னஞ்சல்  முகவரியிலோ அல்லது என்னுடைய கைப்பேசி எண்ணிற்கோ தயவுகூர்ந்து தொடர்பு கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!!!
   

Saturday, July 17, 2010

திருந்தவே மாட்டீங்களா? பகுதி-2

நண்பர்களே, இது பொதுவான விஷயம் என்பதால், இது பற்றி நானும் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளேன். " ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அசோசியேஷன் என்பது நமது அமைப்பின் பெயர். இதில் நாம் எல்லோரும் அங்கத்தினர்கள். நமது பிரச்சனைக்காக இது செயல்படும். என்ன, நான் சொல்வது சரிதானா? சரி. கீழே கொடுக்கப்பட்டுள்ள மெயிலை அவர்களுக்கு அனுப்பட்டுமா?  நீங்கள் ஓகே என்றால் அனுப்புகிறேன்.

அனுப்புநர்
பி. திரவிய நடராஜன்
ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அஸோசியேஷன்,
-----------------------------
-----------------------------
-----------------------------
சென்னை ******
போன்: ***** *****
e-mail: thiravianatarajan@gmail.com

பெறுநர்
கிளை மேலாளர்,
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,
எம்.எம்.டி.ஏ காலணி,
சென்னை - 600 106.
போன்: 23634003.
e-mail : sbi11604@sbi.co.in

ஐயா,
பொருள்: தகவல் கேட்டல் தொடர்பாக.
***********
எங்கள் அஸொசியேஷனை சார்ந்த, சென்னை எம்.எம்.டி.ஏ காலணியில் வசித்து வரும் திரு. லோகேஷ் என்பவர், ஒரு சில நாட்களுக்கு முன் தங்கள் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்காக வந்துள்ளார். ஆனால், அவரை வேறு வங்கியில் கணக்கு துவங்குமாறு கூறி, விண்ணப்ப படிவத்தை வழங்க மறுத்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். காரணம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கி தொழில் செய்வதற்கு உரிமம் பெற்ற எந்த வங்கிக்கும், தன்னிச்சையாக செயல்படும் உரிமை கிடையாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படியே செயல்படமுடியும். இந் நிலையில், இந்த கிளையில் சேமிப்பு கணக்கு துவக்க முடியாது என மறுத்தது எதன் அடிப்படையில் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய பிரஜை ஒவ்வொருவருக்கும் தாங்களுக்கு வசதிப்படும் அல்லது விரும்பும் வங்கியில் கணக்கு துவங்க சட்ட ரீதியிலான உரிமை உண்டு. அதை மறுக்கும் உரிமை எந்த ஒரு வங்கிக்கும் கிடையாது.

எனவே தங்கள் வங்கி, கிளைக்கு ரிசர்வ் வங்கி ஏதாவது விஷேட அனுமதி வழங்கியுள்ளதா? அல்லது State Bank of India Act 1955 -ல் ஏதாவது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?  அப்படி இருக்குமானால், அது விபரத்தை தெரியப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.திரவிய நடராஜன்
நாள் : ------------------

Friday, July 16, 2010

திருந்தவே மாட்டீங்களா? - பகுதி 1 - சட்டம் நம் கையில்.

எனது முந்தைய பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***********************************************************************************
linelogesh said...
ஐயா, நான் சமீபத்தில் ஸ்டேட் பேங்க் இல் அக்கௌன்ட் ஓபன் செய்ய சென்னை எம்.எம்.டி.எ கிளையில் அணுகும் போது அவர்கள் நீ போய் வெரூ கிளையில் அணுகும் படி கூறினார். நானும் எம்.எம்.டி.எ. வில் தான் இருக்கிறான்.இதற்கு எதாவது வழி உண்டா தயவு செய்து பதில் அளியுங்கள். http://www.linelogesh.blogspot.com

Wednesday, July 14, 2010

யாரு அப்பன் வீட்டு பாங்க் ?- திருந்தவே மாட்டீங்களா?

ஒரு சில வங்கி அதிகாரிகளின்  திமிரான செயல்கள் - பாதிக்க்படும் மக்கள் உரிமைகள் தொடர்பான பதிவு  நாளை வெளி வருகிறது .

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.

சரி இப்பொழுது நமது கதாநாயகன் திரு கருப்பன் அவர்களின் திருவிளையாட லை பார்ப்போம். இவர் தன் வலைப்பக்கத்தில் (வேதாளம்),  பதிவர் சுப்பனை பற்றி மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தை யும் பாதித்துள்ளது.

திரு சுப்பன் சென்னையை சார்ந்தவர். அவர் தன்னைப்பற்றி அவதூறாக எழுதிய பதிவை, பிளாக்கிலிருந்து ஒரு காப்பி எடுத்து கொள்கிறார். தன்னைப்பற்றி  அவதூறாக பதிவு போட்ட கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு புகார் மனுவை தயார் செய்து அத்துடன் பதிவின் காப்பியையும் இணைத்து சென்னையில் இருக்கும்  சைபர் கிரைம் அலுவலகத்தில் பதிவு செய்கிறார்.

புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ். அதன் பின் தன்க்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர் யார்? அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும்.

Sec. 500.IPC
Punishment for defamation.
500. Punishment for defamation.--Whoever defames another shall be
punished with simple imprisonment for a term which may extend to two
years, or with fine, or with both. 

மேலே குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் அவரின் குற்றச்செயல் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவற்றின் அடிப்படையில் அவருக்கு  கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கும்

1. இரண்டு ஆண்டு வரையிலான சிறை தண்டனை
     அல்லது
2. அபராதம் / நஷ்ட ஈடு
   அல்லது
3. இவை இரண்டும் சேர்த்து.
 

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள்

மீண்டும் வேறு தலைப்பில் தங்களை சந்திக்கிறேன்.

Tuesday, July 13, 2010

" செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும் "

பாவம் இந்த இளம் பதிவர் - இவர் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.இவருக்கு உதவுவது  என் கடமை.
***********************************************************************************
 http://rameshkarthikeyan.blogspot.com/
நான் என்ன செய்ய வேண்டும்    

இன்று (4-06-2010) காலையில் CMBT பஸ் ஸ்டாண்டில் தாதான்குப்பம் செல்ல நின்று கொண்டிருந்தேன்.பொதுவாக அங்கு(தாதான்குப்பம்) சொகுசு பேருந்துகள் நிற்காது அனால் இன்று C70 ct எனும் பேருந்தில் ரோல்லிங் டிச்ப்லையில்வழி தாதான்குப்பம் என இருந்தது. நான் நடத்துனரிடம் தாதான்குப்பதில் பேருந்து நிற்குமா என்று கேட்டேன்.அதுக்கு அவர் (ஊருக்கு) புதுசா என கேட்டார். இல்ல பஸ் ல தாதான்குப்பம் நு போட்டிருக்கே அதன் கேட்டேன் என்று சொன்னேன். அதற்கு அந்த மாண்புமிகு நடத்துனர் பஸ்-அ முன்ன பின்ன பாத்துருக்கியா பஸ்லாம் நிக்காது கீழ இறங்கு என்றார்.
நான் உடனே அப்போம் எதுக்கு தாதான்குப்பம் னு போடுறீங்க னு சொன்னேன்.அவர் பேருந்தை நிறுத்தி செருப்பு பிஞ்சிடும் செவிடு பிஞ்சுடும் என சொல்லிட்டு சென்று விட்டார்.
பேருந்து நிறுத்தத்தில் நின்ற எல்லாருக்கும் நான் வேடிக்கை பொருளாகிவிட்டேன்.

நுகர்வோர் நீது மன்றத்தை நான் எப்படி நாடுவது.
ஏன் பஸ் ல போட்டுருக்க ஸ்டாப்பிங்குல நிறுத்த மாட்டுகாங்க
MTC ல புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்.                                                         Time 8.10 to 15 at CMBT
BUS NO C70 ct   TN 01   N 8843
ரமேஷ்கார்த்திகேயன்

***********************************************************************************
நண்பர் ரமேஷ்கார்த்திகேயன் அவர்களே!  தாங்கள் என் பதிவில் போட்டிருந்த பின்னூட்டத்தை பார்த்துவிட்டு, உங்கள் வலைப்பக்கம் சென்று பதிவை படித்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களை போன்றவர்களுக்கு உதவு வதற்காவே நான் இந்த வலைப்பக்கத்தை  நடத்தி வருகிறேன். 

பொதுவாக எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அதற்கான ஆதாரம் தேவை. இந்த விஷயத்தில், இந்த சம்பவம் நடந்தது என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இல்லை. அதற்காக இதை விட்டு விட முடியாது. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட தேவையான ஆதாரத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்க வேண்டும். அது எப்படி என்கிறீர்களா?. சொல்கிறேன்.

 முதலில் ஒரு புகார் கடிதத்தை அதன் நிர்வாக இயக்குனருக்கு அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்புங்கள். அதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நீங்கள் அனுப்ப வேண்டிய புகார் கடித்தத்தின் டிராப்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் உங்கள் முகவரியை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். கீழே கையொப்பத்தையும் தேதியையும் போடுங்கள். அதன் பின் அதற்கு ஒரு ஸெராக்ஸ் காப்பி ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்.

***********************************************************************************
அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபால்

அனுப்புநர்
 ரமேஷ்கார்த்திகேயன்
*****************************
*****************************
*****************************
சென்னை - 600 *** ( பின் கோடு)

பெறுநர்
நிர்வாக இயக்குநர்,
 சென்னை மாநகர போக்குவரத்து கழகம்,
பல்லவன் ஹ்வுஸ்,
அண்ணா சாலை,
சென்னை - 600 002.

ஐயா,

பொருள்:   புகார்- C 70 CT வழித்தடம் - நடத்துனர் தொடர்பாக.

நான் 04-06-2010 அன்று காலையில் சுமார் 8 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தாதான்குப்பம் (பாடி) செல்ல  பேரூந்துக்காக காத்திருந்தேன். சுமார் 8-10 மணியளவில்  தாதான்குப்பம் வழியாக செல்லும் C70 CT (பதிவு எண்:TN01-N8843) பஸ் வந்தது. போர்டில் தாதான்குப்பம் வழி என போட்டிருந்தது. எனவே அதில் ஏறி, தாதான் குப்பம் செல்ல டிக்கட் கேட்டேன்."நீ என்ன ஊருக்கு புதுசா? அங்கே எல்லாம் பஸ் நிக்காது, கீழே இறங்கு என கூறினார். போர்டில் போட்டிருக்கே எனக்கூறியதற்கு, செருப்பு பிஞ்சிடும், செவிடு பிஞ்சிடும் என என்னிடம் தரக்குறைவாக் பேசி என்னை கீழே இறங்குமாறு கத்தினார். பல பயணிகள் மத்தியில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். வேறு வழியின்றி பேரூந்திலிருந்து இறங்கிவிட்டேன். எந்தெந்த வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் எந்தெந்த நிறுத்தங்களில் நிற்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கும் பொழுது, அந்த வழிகாட்டுதலின் படி பணிபுரிய வேண்டிய நடத்துனர் தன்னிச்சையாக செயல்படுவது தண்டிக்கப்படவேண்டியதாகும். அத்துடன் பயணிகளிடம் இது போன்று தரக்க்குறைவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே எனது இப்புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அது பற்றிய விபரத்தை எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
************************
( கையொப்பம்)


நாள்: **/ **/****

************************************************************************************
பதிவுத்தபாலில் புகார் அனுப்பப்படுவதால் அதன் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு விபரம் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் தபாலை பெற்று க்கொண்டதிலிருந்து 15 நாட்களுக்குள்ளாக தங்களுக்கு பதிலளிக்கா விட்டால் அவர்களுக்கு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நோட்டீஸ் அனுப்பவேண்டும். அதன் பின்பே வழக்கு தொடர முடியும்.

எனவே முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை மாநகர  போக்குவரத்து கழகத்திற்கு அனுப்புங்கள்.

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள்

பி.திரவிய நடராஜன்

Sunday, July 11, 2010

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு -ஒரு வழக்கு - பகுதி 2

அவதூறாக பேசுவது, எழுதுவது, மோசடி, போன்றவைகள் எல்லாம் இதற்கு முன்பே தண்டனைகுறிய செயல்கள் தானே, அப்ப்டி இருக்கும் பொழுது எதற்காக இந்த சட்டம் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். நியாயமானது தான்.

பொதுவாக நீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குக்கு உரிய  ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தன்னைப்பற்றி ஒருவர் அவதூறாக ஒரு பத்திரிகையில் எழுதி, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனவே அவர் தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்கு போட்டால், அதற்கான ஆதாரமாக அப்பத்திரிகையின் ஒரு பிரதியை சமர்ப்பிப்பார். பத்திரிகைகள் தொடர்பான சட்டங்கள் இருப்பதால்.அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். இச்சட்டம் வருவதற்கு முன்பு, ஒருவர் இ மெயிலில் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்றோ, அல்லது அவதூறாக எழுதியுள்ளார் என்றோ, அல்லது வெசைட்/ பிளாக்கில் எழுதியுள்ளார் என்றோ வழக்கு தொடரமுடியாது. காரணம் இவையெல்லாம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத ஒன்று. எனவே இதற்கு ஆதாரமாக நீங்கள் கொடுக்கும் இ -மெயில் பிரதி, வெப்சைட்/பிளாக்கின் ஸ்கிரீன் ஷாட் பிரதி இவை எல்லாம் ஆதாரமாக நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது. எனவே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இப்பொழுது கணினி, இண்டர் நெட் மூலமாக செய்யப்படும் எல்லா குற்றங் களும் சட்டப்படி தண்டனைக்கு உரியதுதான்.அதற்காக நாம் கொடுக்கும் ஆதார ங்களும்  சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட கூடியவை.

அடுத்ததாக உங்களுக்கு வரக்கூடிய சந்தேகம் இது. தங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர் வெளிநாட்டுக்காரர். அவர் நாட்டிலிருந்து கொண்டு இதை செய்துள்ளார்.அல்லது வெளிநாட்டிலிருக்கும் இந்தியர். இப் பொழுது அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?. நிச்சயமாக முடியும். இந்தியாவிலிருக்கும் ஒரு இண்டர்நெட் இணைப்பு கொண்ட கணினியை பயன்படுத்தி குற்றம் நடந்திருக்குமானால் அவரை தண்டிக்க முடியும். 

Offenses covered under IPC and Special Laws

1. Sending threatening messages by email
Sec.503 IPC
Section 503. Criminal intimidation
Whoever threatens another with any injury to his person, reputation or property, or to the person or reputation of any one in whom that person is interested, with intent to cause alarm to that person, or to cause that person to do any act which he is not legally bound to do, or to omit to do any act which that person is legally entitled to do, as the means of avoiding the execution of such threat, commits criminal intimidation. 
Explanation-A threat to inure the reputation of any deceased person in whom the person threatened is interested, is within this section.

2. Sending defamatory messages by email
Sec. 499 IPC
Section 499. Defamation

Whoever, by words either spoken or intended to be read, or by signs or by visible representations, makes or publishes any imputation concerning any person intending to harm, or knowing or having reason to believe that such imputation will harm, the reputation of such person, is said, except in the cases hereinafter expected, of defame that person.  

Explanation 1-It may amount to defamation to impute anything to a deceased person, if the imputation would harm the reputation of that person if living, and is intended to be hurtful to the feelings of his family or other near relatives.

Explanation 2-It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.

Explanation 3-An imputation in the form of an alternative or expressed ironically, may amount to defamation.

Explanation 4-No imputation is said to harm a person's reputation, unless that imputation directly or indirectly, in the estimation of others, lowers the moral or intellectual character of that person, or lowers the character of that person in respect of his caste or of his calling, or lowers the credit of that person, or causes it to be believed that the body of that person is in a loathsome state, or in a state generally considered as disgraceful.

Sec 75 Act to apply for offence or contraventions committed outside India

(1) Subject to the provisions of sub-section (2), the provisions of this Act shall apply also to any offence or contravention committed outside India by any person irrespective of his nationality.

(2) For the purposes of sub-section (1), this Act shall apply to an offence or contravention committed outside India by any person if the act or conduct constituting the offence or contravention involves a computer, computer system or computer network located in India.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின் மூலம், வெளிநாட்டில்  மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு அவதூறாக பிளாக்குகளிலும், வெப்சைட்டிலும் பதிவிடும் வலையுலக சண்டியர்களுக்கு ஆப்பு தாராளமாக வைக்கலாம் என்பது புரிந்திருக்கும்.

அடுத்த பதிவில்  சந்திப்போம்.--------------------------- தொடரும் 

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள் 

Saturday, July 10, 2010

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - ஒரு வழக்கு.

கருப்பன் என்பவர் படித்த இளஞர். இவ்ர் திருச்சியை சார்ந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய பொழுது போக்கு, தமிழ் வலை பக்கத்தை படிப்பது, அதற்கு பின்னூட்டம் இடுவது. சொந்தமாகவும் தனக்கென்று ஒரு வலைப்பக்கத்தையும் வைத்து உள்ளார். அதன் பெயர் "வேதாளம்". இதில் சில சமயங்களில் நல்ல விஷயங்களை பதிவாகவும் வெளியிடுவார். அதோடு நின்று விடமாட்டார். மற்றவர்கள் வலைப்பக்கத்திற்கு சென்று ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் அந்த பதிவரைப்பற்றி பின்னூட்டமிடுவார். தன் வலைப்பக்கத்திலும் மற்றவர்களைப்பற்றி அவதூறாக எழுதுவார். இவரிடம் இருக்கும் குறைபாடு என்னவென்றால், எது கருத்து சுதந்திரம், எது அவதூறு என்பதை வரையறை படுத்த தெரியாதது தான். அல்லது தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது இவ்வாறு அவதூறாக மற்றவர்களை பற்றி எழுதினால் யாராலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற சட்டம் பற்றிய இவரது தப்பு கணக்காகவும் இருக்கலாம. இவருடைய திருவிளையாடலை  பற்றி பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை,

 1. வலைப்பக்கம் ( பிளாக் /  வெப்சைட்) : இது ஒரு சோஷியல் நெட்வொர்க் பிளேஸ் ஆகும். அதாவது யார் வேண்டுமானாலும் பங்கெடுக்க கூடிய ஒரு பொதுஇடமாகும்.                                                                                                                                      
 பதிவர்கள் / வாசகர்கள்:  இதில் பங்கேற்பவர்கள் இரண்டு விதமானவர்கள். ஒன்று தங்களுக்கு என்று சொந்தமாக வலை பக்கம் வைத்திருப்பவர்கள். அதில் இவர்கள் தங்கள் படைப்புகளை மற்றவர்களின் பார்வைக்காக வெளியிடுவர். அத்துடன் பிற பதிவர்களின் வலை பக்கத்திற்கும் சென்று பதிவுகளை படிப்பார்கள், தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக போடுவார்கள். அடுத்தது, சொந்த வலை பக்கம் இல்லாதவர்கள். இவர்கள் மற்றவர்களின் வ்லைப்பக்கத்திற்கு சென்று பதிவுகளை பார்ப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள்.

உரிமையும் பொறுப்பும் ( Rights & Accountability ) :  பதிவர்களை எடுத்து கொண்டால் அவர்களுக்கு தங்கள் கருத்தை பதிவாக வெளியிட உரிமை உண்டு. அதே சமயம் அது மற்றவர்களின் மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. அதைப்போலவே மற்றவர்களின் கவுரவத்தை பாதிக்கும் ஆதாரமற்ற கருத்தாகவும் அவதூறு செய்தியாகவும் இருக்கக் கூடாது. இதைப்போலவே மற்றவர்களின் பதிவு களுக்கு பின்னூட்டம் இடும் போதும்  இது பொருந்தும்.

உதாரணங்கள்:

1. பிரதமர் மன்மோகன் சிங்கை விட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நன்றாக ஆட்சி செய்தார்.----- இது கருத்து சுதந்திரம். 

2.அமைச்சர் ஆரோக்கிய சாமி நூறு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் -----இது ஆதாரமற்ற குற்றச்ச்சாட்டாக இருக்குமானால் அவதூறு செய்தியாகும். தண்டனைக்குறிய குற்றமாகும்.

3. நடிகை சுலோச்சனி நடிப்பு சகிக்க முடியவில்லை----- இது கருத்து சுதந்திரம்.

4. நடிகை சுலோச்சனி கார் டிரைவருடன் கள்ளத்தொடர்பு ---- ஆதாரமற்ற கருத்தாக இருக்குமானால் அவதூறு வழக்குக்கு உள்ளாக வேண்டி யிருக்கும்.


5. ஆயிரக்கணக்கான் தமிழர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கும் பொழுது, நானூறு கோடி ரூபாய் செலவு செய்தது மக்கள் பணத்தை தன் சொந்த ஆசைக்காக செந்தமிழ் மாநாடு நடத்தியது பைத்தியக்கார தனம் என நீங்கள் கூறினால்  --------  கருத்து சுதந்திரம்.

6. அதில் 200 கோடி ஊழல் நடந்துள்ளது என கூறுவது ------ ஆதாரமில்லாமல் நீங்கள் கூறினால்  அவதூறு வழக்குக்கை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதும், அதன் வரையறை என்ன என்பதும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்றால்,  " ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது அது  மற்றவர்களை (சட்டப்படியான உரிமை) பாதிக்காத வரையில் தான்".

மீதி அடுத்த பதிவில்------ தொடரும்

Friday, July 9, 2010

உங்களுக்கு என் பாராட்டுக்கள்! உங்கள் வலைப்பூ ஆனந்த விகடன் வரவேற்பறையில் வந்திருக்காம்!

நண்பர்களே, சட்டம் நம் கையில் வலைப்பக்கம்  இந்த வார ஆனந்த விகடனில் " வரவேற்பறையில்" வந்துள்ளதாக பின்னூட்டம் இட்டுள்ளனர்
ILA(@)இளா said...
குறுகிய காலத்தில் விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ, வாழ்த்துக்கள்!

 வால்பையன் said... இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்!

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!


வாழ்த்துக்கள்!

Thangaraj said...
//இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரையில் உங்கள் ப்ளாக்! உங்கள் சேவை நாட்டுக்கு தேவை!// ஆவி படிச்சிட்டு இங்கே வந்தா நீ முந்திகிட்டியெ வாலு 
  
இன்னும் நான் ஆனந்த விகடன் பார்க்கவில்லை. "சட்டம் நம் கையில்" என்ற வலைப்பூவிற்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு நீங்களே காரணம் என்பதால் என்னுடைய பாராட்டுதல்கள்!  உங்கள் கருத்தை அவசியம் பின்னூட்டமிட வேண்டும். அத்துடன் ஓட்டும் போடனும். பணமா காசா?
 செய்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி

பதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம் சட்டம் - பகுதி -2

உங்கள் புகாரை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம் ஆகும். நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் மாநிலத்தில் இச்சட்டபடி சைபர் கிரைம் செல் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் முகவரி, தொலைபேசி எண், இ மெயில் முகவரி ஆகியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம் :  Asst Commissioner of Police, Cyber Crime Cell, Commissioner office campus, Egmore, Chennai -600 008. Ph. 55498211. Mobile: 9841013541,  Res. 25500503. e-mail: cyberac@reddiffmail.com , baluac@vsnl.net

சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும்: Cyber Crime Cell, C.B  CID, Chennai. Ph. 9841422844.e mail: venmathi_vip@yahoo.co.in


Bangalore for whole of Karnataka: 
Cyber Crime Police Station
C.O.D Headquarters,
Carlton House,
# 1, Palace Road,
Bangalore - 560 001
Contact Details:
+91-80-2220 1026
+91-80-2294 3050
+91-80-2238 7611 (FAX)
 
Hydrabad: 
Address:
Cyber Crime Police Station
Crime Investigation Department,
3rd Floor, D.G.P. office
Lakdikapool,
Hyderabad – 500004 Contact Details:
+91-40-2324 0663
+91-40-2785 2274
+91-40-2329 7474 (Fax)
 
Mumbai : 
 Address:
Assistant Commissioner of Police
Cyber Crime Investigation Cell
Office of Commissioner of 
Police office,
Annex -3 Building,
1st floor,
Near Crawford Market,
Mumbai-01.

Contact Details:
+91-22-22630829
+91-22-22641261 Web site: http://www.cybercellmumbai.com
E-mail id:
officer@cybercellmumbai.com 

மீதி முகவரிகள் அடுத்த பதிவில்........... தொடரும்
 

Thursday, July 8, 2010

ஹையா! எனக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்ட் பணம் கிடைத்திருக்கு!

எனக்கு இப்ப ஒரு மெயில் வந்திருக்கு! பாருங்க என் அதிர்ஷ்டத்தை. என்னுடைய இ மெயில் ஐ டிக்கு 1,000,000 பிரிட்டீஷ் பவுண்டுகள் பரிசு விழுந்திருக்காம். நாம் எல்லோரும் பங்கு வச்சுக்கலாமா? மெயிலை பாருங்கள்!
 என்ன செய்யலாம் நண்பர்களே! சொல்லுங்கள்.

Your Mail Id Has Been Awarded £1,000,000.00 In The British Tobaco Online Promo:‏For Claims‏


Inbox
X

Reply
|
fromvaughn-c@sbcglobal.net
to
dateThu, Jul 8, 2010 at 5:53 PM
subjectYour Mail Id Has Been Awarded £1,000,000.00 In The British Tobaco Online Promo:‏For Claims‏
signed-bysbcglobal.net
hide details 5:53 PM (24 minutes ago)Send Your Details
Name.. Sex.. Location..
Reply

Forward
பதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம் சட்டம் - ஒரு பார்வை

சைபர் கிரைம் (Cyber Crimes) என்றால் என்ன? அதை தடுக்கவும் தண்டிக்கவும் என்ன சட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கம்.

சைபர் கிரைம்: சைபர் கிரைம் அல்லது குற்றம் என்பது, இண்டர்நெட் & கணினி மூலம் செயப்படும் அனைத்து குற்றங்களும் ஆகும். இவற்றை எல்லாம் பட்டியல் இட்டால் தொடர் பதிவாகி விடும். எனவே சாமானியர்களுக்கு குறிப்பாக பதிவர்களுக்கு தேவைப்படும் விஷயங்களை பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம். இதற்காகவே கொண்டு வரப்பட்டது தான் 
 Information Technology Act 2000 & information Technology ( Amendment ) Act 2008.

இ-மெயில்: இமெயில் மூலமாக அனுப்பப்படும்  மிரட்டல்கள், ஏமாற்றி பணம் மோசடி செய்வதற்காக அனுப்பப்படும் பொய்யான தகவல்கள், மன்ம் புண்படும் படியான வார்த்தைகளை கொண்ட மெயில், அவதூறான வாசகங்கள் அடங்கிய மெயில் போன்றவைகள் எல்லாம் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமே.

பிளாக்/வெப்சைட்: ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது  பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்.

இப்பொழுது இ மெயில் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். மேலே குறிப்பிட ப்பட்டுள்ள படி உங்களுக்கு ஒரு இ-மெயில் வருமானால், அந்த மெயிலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் யாஹீ வாக இருந்தால் அதில் FULL HEADER என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், அந்த மெயில் எந்த ஐ.பி.யிலிருந்து, வந்தது போன்ற எல்லா விபரங்களும் தெரியும்.மெயிலில் இன் பாக்ஸ்சில் அந்த மெயிலை பத்திரமாக டெலிட் ஆகாமல் வைத்து கொள்ளுங்கள். இது தான் உங்களிடமிருக்கும் ஆதாரம். கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது  எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும். இப்பொழுது மெயிலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். ரிப்ளை என்ற ஆப்ஷனுக்கு அடுத்து முக்கோண வடிவில் ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அப்பொழுது பல ஆப்ஷன்கள் வரும். அதில் Show Original  என இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மெயில் எந்த ஐ.பி யிலிருந்து வந்தது போன்ற எல்லா ஜாதகமும் தெரியும். இதை வைத்துதான் அனுப்பியவரை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிப்பார்கள்.

இதைப்போலவே, எந்த மெயில் சர்வீசாக இருந்தாலும் , அனுப்பியவரின் ஐ.பி யை கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் அனுப்பியவரை பிடித்து விடுவார்கள்.

அடுத்து பிளாக்/வெப்சைட்டுக்கு வருவோம். இதுதான் நமக்கு இப்பொழுது தேவையான ஒன்று. நாம் தான் தொலை தூரத்தில் இருக்கிறோமே!, நாம் யார் என்ற விபரம் தான் மற்றவர்களுக்கு தெரியாதே என்று ஆபாசமாக பிறரை திட்டி, பதிவிட்டு தன் மன வக்கிரத்தை கொட்டிக்கொள்ளுபவர் சிலர். இவர்கள் தனது வெப்சைட் அல்லது பிளாக்கில் இப்படி பதிவு போடுவார்கள். மற்றவர்களின் வலைதளத்திற்கு சென்று பின்னூட்டமாகவும் போட்டு சாதனை செய்வார்கள். இவர்கள் இரட்டை குற்றம் செய்பவர்கள் ஆவார்கள். ஒன்று, எதிராளிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர் பெயருக்கு.களங்கம் ஏற்படுத்துவது. மற்றது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது. வெப்சைட், பிளாக் என்பது பலரும் வந்து செல்லும் பொது இடம் ஆகும். எனவே பாதிக்கப்பட்டவ்ரும் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதைப்போலவே, மற்றவர்களும் இவர் மீது வழக்கு தொடர முடியும்.

இ மெயில் விஷயத்தில் கூறியபடியே, பதிவு அல்லது பின்னூட்டததை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.பதிவை தமிழ்மணம் கருவிப்பட்டை மூலம் பி.டி.எப் ஆக் எடுத்துக்கொள்ளலாம்.

இனி இவர்கள் மீது எப்படி புகார் பதிவு செய்வது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்................. தொடரும்.


Wednesday, July 7, 2010

அறிவிப்பு - சட்டம் நம் கையில் - திரவிய நடராஜன்

நண்பர்களே,
Information Technology Act 2000 & information Technology ( Amendment ) Act 2008. கீழ், பதிவுலகில் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் பிறருடைய கவுரவத்தை பாதிக்கும் வகையில் ஆபாசமாக எழுதுபவர்கள் மீது சட்டப்படி எடுக்கக்கூடிய கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய என் பதிவின் டிராப்ட் தவிக்க முடியாத சூழ் நிலையால் தயாராகவில்லை. எனவே அது நாளை காலையில் பதிவிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் 
திரவிய நடராஜன்

Tuesday, July 6, 2010

வலைப்பதிவில் தனிநபர் தாக்குதல் மீது சட்ட பூர்வ நடவடிக்கை!

நண்பர்களே!
வலைப்பதிவில் தனி நபர் மீது ஆபாச தாக்குதலாக பதிவிடும் பதிவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அவ்வாறு செய்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலா? சொல்லுங்கள்.

Monday, July 5, 2010

குளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு ..2

மலை ஏற ஆரம்பிக்கும் பொழுது லேசாக மழை தூற ஆரம்பித்தது. அதே நேரத்தில் இளம் காலை வெயிலும் அடித்துக்கொண்டிருந்தது. சிறிது தூரம் ஏறியவுடன் மரத்தடியில் உட்கார்ந்தோம். செங்கோட்டைக்கும் குற்றாலத்திற்கும் நடுவில் "சிலுவை" என்ற ஒரு இடம் உண்டு. அதாவது ரோட்டின் வலது பக்கத்தில் ஒரு கிருத்துவர்களின் சுடுகாடு உண்டு. அதைத்தான் சிலுவை என கூறுவார்கள். அதன் எதிர்பக்கத்தில் , இலஞ்சி செல்லும் பாதையில் நிறைய மாந்தோப்புக்கள் உண்டு.  எல்லாம் ஒட்டு மாமரங்கள். அந்த் இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஏழெட்டு காயகளை பறித்து வந்திருந்தோம். அவற்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி, மிளகாய் தூள், உப்பு தூவி ரெடி செய்ய்தோம்.

அதை சாப்பிட்டுக்கொண்டே மலை ஏற ஆரம்பித்தோம். அந்த காலத்தில் எல்லாம் மலை, மரங்கள் அடர்ந்து இருக்கும்.அதனால் மலையினுள் இருட்டாகவே இருக்கும். இந்த இடத்திலிருந்து குரங்குகளின் தொல்லை அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன் ஆண் குரங்கு உண்டு.  அதை " காட்டான் குரங்கு " என்று சொல்லுவார்கள். அது மிகவும் முரட்டு சுபாவம் கொண்டதாக இருக்கும். யாருக்கும் பயப்படாது. கிட்டத்தட்ட எருமை கன்னுக்குட்டி சைஸ்க்கு இருக்கும். யாராவது கையில சாப்பாட்டு பொருளோடு வந்தால், மரத்து உச்சியிலிருந்து, மின்னல் வேகத்தில் கீழே குதித்து, பொருளை பறித்துக் கொண்டு மரத்தில் ஏறிவிடும்
.
 இவர் தான் மாண்பு மிகு காட்டான் அவர்கள்.

அதனால், மேலே ஏறும் பொழுது பொருட்களை ரெம்பவும் விவரமான ஆள் கையில கொடுத்திட்டு, மற்றவர்கள் கையில் கம்போடு அவரை சுற்றி, மேலே மரத்தை நோட்டமிட்டவாறே செல்வோம். இது எங்களுக்கு பழக்கப்பட்டது என்பதால், நாலைந்து இடங்களில் காட்டான் வந்தது. சமாளித்து மேலே, செண்பகாதேவி அருவிக்கு வந்துவிட்டோம்.

அங்கு சமையல் செய்ய தோது கிடையாது என்பதால், தேனருவியை நோக்கி மேலே சிறிது தூரம் ஏறினோம். அந்த இடம் சமதளமானது. ஒரு பக்கம் அருவி தண்ணீர் ஆறாக செண்பகாதேவி அருவிக்கு வருகிறது. மறு பக்கம் பாறை. ஐயையோ! உங்களுக்கு மலை அடிவாரத்திலிருக்கிற மெயின் பால்ஸ்-ஐ காட்ட மறந்துட்டேனே! பரவாயில்லை. இப்ப பாருங்க. செண்பகா தேவி அருவியிலிருந்து வரும் தண்ணீர்தான், மெயின் பால்ஸ்க்கு வருகிறது. அதுக்கு முன்னால பொங்குமாங் கடலில் தண்ணீர் விழுந்த்து, அதிலிருந்து வழிந்து கீழே மெயின் பால்ஸ்க்கு வருகிறது.. பொங்குமாங்கடல் என்பது மிகப்பெரிய பள்ளமாகும். தரையிலிருந்து பொங்குமாங்கடலின் உயரம் எவ்வளவோ அதைப்போல பல மடங்கு தரை மட்டதிலிருந்து ஆழமானது. இது வரை இதன் ஆழத்தை கணக்கிடவில்லை. சரி விடுங்கள். இந்த அருவி எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில், ஓடுவது தான் சித்ரா ஆறு. இது மலையில் பெய்யும் மழையால் ஏற்பட்டது. இந்த ஆற்றின் ஒரு கிளை கீழ் நோக்கி பாய்ந்து, தேனருவியாக கொட்டி பின் ஆறாக மாறி, பின் சென்பகாதேவி அருவியாக கொட்டு கிறது. அதன் பின் மெயின் பால்ஸ் ஆக கொட்டுகிறது.

வேறு ஒரு கிளை ஐந்தருவியாகவும், மற்றது பழைய குற்றாலம் அருவியாகவும், புலியருவியாகவும் மாறி கொட்டி பின் சம பரப்பை அடைந்து ஆறாக ஓடுகிறது. இந்த சித்ரா ஆற்றை கடந்து அந்த பக்கம் சென்றால் கேரள மாநிலம் சென்று விடலாம். இந்த ஆறுதான் நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாவநாசம் அருவி என வழிந்து கடைசியில் தாமிரபரணி நதியாக  ஓடுகிறது.

குற்றாலம் மெயின் பால்ஸ்.

இந்த அருவிய தான், போனா போவுதுன்னு, காசை செலவு பண்ணி வ்ரும் உங்கள மாதிரி வெளியூர்காரங்களுக்கு தாரை வார்த்து கொடுத்திட்டோம். அதை விடுங்க. இப்ப செண்பகா தேவி அருவியை காட்டுறேன். இந்த அருவிக்கு பக்கத்தில செண்பகாதேவி அம்மன் கோவில் உண்டு. அதனால் தான் இந்த அருவிக்கு இப்பெயர் வந்தது.

செண்பகாதேவி அருவி.

மீதி அடுத்த பதிவில்.........