Sunday, July 18, 2010

கல்விக்கடன் - சில தகவல்கள்

நண்பர்களே!  கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதில் உள்ள சிரமத்திற்கு வழிகாட்டும் வகையில் ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன். அச்சமயம் கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. அவர் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த பதிவில் தகவல்களை தருகிறேன்.

****************************************************
Prabakaran  webprabu@gmail.com
tothiravianatarajan@gmail.com
dateSat, Jul 17, 2010 at 5:03 PM
subjectவாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!!
mailed-bygmail.com
 பெரும் மதிப்பிற்குரிய நடராஜன் அய்யா அவர்களுக்கு,

 வணக்கம்.  உங்களின் வலைத்தளத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டு உங்களின் இடுகைகளை தொடர்ந்து ஆர்வமுடன் படித்து  வருகிறேன்.   உங்களின்  இடுகைகள் அனைத்தும், அனைத்துதரப்பினர்க்கும் பயனுள்ளவையே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  மக்களின், மக்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத உரிமைகளை  பற்றிய விழிப்புணர்வை தங்களின் பங்களிப்பாகவும், ஆலோசனையாகவும் மிகவும் தெளிவாகவும், திறமையுடனும் நம்  சமுதாய மக்களுக்கு வழங்கிவருகிரீர்கள்.  உங்களின் சேவைக்கு என்றும் தலைவணங்குகிறோம்.  உங்களின் சேவையை தொடர்ந்து நம் சமுதாயத்திற்கு வழங்க என் நன்றிகள் அடங்கிய  வாழ்த்துக்கள் கோடி. 
ஒரு மாணவனாக உங்களுக்கு  ஒரு வேண்டுகோள்.  நான் கல்விக்கடனை பெற்றே படித்து வருகிறேன்.  மேலும் எங்கள் பகுதி கிராமப்புறம்.  நான் கல்விக்கடன் பெற எங்கள் ஊர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  வங்கிக்கு  கல்விக்கடனை விண்ணப்பிக்க சென்றபோது, வங்கியில்  நீங்கள் சார்ந்துள்ள பகுதி எங்கள் கடன்கொடுக்கும் எல்லைக்குள் இல்லை என்றனர். ஆனால் வங்கியின் மேலாளரை கைக்குள் போட்டுவைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின்(சன்மானம் இல்லாமல் தான்)  உதவியுடன்  அதே வங்கியில் என்கல்வி செலவில் எழுபது விழுக்காடு தொகையை  கடனாக பெற்றுவிட்டேன்.  மேலும் நான்வாங்கிய  எழுபது விழுக்காடு என்பது மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும்  போது  தொகை ஒரு பத்திலிருந்து பதினைந்து விழுக்காடு அதிகமான தொகையே.  அதனுடன் கிட்டத்தட்ட  ஒருவார  காலத்திற்குள்  கடன்தொகை கைக்கு வந்துவிட்டது.
என்னுடய கேள்வி என்னவென்றால், கல்விகடன் வாங்க சரியான  தகுதிகளிருந்தும்  இப்படி நாள்தோறும், மாதகணக்காகவும்  வங்கி அதிகாரிகளாலும், இடைதரகர்களாலும் அலைகழிக்கபட்டும்,  காலம்தாழ்த்தப்பட்டும், ஏமாற்றப்பட்டும் இருக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களில் இருக்கும் மாணவர்களின்,பெற்றோர்களின்  நிலைமையை வார்த்தைகளாய் விவரிக்க முடியாது.  இத்தனைக்கு பிறகும் கல்விபயில முடியாதவர்கள், பாதியில் கல்லூரி படிப்பை  நிறுத்தியவர்களின்  நிலைமையும் பார்க்கும்போது  மனம்கொள்ளா  நிலையில் ஆட்சியதிகாரத்தின் மேல்   வரும்  இனம்புரியாத கோபகங்களை அடக்கவேண்டியது அவசியமாகிறது.   அவர்களின்  ஏமாற்றங்களும், மன உளைச்சல்களும் மற்றும் இன்னபிற  கஷ்டங்களும் கடவுளுக்கே வெளிச்சம்.  இது இவ்வர்கத்தினற்கே கடவுள் கொடுத்த பரிசு போலும்! 

அப்படியே கல்விகடன் கொடுத்தாலும்  இதற்குமேல் கொடுக்க முடியாது, உங்களின் கல்விகட்டணமாக  அரசு நிர்ணயித்துள்ள நாற்பதாயிரத்தை மட்டுமே அல்லது  (உறுதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி)   இவ்வளவுதான் கொடுக்கமுடியும், உண்டி,உறையுள்,புத்தக மற்றும் இன்னபிற கட்டணங்கள் எல்லாம் தரமுடியாது, எங்களுக்கு வழங்க அதிகாரமில்லை என்று ஏதாவது சாக்குபோக்கு கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.  மேலும் இவற்றை கொடுப்பதற்கே வீடு,நிலம் மற்றும் இன்னபிற பத்திரங்கள் ஏதாவது  இருந்தால்  பெரும்பாலும் அவற்றை  வாங்கிவைத்து கொண்டே  கடனை   வழங்குகின்றனர். 
 இதற்கு தீர்வுதான்  என்ன?  பெரும்பாலும் இந்தமாதிரியான  நேரங்களில்   யாரை அல்லது எந்த உயரதிகாரியை தொடர்புகொண்டு  உதவிக்கு அழைப்பது? அல்லது  புகார்  தெரிவிப்பது?  இந்த சரியான தருணத்தில் உங்களின் பதில்கள்  அனைவரும் சுவாசிக்க வேண்டிய காற்று.    இதன்மூலம் ஓரிருவர் பயனடைந்தாலே உங்களுக்கே மாபெரும் வெற்றி!!!.  உங்களின்  பதில்கள் பலரின் கனவுகளை மெய்ப்பிக்கட்டும், புதிய  புரட்சியையும், மறுமலர்ச்சியையும் ஒரு சிறிய மெழுகுவர்த்தி  அளவிற்காவது சமுதாயத்திற்கு  ஒளிவீசட்டும்.
              
                                                             மிக்கநன்றி!!! 

     இப்படிக்கு.,
    தி.பிரபாகரன்.
பி.கு:  மேலும் தாங்களுக்கு ஏதேனும் சந்தேகம்  தோன்றினால் என்னை இந்த மின்னஞ்சல்  முகவரியிலோ அல்லது என்னுடைய கைப்பேசி எண்ணிற்கோ தயவுகூர்ந்து தொடர்பு கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!!!
   

No comments:

Post a Comment