Friday, July 2, 2010

அரசாங்கத்திற்கு ஒரு சவால்!

ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கிறது என்பதையும், அவற்றில் எவையெல்லாம் உயர்ந்த ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், தாழ்த்தப்பட்ட ஜாதிகள் என பட்டியலிட்டு அரசாணை மூலம் ஜாதி உண்டு என்பதை சட்ட பூர்வமாக ஊர்ஜிதம் செய்துள்ளது.

இந்நிலையில் நான் எழுப்பும் சில அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அனாதை குழந்தையை செட்டியார் ஜாதியை சேர்ந்த ஒருவர் தத்து எடுக்கிறார். இப்பொழுது அக்குழந்தை வளந்து பெரியவனாகி விட்டான்.  தனக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பிக்கிறான். அவன் எந்த ஜாதியை சார்ந்தவன் என்று சான்று வழங்குவீர்கள்?

செட்டியார் என்றா?. அப்படித்தான் வழங்குவீர்கள்.

ஆனால் அவன் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை.  தன் பெற்றோர்கள் எந்த ஜாதியோ, அதுதான் தன்னுடைய ஜாதி எனவே தான் செட்டியார் ஜாதியை சார்ந்தவன் இல்லை என ஆட்சேபிக்கிறான்.

இந்நிலையில், அவன் ஆட்சேபணையை ஏற்று, அவன் பெற்றோர் ஜாதியை கண்டுபிடித்து அதன் படி சான்று வழங்குவீர்களா? அது உங்களால் முடியாது. இந்நிலையில் அவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறான்.

நீதிமன்றத்தில் அவன் வைக்கும் வாதம்.

1. தெருவில் அனாதையாக கிடந்த அல்சேஷன் நாய்க்குட்டியை பார்த்து பரிதாபப்பட்ட சுப்பையா நாடார் அந்த நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கிறார். இப்பொழுது அந்த நாய்க்குட்டி எந்த ஜாதியை சார்ந்தது?  

அல்செஷனா இல்லையா?

நிச்சயமாக அல்சேஷன் தான்.

 இதை சயின்டிபிக்காக நிருபிக்க முடியும்.

இதை போலத்தான் அவன் செட்டியார் வீட்டில் வளர்ந்தாலும், அவன்,  அவனது பெற்றோர்களின் ஜாதியை சார்ந்தவனே!

அவனுடைய பெற்றோர்களின் ஜாதி தெரியாது என்பது உங்கள் வாதமாக இருக்குமானால், எதை அதாரமாக வைத்து ஜாதிகளை பட்டியலிட்டீர்களோ அதன் அடிப்படையில் கண்டுபிடியுங்கள்.

ஜாதியை கண்டுபிடிக்க விஞ்ஞான ரீதியிலான எந்த முறையும் இல்லை என்பது உங்கள் பதிலாக இருக்குமானால், எப்படி ஜாதிகளின் பட்டியலை அரசாணை மூலம் வெளியிடலாம்?

ஜாதி என்பது இருக்குமானால் தன்னுடைய பெற்றோர்களின் ஜாதியே தன் ஜாதி. அதை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஜாதிகள் உண்டு என ஜாதிகளின் பெயரை பட்டியலிட்டு வெளியிடப்பட்ட் அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும் .அத்துடன், ஜாதி சான்றிதழ் வழங்குவதை நிறுதத வேண்டும் என கோரிக்கையை நீதிமன்றத்தில் வைக்கிறான்.

இது அரசாங்கத்திற்கு ஒரு சவால். 

அரசாங்கத்தால், ஜாதி உண்டு என்பதை விஞ்ஞான ரீதியாக நிருபிக்க முடியுமா?


16 comments:

  1. அனானி அவர்களே உண்மைகள் என்றுமே கசக்கும். ஆனால் உண்மை என்றுமே உண்மைதான். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  2. யூர்கன் க்ருகியர் said...

    very good question///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. நல்ல கேள்வி

    ReplyDelete
  4. இதை கேட்டு கேஸ் போடலாமா தல!?

    ReplyDelete
  5. வால்பையன் said...

    இதை கேட்டு கேஸ் போடலாமா தல!///


    நிச்சயமாக. ஆனால் யார் போடப்போகிறார்கள்?

    ReplyDelete
  6. Anonymous said...

    நல்ல கேள்வி///

    வருகைக்கு நன்றி அனானி!

    ReplyDelete
  7. தல நீங்களே கேஸ் போடுங்க.

    ReplyDelete
  8. Anonymous said...

    தல நீங்களே கேஸ் ///

    செய்துட்டா போச்சு.

    ReplyDelete
  9. இதை பொதுநல வழக்கா கேஸ் போடுங்க, வேடிக்கை பார்க்கலாம்.

    ReplyDelete
  10. சார் , சும்மா காமடி பன்னாதிக , பொழுது போகலைன்னா வாங்க செஸ் ஆடலாம் , கவுருமெண்ட்டு கிட்ட போய் சவால் விட்டுகிட்டு

    ReplyDelete
  11. மங்குனி அமைச்சர் said...

    சார் , சும்மா காமடி பன்னாதிக , பொழுது போகலைன்னா வாங்க செஸ் ஆடலாம் , கவுருமெண்ட்டு கிட்ட போய் சவால் விட்டுகிட்டு/////

    ஏங்க, கவர்மெண்ட் என்ன ஆகாயத்திலிருந்து குதிச்சதா?
    நமக்காக நாம வைச்சுக்கிட்டது தானே? சரி நீங்க இத சவாலா ஏத்துக்கிட்டீங்கனா, நான் கேஸ் போடுரேன். ஆனா செலவ நீங்க ஏத்துக்கனும். சம்மதமா?

    ReplyDelete
  12. இது என்ன விவகாரம் அய்யா?

    ReplyDelete
  13. Anonymous said...

    இது என்ன விவகாரம் அய்யா?

    படிச்சுமா புரியல?????????

    ReplyDelete
  14. ஆமாங்க

    ReplyDelete