Thursday, September 30, 2010

இது எப்படி இருக்கு ?

நெல்லை: கிணத்தைக் காணோம் என்று நடிகர் வடிவேலு படத்தில் வரும் காமெடிக் காட்சியைப் போல, கால்வாயைக் காணோம், கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒருவர் நூதன வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாபர் மசூதியா? ராமர் கோயிலா? - ஒரு அலசல். சட்டம் நம் கையில்.

1527-ல் சிட்டோகாரின் மன்னன் ரானாசங்ராம் சிங்-ஐ  மொகலாய சக்கரவர்த்தி பாபர் போரில் தோற்கடித்து  நாட்டை கைப்பற்றினார். அதற்கு மிர் பன்கி என்பவரை வைஸ்ராயாக நியமித்து  அங்கு மொஹலாய ஆட்சியை ஏற்படுத்தினார்.

Tuesday, September 28, 2010

Sunday, September 26, 2010

இவர்கள்!

சென்னை பூந்தமல்லி,சைதாபேட்டையை சார்ந்த இரு இளைஞர்கள். ஜெயராஜ், ஜெயபிரகாஷ். இவர்கள் யார்? எம்.எல் ஏ- வா அல்லது எம்.பி -யா?. இல்லை. அமைச்சரும் இல்லை முதல்வரும் இல்லை. சாதாரண நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளைஞர்கள். இவர்கள் அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?

திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த திருத்துறைபூண்டியை சொந்த ஊராக கொண்டவர் செந்தில் குமார் என்ற இளைஞர். இவர் வசதியான குடும்பத்தை சார்ந்தவர் அல்ல. ஆனால் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மிகவும் கஷ்டப்பட்டு, தஞ்சாவூர் மெடிகல் காலேஜில் டி.பார்ம் சேர்ந்தார். அப்பொழுது அவர் நண்பர் ஒருவரின் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட இரு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு முறை இவர், டி.பார்ம் முடித்து விட்டு பி.பார்ம் சேரவேண்டும் என்ற தனது ஆசையை இந்த இளைஞர்களிடம் கூறினார்.

அவர்களும் செந்தில் குமாரிடம் " பி.பார்ம் சீட் கிடைத்தால் எங்களிடம் தெரியப்படுத்து என கூறினர். டி.பார்ம் முடித்த செந்தில்குமார், சென்னை மேல்மருவத்தூரில் பி.பார்ம்-க்கு விண்ணப்பிக்க அவருக்கு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தது. அந்த இரு இளைஞர்களும் தாங்கள் கூறியபடியே, இதற்காகவே சிறுக சிறுக தாங்கள் சேமித்த பணத்தை கொடுத்து, கல்லூரியில் சேர்வதற்கு உதவினர். இதுவரை இதற்காக அவர்கள் கொடுத்துள்ள பணம் ஒரு லட்சத்தி இருபதாயிரம். மாதம் ஒன்றுக்கு சுமார் 800 ரூபாய், பப்ஸ், டீ இவற்றிற்காக செலவு செய்து வந்த ஜெயராஜ் , அந்த பணம் செந்தில்குமாரின் சாப்பாட்டு செலவுக்கு பயன்படும் எனஅதை நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரத்துக்காக பெயரளவில் எதையாவது செய்துவிட்டு, ஏதோ தங்கள் சொந்த பணத்தில் செய்தது போல, வெட்கமே இல்லாமல் பத்திரிகைகள், டி.வி இவற்றில் பேட்டி கொடுக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், ஆரவாரம் இல்லாமல் இரு இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை மபடிக்க வைப்பது என்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

செந்தில்குமாரின் குரலில் இச்செய்தியை கேட்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

சென்னையை சார்ந்த ஜெயராஜ் மற்றும் ஜெயபிரகாஷ் அவர்களே! உங்களின் இந்த செயலுக்கு தலை வணங்குகிறேன்.

Wednesday, September 22, 2010

அயோத்தி விவகாரம் - இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

"பாபரிமஜித் இருக்கும் இடம் மசூதியா? அல்லது ராமர் கோவில்லா? இந்த இடம் யாருக்கு சொந்தமானது" என்பது தொடர்பான தனது சட்ட ரீதியான தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வரும் 24-ம் தேதி அறிவிக்க உள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சில தீர்ப்புக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.

1975 ஜூன் 2-ம் தேதி இதே நீதிமன்றம், இந்திரா காந்தி தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஜெயித்ததை செல்லாது என அறிவித்ததுடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்பதையும் தடை செய்தது. இதை பொறுத்துக்கொள்ளமுடியாத இந்திரா காந்தி 1975 ஜூன் 26 -ல் அவசர கால நிலையை பிரகடணம் செய்து, இந்திய வரலாற்றில் ஜனநாயகத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினார். அதோடு, காங்கிரஸ் பிளவுபட, " இந்திரா காங்கிரஸ்" என்ற தனது சர்வாதிகார குடும்ப கட்சியை ஆரம்பித்தார். அது தான் இன்றைய இந்திய தேசிய காங்கிரஸ்.

பாபர் மசூதி - ராமர் ஜன்ம பூமி விவகாரம் நூற்றாண்டு காலமாக உள்ள பிரச்சனை. இது இன்று பூதாகாரமாக மாற யார் காரணம்?.

இந்திரா காந்தியின் வாரிசு ராஜிவ் காந்திதான். இந்திரா காந்திக்கும் சரி, அவர் வாரிசுகளுக்கும் சரி, ஆட்சி என்பது அவர்களின் குடும்ப சொத்து என்ற நினைப்பு. அதற்காக எதையும் செய்யும் மன நிலை கொண்டவர்கள். இந்துக்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினரை  ஒருவருக்கொருவர் எதிராக ஆக்கி அதன் மூலம் அரசியல் ஆதயம் பெற நினைத்து செயல்பட்டார். இதை,
Dr Christophe Jaffrelot என்ற பிரெஞ்ச் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
"From Shah Bano case to opening up of the Masjid on VHP's request to launching his election campaign from Faizabad calling it Ram's land, he was playing Hindus against Muslims and vice-versa," he said.

ஆக மொத்தத்தில் இந்தியாவின் சாபக்கேடு, நாட்டு மக்களை இரண்டாக்கி, மோதவிட்டு, அதில் குளிர்காயும்  சுய நலவாதிகள்!


பட்டினி சாவு, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவற்றால் நாடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லீம்களுக்கு சொந்தமா எனபதா முக்கியம்?


அந்த இடம் மசூதியாக இருந்தாலும் சரி, ராமர் கோயிலாக இருந்தாலும் சரி இந்தியர்களாகிய நமக்கு ஒரு புனித இடம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருக்ககூடாது. என்னைப்பொறுத்த வரையில் அது மசூதியாகவே இருக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. காரணம் எந்த ஒரு விஷயத்தையும் பின்னோக்கி சென்று ஆராய்வதால் எதுவும் கிடைக்க போவதில்லை. அப்படி பின்னோக்கி போய்க்கொண்டிருந்தால், சிங்கம் புலி, கரடி, கழுதை, குரங்கு  மற்றும் அனைத்து மிருகங்களுக்குத்தான் அந்த இடம் சொந்தமாகும். அவைகள்தான் உலகம் தோன்றிய பொழுது தோன்றி ஜீவராசிகள் அவைதான்.


சரி இந்த இடம் ராமர் ஜென்ம பூமி அல்லது ராமர் கோயில் இருந்த இடம் என முடிவு செய்து இந்துக்களுக்கு உரிமையானது என கொடுத்துவிட்டால், கன்னியா குமரியிலிருந்து, காஷ்மீர் வரை இப்பொழுது இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து இந்தியா சொர்க்க பூமியாக மாறிவிடுமா? சொல்லுங்கள்.


இந்தியாவில் பெரும்பான்மையாக, அதாவது 80 கோடி இந்துக்கள் உள்ளனர். இவர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக, ஒருசில ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு யார் அதிகாரம் அளித்தது? நிச்சயமாக இந்துக்கள் அல்ல.


எனவே இந்தியர்களாகிய நாம் சுயநல அரசியல்வாதிகளால் இரண்டுபட்டு நிற்காமல் ஒற்றுமையுடன்  இருக்கவேண்டும்.

Tuesday, September 14, 2010

மீண்டும் நான்!

வணக்கம் நண்பர்களே!
கழிந்த ஒன்றரை மாதமாக நான் பதிவு எதையும் போடாததால், " அப்பாடா! ஒருவழியாக சனியன் விட்டது" என சந்தொஷப்பட்டிருப்பீர்கள். அந்த சந்தோஷம் நிலைக்கக்கூடாதல்லவா? அதனால் மீண்டும் வந்துவிட்டேன்!

பதிவுடன் சந்திக்கிறேன்.