Thursday, July 22, 2010

ஐயையோ! ஆளை விடுங்க சாமி. இந்த விளையாட்டுக்கு நான் வரல...... பகுதி 1

நேற்று மதுரையிலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. பேசிய இளைஞன் என்னுடைய ஆலோசனை தேவை என்றான். ம்ருத்துவ படிப்புக்கு அவனால் சேர முடியவில்லையாம். அவன் மார்க் 98.7%. மேனேஜ்மெண்ட் சீட் கூட கிடைக்கவில்லையாம். இது என்னாடா .அநியாயமா இருக்கே! என ஆச்சர்ய பட்டு அவனிடம் கேட்ட பொழுது அவன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப்போட்டது. அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என உங்களால் யூகிக்க முடிகிறதா? என உங்களை கேட்டிருந்தேன். உங்கள் யாராலும் ஊகிக்க முடியவில்லை. காரணம் அவன் சொன்ன பதில் யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று.  

அப்படி என்ன பதில் சொல்லிவிட்டான்?  

அவன் பிளஸ் டூ வில் 48.7% மார்க் வாங்கியிருக்கானாம். அவன் நண்பன் 50% மார்க் வாங்கியிருக்கானாம். ரெண்டும் சேர்ந்து 98.7% ஆகிறதாம். அப்படி இருக்கும் போது தங்களுக்கு எப்படி மெடிகல் சீட் மறுக்க முடியும்? என்பது அவன் கேள்வி!

" தம்பி. அதெல்லாம் முடியாது. ரெண்டு பேர் சேர்ந்து  எடுத்த மார்க்கை வச்சு மெடிகல் சீட் தரமாட்டாங்க"  நான்.

" அதான் ஏன்."  அவன்.

" டாகடர் தொழிலுக்கு நல்ல திறமையானவங்களாலதான் படிக்க முடியும். இல்லைனா நோயாளிகளுக்கு சரியா வைத்தியம் செய்யாம செத்து போயிடுவாங்க. அதுனால ரெண்டு பேர் மார்க்கை வைச்சு ஒரு மெடிகல் சீட் தரமாட்டாங்க"

" அது எப்படிங்க?. நான் பாதி போர்ஷனை படிப்பேன். அவன் மீதியை படிப்பான். ஆக மொத்தத்தில நாங்க ரெண்டு பேரும் முழுசா படிச்சுதானே பரீட்ச்சை எழுதப்போறோம். பாஸாகி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வைத்தியம் பார்த்தா எப்படி நோயாளி செத்துப்போவான்?"

"இந்தா பாரு. சொன்னா கேக்கனும். அதெல்லாம் அரசாங்கம் ஒத்துக்காது. பேசாம எதோ ஆசைக்கு பி.ஏ எக்கனாமிக்ஸ் அல்லது கிஸ்டரி எடுத்து படி."

"ஏதோ பெரியவரு. கொஞ்சம் சட்டம் பற்றி தெரிஞ்சவர்ன்னு  அபிப்பிராயம் கேட்டால், இப்படி எங்களை டிஸ்கரேஜ் பண்ணுரீங்க."

" இல்லைப்பா. சொல்லுததை கேளு."

"சரி. இந்த அட்வைஸ் எல்லாம் வேண்டாம். நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க."

" நம் நாட்டு சட்டப்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமம். எல்லோருக்கும் சம உரிமை தானே?"

"ஆமாம்".

" இது போதும். நான் சும்மா விடமாட்டேன்".

"என்ன செய்ய போற?"

"கவர்மெண்ட் மேலே கேஸ் போடப்போறேன்"

"கேஸ் போட்டா?. கவ்ர்மெண்ட் சொல்றது சரின்னு கோர்ட் சொல்லப்போவுது. அவ்வளவு தான்!"

"அதான் முடியாது. நான் பண்ணப்ப போற ஆர்கியூமெண்டில் கோர்ட்டே அசந்து போயிடும். ஆமாம்."

" அப்படி என்ன பாயிண்ட்ஸ் வைத்திருக்க?"

அப்படி கேளுங்க! பாராளுமன்றத்தில (லோக் சபா)எத்தனை எம்.பி இருக்கா ங்க?"

"545 சீட் உண்டு"

" சரி அரசாங்கம் அமைக்க ஒரு கட்சி எவ்வளவு சீட் ஜெயிக்கனும்ன்னு தெரியுமா?. 273 சீட். அதாவது 50% மேலே. ஆனா 206 தொகுதியில மட்டும் ஜெயிச்ச (37.93%) இந்திரா காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைச்சிருக்கு? திமுக, திரினாமுல் காங்கிரஸ், போன்ற சில்லரை கட்சிகளையும் சேர்த்துக்கிட்டு, தான் பெரும்பாண்மைன்னு சொல்லி ஆட்சி அமைச்சிருக்கு இல்லையா?"

" ஆமாம். இப்ப அதுக்கென்ன?"

இருக்கு விஷயம். தமிழ் நாட்டில எத்தனை சட்டசபை தொகுதி? 235. இதில தி.மு.க ஜெயிச்சது 99 இடங்கள். அதாவது, 42.13% சதவிகதம் இடங்கள் மட்டுமே!. ஆட்சி அமைக்க 50% மேல் இடங்களில் ஜெயிக்க வேண்டிய  தி.மு.க, 15.31% இடங்களில் ஜெயிச்ச காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து கொண்டு தான் மெஜாரிட்டி என அரசாங்கம் அமைச்சிருக்கு இல்லையா?. இது சட்டப்படி சரியானது தானா?"

"ஆமாம். அதிலென்ன சந்தேகம்?"

"இன்னுமா புரியல? சரியான டியூப் லைட்டா இருக்கீங்க!. அரசு அமைக்க 50% மேலே இடங்களில் ஜெயிக்கவேண்டிய நிலையில், 37.93% இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தையும், 42.13% ஜெயிச்ச திமுக மாநில அரசாங்கத்தையும் கூட்டணி அமைத்ததின் மூலம் அமைத்தது  சரின்னா, 48.7% மார்க் வாங்கிய நானும், 50% மார்க் வாங்கிய என் நண்பனும் சேர்ந்து ஏன் எம்.பி.பி.எஸ் படிக்க முடியாது?. நீங்க தானே சொன்னீங்க. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று. அதனாலதான் நியாயம் கேட்டு, கோர்ட்டுக்கு போகப்போறேன்".

" என்ன வேணும்னாலும் செய்துக்கோ. ஆளை விடு. நான் இந்த விளையா ட்டுக்கு வரல சாமி!"

"அதெப்படி விடமுடியும்?. சும்மா சிவனேன்னு ஏதோ எழுதி பதிவு போட்டிருந்த எங்களை, சட்டம், உரிமை, விழிப்புணர்வு என்று சொல்லி கிளப்பி விட்டுட்டு இப்ப நைசா நழுவினா விட்டிடுவோமா?  நானே கோர்ட்டிலே கேஸ் தாக்கல் பண்ணி வாதாடப்போறேன். நீங்க கோர்ட் பெட்டிஷன், அபிடவிட், புரூப் அபிடவிட் எல்லாம் டிராப்ட் போட்டு தயாரா வையுங்க. இன்னும் ரெண்டு மூனு நாள்லே மறுபடியும் போன் பண்றேன். என்ன?  பை. பை...." போனை வைத்துவிட்டான்.


25 comments:

 1. பையன் புத்திசாலிதனத்தை பார்த்தால் பெரிய அரசியல்வாதியா வர்ற அனைத்து தகுதிகளும் இருக்குறா மாதிரி தெரியுது!

  ReplyDelete
 2. போனு சுவிட்சை ஆஃப் பண்ணுங்க முதல்ல :))

  ReplyDelete
 3. வால்பையன் said...

  பையன் புத்திசாலிதனத்தை பார்த்தால் பெரிய அரசியல்வாதியா வர்ற அனைத்து தகுதிகளும் இருக்குறா மாதிரி தெரியுது ///

  ரெம்ப விவரமான பையந்தான்

  ReplyDelete
 4. நிகழ்காலத்தில்... said...

  போனு சுவிட்சை ஆஃப் பண்ணுங்க முதல்ல :))///

  அப்படித்தான் செய்யனும்!

  ReplyDelete
 5. இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்காங்களோ? :-)

  ReplyDelete
 6. Chitra said...

  இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்காங்களோ? :-)////

  என்னாச்சு? இத்தனை நாளா ஆளையே காணோம்?

  ReplyDelete
 7. அடப்பாவிங்களா... சுத்த களவாணிப்பயலால்ல இருக்கான்...

  ReplyDelete
 8. க.பாலாசி said...

  அடப்பாவிங்களா... சுத்த களவாணிப்பயலால்ல இருக்கான் ///

  யாரை சொல்றீங்க? அரசியல்வாதியையா? இந்த பையனையா?

  ReplyDelete
 9. பாவம் சார்..நீங்க....

  ReplyDelete
 10. கண்ணகி said...

  பாவம் சார்..நீங்க.////

  ஆமாங்க

  ReplyDelete
 11. பகிடியாகவோ , குறும்பாகவோ இருந்தாலும் வேறுபட்ட சிந்தனை; கட்டாயம் இவர்களை நீதிமன்றம்
  செல்ல வைக்கவும்.
  நமது அரசியல் வியாதிகளுக்கு இது தெரிய வரட்டும்.

  ReplyDelete
 12. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  பகிடியாகவோ , குறும்பாகவோ இருந்தாலும் வேறுபட்ட சிந்தனை; கட்டாயம் இவர்களை நீதிமன்றம்
  செல்ல வைக்கவும்.
  நமது அரசியல் வியாதிகளுக்கு இது தெரிய வரட்டும் ///

  ?????????

  ReplyDelete
 13. அப்ப‌ பைய‌னுக்கு ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம் இருக்குனு சொல்லுங்க‌... ஹி..ஹி..

  ReplyDelete
 14. நாடோடி said...

  அப்ப‌ பைய‌னுக்கு ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம் இருக்குனு சொல்லுங்க‌... ஹி..ஹி ///


  அவன் கேக்கிறது நியாயம் தானே?

  ReplyDelete
 15. பையன் சொல்றது சரிதான் ...அரசியல்வாதியும்,மருத்துவனும் ஒண்ணு
  அரசியல்வாதியும் வெட்டு குத்துக்கு அஞ்ச மாட்டான்
  மருத்துவனும் வெட்டு குத்துக்கு அஞ்ச மாட்டான்

  ReplyDelete
 16. ஆகா... அவனாடா நீ???
  சார் நீங்க ஓடிடுங்க... :-))

  ReplyDelete
 17. யூர்கன் க்ருகியர் said...

  பையன் சொல்றது சரிதான் ...அரசியல்வாதியும்,மருத்துவனும் ஒண்ணு
  அரசியல்வாதியும் வெட்டு குத்துக்கு அஞ்ச மாட்டான்
  மருத்துவனும் வெட்டு குத்துக்கு அஞ்ச மாட்டான்////

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 18. ரோஸ்விக் said...

  ஆகா... அவனாடா நீ???
  சார் நீங்க ஓடிடுங்க... :-)) ////

  பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு!

  ReplyDelete
 19. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  :) ////

  வாருங்க! இது புது வரவுன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 20. சார் என் நன்ப்ண் 6 வது படிச்சிரிக்கான் நாண் 6 வது படிச்சிரிக்கேண் ரெண்டு பேரும் சேர்ந்து மெடிகல் படிக்க சட்ட்துல வழி இருக்கா ஹி ஹி... சும்மா ட்மாசு

  ReplyDelete
 21. Thangaraj said...

  சார் என் நன்ப்ண் 6 வது படிச்சிரிக்கான் நாண் 6 வது படிச்சிரிக்கேண் ரெண்டு பேரும் சேர்ந்து மெடிகல் படிக்க சட்ட்துல வழி இருக்கா ஹி ஹி... சும்மா ட்மாசு ////

  இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க?

  ReplyDelete
 22. பயல் நல்லாதானே யோசிச்சு இருக்கான்

  ReplyDelete
 23. மங்குனி அமைசர் said...

  பயல் நல்லாதானே யோசிச்சு இருக்கான் ///

  ஆமாங்க. விவரமான பையந்தான்

  ReplyDelete
 24. சட்டங்கலை பற்றீ அருமையாக பதிவு இடுகிர்கல் மிக்க நன்றீ ஆய்யா மேலும் எனக்கு ஒரு உதவி தாங்கககாள் செய்ய வேண்டும் தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக உள்ளது சுலபமாக தட்டச்சு எவ்வாறூ என்றூ எனது மின் மடலுக்கு தயை கூர்து தங்களது ஆலொசனை கூறூம்படி கேட்டுகொள்கிரென் அ.மாணீக்கவேலு

  ReplyDelete