Wednesday, September 22, 2010

அயோத்தி விவகாரம் - இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

"பாபரிமஜித் இருக்கும் இடம் மசூதியா? அல்லது ராமர் கோவில்லா? இந்த இடம் யாருக்கு சொந்தமானது" என்பது தொடர்பான தனது சட்ட ரீதியான தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வரும் 24-ம் தேதி அறிவிக்க உள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சில தீர்ப்புக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.

1975 ஜூன் 2-ம் தேதி இதே நீதிமன்றம், இந்திரா காந்தி தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஜெயித்ததை செல்லாது என அறிவித்ததுடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்பதையும் தடை செய்தது. இதை பொறுத்துக்கொள்ளமுடியாத இந்திரா காந்தி 1975 ஜூன் 26 -ல் அவசர கால நிலையை பிரகடணம் செய்து, இந்திய வரலாற்றில் ஜனநாயகத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினார். அதோடு, காங்கிரஸ் பிளவுபட, " இந்திரா காங்கிரஸ்" என்ற தனது சர்வாதிகார குடும்ப கட்சியை ஆரம்பித்தார். அது தான் இன்றைய இந்திய தேசிய காங்கிரஸ்.

பாபர் மசூதி - ராமர் ஜன்ம பூமி விவகாரம் நூற்றாண்டு காலமாக உள்ள பிரச்சனை. இது இன்று பூதாகாரமாக மாற யார் காரணம்?.

இந்திரா காந்தியின் வாரிசு ராஜிவ் காந்திதான். இந்திரா காந்திக்கும் சரி, அவர் வாரிசுகளுக்கும் சரி, ஆட்சி என்பது அவர்களின் குடும்ப சொத்து என்ற நினைப்பு. அதற்காக எதையும் செய்யும் மன நிலை கொண்டவர்கள். இந்துக்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினரை  ஒருவருக்கொருவர் எதிராக ஆக்கி அதன் மூலம் அரசியல் ஆதயம் பெற நினைத்து செயல்பட்டார். இதை,
Dr Christophe Jaffrelot என்ற பிரெஞ்ச் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
"From Shah Bano case to opening up of the Masjid on VHP's request to launching his election campaign from Faizabad calling it Ram's land, he was playing Hindus against Muslims and vice-versa," he said.

ஆக மொத்தத்தில் இந்தியாவின் சாபக்கேடு, நாட்டு மக்களை இரண்டாக்கி, மோதவிட்டு, அதில் குளிர்காயும்  சுய நலவாதிகள்!


பட்டினி சாவு, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவற்றால் நாடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பொழுது பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லீம்களுக்கு சொந்தமா எனபதா முக்கியம்?


அந்த இடம் மசூதியாக இருந்தாலும் சரி, ராமர் கோயிலாக இருந்தாலும் சரி இந்தியர்களாகிய நமக்கு ஒரு புனித இடம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருக்ககூடாது. என்னைப்பொறுத்த வரையில் அது மசூதியாகவே இருக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. காரணம் எந்த ஒரு விஷயத்தையும் பின்னோக்கி சென்று ஆராய்வதால் எதுவும் கிடைக்க போவதில்லை. அப்படி பின்னோக்கி போய்க்கொண்டிருந்தால், சிங்கம் புலி, கரடி, கழுதை, குரங்கு  மற்றும் அனைத்து மிருகங்களுக்குத்தான் அந்த இடம் சொந்தமாகும். அவைகள்தான் உலகம் தோன்றிய பொழுது தோன்றி ஜீவராசிகள் அவைதான்.


சரி இந்த இடம் ராமர் ஜென்ம பூமி அல்லது ராமர் கோயில் இருந்த இடம் என முடிவு செய்து இந்துக்களுக்கு உரிமையானது என கொடுத்துவிட்டால், கன்னியா குமரியிலிருந்து, காஷ்மீர் வரை இப்பொழுது இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து இந்தியா சொர்க்க பூமியாக மாறிவிடுமா? சொல்லுங்கள்.


இந்தியாவில் பெரும்பான்மையாக, அதாவது 80 கோடி இந்துக்கள் உள்ளனர். இவர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக, ஒருசில ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு யார் அதிகாரம் அளித்தது? நிச்சயமாக இந்துக்கள் அல்ல.


எனவே இந்தியர்களாகிய நாம் சுயநல அரசியல்வாதிகளால் இரண்டுபட்டு நிற்காமல் ஒற்றுமையுடன்  இருக்கவேண்டும்.

10 comments:

 1. \\பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லீம்களுக்கு சொந்தமா எனபதா\\

  \\அந்த இடம் மசூதியாக இருந்தாலும் சரி, ராமர் கோயிலாக இருந்தாலும் சரி இந்தியர்களாகிய நமக்கு\\

  ஆம் இந்தியர்களாகிய நமக்கும்,இந்திய நாட்டுக்கும் சொந்தமான இடம் என்பது சந்தேகமில்லை.

  நல்ல பதிவு..... தொடர்ந்து...எழுதுங்கள்.!!!!!!!

  ReplyDelete
 2. வானவன் யோகி said...

  \\பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லீம்களுக்கு சொந்தமா எனபதா\\

  \\அந்த இடம் மசூதியாக இருந்தாலும் சரி, ராமர் கோயிலாக இருந்தாலும் சரி இந்தியர்களாகிய நமக்கு\\

  ஆம் இந்தியர்களாகிய நமக்கும்,இந்திய நாட்டுக்கும் சொந்தமான இடம் என்பது சந்தேகமில்லை.

  நல்ல பதிவு..... தொடர்ந்து...எழுதுங்கள்.!!!!!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. Arumaiyaana vilakkam ayya dhiraviya nataraajan avrgale, anaithu tharappu makkalum amaidhiyudan vaazha ellaam valla aandavanai praarthippomaaga thodarndhu ezhudhungal ungalai ponravrgalin ezhuthukkal amaidhiyaana edhirgaala sandhadhigalai uruvaakkum vaazhthukkal.

  ReplyDelete
 4. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 5. niloufer said...

  Arumaiyaana vilakkam ayya dhiraviya nataraajan avrgale, anaithu tharappu makkalum amaidhiyudan vaazha ellaam valla aandavanai praarthippomaaga thodarndhu ezhudhungal ungalai ponravrgalin ezhuthukkal amaidhiyaana edhirgaala sandhadhigalai uruvaakkum vaazhthukka

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. தமிழினி said...

  உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. நல்ல பதிவு..... தொடர்ந்து...எழுதுங்கள்.!!!!!

  ReplyDelete
 8. Sketch Sahul said...

  நல்ல பதிவு..... தொடர்ந்து...எழுதுங்கள்.!!!!///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. "Engineering an WAR" endra oru vaakiyathai Kandupidithadhu Amerikkargalaaga irukkalaam aanal adhil Ph.D. petravargal nam arasiyalvaadhigalaaga mattumae irukka mudiyum.

  Avargalaavadhu adhai adutha naatin meedhu payan paduthinaargal, nammalunga oru padi maela poyi sondha naatu makkal maelayae payan Paduthikittu irukkaanga.

  summa solla koodadhu poruthama oru vaakiyam solli vaichaanga namma periyavanga "OORU RENDU PATTA KOOTHAADIKKU KONDAATAM".

  "UNMAIYAANA KOOTHAADIGAL MANNIKKAVUM"

  ReplyDelete
 10. DART said...///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete