Saturday, July 10, 2010

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - ஒரு வழக்கு.













கருப்பன் என்பவர் படித்த இளஞர். இவ்ர் திருச்சியை சார்ந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய பொழுது போக்கு, தமிழ் வலை பக்கத்தை படிப்பது, அதற்கு பின்னூட்டம் இடுவது. சொந்தமாகவும் தனக்கென்று ஒரு வலைப்பக்கத்தையும் வைத்து உள்ளார். அதன் பெயர் "வேதாளம்". இதில் சில சமயங்களில் நல்ல விஷயங்களை பதிவாகவும் வெளியிடுவார். அதோடு நின்று விடமாட்டார். மற்றவர்கள் வலைப்பக்கத்திற்கு சென்று ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் அந்த பதிவரைப்பற்றி பின்னூட்டமிடுவார். தன் வலைப்பக்கத்திலும் மற்றவர்களைப்பற்றி அவதூறாக எழுதுவார். இவரிடம் இருக்கும் குறைபாடு என்னவென்றால், எது கருத்து சுதந்திரம், எது அவதூறு என்பதை வரையறை படுத்த தெரியாதது தான். அல்லது தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது இவ்வாறு அவதூறாக மற்றவர்களை பற்றி எழுதினால் யாராலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற சட்டம் பற்றிய இவரது தப்பு கணக்காகவும் இருக்கலாம. இவருடைய திருவிளையாடலை  பற்றி பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை,

 1. வலைப்பக்கம் ( பிளாக் /  வெப்சைட்) : இது ஒரு சோஷியல் நெட்வொர்க் பிளேஸ் ஆகும். அதாவது யார் வேண்டுமானாலும் பங்கெடுக்க கூடிய ஒரு பொதுஇடமாகும்.                                                                                                                                      
 பதிவர்கள் / வாசகர்கள்:  இதில் பங்கேற்பவர்கள் இரண்டு விதமானவர்கள். ஒன்று தங்களுக்கு என்று சொந்தமாக வலை பக்கம் வைத்திருப்பவர்கள். அதில் இவர்கள் தங்கள் படைப்புகளை மற்றவர்களின் பார்வைக்காக வெளியிடுவர். அத்துடன் பிற பதிவர்களின் வலை பக்கத்திற்கும் சென்று பதிவுகளை படிப்பார்கள், தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாக போடுவார்கள். அடுத்தது, சொந்த வலை பக்கம் இல்லாதவர்கள். இவர்கள் மற்றவர்களின் வ்லைப்பக்கத்திற்கு சென்று பதிவுகளை பார்ப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள்.

உரிமையும் பொறுப்பும் ( Rights & Accountability ) :  பதிவர்களை எடுத்து கொண்டால் அவர்களுக்கு தங்கள் கருத்தை பதிவாக வெளியிட உரிமை உண்டு. அதே சமயம் அது மற்றவர்களின் மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. அதைப்போலவே மற்றவர்களின் கவுரவத்தை பாதிக்கும் ஆதாரமற்ற கருத்தாகவும் அவதூறு செய்தியாகவும் இருக்கக் கூடாது. இதைப்போலவே மற்றவர்களின் பதிவு களுக்கு பின்னூட்டம் இடும் போதும்  இது பொருந்தும்.

உதாரணங்கள்:

1. பிரதமர் மன்மோகன் சிங்கை விட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நன்றாக ஆட்சி செய்தார்.----- இது கருத்து சுதந்திரம். 

2.அமைச்சர் ஆரோக்கிய சாமி நூறு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் -----இது ஆதாரமற்ற குற்றச்ச்சாட்டாக இருக்குமானால் அவதூறு செய்தியாகும். தண்டனைக்குறிய குற்றமாகும்.

3. நடிகை சுலோச்சனி நடிப்பு சகிக்க முடியவில்லை----- இது கருத்து சுதந்திரம்.

4. நடிகை சுலோச்சனி கார் டிரைவருடன் கள்ளத்தொடர்பு ---- ஆதாரமற்ற கருத்தாக இருக்குமானால் அவதூறு வழக்குக்கு உள்ளாக வேண்டி யிருக்கும்.


5. ஆயிரக்கணக்கான் தமிழர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கும் பொழுது, நானூறு கோடி ரூபாய் செலவு செய்தது மக்கள் பணத்தை தன் சொந்த ஆசைக்காக செந்தமிழ் மாநாடு நடத்தியது பைத்தியக்கார தனம் என நீங்கள் கூறினால்  --------  கருத்து சுதந்திரம்.

6. அதில் 200 கோடி ஊழல் நடந்துள்ளது என கூறுவது ------ ஆதாரமில்லாமல் நீங்கள் கூறினால்  அவதூறு வழக்குக்கை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதும், அதன் வரையறை என்ன என்பதும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்றால்,  " ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது அது  மற்றவர்களை (சட்டப்படியான உரிமை) பாதிக்காத வரையில் தான்".

மீதி அடுத்த பதிவில்------ தொடரும்

40 comments:

  1. தெளிவான உதாரணங்கள்... மிக்க நன்றி அய்யா..

    ReplyDelete
  2. very well written. keep going. plan this as a book too.

    ReplyDelete
  3. சென்ஷி said...

    தெளிவான உதாரணங்கள்... மிக்க நன்றி அய்யா.//


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. sandhya said...

    super post sir all the best
    July 10, 2010 1:52 PM ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. Dr.Rudhran said...

    very well written. keep going. plan this as a book too.
    July 10, 2010 1:58 PM ///

    மிக்க நன்றி

    ReplyDelete
  6. எளிய விளக்கங்களுக்கு நன்றி..மிகவும் பயனளிக்கும்

    ReplyDelete
  7. தெளிவா சொல்லியிருக்கீங்க‌.... தொட‌ருங்க‌ள்.

    ReplyDelete
  8. விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  9. the illustrations are striking....good post!

    ReplyDelete
  10. ராகின் said...

    எளிய விளக்கங்களுக்கு நன்றி..மிகவும் பயனளிக்கும்
    July 10, 2010 2:27 PM //

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. நாடோடி said...

    தெளிவா சொல்லியிருக்கீங்க‌.... தொட‌ருங்க‌ள்.
    July 10, 2010 2:28 PM ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. கண்ணகி said...

    விளக்கங்களுக்கு நன்றி...
    July 10, 2010 2:31 PM ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. Prabhu Rajadurai said...

    the illustrations are striking....good post!
    July 10, 2010 2:47 PM ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. அய்யா
    என் பெயர் ரமேஷ் கார்த்திகேயன் .
    ஒரு பேருந்தினில் வழி : XXXXX என்று போட்டு உள்ளனர் .அந்த பேருந்தில் ஏறி நடத்துனரிடம் XXXX -க்கு 1 டிக்கெட் கேட்டால். ஊருக்கு புதுசா பஸ் அ இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கியா என கிண்டல் செய்கிறார். நான் என்ன செய்யலாம்

    http://rameshkarthikeyan.blogspot.com/2010/06/4-06-2010-cmbt.html

    ReplyDelete
  15. // " ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது அது மற்றவர்களை (சட்டப்படியான உரிமை) பாதிக்காத வரையில் தான்".//

    நன்றாக சொன்னீர்கள்..

    ReplyDelete
  16. ஒவ்வொருவரும் தான் அறிந்ததையும்,உண்மையையும் பேசினால்,எழுதினால்(யாதொன்றும் தீமையிலாத சொலல்) வரவேற்போம்.அதனால் அவருக்கும் அவர்தம் எழுத்துக்களைப் படிப்போருக்கும் நன்மை

    ReplyDelete
  17. அமைதிச்சாரல் said...

    // " ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பது அது மற்றவர்களை (சட்டப்படியான உரிமை) பாதிக்காத வரையில் தான்".//

    நன்றாக சொன்னீர்கள்..
    July 10, 2010 4:26 PM ////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. றையோகி said...

    ஒவ்வொருவரும் தான் அறிந்ததையும்,உண்மையையும் பேசினால்,எழுதினால்(யாதொன்றும் தீமையிலாத சொலல்) வரவேற்போம்.அதனால் அவருக்கும் அவர்தம் எழுத்துக்களைப் படிப்போருக்கும் நன்மை
    July 10, 2010 5:21 PM ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. ரமேஷ் கார்த்திகேயன் said...

    அய்யா
    என் பெயர் ரமேஷ் கார்த்திகேயன் .
    ஒரு பேருந்தினில் வழி : XXXXX என்று போட்டு உள்ளனர் .அந்த பேருந்தில் ஏறி நடத்துனரிடம் XXXX -க்கு 1 டிக்கெட் கேட்டால். ஊருக்கு புதுசா பஸ் அ இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கியா என கிண்டல் செய்கிறார். நான் என்ன செய்யலாம்

    http://rameshkarthikeyan.blogspot.com/2010/06/4-06-2010-cmbt.html
    July 10, 2010 2:58 PM ////

    தங்கள் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். அதில் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. அதாவது தாதா குப்பம் வழியாக பஸ் போகிறதா? அல்லது வேறு வழியாக போகிறதா? வேறு வழியாக என்றால் அது தாதா குப்பத்தின் இன்னொரு ஒரு சாலையா? அதன் பின் எப்படி ஆப்பு வைப்பது என்று விலாவாரியாக சொல்ல்கிறேன்

    ReplyDelete
  20. தெளிவான விளக்கங்கள், உதாரணங்கள், தொடருங்கள்

    டிஸ்க்ளைமர் வாக்கியம் குறித்தும் எழுதுங்கள்.

    ஆண்கள், பெண்கள் பிறப்பு உறுப்புகள், காமம் பற்றி எழுத எந்த வித வரைமுறை உள்ளது,

    ReplyDelete
  21. பாயிண்ட்ஸ் அருமை. தெளிவான விளக்கங்கள் தொடருங்கள் திரவியம் அய்யா.

    ReplyDelete
  22. விளக்கங்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  23. ராம்ஜி_யாஹூ said...

    தெளிவான விளக்கங்கள், உதாரணங்கள், தொடருங்கள்

    டிஸ்க்ளைமர் வாக்கியம் குறித்தும் எழுதுங்கள்///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  24. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    பாயிண்ட்ஸ் அருமை. தெளிவான விளக்கங்கள் தொடருங்கள் திரவியம் அய்யா.
    July 10, 2010 7:33 PM ///

    மிக்க நன்றி

    ReplyDelete
  25. அக்பர் said...

    விளக்கங்களுக்கு நன்றி சார்.
    July 10, 2010 7:36 PM ////

    மிக்க நன்றி

    ReplyDelete
  26. அன்பின் திரவிய நடராஜன்

    தகவல்கள் அருமை - பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  27. cheena (சீனா) said...

    அன்பின் திரவிய நடராஜன்

    தகவல்கள் அருமை - பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா
    July 10, 2010 9:01 PM //

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  28. ஆனந்த விகடன் மூலம் உங்கள் முகவரி கிடைத்து வந்தேன். மிக சிறப்பான பணி செய்து வருகிறீர்கள்.
    நன்றி.
    வலைப்பூ எழுதும் அனைவருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
    தாங்கள் வழக்கறிஞரா அல்லது அதில் ஆர்வம் உள்ளவரா?

    ReplyDelete
  29. பதிவுலக சண்டியர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறீர்கள்....வாழ்த்துகள்.

    கருத்து கந்தசாமியாய் இவர்கள் செய்யும் இம்சைகள் நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது, தனக்கென ஒரு அளவுகோல், அடுத்தவனென்றால் செருப்பால் அடிப்பேன் என்கிற ஆவேச நாடகம்.....இந்த கொடுமைகளை ஆறு வருடங்களாய் பார்த்து அலுத்துப் போய்விட்டது.

    இனியாவது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.....

    ReplyDelete
  30. அமைதி அப்பா said...

    ஆனந்த விகடன் மூலம் உங்கள் முகவரி கிடைத்து வந்தேன். மிக சிறப்பான பணி செய்து வருகிறீர்கள்.
    நன்றி ///

    மிக்க நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  31. டவுசர் பாண்டி... said...

    பதிவுலக சண்டியர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறீர்கள்....வாழ்த்துகள்
    இனியாவது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு /////

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  32. நல்ல தகவல்கள் ..இவற்றை thatstamil போன்ற தளங்கள் கடை பிடித்தால் comments என்கிற பெயரில் வக்கிரத்தை பதிவு செய்வோர் அடங்குவர் ,,

    ReplyDelete
  33. கிருஷ்குமார் said...

    நல்ல தகவல்கள் ..இவற்றை thatstamil போன்ற தளங்கள் கடை பிடித்தால் comments என்கிற பெயரில் வக்கிரத்தை பதிவு செய்வோர் அடங்குவர்///

    நாம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  34. எல்லாருமே புரிந்து கொள்ளும் வகையில இருக்கு ஐயா ..!!

    ReplyDelete
  35. தேவையானதும் கூட. தொடரவேண்டும்.

    ReplyDelete
  36. ஜெய்லானி said...

    எல்லாருமே புரிந்து கொள்ளும் வகையில இருக்கு ஐயா ..!!
    July 11, 2010 2:00 AM ///

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  37. ஜோதிஜி said...

    தேவையானதும் கூட. தொடரவேண்டும்.
    July 11, 2010 7:47 AM ////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  38. கருத்து சுதந்திரத்தை பற்றி தெரிந்து கொண்டேன்

    பயனுள்ளது தொடருங்கள்

    ReplyDelete