Wednesday, July 14, 2010

பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.

சரி இப்பொழுது நமது கதாநாயகன் திரு கருப்பன் அவர்களின் திருவிளையாட லை பார்ப்போம். இவர் தன் வலைப்பக்கத்தில் (வேதாளம்),  பதிவர் சுப்பனை பற்றி மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தை யும் பாதித்துள்ளது.

திரு சுப்பன் சென்னையை சார்ந்தவர். அவர் தன்னைப்பற்றி அவதூறாக எழுதிய பதிவை, பிளாக்கிலிருந்து ஒரு காப்பி எடுத்து கொள்கிறார். தன்னைப்பற்றி  அவதூறாக பதிவு போட்ட கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு புகார் மனுவை தயார் செய்து அத்துடன் பதிவின் காப்பியையும் இணைத்து சென்னையில் இருக்கும்  சைபர் கிரைம் அலுவலகத்தில் பதிவு செய்கிறார்.

புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ். அதன் பின் தன்க்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர் யார்? அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும்.

Sec. 500.IPC
Punishment for defamation.
500. Punishment for defamation.--Whoever defames another shall be
punished with simple imprisonment for a term which may extend to two
years, or with fine, or with both. 

மேலே குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் அவரின் குற்றச்செயல் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவற்றின் அடிப்படையில் அவருக்கு  கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கும்

1. இரண்டு ஆண்டு வரையிலான சிறை தண்டனை
     அல்லது
2. அபராதம் / நஷ்ட ஈடு
   அல்லது
3. இவை இரண்டும் சேர்த்து.
 

ஊக்குவிக்க பின்னூட்டம் போடுங்கள்.
பலரையும் சென்றடைய ஓட்டு போடுங்கள்

மீண்டும் வேறு தலைப்பில் தங்களை சந்திக்கிறேன்.

48 comments:

 1. :)))

  அடுத்த வழக்கு முறைமை பற்றிய விவரங்களுக்காக காத்திருப்போம்.

  ReplyDelete
 2. சென்ஷி said...

  :)))

  அடுத்த வழக்கு முறைமை பற்றிய விவரங்களுக்காக காத்திருப்போம் ////

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 3. நல்ல பதிவு,
  மகிழ்ச்சி.
  நன்றி.

  ReplyDelete
 4. அமைதி அப்பா said...

  நல்ல பதிவு,
  மகிழ்ச்சி.
  நன்றி.////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. அருமை நன்றிகள் பல.

  சக மனிதர்களை பற்றி தரக்குறைவாக வும் ஆபாசமாகவும் எழுதாமல் இருப்போம், குற்றத்தை தவிர்ப்போம்.

  இன்னும் கேள்விகள்.

  நான் பலமுறை திரைப்பட பாடல்களின் video kkalai youtube அல்லது வேறு தளத்தில் இருந்து எடுத்து என் வலை பதிவில் போடுகிறேன் . இதற்காக இந்த பாடலின் உரிமையாளர் என் மீது வழக்கு தொடர உரிமை உள்ளதா

  திரைப்பட பாடல்களின் பாடல் வரிகளை, கவிஞர்களின் எழுத்தாளர்களின் கவிதைகளை, சிறுகதைகளை என் வலை பதிவில் எழுத்து வடிவத்தில் (copying the lyrics, poems, short stories and pasting in my blog in text format) போடுகிறேன்,

  குமுதம், ரேபோர்ட்டர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளின் பக்கங்களை ஸ்கேன் செய்து, அல்லது கட்டண இனைய பக்கங்களை என் வலைபதிவில் இலவசாமாக அனைவரும் வாசிக்கும் படி வெளியிடுகிறேன் , இது குற்றமா.

  ReplyDelete
 6. புனைப்பெயரை திட்டுவதை குற்றமாக பதிவு செய்வார்களா!?
  அந்த புனைபெயர் இவருடயது தான் என்று சொல்ல சாட்சி இருக்கும் போது!

  ReplyDelete
 7. ராம்ஜி_யாஹூ said...

  அருமை நன்றிகள் பல.

  சக மனிதர்களை பற்றி தரக்குறைவாக வும் ஆபாசமாகவும் எழுதாமல் இருப்போம், குற்றத்தை தவிர்ப்போம்.///

  மிக்க நன்றி

  ReplyDelete
 8. Dr.Rudhran said...

  thank you once again ////

  மீண்டும் தங்களுக்கு நன்றி

  ReplyDelete
 9. வால்பையன் said...

  புனைப்பெயரை திட்டுவதை குற்றமாக பதிவு செய்வார்களா!?
  அந்த புனைபெயர் இவருடயது தான் என்று சொல்ல சாட்சி இருக்கும் போது!///

  நிச்சயமாக. உதாரணத்திற்கு கவிஞர் வாலியின் இயற்பெயர் வேறு. ஆனால் அவர்தான் வாலி என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் வாலி என்று குறிப்பிட்டு ஒருவர் சொன்னாலோ அல்லது எழுதினாலோ அது அவரையே குறிக்கும். எனவே நிச்சயமாக அவரால் நடவடிக்கை எடுக்க முடியும்

  ReplyDelete
 10. இதைப்படித்த பின் கண்டிப்பக மாற்றம் இருக்கும் ..வலையுலகில்.

  நன்றி..தகவலுக்கு.

  ReplyDelete
 11. புன்னகை தேசம். said...

  இதைப்படித்த பின் கண்டிப்பக மாற்றம் இருக்கும் ..வலையுலகில்.

  நன்றி..தகவலுக்கு ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 12. த‌க‌வ‌ல்க‌ளுக்கு ந‌ன்றி சார்...

  ReplyDelete
 13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  thanks for sharing this details ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 14. நாடோடி said...

  த‌க‌வ‌ல்க‌ளுக்கு ந‌ன்றி சார்..////

  மிக்க நன்றி

  ReplyDelete
 15. 'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

  மிக நன்று ////

  மிக்க நன்றி

  ReplyDelete
 16. ப‌கிர்த‌லுக்கு ந‌ன்றிக‌ள்

  ReplyDelete
 17. க‌ரிச‌ல்கார‌ன் said...

  ப‌கிர்த‌லுக்கு ந‌ன்றிக‌ள் ///

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. தொடருட்டும் சார் உங்கள் பகிர்வுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. ரோஸ்விக் said...

  தொடருட்டும் சார் உங்கள் பகிர்வுகள். வாழ்த்துகள்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 20. நல்ல தகவல்கள்!! தொடருங்கள்!!

  ReplyDelete
 21. சட்டத்தில் ஓட்டைகள் உண்டல்லவா?

  ReplyDelete
 22. அந்த காலத்தில் வாழ்ந்த [உதாரணத்திற்கு கருப்பன் என்ற] ஒருவரைப் பற்றி "கருப்பன் குஜிளிம்பா" மற்றும் "கருப்பன் விட்ட குசு" என்று பெயர் வைத்து ஆபாசமாக எழுதினால் பாதிக்கப் பட்டவர் சார்பாக இன்று இருப்பவர்களில் யார் புகார் அளிக்கலாம்?
  மற்றும் அந்த இடுகையை ஆதரித்தவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

  என்று கூறுங்கள் ஐயா ஒரு பதிவுலக சண்டியருக்கு ஆப்பு வைக்க வேண்டும்

  ReplyDelete
 23. ஹா ஹா ஸ்மார்ட்! ஆதாரத்துடன் கொண்டு வந்தால் அனைத்தும் இவ்விடம் செய்து தரப்படும்.

  ReplyDelete
 24. V.Radhakrishnan said...

  சட்டத்தில் ஓட்டைகள் உண்டல்லவா? ///

  நிச்சயமாக உண்டு. அதன் வழியாக தப்பித்து செல்லுபவர்கள் 1 அல்லது 2 சதவிகிதம் தான். அதில் நம் எதிராளி இருப்பார் என ஏன் யூகம் செய்ய வேண்டும்? நம்பிக்கையே வாந்க்கை. பாத் ரூமில் வழுக்கி விழுந்து செத்தவர்கள் சிலர். அதனால் நாமெல்லாம் பாத் ரூம் செல்லாமலா இருக்கிறோம்? நிற்க. இந்த ஓட்டையை பயன்படுத்தி தப்பிப்பவர்கள் நம்மை போனறவர்கள் அல்ல பெரிய வி.ஐ.பி கள் தான். நாம் எல்லாம் மிக மிக சாதாரணமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 25. smart said...

  அந்த காலத்தில் வாழ்ந்த [உதாரணத்திற்கு கருப்பன் என்ற] ஒருவரைப் பற்றி "கருப்பன் குஜிளிம்பா" மற்றும் "கருப்பன் விட்ட குசு" என்று பெயர் வைத்து ஆபாசமாக எழுதினால் பாதிக்கப் பட்டவர் சார்பாக இன்று இருப்பவர்களில் யார் புகார் அளிக்கலாம்?
  மற்றும் அந்த இடுகையை ஆதரித்தவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

  என்று கூறுங்கள் ஐயா ஒரு பதிவுலக சண்டியருக்கு ஆப்பு வைக்க வேண்டும் //

  வருகைக்கு நன்றி. தெளிவாக சொல்லுங்கள் பூனைக்கு மணி கட்டுங்கள்.

  ReplyDelete
 26. V.Radhakrishnan said...

  ஹா ஹா ஸ்மார்ட்! ஆதாரத்துடன் கொண்டு வந்தால் அனைத்தும் இவ்விடம் செய்து தரப்படும் ///

  நிச்சயமாக! இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?

  ReplyDelete
 27. //ஆதாரத்துடன் கொண்டு வந்தால் அனைத்தும் இவ்விடம் செய்து தரப்படும்//
  நன்றி
  பிரிண்ட் செய்யப் பட்ட [வன்]காப்பி என்னிடம் உள்ளது மற்றும் எழுதப்பட்ட [மென்] காப்பி இங்கே உள்ளது. இதற்கு எந்த எந்த சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரலாம். [காரணம் தெரியாத சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் விஷ வாயு வழக்குப் போல காரமில்லாமல் போகும் என அஞ்சுகிறேன்.]

  softcopy1:
  softcopy2:

  ReplyDelete
 28. உங்கள் சேவையை போற்றுகிறேன் ஐயா. ஸ்மார்ட் அவர்கள் எழுதிய விதம் சிரிப்பை வரவழைத்தது. சட்டம் நன்றாக செயல்பட்டால் எதற்கு இன்னமும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பதற்கான கேள்விதான் அது. இந்த சட்டங்கள் சாதாரணமானவர்களை காப்பது இல்லை என்பதுதான் பலருக்கும் மனதில் இருக்கும் ஒரு கேள்வி.

  ReplyDelete
 29. V.Radhakrishnan said...

  உங்கள் சேவையை போற்றுகிறேன் ஐயா. ஸ்மார்ட் அவர்கள் எழுதிய விதம் சிரிப்பை வரவழைத்தது. சட்டம் நன்றாக செயல்பட்டால் எதற்கு இன்னமும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பதற்கான கேள்விதான் அது. இந்த சட்டங்கள் சாதாரணமானவர்களை காப்பது இல்லை என்பதுதான் பலருக்கும் மனதில் இருக்கும் ஒரு கேள்வி ///

  பெரும் வி.ஐ.பி கள் சம்பந்தபடாத வழக்குகளில் நியாயம் கிடைக்கும்.அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இரண்டாவதாக குற்றவாளிகள் இருப்பதால் தான் சட்டமே தேவைப்படுகிறது.

  சட்டத்தின் மூலம் நியாயம் பெறுவது என்பது நாம் அணுவதை பொறுத்து தான். தானாக தபால்காரர் வீடு தேடி வந்து கடிதத்தை பட்டுவாடா செய்வது போல நீதிமன்றம் நம்மை அணுகி நீதி வழங்காது. நம்மிடம் உள்ள பிரச்சனையே நம்பிக்கை இல்லாமையே!

  ReplyDelete
 30. //நம்மிடம் உள்ள பிரச்சனையே நம்பிக்கை இல்லாமையே! //

  இந்த நிலையை உருவாக்கியவர்கள் யார் ஐயா?

  வழக்கு வாய்தா, வாய்தா வழக்கு. காவல் நிலையத்தின் வாசல் சென்றால், நீதிமன்றத்தின் வாசலில் ஏறி நின்றால் இழுக்கு என கருதுபவர்களும் உளர்.

  பெரிய வி ஐ பிகளினால் தான் பெரும் பிரச்சினையே. சின்ன சின்ன தகராறுகளை அவர் அவராகவே தீர்த்து கொள்கிறார்கள். நுகர்வோர் வழக்கு மன்றம் தீர்த்து வைத்த பிரச்சினைகள் எத்தனை?

  மேலும் மேலும் விபரமாக எழுதுங்கள், அறிந்து கொள்கிறோம். நன்றி ஐயா.

  ReplyDelete
 31. அந்த மென் பிரதி அழிக்கப் பட்டுள்ளதாக நினைக்கிறேன். அதனால் அதன் மென் பிரதியின் நகல் பிரதி இங்கே தருகிறேன்.
  softcopy2:

  ReplyDelete
 32. V.Radhakrishnan said...
  நுகர்வோர் வழக்கு மன்றம் தீர்த்து வைத்த பிரச்சினைகள் எத்தனை? ///

  உதாரணத்திற்கு என் பதிவை படியுங்கள்.

  http://lawforus.blogspot.com/2010/06/blog-post_26.html

  CONSUMER COURT WEBSITE ல் பார்த்தால் நிறைய தாங்கள் புரிந்து கொல்ளலாம்

  நன்றி

  ReplyDelete
 33. அருமையான பகிர்வு. முகம் தெரியாது என்ற தைரியத்தில் அவதூறுகளை வாரியிறைப்பதை யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது.

  ReplyDelete
 34. வில்சன் said...

  அருமையான பகிர்வு. முகம் தெரியாது என்ற தைரியத்தில் அவதூறுகளை வாரியிறைப்பதை யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. ஐயா தஙக்ள் சேவை தொடர வேண்டும்

  ReplyDelete
 36. Thangaraj said...

  ஐயா தஙக்ள் சேவை தொடர வேண்டும் ///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 37. தொடருட்டும் சார் உங்கள் பகிர்வுகள். வாழ்த்துகள்

  ReplyDelete
 38. Karthick Chidambaram said...

  தொடருட்டும் சார் உங்கள் பகிர்வுகள். வாழ்த்துகள்//


  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 39. சார் , இங்க திரவிய நடராஜன் அப்படின்னு ஒரு பதிவர் இருக்கார் , அவரு பாட்டுக்கு மக்களுக்கு விழிபுணர்ச்சி எபடுத்திகிட்டு இருக்கார் , அவரு மேல ஏதாவது கேஸ் போட்டு ஆயுள் தண்டன வாங்கி தர முடியுமா ???

  ReplyDelete
 40. சார் , இங்க திரவிய நடராஜன் அப்படின்னு ஒரு பதிவர் இருக்கார் , அவரு பாட்டுக்கு மக்களுக்கு விழிபுணர்ச்சி எபடுத்திகிட்டு இருக்கார் , அவரு மேல ஏதாவது கேஸ் போட்டு ஆயுள் தண்டன வாங்கி தர முடியுமா ??? ////

  முடியாதுங்க. அவரு எல்லாவனுக்கும் ஆப்பு வைக்கிற ஆளு. பெரிய பெரிய கில்லாடிகளுக்கே அல்வா கொடுக்கிறவரு.

  ReplyDelete
 41. திரவிய நடராஜன் said...

  சார் , இங்க திரவிய நடராஜன் அப்படின்னு ஒரு பதிவர் இருக்கார் , அவரு பாட்டுக்கு மக்களுக்கு விழிபுணர்ச்சி எபடுத்திகிட்டு இருக்கார் , அவரு மேல ஏதாவது கேஸ் போட்டு ஆயுள் தண்டன வாங்கி தர முடியுமா ??? ////

  முடியாதுங்க. அவரு எல்லாவனுக்கும் ஆப்பு வைக்கிற ஆளு. பெரிய பெரிய கில்லாடிகளுக்கே அல்வா கொடுக்கிறவரு.
  July 15, 2010 11:29 AM ////


  என்ன சார் இப்படி சொல்லிட்டிக , நான் உங்கள தான் மல போல நம்பிக்கிட்டு இருதேன் (சார் , முதல் கமன்ட் எல்லாம் தமாசு )

  ReplyDelete
 42. நானும் தமாசுக்குதான் சொன்னேன்.

  ReplyDelete
 43. //நானும் தமாசுக்குதான் சொன்னேன்//
  நானும் நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மிஸ்டர் எக்ஸ் னு ஒரு தொடரை ஆரம்பிச்சப்ப ஒரு எச்சரிக்கை அறிவிப்பு விட்டுருந்தீங்க அது தமாசுனு நினைச்சே ஆனால் நீங்க பெரிய கில்லாடி போங்க
  சரி, அந்த மிஸ்டர் எக்ஸ் நீங்க தானே?

  ReplyDelete
 44. //அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும். // சார். எத்தனையோ ஆயிரம் பேர் ப்ளாக் எழுதுகிறார்கள். இதெல்லாம் சாத்தியமா? போலீஸிடம் (சைபர் கிரைம்) போய் நின்றாலும், இருக்குற வேலை போதாதா? போய்யா வேலையைப் பார்த்துகிட்டு என்று சொல்ல மாட்டார்களா?

  ReplyDelete
 45. //இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தையும் பாதித்துள்ளது.// இது கருப்பன் என்ற ஒருவர் இருக்கிறார் அல்லது இருந்தார் என்றால் சரிதான். ஆனால் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத ஒருவர் மீது அந்தப்பதிவு எழுதப்பட்டால்? (அதாவது கடவுள் என்ற உருவகம் மீது)

  ReplyDelete