Tuesday, July 13, 2010

" செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும் "

பாவம் இந்த இளம் பதிவர் - இவர் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.இவருக்கு உதவுவது  என் கடமை.
***********************************************************************************
 http://rameshkarthikeyan.blogspot.com/
நான் என்ன செய்ய வேண்டும்    

இன்று (4-06-2010) காலையில் CMBT பஸ் ஸ்டாண்டில் தாதான்குப்பம் செல்ல நின்று கொண்டிருந்தேன்.பொதுவாக அங்கு(தாதான்குப்பம்) சொகுசு பேருந்துகள் நிற்காது அனால் இன்று C70 ct எனும் பேருந்தில் ரோல்லிங் டிச்ப்லையில்வழி தாதான்குப்பம் என இருந்தது. நான் நடத்துனரிடம் தாதான்குப்பதில் பேருந்து நிற்குமா என்று கேட்டேன்.அதுக்கு அவர் (ஊருக்கு) புதுசா என கேட்டார். இல்ல பஸ் ல தாதான்குப்பம் நு போட்டிருக்கே அதன் கேட்டேன் என்று சொன்னேன். அதற்கு அந்த மாண்புமிகு நடத்துனர் பஸ்-அ முன்ன பின்ன பாத்துருக்கியா பஸ்லாம் நிக்காது கீழ இறங்கு என்றார்.
நான் உடனே அப்போம் எதுக்கு தாதான்குப்பம் னு போடுறீங்க னு சொன்னேன்.அவர் பேருந்தை நிறுத்தி செருப்பு பிஞ்சிடும் செவிடு பிஞ்சுடும் என சொல்லிட்டு சென்று விட்டார்.
பேருந்து நிறுத்தத்தில் நின்ற எல்லாருக்கும் நான் வேடிக்கை பொருளாகிவிட்டேன்.

நுகர்வோர் நீது மன்றத்தை நான் எப்படி நாடுவது.
ஏன் பஸ் ல போட்டுருக்க ஸ்டாப்பிங்குல நிறுத்த மாட்டுகாங்க
MTC ல புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்.                                                         Time 8.10 to 15 at CMBT
BUS NO C70 ct   TN 01   N 8843
ரமேஷ்கார்த்திகேயன்

***********************************************************************************
நண்பர் ரமேஷ்கார்த்திகேயன் அவர்களே!  தாங்கள் என் பதிவில் போட்டிருந்த பின்னூட்டத்தை பார்த்துவிட்டு, உங்கள் வலைப்பக்கம் சென்று பதிவை படித்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களை போன்றவர்களுக்கு உதவு வதற்காவே நான் இந்த வலைப்பக்கத்தை  நடத்தி வருகிறேன். 

பொதுவாக எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அதற்கான ஆதாரம் தேவை. இந்த விஷயத்தில், இந்த சம்பவம் நடந்தது என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இல்லை. அதற்காக இதை விட்டு விட முடியாது. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட தேவையான ஆதாரத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்க வேண்டும். அது எப்படி என்கிறீர்களா?. சொல்கிறேன்.

 முதலில் ஒரு புகார் கடிதத்தை அதன் நிர்வாக இயக்குனருக்கு அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்புங்கள். அதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நீங்கள் அனுப்ப வேண்டிய புகார் கடித்தத்தின் டிராப்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் உங்கள் முகவரியை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். கீழே கையொப்பத்தையும் தேதியையும் போடுங்கள். அதன் பின் அதற்கு ஒரு ஸெராக்ஸ் காப்பி ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்.

***********************************************************************************
அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபால்

அனுப்புநர்
 ரமேஷ்கார்த்திகேயன்
*****************************
*****************************
*****************************
சென்னை - 600 *** ( பின் கோடு)

பெறுநர்
நிர்வாக இயக்குநர்,
 சென்னை மாநகர போக்குவரத்து கழகம்,
பல்லவன் ஹ்வுஸ்,
அண்ணா சாலை,
சென்னை - 600 002.

ஐயா,

பொருள்:   புகார்- C 70 CT வழித்தடம் - நடத்துனர் தொடர்பாக.

நான் 04-06-2010 அன்று காலையில் சுமார் 8 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தாதான்குப்பம் (பாடி) செல்ல  பேரூந்துக்காக காத்திருந்தேன். சுமார் 8-10 மணியளவில்  தாதான்குப்பம் வழியாக செல்லும் C70 CT (பதிவு எண்:TN01-N8843) பஸ் வந்தது. போர்டில் தாதான்குப்பம் வழி என போட்டிருந்தது. எனவே அதில் ஏறி, தாதான் குப்பம் செல்ல டிக்கட் கேட்டேன்."நீ என்ன ஊருக்கு புதுசா? அங்கே எல்லாம் பஸ் நிக்காது, கீழே இறங்கு என கூறினார். போர்டில் போட்டிருக்கே எனக்கூறியதற்கு, செருப்பு பிஞ்சிடும், செவிடு பிஞ்சிடும் என என்னிடம் தரக்குறைவாக் பேசி என்னை கீழே இறங்குமாறு கத்தினார். பல பயணிகள் மத்தியில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். வேறு வழியின்றி பேரூந்திலிருந்து இறங்கிவிட்டேன். எந்தெந்த வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் எந்தெந்த நிறுத்தங்களில் நிற்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கும் பொழுது, அந்த வழிகாட்டுதலின் படி பணிபுரிய வேண்டிய நடத்துனர் தன்னிச்சையாக செயல்படுவது தண்டிக்கப்படவேண்டியதாகும். அத்துடன் பயணிகளிடம் இது போன்று தரக்க்குறைவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே எனது இப்புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அது பற்றிய விபரத்தை எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
************************
( கையொப்பம்)


நாள்: **/ **/****

************************************************************************************
பதிவுத்தபாலில் புகார் அனுப்பப்படுவதால் அதன் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு விபரம் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் தபாலை பெற்று க்கொண்டதிலிருந்து 15 நாட்களுக்குள்ளாக தங்களுக்கு பதிலளிக்கா விட்டால் அவர்களுக்கு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நோட்டீஸ் அனுப்பவேண்டும். அதன் பின்பே வழக்கு தொடர முடியும்.

எனவே முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை மாநகர  போக்குவரத்து கழகத்திற்கு அனுப்புங்கள்.

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள்

பி.திரவிய நடராஜன்

75 comments:

 1. அருமையான தெளிவான பதிவு சார், பாமரனுக்கும் புரியுரமாதிரி எழுதியிருகீங்க சார்.

  ReplyDelete
 2. ஓட்டு போட்டுட்டேன்.

  ReplyDelete
 3. Jey said...

  அருமையான தெளிவான பதிவு சார், பாமரனுக்கும் புரியுரமாதிரி எழுதியிருகீங்க சார் ////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. இப்படி ஒரு சில நடவடிக்கைகள் இருந்தால்தான் நல்லது..

  உங்களது ஊக்கத்திற்கும் உதவிக்கும் மதிப்பளிக்கிறேன்..

  ReplyDelete
 5. உங்கள் சேவை தொடரனும் ஐயா.

  ReplyDelete
 6. உங்கள் சேவை தொடரட்டும்

  ReplyDelete
 7. உங்களின் உதவிக்கு நன்றி அய்யா

  ReplyDelete
 8. ரமேஷ் கார்த்திகேயன் said...

  உங்களின் உதவிக்கு நன்றி அய்யா ////

  ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடவும் அல்லது இ மெயில் அனுப்பவும். உங்கள் ஐ.டி யை கூகுள் டாக்கில் இணைத்துள்ளேன். நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 9. அஹமது இர்ஷாத் said...

  அருமை சார் ///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. நிகழ்காலத்தில்... said...

  இப்படி ஒரு சில நடவடிக்கைகள் இருந்தால்தான் நல்லது..

  உங்களது ஊக்கத்திற்கும் உதவிக்கும் மதிப்பளிக்கிறேன் ////

  மிக்க நன்றி

  ReplyDelete
 11. அதி பிரதாபன் said...

  உங்கள் சேவை தொடரனும் ஐயா ////

  மிக்க நன்றி

  ReplyDelete
 12. வரதராஜலு .பூ said...

  உங்கள் சேவை தொடரட்டும் ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 13. உங்களுடைய சேவை தொட‌ரட்டும் திரவியம் அய்யா.. இதுபோன்றவர்கள் தண்டனைக்கு உள்ளனவர்கள்.

  ReplyDelete
 14. உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்..

  ReplyDelete
 15. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  உங்களுடைய சேவை தொட‌ரட்டும் திரவியம் அய்யா.. இதுபோன்றவர்கள் தண்டனைக்கு உள்ளனவர்கள் ///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. சென்ஷி said...

  உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 17. உங்கள் சேவை தொடரடடும் சார். நல்ல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருவதற்கு நன்றி.

  ReplyDelete
 18. தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ள்... உங்க‌ள் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ட்டும்..

  ReplyDelete
 19. நாம் எல்லரும் இதனை ஆதரிக்க வேண்டும்.

  ReplyDelete
 20. அருமை, நன்றிகள்.

  நடத்துனர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் பேசினால் அதுவே போதுமான தண்டனை என நினைக்கிறேன். அதை விடுத்து சம்பள குறைப்பு, தற்காலிக பனி நீக்கம் என்று செய்தால் அவர் செய்த தவறுக்கு அவர் மனைவி, மக்கள் வலியை அனுபவிப்பர்.
  உங்களின் செவிட்டின் மீது இருந்த அவர் கோபம் அவர் குழந்தைகளின் செவிட்டை நோக்கி பாய்ந்து விடும்.

  உங்களின் (ரமேஷ் , திரவிய நடராசன்) இந்த நடவடிக்கைகள் அந்த நடத்துனருக்கும், மற்ற நடத்துனர்களுக்கும் ஒரு சிறிய பாடமாக இருக்கட்டும்.

  ReplyDelete
 21. அக்பர் said...

  உங்கள் சேவை தொடரடடும் சார். நல்ல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருவதற்கு நன்றி ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 22. நாடோடி said...

  தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ள்... உங்க‌ள் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ட்டும் ////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. கக்கு - மாணிக்கம் said...

  நாம் எல்லரும் இதனை ஆதரிக்க வேண்டும்.////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 24. ராம்ஜி_யாஹூ said...

  அருமை, நன்றிகள் ////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 25. பயணிகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இது போன்ற
  நடத்துனர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்

  ReplyDelete
 26. VISA said...

  Good one sir. ///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 27. chinnasamy said...

  பயணிகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இது போன்ற
  நடத்துனர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் //

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 28. இந்த மாதிரி நிறைய எழுதுங்க சார் ..

  ReplyDelete
 29. ♥ RomeO ♥ said...

  இந்த மாதிரி நிறைய எழுதுங் ////


  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 30. தக்குடுபாண்டி said...

  good service, congrats sir!
  July 13, 2010 5:07 PM ///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 31. நல்ல முயற்சி....

  பகிர்விற்கு நன்றி....

  ஆனால் ஆதாரமில்லாத சம்பவத்தை வெறும் பதிவுதபாலில் பதிவு செய்வதால் நியாயம் கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது.

  அந்த கடிதத்திற்கு பதில் “ தங்களின் புகாருக்கு எந்தவிதமான ஆதாரமோ, சாட்சிகளோ நீங்கள் சமர்ப்பிக்காத காரணத்தால் எங்களால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஆதாரம்/சாட்சிகளோடு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கலாம்”

  என்ற ரீதியில்தான் பதில் இருக்கும்.

  ReplyDelete
 32. கண்ணா.. said...

  நல்ல முயற்சி....

  பகிர்விற்கு நன்றி....

  ஆனால் ஆதாரமில்லாத சம்பவத்தை வெறும் பதிவுதபாலில் பதிவு செய்வதால் நியாயம் கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது.

  அந்த கடிதத்திற்கு பதில் “ தங்களின் புகாருக்கு எந்தவிதமான ஆதாரமோ, சாட்சிகளோ நீங்கள் சமர்ப்பிக்காத காரணத்தால் எங்களால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஆதாரம்/சாட்சிகளோடு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கலாம்”

  என்ற ரீதியில்தான் பதில் இருக்கும் ////

  நண்பரே! வருகைக்கு நன்றி. நான் பழம் தின்று கொட்டையை போட்டவன். கிட்டத்தட்ட 1975 முதல் கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக இதில் அனுபவம் பெற்ரு வருகிறேன். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் ஊகித்தே இந்த வழியை எடுத்துள்ளேன். தற்பொழுது விபரமாக சொல்ல இயலாது. வழக்குக்கு தேவையான ஆதாரத்தை என்னால் உருவாக்க முடியும். அதுவும் அவர்கள் வாயாலேயே. பார்க்கலாம்

  ReplyDelete
 33. LK said...

  good one
  July 13, 2010 5:30 PM ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 34. மிகவும் பயனுள்ள ஒரு சேவை. நன்றிகள். தொடரட்டும்.

  ReplyDelete
 35. நான் கண்ட நிஜ அன்னியன் நீங்கள்!
  வாழ்க உங்கள் சேவை ஐயா!

  ReplyDelete
 36. ஐயா, நான் சமீபத்தில் ஸ்டேட் பேங்க் இல் அக்கௌன்ட் ஓபன் செய்ய சென்னை எம்.எம்.டி.எ கிளையில் அணுகும் போது அவர்கள் நீ போய் வெரூ கிளையில் அணுகும் படி கூறினார். நானும் எம்.எம்.டி.எ. வில் தான் இருக்கிறான்.இதற்கு எதாவது வழி உண்டா தயவு செய்து பதில் அளியுங்கள்.

  http://www.linelogesh.blogspot.com

  ReplyDelete
 37. நெடுநாள் உங்கள் சேவை தொடரட்டும் ஐயா...

  ReplyDelete
 38. இதை போல் பரந்த மனதுடனும் சமுதாய அக்கறையுடன் அனைவரும் சயல்படவண்டும்

  ReplyDelete
 39. Anonymous said...

  மிகவும் பயனுள்ள ஒரு சேவை. நன்றிகள். தொடரட்டும்.///

  வாருங்கள் நண்பரே! ஏன் இந்த முகமூடி? அனானியாக வர இது என்ன ஆபாச படம் போடும் திரையரங்கா? அங்கு போகும் போது கூட இப்ப யாரும் முகத்தை மூடிக்கொள்வது இல்லை -- சும்மா ஒரு ஜோக்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 40. Premkumar said...

  நான் கண்ட நிஜ அன்னியன் நீங்கள்!
  வாழ்க உங்கள் சேவை ஐயா ////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 41. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  உங்களுடைய சேவை தொட‌ரட்டும் ////
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 42. linelogesh said...

  ஐயா, நான் சமீபத்தில் ஸ்டேட் பேங்க் இல் அக்கௌன்ட் ஓபன் செய்ய சென்னை எம்.எம்.டி.எ கிளையில் அணுகும் போது அவர்கள் நீ போய் வெரூ கிளையில் அணுகும் படி கூறினார். நானும் எம்.எம்.டி.எ. வில் தான் இருக்கிறான்.இதற்கு எதாவது வழி உண்டா தயவு செய்து பதில் அளியுங்கள் ///

  இதற்கு நாளை உங்களுக்கு வழி சொல்லுகிறேன்.

  ReplyDelete
 43. ரோஸ்விக் said...

  நெடுநாள் உங்கள் சேவை தொடரட்டும் ஐயா..///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 44. magesh said...

  இதை போல் பரந்த மனதுடனும் சமுதாய அக்கறையுடன் அனைவரும் சயல்படவண்டும் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 45. அன்பின் திரவிய நடராஜன் அய்யா,
  உங்களின் இந்த சமுதாயப்பணி தொடர ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன். நடத்துனர்கள் குறிப்பாக சென்னை மாநகர பேருந்துகளின் நடத்துனர்களில் பலர் இத்தகைய அநாகரிகமான வார்த்தைகளை சர்வ சாதரணமாக பயன்படுத்துகின்றனர். எனவே சட்ட நடவடிக்கை மூலம் அவர்களுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். (சில நல்ல நடத்துனர்களும் உண்டு. )

  ReplyDelete
 46. சார் இதேமாறி பஸ் கன்டக்டர் பன்ற அடாவடித் தனத்தை பற்றி செங்கோல் என்பவர் தனது ப்ளாக்கில் புலம்பியுள்ளார்.அது அனைத்தும் அவர் பயணம் செய்தபோது மற்ற பயணிக்கு நேர்ந்த கொடுமையாக எழுதி,இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் பதிவர்களே?என்று வினா எழுப்பியுள்ளார்.அவருக்கு/அவர் கேள்விகளுக்கு பதிவுலகிலேயே தங்களால் தான் பதில் தரமுடியும்.அவர் ப்ளாக் முகவரி
  http://sengool.blogspot.com
  பதிவின் பெயர்
  அரசு பேருந்து நடத்துனர்களின் அடாவடித்தனங்கள்

  ReplyDelete
 47. Thank you for your service....

  ReplyDelete
 48. இது போல் இன்னும் பலர் பிரச்சனைகளை தீர்த்து வையுங்க தல!

  மிக்க நன்றி!
  சுயமரியாதையின் மேல் நம்பிக்கை பிறக்க வைப்பதற்கு!

  ReplyDelete
 49. பி.ஏ.ஷேக் தாவூத் said...

  அன்பின் திரவிய நடராஜன் அய்யா,
  உங்களின் இந்த சமுதாயப்பணி தொடர ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன். நடத்துனர்கள் குறிப்பாக சென்னை மாநகர பேருந்துகளின் நடத்துனர்களில் பலர் இத்தகைய அநாகரிகமான வார்த்தைகளை சர்வ சாதரணமாக பயன்படுத்துகின்றனர். எனவே சட்ட நடவடிக்கை மூலம் அவர்களுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். (சில நல்ல நடத்துனர்களும் உண்டு. ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 50. ஆதிசைவர் said...

  சார் இதேமாறி பஸ் கன்டக்டர் பன்ற அடாவடித் தனத்தை பற்றி செங்கோல் என்பவர் தனது ப்ளாக்கில் புலம்பியுள்ளார்.அது அனைத்தும் அவர் பயணம் செய்தபோது மற்ற பயணிக்கு நேர்ந்த கொடுமையாக எழுதி,இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் பதிவர்களே?என்று வினா எழுப்பியுள்ளார்.அவருக்கு/அவர் கேள்விகளுக்கு பதிவுலகிலேயே தங்களால் தான் பதில் தரமுடியும்.அவர் ப்ளாக் முகவரி
  http://sengool.blogspot.com
  பதிவின் பெயர்
  அரசு பேருந்து நடத்துனர்களின் அடாவடித்தனங்கள்///

  மிக்க நன்றி

  ReplyDelete
 51. Tamil Selvan said...

  Thank you for your service ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 52. வால்பையன் said...

  இது போல் இன்னும் பலர் பிரச்சனைகளை தீர்த்து வையுங்க தல!

  மிக்க நன்றி!
  சுயமரியாதையின் மேல் நம்பிக்கை பிறக்க வைப்பதற்கு ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 53. பிரியமுடன் பிரபு said...

  அருமையான பதிவு சார் //
  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 54. அன்புடன் அருணா said...

  ஆஹா!பூங்கொத்து!///

  வாங்க!

  ReplyDelete
 55. உங்கள் பதிவு பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
  நன்றி

  ReplyDelete
 56. சார் கலக்குறீங்க! யார் என்ன கூறினாலும் தொடர்ந்து உங்கள் சேவையை தொடருங்கள்.

  அவமானப்பட்டவனுக்கும் படுத்தப்பட்டவனுக்கும் எமாற்றப்பட்டவனுக்கும் தான் வலி தெரியும். கண்டிப்பாக உங்கள் இடுகைகளால் பலர் பயன் பெறுவார்கள்.

  ReplyDelete
 57. ராஜவம்சம் said...

  உங்கள் பதிவு பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
  நன்றி ////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 58. கிரி said...

  சார் கலக்குறீங்க! யார் என்ன கூறினாலும் தொடர்ந்து உங்கள் சேவையை தொடருங்கள்.

  அவமானப்பட்டவனுக்கும் படுத்தப்பட்டவனுக்கும் எமாற்றப்பட்டவனுக்கும் தான் வலி தெரியும். கண்டிப்பாக உங்கள் இடுகைகளால் பலர் பயன் பெறுவார்கள் ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 59. ஐயா வணக்கம் அனைத்து சட்டவல்லுனர்களும் எந்த புகாராக இருந்தாலும் அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்புங்கள் என்கீறீர்கள் அதை பெறுபவர் உள்ளே வெற்று காகிதம் தான் இருந்தது புகார்கடிதம் எதுவும் இல்லை என்று கூறினால் என்ன செய்வது? அஞ்சல்உறையினுள் இருப்பது புகார்கடிதம் தான் என்பதை எவ்வாறு நிரூபிப்பது? அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலில் பெறுனர் பெற்றுவிட்டார் என்பதை நிரூபிப்பதற்க்கு மேல் வேறு என்ன பயன்கள் இருக்கிறது? அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலின் சட்டரீதியான பயன்கள் தான் என்ன?

  ReplyDelete
 60. தங்களின் சேவை தொடரட்டும், இன்னும் இந்த மாதிரி வேதனையடையும் மக்களுக்கு நிவாரணம் பெற வழி சொல்லவேண்டும்.உங்கள் சேவைக்கு பாராட்டு.

  'செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும்' இந்த தலைப்பை பார்த்து பயந்து, நேற்று உங்கள் பிளாக்குக்கு வராமல் இருந்துவிட்டேன். அதற்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 61. தொடர்ச்சியாக சிறப்பான பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்

  நன்றிகள் தொடரட்டும் உங்கள் நல் எண்ணங்கள்

  ReplyDelete
 62. அருமை ஐயா. பாராட்டுகள்.

  ReplyDelete
 63. /// அவமானப்பட்டவனுக்கும் படுத்தப்பட்டவனுக்கும் எமாற்றப்பட்டவனுக்கும் தான் வலி தெரியும். கண்டிப்பாக உங்கள் இடுகைகளால் பலர் பயன் பெறுவார்கள் ///

  ReplyDelete
 64. ஜெகதிஸ்குமார், நாமக்கல் said...

  ஐயா வணக்கம் அனைத்து சட்டவல்லுனர்களும் எந்த புகாராக இருந்தாலும் அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்புங்கள் என்கீறீர்கள் அதை பெறுபவர் உள்ளே வெற்று காகிதம் தான் இருந்தது புகார்கடிதம் எதுவும் இல்லை என்று கூறினால் என்ன செய்வது? அஞ்சல்உறையினுள் இருப்பது புகார்கடிதம் தான் என்பதை எவ்வாறு நிரூபிப்பது? அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலில் பெறுனர் பெற்றுவிட்டார் என்பதை நிரூபிப்பதற்க்கு மேல் வேறு என்ன பயன்கள் இருக்கிறது? அத்தாட்ச்சியுடன் கூடிய பதிவு அஞ்சலின் சட்டரீதியான பயன்கள் தான் என்ன? ///

  எதையும் சந்தேகத்துடன் அல்லது எதிர்மறையாக நீங்கள் நினைத்தால் வாழ்க்கையில் எதையுமே செய்ய முடியாது.மற்றவர்கள் குதிரை ஏறினாலும் பொறுத்துக்கொள்வேன் என அடம் பிடிப்பவர்களுக்கு என்ன சொல்ல?

  ReplyDelete
 65. அமைதி அப்பா said...

  தங்களின் சேவை தொடரட்டும், இன்னும் இந்த மாதிரி வேதனையடையும் மக்களுக்கு நிவாரணம் பெற வழி சொல்லவேண்டும்.உங்கள் சேவைக்கு பாராட்டு.

  'செருப்பு பிஞ்சிடும் - செவிடு பிஞ்சுடும்' இந்த தலைப்பை பார்த்து பயந்து, நேற்று உங்கள் பிளாக்குக்கு வராமல் இருந்துவிட்டேன். அதற்கு வருந்துகிறேன் ///

  இப்படி தடாலடி தலைப்பு வைத்தால்தான் மக்கள் வருவார்கள் என்பதால்தான்! தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 66. ப்ரியமுடன் வசந்த் said...

  தொடர்ச்சியாக சிறப்பான பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்

  நன்றிகள் தொடரட்டும் உங்கள் நல் எண்ணங்கள்//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 67. V.Radhakrishnan said...

  அருமை ஐயா. பாராட்டுகள் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 68. ரமேஷ் கார்த்திகேயன் said...

  /// அவமானப்பட்டவனுக்கும் படுத்தப்பட்டவனுக்கும் எமாற்றப்பட்டவனுக்கும் தான் வலி தெரியும். கண்டிப்பாக உங்கள் இடுகைகளால் பலர் பயன் பெறுவார்கள் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete