Thursday, July 8, 2010

பதிவுலக சண்டியர்களுக்கு ஆப்பு வைக்கும் சைபர் கிரைம் சட்டம் - ஒரு பார்வை

சைபர் கிரைம் (Cyber Crimes) என்றால் என்ன? அதை தடுக்கவும் தண்டிக்கவும் என்ன சட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கம்.

சைபர் கிரைம்: சைபர் கிரைம் அல்லது குற்றம் என்பது, இண்டர்நெட் & கணினி மூலம் செயப்படும் அனைத்து குற்றங்களும் ஆகும். இவற்றை எல்லாம் பட்டியல் இட்டால் தொடர் பதிவாகி விடும். எனவே சாமானியர்களுக்கு குறிப்பாக பதிவர்களுக்கு தேவைப்படும் விஷயங்களை பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம். இதற்காகவே கொண்டு வரப்பட்டது தான் 
 Information Technology Act 2000 & information Technology ( Amendment ) Act 2008.

இ-மெயில்: இமெயில் மூலமாக அனுப்பப்படும்  மிரட்டல்கள், ஏமாற்றி பணம் மோசடி செய்வதற்காக அனுப்பப்படும் பொய்யான தகவல்கள், மன்ம் புண்படும் படியான வார்த்தைகளை கொண்ட மெயில், அவதூறான வாசகங்கள் அடங்கிய மெயில் போன்றவைகள் எல்லாம் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமே.

பிளாக்/வெப்சைட்: ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது  பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்.

இப்பொழுது இ மெயில் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். மேலே குறிப்பிட ப்பட்டுள்ள படி உங்களுக்கு ஒரு இ-மெயில் வருமானால், அந்த மெயிலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் யாஹீ வாக இருந்தால் அதில் FULL HEADER என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், அந்த மெயில் எந்த ஐ.பி.யிலிருந்து, வந்தது போன்ற எல்லா விபரங்களும் தெரியும்.மெயிலில் இன் பாக்ஸ்சில் அந்த மெயிலை பத்திரமாக டெலிட் ஆகாமல் வைத்து கொள்ளுங்கள். இது தான் உங்களிடமிருக்கும் ஆதாரம். கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது  எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும். இப்பொழுது மெயிலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். ரிப்ளை என்ற ஆப்ஷனுக்கு அடுத்து முக்கோண வடிவில் ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அப்பொழுது பல ஆப்ஷன்கள் வரும். அதில் Show Original  என இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மெயில் எந்த ஐ.பி யிலிருந்து வந்தது போன்ற எல்லா ஜாதகமும் தெரியும். இதை வைத்துதான் அனுப்பியவரை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிப்பார்கள்.

இதைப்போலவே, எந்த மெயில் சர்வீசாக இருந்தாலும் , அனுப்பியவரின் ஐ.பி யை கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் அனுப்பியவரை பிடித்து விடுவார்கள்.

அடுத்து பிளாக்/வெப்சைட்டுக்கு வருவோம். இதுதான் நமக்கு இப்பொழுது தேவையான ஒன்று. நாம் தான் தொலை தூரத்தில் இருக்கிறோமே!, நாம் யார் என்ற விபரம் தான் மற்றவர்களுக்கு தெரியாதே என்று ஆபாசமாக பிறரை திட்டி, பதிவிட்டு தன் மன வக்கிரத்தை கொட்டிக்கொள்ளுபவர் சிலர். இவர்கள் தனது வெப்சைட் அல்லது பிளாக்கில் இப்படி பதிவு போடுவார்கள். மற்றவர்களின் வலைதளத்திற்கு சென்று பின்னூட்டமாகவும் போட்டு சாதனை செய்வார்கள். இவர்கள் இரட்டை குற்றம் செய்பவர்கள் ஆவார்கள். ஒன்று, எதிராளிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர் பெயருக்கு.களங்கம் ஏற்படுத்துவது. மற்றது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது. வெப்சைட், பிளாக் என்பது பலரும் வந்து செல்லும் பொது இடம் ஆகும். எனவே பாதிக்கப்பட்டவ்ரும் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதைப்போலவே, மற்றவர்களும் இவர் மீது வழக்கு தொடர முடியும்.

இ மெயில் விஷயத்தில் கூறியபடியே, பதிவு அல்லது பின்னூட்டததை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.பதிவை தமிழ்மணம் கருவிப்பட்டை மூலம் பி.டி.எப் ஆக் எடுத்துக்கொள்ளலாம்.

இனி இவர்கள் மீது எப்படி புகார் பதிவு செய்வது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்................. தொடரும்.






66 comments:

  1. good posting. keep it up

    ReplyDelete
  2. நல்ல பதிவு.. வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  3. சென்ஷி said...

    நல்ல பதிவு.. வரவேற்கின்றேன் ////

    தெரிந்து கொண்டால் போதாது. ஆப்பு வைக்கனும். வைப்பீங்களா?

    ReplyDelete
  4. Anonymous said...

    good posting. keep it up
    வாங்க அனானி.

    ReplyDelete
  5. ஜெய்லானி said...

    நல்ல விஷயம் ////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    நல்ல விஷயம். naan listtoda varen ////

    வாங்க ரமேஷ்.

    ReplyDelete
  7. ராஜன் said...

    தும் ததா!///

    அப்படின்னா? நான் அந்த காலத்து ஆளு. விபரமா சொல்லுங்க

    ReplyDelete
  8. //
    தெரிந்து கொண்டால் போதாது. ஆப்பு வைக்கனும். வைப்பீங்களா? //

    :))

    ஏற்கனவே அங்கங்கு அவரவர்களே ஆப்புகளில்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதை உங்கள் பதிவு மூலம் அறியச்செய்யுதல் மிக நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  9. சென்ஷி said...

    //
    தெரிந்து கொண்டால் போதாது. ஆப்பு வைக்கனும். வைப்பீங்களா? //

    :))

    ஏற்கனவே அங்கங்கு அவரவர்களே ஆப்புகளில்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதை உங்கள் பதிவு மூலம் அறியச்செய்யுதல் மிக நன்மை பயக்கும் என்று நம்புகிறேன் ////

    பார்க்கலாம்.

    ReplyDelete
  10. //ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்//

    அவதூறான செய்திக்கும் கருத்து சுகந்திரத்திற்கும் என்ன வேறுபாடு?

    நடிகர், நடிகைகளை பற்றி பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் குறித்து ஏன் யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை?

    புவனேஷ்வரி குறித்த செய்தியின் போது ஏன் தினமலரின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை?

    பத்திரிக்கை சுதந்திரம் என்றால் அவதூறு செய்திகளுக்கு சட்டத்தின் வரையறை என்ன?

    ReplyDelete
  11. கண்ணா.. said...

    //ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்//

    அவதூறான செய்திக்கும் கருத்து சுகந்திரத்திற்கும் என்ன வேறுபாடு?

    நடிகர், நடிகைகளை பற்றி பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் குறித்து ஏன் யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை?

    புவனேஷ்வரி குறித்த செய்தியின் போது ஏன் தினமலரின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை?

    பத்திரிக்கை சுதந்திரம் என்றால் அவதூறு செய்திகளுக்கு சட்டத்தின் வரையறை என்ன ////

    1, நீங்கள் ஒரு காரியத்தை செய்துவிட்முடியும் என கூறுகிறீர்கள் - மற்றவர் அது முடியாது என்கிறார்.
    அவருக்கு அப்படி சொல்ல உரிமை உண்டு. இது கருத்து சுதந்திரம்
    2.நீங்கள் ஒரு குடிகாரன், ஏமாற்றுக்காரன் என அவர் உங்களைப்பற்றி சொன்னால் ( நீங்கள் அப்படியில்லாமல் இருந்தால்)அது அவதூறான செய்தி.
    3. நடிகைகள் இது போன்ற செய்திகளை அவர்கள் மறுக்காமலிருக்கும் காரணம் அவை உண்மையாக இருக்கலாம். கிளரினால் இன்னும் அசிங்கம் என இருக்கலாம். அல்லது விளம்பரமாக கூட நினைக்கலாம்.
    4.சம்பந்தப்பட்டவர் புவனேஷ்வரி. அவர் எடுக்கவில்லை என்றால் நாம் என்ன செய முடியும்?
    ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது குற்றம் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை என குஷ்பு வழக்கில் உச்ச நீதிமன்றமே கூறிவிட்ட பொழுது புவனேஷ்வரி வழக்கு கேள்விக்குறியே!
    5. அவதூறு செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை. மான நஷ்ட வழக்கு தொடரலாம்

    ReplyDelete
  12. ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள்... தொட‌ருங்க‌ள்..

    ReplyDelete
  13. நாடோடி said...

    ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள்... தொட‌ருங்க‌ள்.///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  15. இது எந்த அளவுக்கு ஒத்து வரும்னு தெரியல. நிச்சயமா ஒருவருடைய கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்றால் ப்ளாக் பக்கம் வருவதே வேஸ்ட்.

    பாதிக்கப்பட்டவருக்கு அவதூறான செய்தியாக தெரிபவை, நமக்கு நேர்மையான விமர்சனமாகத் தோன்றுவது இயல்பு.

    இணையத்தின் மூலமாக பணம் இழந்தேன் அல்லது பாலியல் வன்முறை போன்றவைகளுக்கு சைபர் சட்டம் பயன்படுத்தினால் நன்று.

    சரிங்க. எனக்கு கொஞ்சம் சந்தேகம்.

    ஒரு நல்ல திரைப்படம். நாம் அதை நல்லா இல்லைன்னு பதிவின் மூலமாக லட்சம் பேருக்கு சொல்றோம். அது தயாரிப்பாளருக்கு பண நஷ்டத்தை தரும் விஷயம். அதுவும் குற்றமா ? தயாரிப்பாளர் நம் மீது வழக்கு தொடர முடியுமா ?

    திமுக ஒரு குடும்பக் கட்சி. மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பதிவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஆதாரம் கேட்டு திமுக, நம் மீது வழக்கு தொடுக்க முடியுமா ?

    ReplyDelete
  16. அக்பர் said...

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். தொடருங்கள் ///

    வாருங்கள் அக்பர்

    ReplyDelete
  17. கபிலன் said...

    இது எந்த அளவுக்கு ஒத்து வரும்னு தெரியல. நிச்சயமா ஒருவருடைய கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்றால் ப்ளாக் பக்கம் ////

    கருத்து சுதந்திரத்திற்கும், அவதூறாக எழுவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்னும் தாங்கள் புரிந்து கொள்ளாதது தான் விஷயம்
    என் பதிவை விமர்சினம் செய்யலாம். அது கருத்து சுதந்திரம்.
    என்னைப்பற்றி அசிங்கமாக திட்டி பின்னூட்டம் போட்டால் அது அவதூறு. இப்ப புரிகிறதா?

    ReplyDelete
  18. நன்றிகள் பல

    இன்னும் கூட விளக்கமாக விரிவாக எழுத வேண்டிய விஷயம் இது.

    நான் நேரிடையாக உதாரணங்களுடன் கேட்கிறேன்:

    உதாரணம் ஒன்று- என் பதிவில் அல்லது என் பின்னூட்டத்தில் இப்படி எழுதுகிறேன்- திரவிய நடராஜன் படிக்கதாவர், அவர்உக்கு ஒன்றும் தெரியாது, திரவிய நடராசன் செலவு செய்யாத ஒரு கஞ்சன் என்று எழுதுகிறேன்.

    எனது இந்த எழுத்து தண்டனைக்கு உரிய எழுத்தா.

    இரண்டாம் உதாரணம்- ராவணன் படத்திற்கு ரஹ்மான் சிறப்பாக இசை அமைக்க வில்லை, இதுவே டி ராஜேந்தர் ஆகா இருந்து இருந்தால் இசை இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்


    மேற்கூறிய இரண்டிலும் நான் ஒரு டிஸ்க்ளைமர்- எச்சரிக்கை- கவன ஈர்ப்பு வாக்கியம் வைத்து விடுகிறேன்- நான் எழுதுபவை எல்லாம் நகைச்சுவைக்கு மட்டுமே, யார் மனதையும் புண் படுத்த அல்ல.

    இப்பொழுதும் எனது எழுத்து தண்டனைக்கு உரிய எழுத்தா

    ReplyDelete
  19. kurippaga madhathai, irai bhakthiyai, ulagam potrum manidhargalai, unnadamana udarkalviyinai
    patri thodarnthu aabasamaga padhivu seidhu kondu varum irandu valayulaga pokkirigal irukirrargal.ivargal kadumayaga thandikka padavendum enbhadhu en viruppam.

    ReplyDelete
  20. ராம்ஜி_யாஹூ said...

    நன்றிகள் பல

    இன்னும் கூட விளக்கமாக விரிவாக எழுத வேண்டிய விஷயம் இது.

    நான் நேரிடையாக உதாரணங்களுடன் கேட்கிறேன் ///

    நிச்சயமாக உங்கள் முதல் உதாரணத்திற்கு நான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அவதூறு
    2. ரகுமான் - விஷயம் இது கருத்து சுதந்திரம் நடவடிக்கை எடுக்க முடியாது

    ReplyDelete
  21. Anonymous said...

    kurippaga madhathai, irai bhakthiyai, ulagam potrum manidhargalai, unnadamana udarkalviyinai
    patri thodarnthu aabasamaga padhivu seidhu kondu varum irandu valayulaga pokkirigal irukirrargal.ivargal kadumayaga thandikka padavendum enbhadhu en viruppam ///

    சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.

    ReplyDelete
  22. //ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்.//


    அவதூறான செய்திகள் என்றால் பொய்யான செய்திகள் தானே!
    அப்ப எங்களுக்கு பிரச்சனையில்ல!

    ஆல் இன் ஆல் & வால் இன் ஆல்

    ReplyDelete
  23. வால்பையன் said...

    //ஒருவர் தனது பிளாக் அல்லது வெப்சைட்டில், பிற்ரைப்பற்றிய அவதூறான செய்தியை வெளியிட்டாலோ அல்லது பின்னூட்டமிட்டாலோ அது தண்டனைக்குறிய குற்றாமாகும்.//
    அவதூறான செய்திகள் என்றால் பொய்யான செய்திகள் தானே!
    அப்ப எங்களுக்கு பிரச்சனையில்ல!

    ஆல் இன் ஆல் & வால் இன் ஆல்
    July 8, 2010 1:55 PM ////

    ஆமாம் வழக்கு போடுங்கள்

    ReplyDelete
  24. சார், எல்லோருக்கும் விளக்கம் சொல்றேன்,விளிப்புனர்வு ஏற்படுத்துறேன் , அப்படி சொல்லிகிட்டே, பதிவுலகத்தில், கிளையண்ட் தேடுற உள்குத்து ஏதும் இருக்கா??.
    ஏன்னா, ”சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்”,”ஆமாம் வழக்கு போடுங்கள்’ அப்படினு நீங்க பின்னூட்டங்கள்ல சொன்னதன் பின்னனிடில் இருக்கிற விசயங்கள் ஏதும் வழக்கு போட்டா தீர்வு கிடைக்குற மாதிரி தெரியல.
    வெட்டியா வக்கீல் ஃபீசும், நேரமும் தான் வேஸ்டாகுங்குறது என்னோட கருத்து.

    ReplyDelete
  25. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..

    ReplyDelete
  26. Jey said...

    சார், எல்லோருக்கும் விளக்கம் சொல்றேன்,விளிப்புனர்வு ஏற்படுத்துறேன் , அப்படி சொல்லிகிட்டே, பதிவுலகத்தில், கிளையண்ட் தேடுற உள்குத்து ஏதும் இருக்கா??.
    ஏன்னா, ”சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்”,”ஆமாம் வழக்கு போடுங்கள்’ அப்படினு நீங்க பின்னூட்டங்கள்ல சொன்னதன் பின்னனிடில் இருக்கிற விசயங்கள் ஏதும் வழக்கு போட்டா தீர்வு கிடைக்குற மாதிரி தெரியல.
    வெட்டியா வக்கீல் ஃபீசும், நேரமும் தான் வேஸ்டாகுங்குறது என்னோட கருத்து ///

    வாங்க!
    என் பதிவுகளின் நோக்கமே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. தேவைப்பட்டால் அவர்களே தங்கள் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக (யார் உதவியுமின்றி) நடவ்டிக்கை எடுக்க தேவையான தகவல்களை கொடுப்பது தான்.எனவே இதில் உள் குத்து எதுவுமில்லை. வழக்கு போட்டா தீர்வு கிடைக்காதுன்னு நீங்க நினைப்பது உங்கள் உரிமை

    ReplyDelete
  27. Dr.Rudhran said...

    thank you //

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  28. goma said...

    //எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் //

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  29. ///என் பதிவுகளின் நோக்கமே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. தேவைப்பட்டால் அவர்களே தங்கள் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக (யார் உதவியுமின்றி) நடவ்டிக்கை எடுக்க தேவையான தகவல்களை கொடுப்பது தான்.எனவே இதில் உள் குத்து எதுவுமில்லை.///

    விளக்கத்திற்கு நன்றி சார்.

    ReplyDelete
  30. LK said...

    good one sir ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  31. நல்ல பதிவு சார்! தொடருங்கள்..

    ReplyDelete
  32. பா.ராஜாராம் said...

    நல்ல பதிவு சார்! தொடருங்கள் ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  33. பதிவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் உள்ள பதிவு...

    ReplyDelete
  34. வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

    பதிவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் உள்ள பதிவு ////

    வாங்க சார்!. என் விஷ்யத்தில் வழிப்போக்கனாக இருக்காதீங்க. அடிக்கடி வாங்க, ஓட்டு போடுங்க. என்ன?

    ReplyDelete
  35. //ஏற்கனவே அங்கங்கு அவரவர்களே ஆப்புகளில்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதை உங்கள் பதிவு மூலம் அறியச்செய்யுதல் மிக நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.//

    மிக்க நன்றி சென்ஷி அவர்களே

    ReplyDelete
  36. எவண்டா பிரபலம் said...

    //ஏற்கனவே அங்கங்கு அவரவர்களே ஆப்புகளில்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதை உங்கள் பதிவு மூலம் அறியச்செய்யுதல் மிக நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.//

    மிக்க நன்றி சென்ஷி அவர்களே ////

    வாருங்கள் நண்பரே.

    ReplyDelete
  37. கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும்//

    இது கொஞ்சம் புரியவில்லை. ஜீமெயிலில் எப்படி இதனைக் கண்டறிவது?

    ReplyDelete
  38. Anonymous said...

    கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும்//

    இது கொஞ்சம் புரியவில்லை. ஜீமெயிலில் எப்படி இதனைக் கண்டறிவது ///

    மெயிலை ஒபன் செய்யுங்கள்.
    நடுவில் ஒரு கட்டத்திற்குள் உங்களுக்கு வந்த மெயில் தெரியும்.
    அதின் டாப்பில் பேக் டு இன்பாக்ஸ், ஆர்சிவ் .... என பல இருக்கும். அந்த வரிக்கு கீழ் மெயிலின் சப்ஜெக்ட் இருக்கும். அதன் கீழ் ------- டு மி என இருக்கிறதா? அதற்கு அடுத்து ஊதா நிற்த்தில் SHOW THE DETAILS என இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்

    ReplyDelete
  39. கி.வீரமணி தனது பெயரை மீ.கி.வீரமணி என்று மாற்றி வைத்துக்கொண்ட போது, தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களும்,சில வார இதழ்களும் எண் கணிதப்படி,ஜோதிடரை ஆலோசித்து பெயர் மாற்றி இருக்கிறார் வீரமணி என்று எழுதிய போது ஏன் கி,வீரமணி அவதூறு,மான நஷ்ட வழக்கு தொடரவில்லை.

    அது உண்மையாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

    சட்டம் படித்த கி.வீரமணி ஐயாவுக்கு இது அவதூறு என்று தெரியாதா?
    இதை கருத்துச் சுதந்திரம் என்னும் நோக்கில் விட்டுவிட்டாரா?

    அவதூறு, கருத்து சுதந்திரம் இதன் இரண்டுக்கும் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் விளக்கமாக பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்!

    ஆதாரம் அல்லது தரவுகளை, பத்திரிக்கை செய்தியை அல்லது இணைய பக்க செய்தியை வைத்து எழுதுவது அவதூறா? அப்படியென்றால் பாதிக்கப்படுவது யார்? எழுதுபவரா அல்லது பத்திரிக்கை/இணையதளம் மற்றும் பத்திரிக்கை/இணையதளத்தில் எழுதுகிறவரா? விளக்கம் தந்தால் நல்லது!

    ஒரே அவதூறு செய்தி பத்து பத்திரிக்கையில் வந்தால் அவை அனைத்தும் பாதிக்கப்படுமா?

    ReplyDelete
  40. கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும்//

    இது கொஞ்சம் புரியவில்லை. ஜீமெயிலில் எப்படி இதனைக் கண்டறிவது ///

    மெயிலை ஒபன் செய்யுங்கள்.
    நடுவில் ஒரு கட்டத்திற்குள் உங்களுக்கு வந்த மெயில் தெரியும்.
    அதின் டாப்பில் பேக் டு இன்பாக்ஸ், ஆர்சிவ் .... என பல இருக்கும். அந்த வரிக்கு கீழ் மெயிலின் சப்ஜெக்ட் இருக்கும். அதன் கீழ் ------- டு மி என இருக்கிறதா? அதற்கு அடுத்து ஊதா நிற்த்தில் SHOW THE DETAILS என இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்//

    ஐபி முகவரியை எப்படிக் கண்டறிவது? இது யார் மெயில் அனுப்பினார் என்பதை மட்டும் தான் காட்டுறது. உங்கள் விளக்கம் போதாது.

    ReplyDelete
  41. http://aruljohn.com/info/howtofindipaddress/


    this may use to you

    ReplyDelete
  42. http://www.tothepc.com/archives/email-sender-ip-address-gmail-yahoo-live/

    இதுவும்!

    ReplyDelete
  43. Anonymous said...

    கூகுல் மெயிலாக இருந்தால், அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும்//

    இது கொஞ்சம் புரியவில்லை. ஜீமெயிலில் எப்படி இதனைக் கண்டறிவது ///

    மெயிலை ஒபன் செய்யுங்கள்.
    நடுவில் ஒரு கட்டத்திற்குள் உங்களுக்கு வந்த மெயில் தெரியும்.
    அதின் டாப்பில் பேக் டு இன்பாக்ஸ், ஆர்சிவ் .... என பல இருக்கும். அந்த வரிக்கு கீழ் மெயிலின் சப்ஜெக்ட் இருக்கும். அதன் கீழ் ------- டு மி என இருக்கிறதா? அதற்கு அடுத்து ஊதா நிற்த்தில் SHOW THE DETAILS என இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்//

    ஐபி முகவரியை எப்படிக் கண்டறிவது? இது யார் மெயில் அனுப்பினார் என்பதை மட்டும் தான் காட்டுறது. உங்கள் விளக்கம் போதாது. /////

    என் பதிவை சரியாக படிக்காமல் இப்படி கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? கிழே கொடுக்கப்பட்டுள்ளதை படியுங்கள். இது பதிவின் ஒரு பகுதிதான்

    "அதில் SHOW THE DETAILS என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எந்த ஐ.டியிலிருந்து, எந்த ஐ.டிக்கு எத்தனை மணிக்கு அனுப்பப்பட்டது என்ற விபரம் தெரியும். இப்பொழுது மெயிலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். ரிப்ளை என்ற ஆப்ஷனுக்கு அடுத்து முக்கோண வடிவில் ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அப்பொழுது பல ஆப்ஷன்கள் வரும். அதில் Show Original என இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மெயில் எந்த ஐ.பி யிலிருந்து வந்தது போன்ற எல்லா ஜாதகமும் தெரியும். இதை வைத்துதான் அனுப்பியவரை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிப்பார்கள்."

    ReplyDelete
  44. தூள்
    இனி இந்த சண்டியர்கள் சவுண்டு கட்டாயம் குறையும்.
    //இது போன்ற செய்திகளை அவர்கள் மறுக்காமலிருக்கும் காரணம் அவை உண்மையாக இருக்கலாம். கிளரினால் இன்னும் அசிங்கம் என இருக்கலாம். //
    இப்படித் தான் பலர் தெம்மா தேம்மாவென விழித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரவது ஒருவர் ஆரம்பித்தால் போதும் வரிசையாக எல்லாரும் மாட்டிவிடுவார்கள்.

    ReplyDelete
  45. நானும் சில சவுண்டான பதிவுகளை போட்டிருக்கேன் ஆனால் அதற்கு ஆதாரம் இருப்பதால் அவை அவதூறுயில்லை என நினைக்கிறேன். எதற்கு வம்புஎன்று நேரடியாக யாரையும் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    அதனால் சீக்ரெட்டாக ஆதாரத்துடன் சைபர் கிரைமுக்கு மட்டும் புகார் அளிக்க வழிமுறையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  46. //சீக்ரெட்டாக ஆதாரத்துடன் சைபர் கிரைமுக்கு மட்டும் புகார் அளிக்க வழிமுறையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். //


    ஏன் சீக்ரெட்,
    நீர் யாரென்று உலகறிந்து விடும் என்பதாலா!?

    ReplyDelete
  47. ஆனால் உண்மையில் ஸ்ரத்தை எடுத்து நல்ல நல்ல தகவல்களை பகிர்வதால் உங்களுக்கு ஒரு சபாஸ்

    ReplyDelete
  48. //ஏன் சீக்ரெட்,
    நீர் யாரென்று உலகறிந்து விடும் என்பதாலா!?//
    சீக்ரெட் என்பதற்கு யார் என்பதை மறைக்க அல்ல கோர்டு கேஸ் என்று அலைய முடியாததால் மட்டுமே மற்றபடி போலீஸ் இடம் தகவல் கொடுப்பதற்கு இல்லை.
    சார்/அண்ணா/வால் நீங்க ஏன் பயப்பிடுறீங்க

    ReplyDelete
  49. சார்/அண்ணா/வால் நீங்க ஏன் பயப்பிடுறீங்க?
    பூனையை இறக்கிவிடுங்க

    ReplyDelete
  50. //சார்/அண்ணா/வால் நீங்க ஏன் பயப்பிடுறீங்க //

    போலிபயலா இருந்தா அடிச்சுட்டு ஜெயிலுக்கு போகனுமேன்னு தான்!

    ReplyDelete
  51. //போலிபயலா இருந்தா அடிச்சுட்டு ஜெயிலுக்கு போகனுமேன்னு தான்//
    இது பொதுயிடத்தில் கலங்கம் விளைவிக்கும் வாசகமாக இதை எடுத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  52. ஐயா, முக்கியமாக ஒரு கேள்வி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் நாட்டுச் சட்டப்படி ஒன்றை எழுதிகிறார் என்றால் அதற்கு இந்தியச் சட்டம் பொருந்துமா?

    ReplyDelete
  53. velinattula iruntukitu methavithanamaaka peyaru vachchukittu chindumutturavunga nallavar pola natipathu sirippa varuthu sir

    ReplyDelete
  54. //, அப்படி சொல்லிகிட்டே, பதிவுலகத்தில், கிளையண்ட் தேடுற உள்குத்து ஏதும் இருக்கா??.//
    அன்பரே, என்னைப் பொறுத்தவரை இந்த வரிகள் இவரின் தகவல் பகிர்வின் ஆர்வத்தைக் குறைக்ககூடுமோ என அஞ்சுகிறேன்.

    ReplyDelete
  55. இங்கே நான் குறிப்பிட்டு எழுதியது வீண்போகவில்லையென நினைக்கிறேன். தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

    ReplyDelete
  56. //இது பொதுயிடத்தில் கலங்கம் விளைவிக்கும் வாசகமாக இதை எடுத்துக் கொள்ளலாமா?//

    பொதுவிடம் என்பதால் திருடனுக்கு முத்தம் கொடுக்க முடியுமா!?

    ReplyDelete
  57. இங்க இண்டர்னெட் பிராபளம். சரியா பேஜ் ஓபென் ஆகல். சரியானதும் பின்னூட்டத்திற்கு பதில் தருகிறேன்

    ReplyDelete
  58. திரு.திரவிய நடராசன்,

    //குஷ்பு வழக்கில் உச்ச நீதிமன்றமே கூறிவிட்ட பொழுது புவனேஷ்வரி வழக்கு கேள்விக்குறியே!//

    குஷ்பூ, புவனேஸ்வரி, ரஞ்சிதா விவகாரங்களில் கொஞ்சம் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

    திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றி குஷ்பூ தெரிவித்த கருத்து, தமிழர்கள் பண்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது என்று மானாவாரியாக பல மாவட்டங்களில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அது அத்தனையையும் ஒரே வழக்காகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் வரைக்கும் போனதில் நீதிபதிகள் தெரிவித்த கருத்து இது.

    "திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புவனேஸ்வரி மீது விபச்சாரம் செய்ததாக வழக்கு இல்லை. மேலே சொன்ன மாதிரி ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரிய குற்றம் இல்லை. செய்திகளைக் கவனித்துப் படித்திருந்தீர்களேயானால், வழக்கே அவர் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாகத் தான்! அந்த மாதிரி வழக்குகளில் எல்லாம், அதிக விசாரணை இல்லாமலேயே அபராதம் அல்லது ஜாமீன் என்று முடிந்துவிடுவது, என்ன காரணத்திற்காக புவனேஸ்வரிக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப் பட வேண்டும் என்ற வாதங்களை செய்திகளைப் படித்தபோதே புரிந்து போனது.

    அதே மாதிரி நித்தியானந்தா ரஞ்சிதா விவகாரந்த்தில் கூட என்ன குற்றச்சாட்டை வைத்து வழக்குத் தொடர முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து ஊதி ஊதி எந்த அளவுக்குப் பூதாகாரமாக ஆக்கின என்பதும், அதன் பின்னால் இருந்த அரசியலை மறைத்து விட்டன என்பதும் தனிக் கதை.

    இங்கு சட்டங்களை விட வேறு விஷயங்கள் திறமையானவை, வலிமையானவை.

    ReplyDelete
  59. அன்பின் திரவிய நடராஜன்

    தகவல் பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete