Sunday, September 26, 2010

இவர்கள்!

சென்னை பூந்தமல்லி,சைதாபேட்டையை சார்ந்த இரு இளைஞர்கள். ஜெயராஜ், ஜெயபிரகாஷ். இவர்கள் யார்? எம்.எல் ஏ- வா அல்லது எம்.பி -யா?. இல்லை. அமைச்சரும் இல்லை முதல்வரும் இல்லை. சாதாரண நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளைஞர்கள். இவர்கள் அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?

திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த திருத்துறைபூண்டியை சொந்த ஊராக கொண்டவர் செந்தில் குமார் என்ற இளைஞர். இவர் வசதியான குடும்பத்தை சார்ந்தவர் அல்ல. ஆனால் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மிகவும் கஷ்டப்பட்டு, தஞ்சாவூர் மெடிகல் காலேஜில் டி.பார்ம் சேர்ந்தார். அப்பொழுது அவர் நண்பர் ஒருவரின் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட இரு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு முறை இவர், டி.பார்ம் முடித்து விட்டு பி.பார்ம் சேரவேண்டும் என்ற தனது ஆசையை இந்த இளைஞர்களிடம் கூறினார்.

அவர்களும் செந்தில் குமாரிடம் " பி.பார்ம் சீட் கிடைத்தால் எங்களிடம் தெரியப்படுத்து என கூறினர். டி.பார்ம் முடித்த செந்தில்குமார், சென்னை மேல்மருவத்தூரில் பி.பார்ம்-க்கு விண்ணப்பிக்க அவருக்கு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தது. அந்த இரு இளைஞர்களும் தாங்கள் கூறியபடியே, இதற்காகவே சிறுக சிறுக தாங்கள் சேமித்த பணத்தை கொடுத்து, கல்லூரியில் சேர்வதற்கு உதவினர். இதுவரை இதற்காக அவர்கள் கொடுத்துள்ள பணம் ஒரு லட்சத்தி இருபதாயிரம். மாதம் ஒன்றுக்கு சுமார் 800 ரூபாய், பப்ஸ், டீ இவற்றிற்காக செலவு செய்து வந்த ஜெயராஜ் , அந்த பணம் செந்தில்குமாரின் சாப்பாட்டு செலவுக்கு பயன்படும் எனஅதை நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரத்துக்காக பெயரளவில் எதையாவது செய்துவிட்டு, ஏதோ தங்கள் சொந்த பணத்தில் செய்தது போல, வெட்கமே இல்லாமல் பத்திரிகைகள், டி.வி இவற்றில் பேட்டி கொடுக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், ஆரவாரம் இல்லாமல் இரு இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை மபடிக்க வைப்பது என்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

செந்தில்குமாரின் குரலில் இச்செய்தியை கேட்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

சென்னையை சார்ந்த ஜெயராஜ் மற்றும் ஜெயபிரகாஷ் அவர்களே! உங்களின் இந்த செயலுக்கு தலை வணங்குகிறேன்.

video

7 comments:

  1. அவ்விரு இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அம்பிகா said...

    அவ்விரு இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. இன்னும் இந்த நாட்டில் இரக்கமும் தயாளகுணமும் கொண்டோர் வாழ்கிறார்கள் என்பதால் தான் இப்போதும் கொஞ்சமாவது மழை பொழிகிறதோ?!!!!!

    ReplyDelete
  4. வானவன் யோகி said...

    இன்னும் இந்த நாட்டில் இரக்கமும் தயாளகுணமும் கொண்டோர் வாழ்கிறார்கள் என்பதால் தான் இப்போதும் கொஞ்சமாவது மழை பொழிகிறதோ?!!!!!//

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. சீனியர் சிங்காரம் said...

    நல்ல பதிவு////

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. எல்லோரும் வாழ்த்துகள் சொல்வதோடு நில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்வோம் என் உறுதி எடுங்கள்..

    ReplyDelete