Monday, July 5, 2010

குளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு ..2

மலை ஏற ஆரம்பிக்கும் பொழுது லேசாக மழை தூற ஆரம்பித்தது. அதே நேரத்தில் இளம் காலை வெயிலும் அடித்துக்கொண்டிருந்தது. சிறிது தூரம் ஏறியவுடன் மரத்தடியில் உட்கார்ந்தோம். செங்கோட்டைக்கும் குற்றாலத்திற்கும் நடுவில் "சிலுவை" என்ற ஒரு இடம் உண்டு. அதாவது ரோட்டின் வலது பக்கத்தில் ஒரு கிருத்துவர்களின் சுடுகாடு உண்டு. அதைத்தான் சிலுவை என கூறுவார்கள். அதன் எதிர்பக்கத்தில் , இலஞ்சி செல்லும் பாதையில் நிறைய மாந்தோப்புக்கள் உண்டு.  எல்லாம் ஒட்டு மாமரங்கள். அந்த் இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஏழெட்டு காயகளை பறித்து வந்திருந்தோம். அவற்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி, மிளகாய் தூள், உப்பு தூவி ரெடி செய்ய்தோம்.

அதை சாப்பிட்டுக்கொண்டே மலை ஏற ஆரம்பித்தோம். அந்த காலத்தில் எல்லாம் மலை, மரங்கள் அடர்ந்து இருக்கும்.அதனால் மலையினுள் இருட்டாகவே இருக்கும். இந்த இடத்திலிருந்து குரங்குகளின் தொல்லை அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன் ஆண் குரங்கு உண்டு.  அதை " காட்டான் குரங்கு " என்று சொல்லுவார்கள். அது மிகவும் முரட்டு சுபாவம் கொண்டதாக இருக்கும். யாருக்கும் பயப்படாது. கிட்டத்தட்ட எருமை கன்னுக்குட்டி சைஸ்க்கு இருக்கும். யாராவது கையில சாப்பாட்டு பொருளோடு வந்தால், மரத்து உச்சியிலிருந்து, மின்னல் வேகத்தில் கீழே குதித்து, பொருளை பறித்துக் கொண்டு மரத்தில் ஏறிவிடும்
.
 இவர் தான் மாண்பு மிகு காட்டான் அவர்கள்.

அதனால், மேலே ஏறும் பொழுது பொருட்களை ரெம்பவும் விவரமான ஆள் கையில கொடுத்திட்டு, மற்றவர்கள் கையில் கம்போடு அவரை சுற்றி, மேலே மரத்தை நோட்டமிட்டவாறே செல்வோம். இது எங்களுக்கு பழக்கப்பட்டது என்பதால், நாலைந்து இடங்களில் காட்டான் வந்தது. சமாளித்து மேலே, செண்பகாதேவி அருவிக்கு வந்துவிட்டோம்.

அங்கு சமையல் செய்ய தோது கிடையாது என்பதால், தேனருவியை நோக்கி மேலே சிறிது தூரம் ஏறினோம். அந்த இடம் சமதளமானது. ஒரு பக்கம் அருவி தண்ணீர் ஆறாக செண்பகாதேவி அருவிக்கு வருகிறது. மறு பக்கம் பாறை. ஐயையோ! உங்களுக்கு மலை அடிவாரத்திலிருக்கிற மெயின் பால்ஸ்-ஐ காட்ட மறந்துட்டேனே! பரவாயில்லை. இப்ப பாருங்க. செண்பகா தேவி அருவியிலிருந்து வரும் தண்ணீர்தான், மெயின் பால்ஸ்க்கு வருகிறது. அதுக்கு முன்னால பொங்குமாங் கடலில் தண்ணீர் விழுந்த்து, அதிலிருந்து வழிந்து கீழே மெயின் பால்ஸ்க்கு வருகிறது.. பொங்குமாங்கடல் என்பது மிகப்பெரிய பள்ளமாகும். தரையிலிருந்து பொங்குமாங்கடலின் உயரம் எவ்வளவோ அதைப்போல பல மடங்கு தரை மட்டதிலிருந்து ஆழமானது. இது வரை இதன் ஆழத்தை கணக்கிடவில்லை. சரி விடுங்கள். இந்த அருவி எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில், ஓடுவது தான் சித்ரா ஆறு. இது மலையில் பெய்யும் மழையால் ஏற்பட்டது. இந்த ஆற்றின் ஒரு கிளை கீழ் நோக்கி பாய்ந்து, தேனருவியாக கொட்டி பின் ஆறாக மாறி, பின் சென்பகாதேவி அருவியாக கொட்டு கிறது. அதன் பின் மெயின் பால்ஸ் ஆக கொட்டுகிறது.

வேறு ஒரு கிளை ஐந்தருவியாகவும், மற்றது பழைய குற்றாலம் அருவியாகவும், புலியருவியாகவும் மாறி கொட்டி பின் சம பரப்பை அடைந்து ஆறாக ஓடுகிறது. இந்த சித்ரா ஆற்றை கடந்து அந்த பக்கம் சென்றால் கேரள மாநிலம் சென்று விடலாம். இந்த ஆறுதான் நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாவநாசம் அருவி என வழிந்து கடைசியில் தாமிரபரணி நதியாக  ஓடுகிறது.

குற்றாலம் மெயின் பால்ஸ்.

இந்த அருவிய தான், போனா போவுதுன்னு, காசை செலவு பண்ணி வ்ரும் உங்கள மாதிரி வெளியூர்காரங்களுக்கு தாரை வார்த்து கொடுத்திட்டோம். அதை விடுங்க. இப்ப செண்பகா தேவி அருவியை காட்டுறேன். இந்த அருவிக்கு பக்கத்தில செண்பகாதேவி அம்மன் கோவில் உண்டு. அதனால் தான் இந்த அருவிக்கு இப்பெயர் வந்தது.

செண்பகாதேவி அருவி.

மீதி அடுத்த பதிவில்.........

10 comments:

 1. அற்புதமான இயற்கை வளங்கள், கொடைகள்.

  நாம் தான் மதிப்பு தெரியாமல் முறியாக பராமரிக்காமல் சிதைத்து வருகின்றோம்.

  ReplyDelete
 2. ப‌ட‌ங்க‌ளும் விவ‌ரிப்பும் அருமை... தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 3. Anonymous said...

  a good post////

  வாருங்கள் அனானி

  ReplyDelete
 4. ராம்ஜி_யாஹூ said...

  அற்புதமான இயற்கை வளங்கள், கொடைகள்.

  நாம் தான் மதிப்பு தெரியாமல் முறியாக பராமரிக்காமல் சிதைத்து வருகின்றோம்.///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. நாடோடி said...

  // ப‌ட‌ங்க‌ளும் விவ‌ரிப்பும் அருமை... தொட‌ருங்க‌ள்.//

  வாருங்கள் நாடோடி.

  ReplyDelete
 6. kaattan pic is nice

  ReplyDelete
 7. வாசிக்கும் போதே குற்றாலச் சாரல் மேலே தெறிக்க..கூட்டாஞ்சோறு மணம்,[இன்னமும் அடுப்பு மூட்ட வில்லையென்றாலும்]நாசியைத் துளைக்க..சின்ன வயசில் குற்றால பிக்னிக் நினைவு,மனதில் நிரம்பியது

  ReplyDelete
 8. goma said...

  வாசிக்கும் போதே குற்றாலச் சாரல் மேலே தெறிக்க..கூட்டாஞ்சோறு மணம்,[இன்னமும் அடுப்பு மூட்ட வில்லையென்றாலும்]நாசியைத் துளைக்க..சின்ன வயசில் குற்றால பிக்னிக் நினைவு,மனதில் நிரம்பியது
  July 8, 2010 2:35 PM ////

  வாங்க. கூட்டாஞ்சோறு ரெடியானதும் வந்துருங்க.

  ReplyDelete