Thursday, July 1, 2010

ஆட்டோ வந்தது......... சென்றது.

நண்பர்களே! நீங்களும் நானும் ஆவலுடன் எதிர்பார்த்த எதுவுமே நடக்காமல் புஸ்வாணம் ஆகிவிட்டது ஆட்டோ விவகாரம். ஒருவழியாக, ஆட்டோவி லேயே வந்தார். அவர் எனக்கு அறிமுகமில்லாதவர் தான்.

தன்னுடைய பெயர், தான் வேலை பார்க்கும் வங்கி, கிளை போன்ற எல்லா விபரங்களையும் கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்பொழுது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. சரி இவர் அதற்கு வரவில்லை.என புரிந்தது. ஆட்டோவில் வருபவ்ர்கள் தன்னைப்பற்றி  அறிமுகம் செய்து கொள்ள  மாட்டார்கள்.                                                                                                                                

என்னுடைய "வயிறு பத்தித்து எரியுது" பதிவை சுட்டிகாட்டியவர், வங்கி மேனேஜர்களுக்கு கடனை சாங்ஷன் செய்யும் அதிகாரம் கிடையாது என்றும். விண்ணப்பங்களை வாங்கி சர்க்கிள் ஆபீஸிற்கு பரிந்துறை செய்வது மட்டுமே தங்கள் வேலை என்றும், சர்க்கிள் ஆபீஸில் லோன் செகஷனில் கிளார்க்குகள் செய்யும் தவறுகள் தான் இதற்கு காரணம் என்றார். இது எனக்கு தெரிந்த விஷயம் தான். பதிவில் நான் இதை குறிப்பிடாதது தான் அவருக்கு வருத்தம் என்றார். மற்றப்படி வேறு மாற்று கருத்து கிடையாது என்றார்.

"இதை சொல்லவா இவ்வளவு கஷடப்பட்டு ஆட்டோவில் வந்தீர்கள்? போனில் பேசிய போதே சொல்லியிருக்கலாமே"

"இல்லை . உங்களை நேரில் பார்க்க ரெம்ப நாளாவே விருப்பம்"

"அப்படியா?"

"ரெண்டு மூனு வருஷத்துக்கு முன்னால ஒரு  தடவை  XXXXXXX வங்கியின் தலைமை அலுவலகம் போயிருந்தேன். அங்குதான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டேன்".

"என்னத்தை?"

"ஆர்.டி.ஐ பெட்டிஷன், கன்ஸுமர் கேஸ் நோட்டீஸ்ன்னு போட்டு அவங்களை விரட்டி விரட்டி அடிச்சிட்டு இருந்ததை தான்"

"அப்படியா?"

"ஆமாம். நீங்க சி.எம்.டி க்கு அனுப்பியிருந்த நோட்டீஸை பார்த்து தான்"

"எந்த நோட்டீஸ்? நான் நிறைய அனுபியிருக்கேன். அதுல எது?"

"அதான் ஸார், பாங்க் ஸ்டிரைக் சம்பந்தமா".

" அது பெரிய காமெடி. படிச்சு பார்த்தீங்களா?".

"உங்க பைலையே படிச்சு பார்த்தேன்"

"சரி".

"ஏதோ உங்களை பார்த்து பேசனும்ன்னு தோண்ச்சு ஸார். அதான் வந்தேன்.எங்க தப்பு நடந்தாலும் எழுதுங்க. நான் வரேன் ஸார்" என்று கூறி கிளம்பினார்.

அவரை வழியனுப்பி வைத்தேன். அவ்வ்வ்வ்வ்வளவு தான்!

என்னை ஊக்கப்படுத்த பின்னூட்டமிடுங்கள். 
பலரையும் சென்றடைய வாக்களியுங்கள்.

13 comments:

 1. அப்பாடா! ஒரு வழியா முடிஞ்சுதா?

  ReplyDelete
 2. இனி மெல்ல வரும் விடியல்

  ReplyDelete
 3. வாங்க மாங்குனி அமைச்சர்

  ReplyDelete
 4. அப்ப ஒன்னுமே நடக்கலையா??????????????

  ReplyDelete
 5. "ஏதோ உங்களை பார்த்து பேசனும்ன்னு தோண்ச்சு ஸார். அதான் வந்தேன்.எங்க தப்பு நடந்தாலும் எழுதுங்க. நான் வரேன் ஸார்" என்று கூறி கிளம்பினார்.

  அவரை வழியனுப்பி வைத்தேன். அவ்வ்வ்வ்வ்வளவு தான்!  ....... GRRRRRRRRRREAT!!!

  ReplyDelete
 6. பதிவர் சந்திப்புன்னா சும்மா புகைப்படங்களை எல்லாம் போட்டு அகதள படுத்தி இருக்க வேண்டாமா ?

  நண்பர் ஆடவில இருந்த வலது கால எடுத்து வச்சதில் இருந்து போகும்போது ஆட்டோவில் ஏறும் வரை நீங்க பேசனது, பார்த்தது ,சாப்பிட்டது ஜோக் அடிச்சது இதை எல்லாத்தையும் தமிழ் பதிவர் விதிப்படி எழுதணுமா இல்லையா?

  நீங்கல்லாம் எப்படி பிரபல பதிவர் ஆக போறீங்களோ ??

  ReplyDelete
 7. எதிர்பார்த்தேன்!

  சிறுசா!

  ReplyDelete
 8. சீனியர் சிங்காரம் said...

  அப்ப ஒன்னுமே நடக்கலையா??????????????////


  ஏன் வருத்தப்பட்றீங்க. இன்னும் சந்தர்ப்பம் இருக்கு

  ReplyDelete
 9. "ஏதோ உங்களை பார்த்து பேசனும்ன்னு தோண்ச்சு ஸார். அதான் வந்தேன்.எங்க தப்பு நடந்தாலும் எழுதுங்க. நான் வரேன் ஸார்" என்று கூறி கிளம்பினார்.

  அவரை வழியனுப்பி வைத்தேன். அவ்வ்வ்வ்வ்வளவு தான்!  ....... GRRRRRRRRRREAT!!!////

  தேவனா எமனுக்கே அல்வா கொடுத்து அனுப்பறவன். இது என்ன.....

  ReplyDelete
 10. யூர்கன் க்ருகியர் said...

  பதிவர் சந்திப்புன்னா சும்மா புகைப்படங்களை எல்லாம் போட்டு அகதள படுத்தி இருக்க வேண்டாமா ?

  நண்பர் ஆடவில இருந்த வலது கால எடுத்து வச்சதில் இருந்து போகும்போது ஆட்டோவில் ஏறும் வரை நீங்க பேசனது, பார்த்தது ,சாப்பிட்டது ஜோக் அடிச்சது இதை எல்லாத்தையும் தமிழ் பதிவர் விதிப்படி எழுதணுமா இல்லையா?

  நீங்கல்லாம் எப்படி பிரபல பதிவர் ஆக போறீங்களோ ??////

  வேற யாரும் அடுத்தாப்பல வராமலா போயிடுவாங்க?
  ஆடியோ வீடியோ எல்லாம் எடுத்து யூ டியூப்பில ஏத்திடலாம்.

  ReplyDelete
 11. வால்பையன் said...

  எதிர்பார்த்தேன்!

  சிறுசா!///

  புதுசா ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சா அப்ப யாராவது வந்து வால் ஆசையை நிறைவேற்றி வைப்பாங்க. இதுக்குப்போய்......

  ReplyDelete