Sunday, July 11, 2010

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு -ஒரு வழக்கு - பகுதி 2

அவதூறாக பேசுவது, எழுதுவது, மோசடி, போன்றவைகள் எல்லாம் இதற்கு முன்பே தண்டனைகுறிய செயல்கள் தானே, அப்ப்டி இருக்கும் பொழுது எதற்காக இந்த சட்டம் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். நியாயமானது தான்.

பொதுவாக நீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குக்கு உரிய  ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தன்னைப்பற்றி ஒருவர் அவதூறாக ஒரு பத்திரிகையில் எழுதி, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனவே அவர் தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்கு போட்டால், அதற்கான ஆதாரமாக அப்பத்திரிகையின் ஒரு பிரதியை சமர்ப்பிப்பார். பத்திரிகைகள் தொடர்பான சட்டங்கள் இருப்பதால்.அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். இச்சட்டம் வருவதற்கு முன்பு, ஒருவர் இ மெயிலில் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்றோ, அல்லது அவதூறாக எழுதியுள்ளார் என்றோ, அல்லது வெசைட்/ பிளாக்கில் எழுதியுள்ளார் என்றோ வழக்கு தொடரமுடியாது. காரணம் இவையெல்லாம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத ஒன்று. எனவே இதற்கு ஆதாரமாக நீங்கள் கொடுக்கும் இ -மெயில் பிரதி, வெப்சைட்/பிளாக்கின் ஸ்கிரீன் ஷாட் பிரதி இவை எல்லாம் ஆதாரமாக நீதிமன்றம் ஒப்புக்கொள்ளாது. எனவே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இப்பொழுது கணினி, இண்டர் நெட் மூலமாக செய்யப்படும் எல்லா குற்றங் களும் சட்டப்படி தண்டனைக்கு உரியதுதான்.அதற்காக நாம் கொடுக்கும் ஆதார ங்களும்  சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட கூடியவை.

அடுத்ததாக உங்களுக்கு வரக்கூடிய சந்தேகம் இது. தங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர் வெளிநாட்டுக்காரர். அவர் நாட்டிலிருந்து கொண்டு இதை செய்துள்ளார்.அல்லது வெளிநாட்டிலிருக்கும் இந்தியர். இப் பொழுது அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?. நிச்சயமாக முடியும். இந்தியாவிலிருக்கும் ஒரு இண்டர்நெட் இணைப்பு கொண்ட கணினியை பயன்படுத்தி குற்றம் நடந்திருக்குமானால் அவரை தண்டிக்க முடியும். 

Offenses covered under IPC and Special Laws

1. Sending threatening messages by email
Sec.503 IPC
Section 503. Criminal intimidation
Whoever threatens another with any injury to his person, reputation or property, or to the person or reputation of any one in whom that person is interested, with intent to cause alarm to that person, or to cause that person to do any act which he is not legally bound to do, or to omit to do any act which that person is legally entitled to do, as the means of avoiding the execution of such threat, commits criminal intimidation. 
Explanation-A threat to inure the reputation of any deceased person in whom the person threatened is interested, is within this section.

2. Sending defamatory messages by email
Sec. 499 IPC
Section 499. Defamation

Whoever, by words either spoken or intended to be read, or by signs or by visible representations, makes or publishes any imputation concerning any person intending to harm, or knowing or having reason to believe that such imputation will harm, the reputation of such person, is said, except in the cases hereinafter expected, of defame that person.  

Explanation 1-It may amount to defamation to impute anything to a deceased person, if the imputation would harm the reputation of that person if living, and is intended to be hurtful to the feelings of his family or other near relatives.

Explanation 2-It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.

Explanation 3-An imputation in the form of an alternative or expressed ironically, may amount to defamation.

Explanation 4-No imputation is said to harm a person's reputation, unless that imputation directly or indirectly, in the estimation of others, lowers the moral or intellectual character of that person, or lowers the character of that person in respect of his caste or of his calling, or lowers the credit of that person, or causes it to be believed that the body of that person is in a loathsome state, or in a state generally considered as disgraceful.

Sec 75 Act to apply for offence or contraventions committed outside India

(1) Subject to the provisions of sub-section (2), the provisions of this Act shall apply also to any offence or contravention committed outside India by any person irrespective of his nationality.

(2) For the purposes of sub-section (1), this Act shall apply to an offence or contravention committed outside India by any person if the act or conduct constituting the offence or contravention involves a computer, computer system or computer network located in India.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின் மூலம், வெளிநாட்டில்  மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு அவதூறாக பிளாக்குகளிலும், வெப்சைட்டிலும் பதிவிடும் வலையுலக சண்டியர்களுக்கு ஆப்பு தாராளமாக வைக்கலாம் என்பது புரிந்திருக்கும்.

அடுத்த பதிவில்  சந்திப்போம்.--------------------------- தொடரும் 

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள் 

28 comments:

 1. மிக விரிவான பயனுள்ள தகவல்கள்.. தொடருங்கள் அய்யா!

  ReplyDelete
 2. சென்ஷி said...

  மிக விரிவான பயனுள்ள தகவல்கள்.. தொடருங்கள் அய்யா!
  July 11, 2010 9:34 AM ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள தகவல்கள் , மிகுந்த நன்றிகள்.

  உங்கள் தொழில் சார்ந்த தகவல்களை வாசகர்களுக்காக இலவசமாக பகிர்ந்து அளிக்கும் உங்களின் மனப்பான்மைக்கு என் வந்தனங்கள்.

  சிறிய அடிப்படை கேள்விகள்:

  ப்ரோபைல் இல் (சுய விலாசம்- profile ) தவறான தகவல்கள் அளிப்பது குற்றமா (regarding age, sex, location, phone number...)

  உதாரணம்- நான் ஒரு கல்யாணம் ஆனா ஆண்.

  ஆனால் நான் ஒரு பெண் என்று கூறி பிறரை நம்ப வைத்து அவருக்கு மன ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ இழப்பு ஏற்பட செய்தல்- இது குற்றமா  டிஸ்க்ளைமர் வாக்கியம் அளித்தால் இந்த அவதூற்று குற்றங்களில் இருந்து தப்பிக்க முடியுமா

  ReplyDelete
 4. ராம்ஜி_யாஹூ said..ப்ரோபைல் இல் (சுய விலாசம்- profile ) தவறான தகவல்கள் அளிப்பது குற்றமா (regarding age, sex, location, phone number...)

  உதாரணம்- நான் ஒரு கல்யாணம் ஆனா ஆண்.

  ஆனால் நான் ஒரு பெண் என்று கூறி பிறரை நம்ப வைத்து அவருக்கு மன ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ இழப்பு ஏற்பட செய்தல்- இது குற்றமா///

  இ மெயில் ஐ.டி கிரியேட் செய்ய் கொடுக்கும் புரோபைல் சட்ட ரீதியான ரிக்கார்டு கிடையாது.அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவரானது என நடவடிக்கை எடுக்க முடியாது.

  அந்த ஐ.டி மூலம் பிறருக்கு ஊரு விளைவித்தால் அது தண்டனைக்கு உரியது.

  ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதிவிட்டு கற்பனையே என டிஸ்கிளைமர் போடுவதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

  ReplyDelete
 5. ப‌ய‌னுள்ள த‌க‌வ‌ல்க‌ள் ப‌கிர்வுக்கு ந‌ன்றி ஐயா

  ReplyDelete
 6. க‌ரிச‌ல்கார‌ன் said...

  ப‌ய‌னுள்ள த‌க‌வ‌ல்க‌ள் ப‌கிர்வுக்கு ந‌ன்றி ஐயா///

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 7. புனைவு அல்ல‌து கிசுகிசு பாணியில் ஒருவ‌ரைப் ப‌ற்றி அவ‌தூறாக‌ எழுதினால் குற்ற‌மாகுமா???

  ReplyDelete
 8. க‌ரிச‌ல்கார‌ன் said...

  புனைவு அல்ல‌து கிசுகிசு பாணியில் ஒருவ‌ரைப் ப‌ற்றி அவ‌தூறாக‌ எழுதினால் குற்ற‌மாகுமா??? ////

  அவதூறாக எழுதினால் குற்றம். நகைச்சுவையாக எழுதலாம். அது அவர் மனதை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது

  ReplyDelete
 9. விவரமாக பதிவிட்டிருக்கின்றீர்கள். நன்றி. மேலும் பிசினஸ் தொடர்பான நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் வெளி நாடுகளில் இருப்பவர்கள். அவர்கள் மீதும் ஏதும் நடவடிக்கை எடுக்க இயலுமா?

  ReplyDelete
 10. தங்கவேல் மாணிக்கம் said...

  விவரமாக பதிவிட்டிருக்கின்றீர்கள். நன்றி. மேலும் பிசினஸ் தொடர்பான நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் வெளி நாடுகளில் இருப்பவர்கள். அவர்கள் மீதும் ஏதும் நடவடிக்கை எடுக்க இயலுமா?
  July 11, 2010 11:10 AM ////

  வருகைக்கு நன்றி.
  வெளி நாடுகளில் இருப்பவர்கள், இந்தியாவில் உள்ளவர்களை வியாபார விஷயங்களில் ஏமாற்றுகிறார்கள் என்று கூறுகிறீர்களா? முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வணிகம் நடைபெறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்

  ReplyDelete
 11. சீனியர் சிங்காரம் said...

  good post
  July 11, 2010 2:53 PM ///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. மேலும் மேலும் கேள்விகளை கேட்பதற்கு மன்னிக்கவும், அடுத்த பதிவில் கூட விளக்கம் தாருங்கள் விரிவாக

  1. பதிவு திரட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா, திரட்டிகளின் எல்லைகள், கடமைகள், மீறல்கள் எவை.


  2. நானும் இன்னும் மூன்று பதிவர்களும் சேர்ந்து ஒரு குழுமமா/சிறிய திரட்டி, சிறிய இணைய இதழ் நடத்துகிறோம், அதன் மூலம் ஏற்படும் இணையக் குற்றங்களுக்கு யாரு எல்லாம் பொறுப்பு/தண்டணைக்கு உரியவர்கள்

  ReplyDelete
 13. ராம்ஜி_யாஹூ said...

  மேலும் மேலும் கேள்விகளை கேட்பதற்கு மன்னிக்கவும், அடுத்த பதிவில் கூட விளக்கம் தாருங்கள் விரிவாக

  1. பதிவு திரட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா, திரட்டிகளின் எல்லைகள், கடமைகள், மீறல்கள் எவை.


  2. நானும் இன்னும் மூன்று பதிவர்களும் சேர்ந்து ஒரு குழுமமா/சிறிய திரட்டி, சிறிய இணைய இதழ் நடத்துகிறோம், அதன் மூலம் ஏற்படும் இணையக் குற்றங்களுக்கு யாரு எல்லாம் பொறுப்பு/தண்டணைக்கு உரியவர்கள் ////////

  திரட்டி என்பது பயணிகள் செல்லும் பஸ் மாதிரி. அதில் நல்லவர்களும் பயணம் செய்யலாம். குற்றவாளிகளும் பயணம் செய்யலாம். பயணத்தின் போது குற்றவாளி தவறு செய்தால் அவ்னை பஸ்சை விட்டு கீழே இறக்கிவீடுவார் கண்டக்டர். அது போலத்தான் திரட்டியின் பணியும். ஆபாசமாக எழுதப்பட்ட பதிவை பற்றி நீங்கள் புகார் செய்தால் அது அவர்களால் நீக்கப்பட்டு விடும். ஒவ்வொரு பதிவையையும் அவர்கள் சென்சார் செய்ய முடியாது.
  2. இரண்டாவது கேள்விக்கான பதில் - அனைத்து பதிவர்களுமே பொறுப்பு

  ReplyDelete
 14. தேவையான விளக்கங்கள் நன்றி ஐயா.

  ReplyDelete
 15. அக்பர் said...

  தேவையான விளக்கங்கள் நன்றி ஐயா.
  July 11, 2010 7:03 PM ////

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. அன்பின் ஐயாவிற்கு, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன, கண்ணுக்கு தெரிந்து நாம் நிறைய விசயங்களில் வாய் மூடி மௌனமாய் நிற்கிறோம். ஒரு வழக்கை சாதரணமாக பதிந்து அதற்கான தீர்வை பெறுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. பயனீட்டாளர் வழக்குகள் தேங்கிப் போய். ஏண்டா வழக்கு போட்டோம் என்று விட்டுவிட்டு போன சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

  பதிவுலகம் ஏதோ இப்போதுதான் கொஞ்சம் துணிச்சலாக எழுத வருகிறார்கள்.. சில பிரச்சினைகள் இருக்கலாம் அது வெறும் ஐநூறு பேர் கூட படிக்காத பதிவு அதில் பிடிக்காதவர் வெகு சொற்பம்.. அரசியல் பதிவுகள் எழுதினால் பின்னூட்டம் இடக்கூட தயங்குகிறார்கள்..

  இந்த நிலைமையில் இதைபோன்ற பதிவுகள் வெட்டி வேலை.. கொஞ்சம் உருப்படியாக சமுதாய விழிப்புணர்வு தேவைப்படும் பதிவை எழுதுங்கள்..

  அவதூறு வழக்குகள் இந்திய தேசத்தில் தீர்வு கண்டவை வெகு குறைவே..சம்பந்தப்பட்டவர் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டால் முடிந்து போய்விடும்..

  அதிலும் பதிவர்கள் சண்டை ஒரு சந்திப்பில் முடிவிற்கு வந்துவிடுகிற சாதாரண விசயம்.. இங்கு யாரும் சண்டியர்கள் இல்லை..

  தயவு செய்து இனியாவது மக்களுக்கு தேவைபடுகிற விசயங்களை எழுதுங்கள்.. உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன் ..

  ReplyDelete
 17. கே.ஆர்.பி.செந்தில் said..///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 18. நீங்களே முடிவு சொல்லுங்கள்! என் பதிவு தேவையா? தேவையில்லையா?
  from சட்டம் நம் கையில் by noreply@blogger.com (திரவிய நடராஜன்)
  எனது முந்தைய பதிவில் திரு. கே. ஆர். பி. செந்தில் என்பவர் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளார்.

  கே.ஆர்.பி.செந்தில் said...
  அரசியல் பதிவுகள் எழுதினால் பின்னூட்டம் இடக்கூட தயங்குகிறார்கள்.. இந்த நிலைமையில் இதைபோன்ற பதிவுகள் வெட்டி வேலை.. கொஞ்சம் உருப்படியாக சமுதாய விழிப்புணர்வு தேவைப்படும் பதிவை எழுதுங்கள்.. . தயவு செய்து இனியாவது மக்களுக்கு தேவைபடுகிற விசயங்களை எழுதுங்கள்..


  ----------------


  இது மிக உபயோகமான பதிவு . தொடருங்கள்.. செந்தில் சொல்வது பொல் இது வெட்டி வேலையல்ல. உருப்படியானதே.. கொஞ்சமல்ல நிறையவே..மக்களுக்கு தேவையான விஷயங்களே..

  ஆச்சர்யம்தான்...!!!!!!!!!!!

  அடுத்தவரை குறை சொல்லுமுன் தங்கள் பதிவினை அனைத்தும் உருப்படியா, மக்களுக்கு உபயோகமான்னு பார்த்துகொள்ளட்டும்..

  உங்களின் இந்த சேவையை குழுமத்திலும் பகிர்ந்து பலர் பலனடைகிறார்கள்..

  தொடரட்டும் சேவை..

  ReplyDelete
 19. புன்னகை தேசம். said...

  நீங்களே முடிவு சொல்லுங்கள்! என் பதிவு தேவையா? தேவையில்லையா?


  உங்களின் இந்த சேவையை குழுமத்திலும் பகிர்ந்து பலர் பலனடைகிறார்கள்..

  தொடரட்டும் சேவை.////

  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 20. உங்களின் இந்த சமீபத்திய பதிவு (சைபர் குற்றம் குறித்த பதிவுகள், விளக்கங்கள் தேவையா, இல்லையா) என்ற பதிவை என்னால் முழுதாக வாசிக்க முடிய வில்லை, பிளாக்கர் கூகுளே தொழில் நுட்ப கோளாறு என நினைக்கிறேன்.

  என் வாக்கு , இந்த பதிவுகள், விளக்கங்கள் தேவை என்பதற்கே. பல பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இதனால் ஒரு எல்லையும், பின் விளைவும் தெரியும், எனவே தங்களின் சொந்த வாழ்வை, வேலையை, குடும்பத்தை, பணத்தை தொலைக்க மாட்டார்கள் சைபர் குற்றம் புரிந்து

  ReplyDelete
 21. ராம்ஜி_யாஹூsaid.. என் வாக்கு , இந்த பதிவுகள், விளக்கங்கள் தேவை என்பதற்கே. பல பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இதனால் ஒரு எல்லையும், பின் விளைவும் தெரியும், எனவே தங்களின் சொந்த வாழ்வை, வேலையை, குடும்பத்தை, பணத்தை தொலைக்க மாட்டார்கள் சைபர் குற்றம் புரிந்து /////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 22. மீதி எப்ப வரும்?

  ReplyDelete
 23. மீதி எப்ப வரும்?

  ReplyDelete
 24. மிகவும் பயனுள்ள தகவல்கள் , மிகுந்த நன்றிகள்.

  ReplyDelete
 25. அன்பின் ஐயாவிற்கு,
  என் பின்னூட்டத்தை பார்த்துவிட்டு உங்கள் பதிவுகளே வெட்டிவேலை என்று சொல்வதைப் போன்று ஒரு தோற்றத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.. நான் குறிப்பிட்டது பதிவுலகில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியது.. ஒரே பதிவில் நீங்கள் அதற்கான விளக்கங்களை தந்துவிட்டு மேற்கொண்டு சமுதாய பிரச்சினைகளை அவற்றை நாம் கையாளக் கூடிய வழிமுறைகளை சொல்லவேண்டும் என்றே வேண்டிக் கொண்டேன்..

  புன்னகை தேசம் சாந்தி என்னை பற்றி சில கேள்விகள் வைத்திருக்கிறார்.. நான் எழுதுவது பொதுவான விசயங்களை, ஆனால் திரு.திரவியம் ஐயா எழுதுவது முற்றிலும் சட்டம் சம்பந்தப்பட்ட விசயங்களை.. இன்றைய தேதிக்கு நம் இந்திய தேசத்தில் தனி மனித உரிமைகள் பற்றிய பொதுவான விழிப்புணர்வு யாருக்குமே தெரியவில்லை. ஐயா அவர்கள் மிக தெளிவாக நிறைய விசயங்களை அலசுபவர்.. அதன் காரணமாகவே அவரை பொதுமக்கள் சார்ந்த விசயங்களை நிறைய எழுதுமாறு வேண்டிக்கொண்டேன்..

  பதிவுலகில் நடந்த மிக மோசமான தனி மனித தாக்குதல் எல்லோருக்கும் தெரியும்.அப்போதே யாரும் நீதி மன்றத்தை நாடவில்லை..

  ஐயா அவர்கள் என் வேண்டுகோளை ஏற்று நிறைய போது விசயங்களை எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்...

  ReplyDelete
 26. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  மிகவும் பயனுள்ள தகவல்கள் , மிகுந்த நன்றிகள்.////

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 27. //அந்த வழக்குக்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.//


  நன்றி தல!
  அனைத்தும் சேகரிக்கபட்டு இருக்கு!

  ReplyDelete