Friday, July 30, 2010

நாம எல்லோரும் கேணப்பயலுகளா?

ஆக்கங்கெட்ட அரசாங்கமும், அருள் வாங்கிய பூசாரிகளும் !
இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் (குறைவான மதிப்பீடு) என்ற கணக்கில் ஒருவேளை சோத்துக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள், பட்டினி சாவு கணக்கில் அடங்காது. இந்நிலையில், மத்திய அரசாங்கம் என்னத்தை கிழித்து கொண்டிருக்கிறது?

இந்திய உணவு கழகத்தின் பஞ்சாப் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் கோதுமை இது மகாராஷ்டிராவில் கிடங்கில் போடப்பட்டிருக்கும் கோதுமை !


இது மத்திய பிரதேசத்தில்

இது ராஜஸ்தான்
இது உத்திரபிரதேசம்
பொது வினியோக திட்டத்திற்காக மத்திய அரசு வட மாநிலங்களில் கொள்முதல் செய்யும் கோதுமைகளில் மூன்றில் ஒன்று பங்கு அளவை மழை, வெயில் இவற்றால் கெட்டுப்போகும் வகையில் திறந்த வெளியில் வைத்துள்ளது. அதாவது 168 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை. இவற்றின் மதிப்பு 28,000 கோடி ரூபாய். இந்த கோதுமையை கொண்டு, ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு உணவளிக்க முடியும்.

இவ்விதம் பாதுகாப்பற்று திறந்தவெளியில் சேமிக்கப்படுவதற்கு மூல காரணம், தேவையான பாதுகாப்பான கிடங்குகள் இல்லாதது தான். இதில் கொடுமை என்னவென்றால், சில இடங்களில் இருக்கும் குடோனில் மதுவகைகளை அடுக்கி வைத்து விட்டு, உணவுப்பொருளை வெளியே வைத்திருப்பதும், சில குடோன்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பதும் தான்!.

545 லோக் சபா தொகுதிகளில் 206 -ல் மட்டுமே வெற்றி பெற்ற இந்திரா காங்கிரஸ் அரசு அமைக்க கூடிய பெரும்பான்மை கட்சி இல்லை. ஆனால் மற்ற சில கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. அதன் ஒரே நோக்கம் சுயலாபம் மட்டுமே. ஆட்சி அமைத்து, உலக வங்கி மற்றும் அமெரிக்காவின் விருப்பப்படி நாட்டை நடத்துவது மட்டுமே !. அதனால் ஆட்சி அமைக்க உதவிய இதர கட்சிகளுக்கு  சில துறைகளை தாரை வார்த்து கொடுத்துள்ளது. அதில் ஏற்படும் எந்த குளறுபடியையும் கண்டுக்காது.

அவ்விதம் இந்திரா காங்கிரஸ், துறைகளை தாரை வார்த்து கொடுக்க அவற்றை பெற்றுக்கொண்ட கட்சிகளில் தேசியவாத காங்கிரஸூம் ஒன்று. கட்சி தலைவர் சரத்பவாருக்கு உணவுத்துறையும், பிரபுபடேலுக்கு  சிவில் விமான போக்குவரத்து துறையும்.

தனியார் தொலைகாட்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு பொருள் கழகம் இவ்வாறு உணவு பொருட்களை வீணாக்குவதை வீடியோ போட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பின் நமது அமைச்சர் கூறியது என்ன தெரியுமா? "போதுமான குடோன்  இல்லாதது தான் காரணம்". இதை வழிப்போக்கன் கூட சொல்லி விடுவான். இதை கண்டுபிடித்து சொல்ல ஒரு அமைச்சர்!

துடைப்பம் முதல் பங்களா, கார், தொலைபேசி, துப்பாக்கி ஏந்திய காவலர் பட்டாளம், மனைவியோடு உள்நாடு- வெளிநாடு செல்ல விமானப்பயணம், இத்தியாதி ....இத்தியாதி. இதுபோக மாதாமாதம் தண்ட சம்பளம். ஆக மக்கள் வரிப்பணத்தில் ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என தீபாவளி கொண்ட்டாடும் அமைச்சர், வருடா வருடம் எவ்வளவு உண்வு தானியம் கொள்முதல் செய்யப்படுகிறது, அது எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை தன் அமைச்சகத்திடம் கேட்டிருந்தால், இந்த அவல நிலை தெரிந்திருக்கும். அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் ஏது? ஐ.பி.எல்-ல் எவ்வளவு ஷேர் வாங்குவது, மற்றும் கிரிகெட் விஷயங்களுக்கே நேரம் பத்தவில்லை.

இவர் என்ன,  அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்காக பதவியை. ராஜினாமா செய்த லால்பகதூர் சாஸ்திரியா,.பதவி விலக?  பதவிக்காகத்தானே இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைச்சது.

திரு மன்மோஹன் சிங் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இவர் என்ன தேர்தலில் நின்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகி அதன் பின் பிரதமராக ஆகியவரா? இல்லையே. உலக வங்கியில் வேலை பார்த்தார், ரிசர்வ் வங்கியின் கவர்னராக வேலை பார்த்தார். இப்பொழுது சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்பட்டு ஆறு வருட காலமாக வேலை பார்த்து வருகிறார். தானாக இவர் எப்படி பேசமுடியும்? அந்த தைரியம் எப்படி வரும்? எம் பி தேர்தலில் நின்று நூறு ஓட்டு வாங்கும் சுயேச்சைக்கு இருக்கும் தைரியம் கூட இவருக்கு கிடையாது. பின் வாசல் வழியாக பாராளுமன்றததி ற்குள் நுழைந்தவர் தானே!

சரி இந்திரா காங்கிரசின் நிலை என்ன? பேச்சு மூச்சே இல்லை. அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, சரத்பவாரை பற்றி பேசி, அவர் கூட்டணியில் இருந்து விலகி ஆட்சியே கவிழ்ந்து விட்டால் என்ன செய்வது?..

ஆக மொத்தத்தில் வம்பன் சொத்து வீணன் கையில்

ஆக் எப்படியோ உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு இது வந்தது,  நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா அடங்கிய பெஞ்ச் உடனடியாக அரசு இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வழக்கம் போல ஆல் இன் ஆல் அழகு ராஜா ப. சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் அடங்கிய அமைச்சர் குழு கூடி விவாதித்து  டி.வி சானல்களுக்கு சோகமாக பேட்டி அளிப்பார்கள். போபால் சம்பவத்திற்கு செய்தது போல.

இந்தியர்களாகிய நாம தான் கேணப்பயலுகளாச்சே!  சொரணை கெட்டுப்போய் அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணியே அரசு அமைக்க ஆதரவு கொடுக்கா மலா இருக்கப்போறேம்.

வாழ்க இந்தியா!  வாழ்க இந்திய ஜனநாயகம்!!  வாழ்க சொரணை கெட்ட இந்திய மக்கள் !!!

21 comments:

 1. இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்...ஒன்னுமே தெரியாம இருக்கிறவர்கள் தான் அமைச்சர்கள்...

  ReplyDelete
 2. சரியா சொன்னிங்க் சார்.ஒரு தடவ் நாம்க்க்ல் கோழி ப்ண்னையாளர்கள் வீணா இருக்கும் குருனை அரிசி கேட்டாங்க்.ஆனா தரல் இப்படி கீழ் கொட்டி வீண் பன்னுரார்.

  ReplyDelete
 3. இந்தியாவின் விளைபொருட்கள் வீணாகப்படுவதே இந்தியாவின் பெரிய ”மால்”களை வைத்திருக்கும் சரத் பவார் போன்ற பெரிய முதலாளிகளால்தான்.இவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் அளவே இல்லை.தற்பொழுது இந்திய ஜவுளிக்கழகத்தின் இடங்கள் பயன்பாட்டில் இல்லாமையால் ஆன் லைன் வர்த்தகத்தில் விலை பேசப்படுகிறது.அவைகளை வாடகைக்கு எடுத்தாலாவது ஜவுளிக் கழகத்திற்கும் வருமானம்.பொது சொத்து விற்பனையும் தடுக்கப்படும்.சைபீரியாவில் உள்ள நமது மத்திய உணவுத்துறை அதிகாரிகளும் அலாஸ்காவில் உள்ள ஜவுளித்துறை அதிகாரிகளும்(இரு துறை அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரம் சந்திக்கமாட்டார்கள்)முடிவு எடுப்பது நடக்கவே நடக்காது(என்ன மம்பட்டிவேலைக்கா இவ்வளவு படித்துள்ளார்கள்) வாழ்க ஜனநாயகம்!வாழ்க அரசியல்வாதிகள்!! வாழ்க அரசு அதிகாரிகள்!!! நாசமாய்ப் போகட்டும் இந்த நாடும்!!!! மக்களும்?!!!!!!

  ReplyDelete
 4. வந்திருக்க பின்னூட்ட எண்ணிக்கையே சொல்லுது.. மக்களுக்கு பொதுப்பிரச்னையில் இருக்கிற ஆர்வத்தை பத்தி.. என்னத்த சொல்றது :(

  ReplyDelete
 5. sivaG said...

  இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்...ஒன்னுமே தெரியாம இருக்கிறவர்கள் தான் அமைச்சர்கள்.///

  அவர்களுக்கென்ன? நம் பணமல்லவா வீணாகிறது.

  ReplyDelete
 6. Thangaraj said...

  சரியா சொன்னிங்க் சார்.ஒரு தடவ் நாம்க்க்ல் கோழி ப்ண்னையாளர்கள் வீணா இருக்கும் குருனை அரிசி கேட்டாங்க்.ஆனா தரல் இப்படி கீழ் கொட்டி வீண் பன்னுரார்.///

  இதுக்கெல்லாம் முடிவு கட்டவேண்டியது நாம் தான்

  ReplyDelete
 7. இறையோகி said..

  ஜனநாயகம்!வாழ்க அரசியல்வாதிகள்!! வாழ்க அரசு அதிகாரிகள்!!! நாசமாய்ப் போகட்டும் இந்த நாடும்!!!! மக்களும்?!!!!!! ///

  நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், இதற்கு மேலும் நடக்கும்.

  ReplyDelete
 8. ஆளவந்தான் said...

  வந்திருக்க பின்னூட்ட எண்ணிக்கையே சொல்லுது.. மக்களுக்கு பொதுப்பிரச்னையில் இருக்கிற ஆர்வத்தை பத்தி.. என்னத்த சொல்றது :(///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. //நாம எல்லோரும் கேணப்பயலுகளா?//

  இதில் என்ன கேள்வி வேற? ஆமாம் நாம் கேணையர்கள்தான்.

  விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில் , விவசாய அமைச்சராக இருப்பவர் அந்த அமைச்சரகப்பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தைவிட கிரிக்கெட் என்ற ஒரு பொழுதுபோக்கு ஆட்டத்திற்கே நேரம் செலவிடுகிறார்.

  இவரின் பதவிக்காலத்தில் இவர் விவயாசயம் பற்றிப் பேசியதைவிட கிரிக்கெட்டில் டான்ஸ் ஆடுவது நல்லதா கெட்டதா அல்லது கிரிக்கெட்டில் யாரை யார் நியமிக்கலாம் என்று பேசியதே அதிகம் இருக்கும்.

  இவரை இம்பீச் செய்யவேண்டும் எந்த விவயாயி சங்கமாவது போரடியது உண்டா? அல்லது மக்களாவது?

  ஆம், நாம் கேணையர்கள்தான். இது போன்ற விசயங்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

  India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
  http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

  .

  ReplyDelete
 10. ////திரு மன்மோஹன் சிங் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இவர் என்ன தேர்தலில் நின்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகி அதன் பின் பிரதமராக ஆகியவரா? இல்லையே. உலக வங்கியில் வேலை பார்த்தார், ரிசர்வ் வங்கியின் கவர்னராக வேலை பார்த்தார். இப்பொழுது சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்பட்டு ஆறு வருட காலமாக வேலை பார்த்து வருகிறார். தானாக இவர் எப்படி பேசமுடியும்?//

  நான் ஒரு வேலை பார்க்க விரும்பினால் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இடும் விண்ணப்பமானது நான் அந்த வேலை செய்ய ஆர்வமாய் உள்ளேன். வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்கும் முதல் படி.

  நான் அப்ளிகேசனே போடதா போது யார்வது இந்த இந்த வேலையைப் பார் என்றால், "வெயிட்ட மினிட் ப்ளீஸ் " என்ன வேலை? இதன் அதிகாரங்கள் என்ன? என்ன கடமை? என்றாவது கேட்பேன்.

  என் அப்பாவோ அல்லது யாரோ பயமுறுத்துகிறார்கள் என்பதற்காக நான் அப்ளை செய்யாத (எனக்குத் தேவை என்றால் அப்ளை செய்து இருப்பேன்)வேலை வலிய வந்தால்கூட ஏற்க மாட்டேன்.

  மன்மோகன் இந்த வேலைக்காக அப்ளை செய்யவில்லை. நியமிக்கப்பட்டார். அவர் ஒன்றும் மக்களுக்கான பொருளாதர மேதை இல்லை. மக்களுக்கான பொருளாதர மேதை என்பவர் மக்களுக்கான பொருளாதாரத்தை வடிவமைப்பவர். நோபல் பரிசைப் பெற்ற யூனுஸ் மக்களுக்கான திட்டத்தை கொண்டுவந்தவர்.

  http://www.businessweek.com/magazine/content/05_52/b3965024.htm  கம்பெனிகளுக்கான கன்ஸல்டண்ட் போன்றதுதான் மன்மோகனின் பொருளாதர அறிவு. என்ன செய்வது யார் எந்த நேரம் எந்த துறைக்கு மந்திரியாவார்கள் என்பது தெரியாது. படிப்பறி வேண்டாம் . காமராஜர் போல பட்டறிவாவது வேண்டாமா?

  :-((((

  .

  ReplyDelete
 11. மணி மண்டபங்கள் கட்டவும், அரசு விழாக்கள் என்ற பேரில் பல கோடிகளை இந்த கேடிகள் நாசமாக்கவும்... செய்வார்கள். ஆனால், முறையான திட்டங்களை வகுத்து மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கமாட்டார்கள்.

  ReplyDelete
 12. வால்பையன் said...

  அடப்பாவிகளா ////

  இது மட்டுமா வால்? இன்னும் இருக்கு

  ReplyDelete
 13. பிரியமுடன் பிரபு said...

  vayila nalla varuthu..////

  வாயில நல்லா வந்தா போதாது. செயலில் காட்டணும்

  ReplyDelete
 14. கல்வெட்டு said...

  //நாம எல்லோரும் கேணப்பயலுகளா?//

  இதில் என்ன கேள்வி வேற? ஆமாம் நாம் கேணையர்கள்தான் ////

  அப்பாடா ஒத்துக்கிட்டதுக்கு நன்றி

  ReplyDelete
 15. ரோஸ்விக் said...

  மணி மண்டபங்கள் கட்டவும், அரசு விழாக்கள் என்ற பேரில் பல கோடிகளை இந்த கேடிகள் நாசமாக்கவும்... செய்வார்கள். ஆனால், முறையான திட்டங்களை வகுத்து மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கமாட்டார்கள் ///

  இவர்கள் தான் உண்மையான தேச துரோகிகள். நாட்டை விட்டு துரத்தவேண்டும் !

  ReplyDelete
 16. ஒரு சைடு, உணவுப்பொருள் உற்பத்தி குரங்ஜ்சிகிட்டு இருக்கு, இன்னொருபக்கம் இந்த நாதாரிக பொறுப்பில்லாம வேஸ்ட் பன்ணிட்டிருக்காங்க... இருந்தாலும் நமக்கு சகிப்புத்தன்மை இந்தளவுக்கு இருக்கக்கூடாது சார்..

  ReplyDelete
 17. People don't think and act...
  ----------
  Thanks for following. Mr.R.Chandrasekar, India, Mob: +91-9344564849
  Skype/Gtalk id: bimpexrcs
  email: bimpexrcs@gmail.com
  ------------
  www.bharathiimpex.com - Herbs
  www.worldbuz.com - Trade Portal - Free Regn
  www.worldjobportal.com - Job Portal - Free Regn

  ReplyDelete
 18. ஆளுக்கொரு மூட்டையை எடுத்துச் செல்லும் படி கூறியிருந்தாலும், மக்களாவது பாதுகாத்துப் பயன்
  படுத்தியிருப்பார்களே?
  நாசமாக்கி விட்டார்களே!

  ReplyDelete
 19. 1970 களுக்கு முன்னாள் இந்திய பார்லிமெண்டில் ஆச்சார்யா கிருபளானி,ராம் மனோகர் லோஹியா,AK கோபாலன், HV காமத்,மது லிமாயி,மது தந்தவதே,மினு மசானி, வாஜ்பாய், சுந்தரய்யா போன்ற எதிர்கட்சி கிங்கரர்களும்,மகாவீர் த்யாகி,பெரோஸ் காந்தி போன்ற ஆளும்கட்சி எமன்களும் மந்திரிகளை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.மகாவீர் த்யாகி பேச ஆரம்பித்தால் நேருவுக்கு உட்ச்சா வந்துடும்.80 -க்கு அப்புறம் தான் கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்ற தத்துவத்தின் கீழ் ஆளும்கட்சி எதிர்கட்சி எல்லாம் மக்களுக்கு எதிராக கூட்டணி அமைத்துவிட்டன.

  ReplyDelete