Saturday, July 17, 2010

திருந்தவே மாட்டீங்களா? பகுதி-2

நண்பர்களே, இது பொதுவான விஷயம் என்பதால், இது பற்றி நானும் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளேன். " ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அசோசியேஷன் என்பது நமது அமைப்பின் பெயர். இதில் நாம் எல்லோரும் அங்கத்தினர்கள். நமது பிரச்சனைக்காக இது செயல்படும். என்ன, நான் சொல்வது சரிதானா? சரி. கீழே கொடுக்கப்பட்டுள்ள மெயிலை அவர்களுக்கு அனுப்பட்டுமா?  நீங்கள் ஓகே என்றால் அனுப்புகிறேன்.

அனுப்புநர்
பி. திரவிய நடராஜன்
ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அஸோசியேஷன்,
-----------------------------
-----------------------------
-----------------------------
சென்னை ******
போன்: ***** *****
e-mail: thiravianatarajan@gmail.com

பெறுநர்
கிளை மேலாளர்,
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,
எம்.எம்.டி.ஏ காலணி,
சென்னை - 600 106.
போன்: 23634003.
e-mail : sbi11604@sbi.co.in

ஐயா,
பொருள்: தகவல் கேட்டல் தொடர்பாக.
***********
எங்கள் அஸொசியேஷனை சார்ந்த, சென்னை எம்.எம்.டி.ஏ காலணியில் வசித்து வரும் திரு. லோகேஷ் என்பவர், ஒரு சில நாட்களுக்கு முன் தங்கள் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்காக வந்துள்ளார். ஆனால், அவரை வேறு வங்கியில் கணக்கு துவங்குமாறு கூறி, விண்ணப்ப படிவத்தை வழங்க மறுத்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். காரணம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கி தொழில் செய்வதற்கு உரிமம் பெற்ற எந்த வங்கிக்கும், தன்னிச்சையாக செயல்படும் உரிமை கிடையாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படியே செயல்படமுடியும். இந் நிலையில், இந்த கிளையில் சேமிப்பு கணக்கு துவக்க முடியாது என மறுத்தது எதன் அடிப்படையில் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய பிரஜை ஒவ்வொருவருக்கும் தாங்களுக்கு வசதிப்படும் அல்லது விரும்பும் வங்கியில் கணக்கு துவங்க சட்ட ரீதியிலான உரிமை உண்டு. அதை மறுக்கும் உரிமை எந்த ஒரு வங்கிக்கும் கிடையாது.

எனவே தங்கள் வங்கி, கிளைக்கு ரிசர்வ் வங்கி ஏதாவது விஷேட அனுமதி வழங்கியுள்ளதா? அல்லது State Bank of India Act 1955 -ல் ஏதாவது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?  அப்படி இருக்குமானால், அது விபரத்தை தெரியப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.திரவிய நடராஜன்
நாள் : ------------------

21 comments:

 1. அனுப்புங்க..அப்போதுதான் விண்ணப்பத்தை வீடு தேடி வந்து நிரப்பி, கணக்கு துவங்கித் தருவார்கள்

  ReplyDelete
 2. நிகழ்காலத்தில்... said...

  அனுப்புங்க..அப்போதுதான் விண்ணப்பத்தை வீடு தேடி வந்து நிரப்பி, கணக்கு துவங்கித் தருவார்கள் //

  நான் சீரியஸாக கேட்கிறேன்.

  ReplyDelete
 3. There is a clause regarding KNOW YOUR CUSTOMER.Under this clause there is a remote possibility that the banker could say he got suspicion about the customer;s answers on few banking related questions.

  Instead of legal notice you and Lokesh could talk over phone to the branch manager or meet him and sort out . If that did not work out you could go for legal notice.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்..
  நண்பரே.. அனுப்புங்கள்..கண்டிப்பாக பதில் வரும்..
  நம்புவோம்......

  ReplyDelete
 5. ராம்ஜி_யாஹூ said...

  There is a clause regarding KNOW YOUR CUSTOMER.Under this clause there is a remote possibility that the banker could say he got suspicion about the customer;s answers on few banking related questions.

  Instead of legal notice you and Lokesh could talk over phone to the branch manager or meet him and sort out . If that did not work out you could go for legal notice ///

  தாங்கள் கூறுவது உண்மை. ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கு விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் KYC Norms படி ஒருவர் தேவையான தகவல் அளித்தால் போதும். ரிசர்வ் வங்கியின் இது தொடர்பான சுற்றறிக்கையின் நகலை பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. kutraalam said...

  வாழ்த்துக்கள்..
  நண்பரே.. அனுப்புங்கள்..கண்டிப்பாக பதில் வரும்..
  நம்புவோம்....////

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. //" ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அசோசியேஷன் என்பது நமது அமைப்பின் பெயர். இதில் நாம் எல்லோரும் அங்கத்தினர்கள்.//

  :)) மகிழ்வுகள்..

  ReplyDelete
 8. மதிப்பிற்குரிய ஐயா,

  தயவு செய்து அனுப்புங்கள் சம்பந்த பட்ட நானும் எனது வீட்டாரும் மிகவும் அலைந்து அலைந்து கடைசியில் கை விட்டு விட்டோம்.

  கடைசியல் நான் அசிஸ் வங்கியில் கணக்கு துவங்கி விட்டன. அதனால் எனக்கு 750 ருபாய் நஷ்டம். இனிமால் யாரும் பதிக்க பட கூடாது.

  நன்றி,

  Logeshkumar P.
  logesh.flashdev@gmail.com

  ReplyDelete
 9. inelogesh said...

  மதிப்பிற்குரிய ஐயா,

  தயவு செய்து அனுப்புங்கள் சம்பந்த பட்ட நானும் எனது வீட்டாரும் மிகவும் அலைந்து அலைந்து கடைசியில் கை விட்டு விட்டோம்.

  கடைசியல் நான் அசிஸ் வங்கியில் கணக்கு துவங்கி விட்டன. அதனால் எனக்கு 750 ருபாய் நஷ்டம். இனிமால் யாரும் பதிக்க பட கூடாது.

  நன்றி,

  Logeshkumar P.
  logesh.flashdev@gmail.com ///

  லோகேஷ். தயவு செய்து தங்களை பற்றிய விபரத்தை எனக்கு மெயில் செய்யவும். அதாவது தங்கள் வீட்டு முகவரி, தாங்கள் என்ன செய்கிறீர்கள் போன்ற விபரங்கள். இது பிளாக்கில் வெளியிடப்படமாட்டாது. கூகுல் டாக்கில் என் ஐ.டியை சேர்த்துக்கொள்ளவும். தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்

  ReplyDelete
 10. தயவு செய்து ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அசோசியேஷன் பற்றி ஒரு பதிவு போடவும்

  ReplyDelete
 11. சென்ஷி said...

  //" ஆல் இந்தியா கன்சுயூமர்ஸ் அசோசியேஷன் என்பது நமது அமைப்பின் பெயர். இதில் நாம் எல்லோரும் அங்கத்தினர்கள்.//

  :)) மகிழ்வுகள்.////

  வாருங்கள்

  ReplyDelete
 12. கட்டாயம் அனுப்புங்கள் ஐயா..

  ReplyDelete
 13. கே.ஆர்.பி.செந்தில் said...

  கட்டாயம் அனுப்புங்கள் ஐயா ''''
  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 14. இது என் முதல் பின்னுட்டம். உங்களின் சமூக சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  கடிதத்தை அனுப்புங்கள் ஐயா

  ReplyDelete
 15. கே.ஆர்.பி.செந்தில் said...

  கட்டாயம் அனுப்புங்கள் ஐயா ////

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. Chandru said...

  இது என் முதல் பின்னுட்டம். உங்களின் சமூக சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  கடிதத்தை அனுப்புங்கள் ஐயா
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 17. அருமை சார். நானும் இதில் உறுப்பினர் ஆகிக்கொள்கிரேன்.

  இந்த வங்கி பலமுறை பல இடங்களில் இது போல வாடிக்கையாளர்களை உதாசீனப்படுத்தி இருக்கிறது. நான் ஹைதராபாத்தில் இருக்கும்போது எனது வங்கிக்கணக்கிற்கு இணைய login username / password வாங்கச் சென்றிருந்தேன். மூன்று முறை அலையவிட்ட கடமைக்கு ஒன்றைக் கொடுத்தார்கள். இன்றுவரை அது பணிசெய்யவில்லை என்பது சிற(ரி)ப்பு.
  அப்போது புதிதாக வங்கிக்கணக்கு தொடங்க வந்த வேறொரு நபரை ஒருமணி நேரம் காக்கவைத்துவிட்டு, அவர் பொறுமையிழந்து மீண்டும் கேட்க்கும்போது, அங்கிருந்த வங்கி ஊழியப் பெண்மணி... வேணும்னா வேற எங்கையாவது போயி கணக்கு தொடங்கிக்கொள்ளுங்கள். எங்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் தேவையில்லை. ஏற்கனவே உள்ளவர்களே போதும் என தெலுகில் கூற... பொங்கிஎழுந்துவிட்டேன் நான். அந்தப் பெண்மணியிடம் வாதம் செய்து சிறிது மிரட்டலோடு இப்போது நீங்கள் கூறியவற்றை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். தர மறுத்தார். அல்லது மீண்டும் ஒருமுறை அதைக் கூறுங்கள் நான் எனது செல்போனில் வீடியோவாகப் பதிந்துகொள்கிறேன் என்றேன் ஆடிப்போய்விட்டார். பிறகு அடக்கமாக... இல்ல சார். இன்னைக்கு ரெண்டு பேர் லீவு என்றார். ஊழியர்கள் போதவில்லை என்றார்.
  நான் அவரிடம், நீங்கள் கோபித்துக்கொள்ள வேண்டியது வாடிக்கையாளரை அல்ல. உங்கள் நிர்வாகத்தை. பொறுப்பாக நீங்கள் வாடிக்கையாளரைக் கையாள வேண்டும். அவரிடம் முன்பே கூறி, வேறொரு சமயம் வரச் சொல்லி இருக்க வேண்டும். இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகித்திருக்ககூடாது என்று எச்சரித்தேன்.
  அவர்களின் வாடிக்கையாளர் சேவையில் நான் வாடிப் போய் ரூ.1800- டன் அந்த வங்கிக்கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. ரோஸ்விக் said...

  அருமை சார். நானும் இதில் உறுப்பினர் ஆகிக்கொள்கிரேன் இந்த வங்கி பலமுறை பல இடங்களில் இது போல வாடிக்கையாளர்களை உதாசீனப்படுத்தி இருக்கிறது.///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 20. வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

  சார் :நல்ல ஒரு தொடக்கம் ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete