Tuesday, July 20, 2010

சீ.சீ இப்படியும் ஒரு மானெங்கெட்ட பொழைப்பு வேணுமா?

இந்தியாவை வெள்ளைக்காரனே ஆண்டு தொலைக்கலாம்! இதை விட ஒன்னும் குடி மூழ்கிவிடப்போவதில்லை

மாதம் ஒரு மாபெரும் ரயில் விபத்து

இந்திரா காங்கிரசின் மாபெரும் சாதனை !!

கூட்டணி ஆட்சி என்ற பெயரில் குத்தகைக்கு விடப்பட்ட இலாகா.
இலாகா:  ரயில்வே துறை
குத்தகைதாரர் :   மம்தாபானர்ஜி
குத்தகை காலம் : 5 வருடங்கள் ( ஆட்சி கவிழ்ந்தால் உத்திரவாதம் இல்லை)
குத்தகை தொகை: 5 வருடங்கள் அரசுக்கு ஆதரவு கொடுப்பது.

இந்த மாத ஸ்பெஷல் ரயில் விபத்து.

மேற்கு வங்கம் - செயிந்தியா.
உயிர் பலி - 60. காயம்பட்டவர்கள் = 90.
நஷட ஈடு தொகை. 5 லட்சம்.

 .









ரயிலில் பயணம் செய்யுங்கள்! உங்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் கொடுத்து உதவுங்கள் !!

12 comments:

  1. இது உணர்ச்சி மீறிய எழுத்து என நினைக்கிறேன். நானும் வருந்துகிறேன் விபத்து குறித்து.

    ஆனால் நானோ நீங்களோ ரயில்வே மந்திரியாக இருந்தாலும் கூட விபத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மை தான் சார் , விபத்துக்கள் தானாக நடப்பது இல்லை , பல விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியும் , சரியான அணுகுமுறை இருந்தால் , ரயில்வே அமைச்ச்சர் கடந்த 15 மாதத்தில் நான்கு முறை தான் காபினெட் மீட்டிங் க்கு சென்றுள்ளார் , அப்படி இருக்கும் பொழுது , நிர்வாகம் எப்பாடு இருக்கும் ,
    நம் மக்களுக்கும் தேசப்பற்று என்பது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பொழுதுதான் வருது , அந்த மேட்ச் பார்க்கும் பொழுது இருக்கும் உணர்வு ஒட்டு போடும் பொழுது இருந்தால் நாடு உருப்படும்

    ReplyDelete
  3. வெட்கப்படுகிறேன்...!

    ReplyDelete
  4. ராம்ஜி_யாஹூ said...

    இது உணர்ச்சி மீறிய எழுத்து என நினைக்கிறேன். நானும் வருந்துகிறேன் விபத்து குறித்து.

    ஆனால் நானோ நீங்களோ ரயில்வே மந்திரியாக இருந்தாலும் கூட விபத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கத்தான் செய்யும் ///

    மந்திரி என்ற முறையில் என்ன பொறுப்பு என்பதை உணர்ந்து செயல் படாத இன்றைய நிலையே இதற்கு காரணம். மக்கள் பணத்தில் வசதிக்ளை மட்டும் வெட்கமில்லாமல் அனுபவிப்பார்கள்.

    ReplyDelete
  5. நடந்து வரும் விபத்துக்களை பார்க்கும் போது மம்தா பானர்ஜிக்கு ரயில்வேதுறை சரிப்பாடது என்று லாலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  6. அன்பு said...

    நடந்து வரும் விபத்துக்களை பார்க்கும் போது மம்தா பானர்ஜிக்கு ரயில்வேதுறை சரிப்பாடது என்று லாலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது ///

    மந்திரி பதவி என்பது அந்த துறையை மக்களுக்கு அதிக பட்சமாக பயன்படுமாறி செய்யும் பணி என்பது மாறி, ஆட்சி அமைக்க உதவி செய்யும் கட்சிகளுக்கு லஞ்சமாக வழங்கப்படுகிறது. அப்பதவி, ஊழல் செய்யவும்,தனது கட்சியை வளர்க்கவே பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete
  7. இது குறித்து கூட்டணி தலைமைக்கோ, (High Command !!) பாரத பிரதமருக்கோ ஒன்றுமில்லை.
    மம்ம்தா அக்காவிற்கு எதிர்களின்மீது சதா சந்தேகம்.
    அது எப்படி ஒரே வழியில் ஒன்று நிற்கும் போது மற்றொரு வண்டி மோதுமாம்?
    செய்யும் வேளைகளில் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் ஆயிரம் தொழில் சங்கங்கள் இந்திய ரயில்வேயில்.
    எவரும் இப்போது வாய் திறக்க மாட்டார்கள் புரட்சியாளர்கள் அல்லவா?

    செத்துமடிவது வெறும் ,நாதியற்ற ஜனங்கள் தானே .

    ReplyDelete
  8. Prabakar said...

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார் , விபத்துக்கள் தானாக நடப்பது இல்லை , பல விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியும் ,///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. அமைதி அப்பா said...

    வெட்கப்படுகிறேன்...//

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் said...

    இது குறித்து கூட்டணி தலைமைக்கோ, (High Command !!) பாரத பிரதமருக்கோ ஒன்றுமில்லை.
    மம்ம்தா அக்காவிற்கு எதிர்களின்மீது சதா சந்தேகம் ////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. Thaks to this blog. I accept ur point that lallu is better than mamtha.matha spend her most of the time in west bemgal to create a wrong imegination for the communist goverment.

    ReplyDelete