Saturday, July 3, 2010

குளு குளு குற்றாலத்தில் கூட்டாஞ்சோறு - திரவிய நடராஜன்

இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருதுங்க!  ஆமாம்ங்க. நான் கல்லூரி படிப்பை முடிச்சுட்டு ஊருக்கு வந்த நேரம். எங்க ஊர்ல இருந்து குற்றாலம் 5 கிலோ மீட்டர் தூரம் தான்.ஹைஸ்கூல்ல  படிக்கறப்போ நாயிற்று கிழமை நாலைஞ்சு பசங்களா சேர்ந்து  குற்றாலம் போவோம். பெரும்பாலும் நடராஜா சர்வீஸ்தான். சில சமயம் சைக்கிள். அப்ப எல்லாம் பஸ் வசதி கம்மி. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான் உண்டு. சைக்கிள்ன்னா 15 நிமிஷம். நடந்து போனா 1 மணி நேரம். நடந்து போறதுல உள்ள சுகமே தனிதான். ரோட்டின் இரு பக்கமும் ஆல மரங்கள். வெயிலே தெரியாது. பந்தல் போட்ட மாதிரி இருக்கும்!

காலேஜ் முடிச்சுட்டு வந்த புதுசுல, அதவது 1973-1974 வாக்கில, ஒரு தடவ பசங்க ஏழு எட்டு பேர் சைக்கிள்ல, குற்றாலம் போன கதை இருக்கே அதை நினைச்சாலே விழுந்து விழுந்து சிரிப்பேங்க. செம காமெடி. எப்பவும் குற்றாலம் போனா, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துட்டு போயிடுவோம். அங்கு ஷேர் பண்ணி சாப்பிடுவோம். இந்த தடவை அப்படி இல்லாம அங்கேயே ச்மையல் செய்து சாப்பிடலாம்னு முடிவு செய்தோம். சாதம், குழம்பு, காய் இதெல்லாம் செய்வது கஷ்டம் அதனால கூட்டாஞ்சோறு பண்ணலாம்ன்னு நான் ஐடியா ( ? )கொடுத்தேன். அதுல தான் வினையே வந்தது .

பொதுவா நாங்க, உள்ளூர்காரங்க ( இளைஞர்கள்) மெயின் பால்ஸ் போற்துல விருப்பம் கிடையாது. நேரா தேனருவி, கீழே இறங்கும் பொழுது செண்பகா தேவி அருவி. ஆக இரண்டு குளியல். இந்த தடவ சமையல் இருக்கதுனால்  செண்பகா தேவி அருவி மட்டும்ன்னு முடிவு செய்தோம். கூட்டாஞ்சோறு  பக்குவதையும் அதற்கு தேவையான காய்கறிகள், மசாலா விபரங்களை என் அம்மாவிடம் கேட்டு வைத்துக்கொண்டேன். ஒருத்தர் அரிசி, ஒருத்தர் காய், மற்றவர் பருப்பு என எல்லா சாமான்களையும் கொண்டு வந்து விட்டோம். ஊரிலிருந்து காலை 7 மணிக்கு சைக்கிளில் குற்றாலம் கிளம்பினோம்.

சரியா 20 நிமிஷத்தில குற்றாலம் வந்து சேர்ந்தோம். எங்க ஊரில் உடுப்பி ஹோட்டல் வைதிருப்பவர் அங்கும் ஹோட்டல் வைத்திருந்தார். அவர் எனக்கு நல்ல பழக்கப்பட்டவர். அவ்ர் ஹோட்டலில் எல்லா சைக்கிள்களையும் நிறுத்தி விட்டு தட்டு முட்டு சாமான்களுடன் செண்பகாதேவி அருவிக்கு செல்ல மலை ஏற ஆரம்பித்தோம். அப்பாடா மூச்சு வாங்குது.  மீதி அடுத்த பதிவில்.......

என்னை ஊக்கப்படுத்த பின்னூட்டமிடுங்கள். 
பலரையும் சென்றடைய வாக்களியுங்கள்.


21 comments:

 1. ஆஹா! குற்றாலம் அதுவும் வித் கூட்டாஞ்சோறா? பேஷ் பேஷ்!

  ReplyDelete
 2. சுவார‌ஸ்ய‌ம்.... குளுமையான‌ அனுப‌வ‌ம்.. தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 3. சீனியர் சிங்காரம் said...

  ஆஹா! குற்றாலம் அதுவும் வித் கூட்டாஞ்சோறா? பேஷ் பேஷ் ///

  வாங்க சீன்யர் சிங்காரம்.

  ReplyDelete
 4. நல்லா இருக்குசார், தொடர்ச்சிய சீக்கிரம் போடுஙக.

  ReplyDelete
 5. நாடோடி said...

  சுவார‌ஸ்ய‌ம்.... குளுமையான‌ அனுப‌வ‌ம்.. தொட‌ருங்க‌ள் ///

  வாங்க நாடோடி

  ReplyDelete
 6. Jey said...

  நல்லா இருக்குசார், தொடர்ச்சிய சீக்கிரம் போடுஙக//

  வாங்க ஜே. தொடர்ச்சி வந்துக்கிட்டே இருக்கு

  ReplyDelete
 7. share ur experiences with us sir

  ReplyDelete
 8. அனானியின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. செங்கோட்டை இலஞ்சி குற்றாலம் நினைக்கயிலேயே மகிழ்ச்சியாக உள்ளது, பசுமையான இடங்கள்.

  ReplyDelete
 10. ராம்ஜி_யாஹூ said...

  செங்கோட்டை இலஞ்சி குற்றாலம் நினைக்கயிலேயே மகிழ்ச்சியாக உள்ளது, பசுமையான இடங்கள் ////

  வருகைக்கு நன்றி ராம்ஜி

  ReplyDelete
 11. தொடர்ந்து பகிருங்கள்

  ReplyDelete
 12. ரைட்டு , வில்லங்கம் வலை விரிச்சிருச்சு

  ReplyDelete
 13. ஆஹா.. அருமையா இருக்கே.. சீக்கிரம் போங்க..

  ReplyDelete
 14. ungkal oor ethu?

  ReplyDelete
 15. இன்னும் மலையே ஏறல!அதுக்குள்ள மூச்சு வாங்குதா?

  நாங்கெல்லாம் மீனும் புடிச்சு,கொழம்பும் வச்சு கூட்டாஞ்சோறும் சமைக்கிற ஆளுக.அம்மாக்கள் முந்தானைய புடிச்சிகிட்டே சுத்தறதால கூட்டாஞ்சோறு சொதப்பல்ங்கிற பேச்சுக்கே இடமில்லை:)

  ReplyDelete
 16. Anonymous said...

  தொடர்ந்து பகிருங்கள்
  வருகைக்கு நன்றி அனானி

  ReplyDelete
 17. மங்குனி அமைச்சர் said...

  ரைட்டு , வில்லங்கம் வலை விரிச்சிருச்சு ///

  ஏது! என்னை வில்லங்கம்னு முடிவே பண்ணியாச்சா?

  ReplyDelete
 18. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  ஆஹா.. அருமையா இருக்கே.. சீக்கிரம் போங்க //

  வாங்க ஸ்டார்ஜன்

  ReplyDelete
 19. Anonymous said...

  ungkal oor ethu? ////

  செங்கோட்டை தான் நாண்பரே

  ReplyDelete
 20. ராஜ நடராஜன் said...

  இன்னும் மலையே ஏறல!அதுக்குள்ள மூச்சு வாங்குதா? ////

  வாங்க ராஜ நடராஜன்

  ReplyDelete
 21. தொடர்ச்சியா எழுதுங்க தலைவா! சீக்கிரம். ம்...

  ReplyDelete