Thursday, September 30, 2010

பாபர் மசூதியா? ராமர் கோயிலா? - ஒரு அலசல். சட்டம் நம் கையில்.

1527-ல் சிட்டோகாரின் மன்னன் ரானாசங்ராம் சிங்-ஐ  மொகலாய சக்கரவர்த்தி பாபர் போரில் தோற்கடித்து  நாட்டை கைப்பற்றினார். அதற்கு மிர் பன்கி என்பவரை வைஸ்ராயாக நியமித்து  அங்கு மொஹலாய ஆட்சியை ஏற்படுத்தினார்.


1528 -ல் ராமரின் பிறந்த பூமியாக கூறப்படும் அயோத்தியில், ராமர் கோயிலை இடித்து விட்டு  மசூதி கட்டப்பட்டது. அங்கு கோயில் இருந்தது என்பதை 1767-ல்  Joseph Tieffenthaler என்ற கிருத்துவ பாதிரியார் "  மசூதி இருக்கும் இடத்தில் இந்துக்கள் ராமநவமியை கொண்டாடினார்கள் எனவும், அந்த மசூதி ராமர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது தான் எனவும் பதிவு செய்துள்ளார்.19-ம் நூற்றாண்டில் அதாவது 1850-ம் ஆண்டு இந்து -முஸ்லீம் கலவரம் ஏற்படும் வரை இந்துக்களும் முஸ்லீம்களும் அந்த இடத்தையே தங்கள் வழிபாட்டு ஸ்தலமாக கொண்டிருந்தனர் என P. Carnegy என்ற வெள்ளைக்கார அறிஞர் தனது புத்தகத்தில் 1870 எழுதியுள்ளார்.

1885-ல் மகந்த் ரஹுபார் ராம் என்பவர் பாபர் மசூதி வளாகத்திற்கு வெளியே ராமர் கோவில் கட்ட அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் பைஸாபாத் மாவட்ட நீதிபதி Col. F.E.A. Chamier கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். " I visited the land in dispute yesterday in the presence of all parties. I found that the Masjid built by Emperor Babar stands on the border of Ayodhya, that is to say, to the west and south it is clear of habitations. It is most unfortunate that a Masjid should have been built on land specially held sacred by the Hindus, but as that event occurred 356 years ago, it is too late now to agree with the grievances " .அதாவது பாபர் மசூதி இந்துக்களின் புனித பூமியின் மீது கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிந்தாலும், 356 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு இப்பொழுது பரிகாரம் வழங்க இயலாது என்பதுதான் தீர்ப்பின் விபரம்.

1947 வரை இந்த மசூதியில் நமாஸ் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்  இந்திய அரசு மசூதியின் முன் நுழைவு வாசலை பூட்டிவிட்டு, பக்கவாசல் வழியாக உள்ளே சென்று பூஜை வழிபாடு செய்ய இந்துக்களுக்கு அனுமதி வழங்கியது. அதன் பின் 1989-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் பூட்டப்பட்ட முன் நுழைவு வாசலை திறக்க உத்தரவிட்டது. மசூதி அமைப்பை மாற்றி கோவிலாக கட்ட இந்துக்கள் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்  இந்திய தொல்லியல் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே 1950-ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் பூஜை செய்யும் உரிமை கோரியும், 1959 -ல் நிர்மோகி அஹாரா என்ற இந்து அமைப்பு அந்த இடத்திற்கு உரிமை கோரியும், அதன் பின் முஸ்லீம் சென்ட்ரல் போர்டு ஆஃப் வக்ஃப் -ம் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தன.

1986-ல் முஸ்லீம்கள் ஆக் ஷன் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தி, இந்துக்களை அங்கு வழிபட அனுமதிப்பதை எதிர்த்தனர்.

1990-ல் எல்.கே அத்வானி அங்கு கோயில் கட்ட ஆதரவு திரட்ட யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது விஷ்வ ஹிண்டு பரிஷத் தொண்டர்களால் பாபர் மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

1992 டிசம்பர் 6-ல் கரசேவக் அமைப்பால் மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது.

1993-ல் லிபர்ஹான் கமிட்டி அரசால் அமைக்கப்பட்டது. 2002 பிபிரவரி 27 -ல் நடைபெற்ற கலவரத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கமிஷன் அறிக்கை 17 ஆண்டுகள் கழித்து அரசிடம் கொடுக்கப்பட்டும் அது வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தான் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடவிருந்த நிலையில், தீர்ப்பு வழங்குவதை தள்ளி வைக்குமாறு உச்ச நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின் அதை ஏற்க மறுத்து விட்டது. வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

நம் முன்னால் இருக்கும் சில கேள்விகள்

1947 இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன்பின் தான் அரசியலமைப்பு சட்டம் மற்றும் இதர சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டங்களின் அடிப்படையில், ஒருங்கிணைந்த இந்தியாவாக ஆவதற்கு முன்புள்ள காலத்தில் அதாவது 1528-ல் ஏற்பட்ட நிகழ்வுகளால் பாதிக்க ப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா?

நம் நாட்டு சட்டமே ஆங்கிலேயர் சட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே 1885-ல் தொடர்ந்த வழக்கில், "356 ஆண்டுகாலத்திற்கு முன்புள்ள பிரச்சனைக்கு இப்பொழுது நிவாரணம் வழங்க முடியாது" என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந் நிலையில் 481 ஆண்டுகளுக்குப்பின், "மசூதி இருக்கும் இடம் ராமர் கோவில். அது இந்துக்களுக்கு சொந்தமானது" என தீர்ப்பு வழங்க முடியுமா?
         
அப்படி வழங்கினால், "ராமர் காலத்திற்கு முந்தியவர்கள் நாங்கள். எங்கள் இடத்தில் தான் ராமர் கோவில் கட்டப்பட்டது" என பழங்குடி மக்கள் உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்தால், நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குமா? ராமர் காலத்தில் மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான். மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்தவர்கள் தான் ஆதிகால மனிதர்கள். அவர்களின் வாரிசுகள்தான் இன்றைய பழங்குடி, மலை வாழ் மக்கள்.

பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என முடிவெடுப்பதை காட்டிலும், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அந்த இடத்தில் கோவிலையும், மசூதியையும் கட்டி வழிபாடு செய்யவேண்டும் என முடிவெடுப்பதே சிறந்தது!.

FLASH NEWS

அலகாபாத் உயர் நீதிமன்றம் சிறிது நேரத்திற்கு முன் தனது தீர்ப்பை வெளிட்டுவிட்டது. அதன் விபரம். கீழே தரப்பட்டுள்ளது.

1. நிலம் தனக்கே சொந்தமானது என்ற வஃக்ப் போர்டின் உரிமை கோரும் மனு தள்ளுபடி.

2. நிலம் தனக்கே சொந்தம் என்ற நிர்மோகி அகோரா என்ற இந்து அமைப்பின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

3.  நிலம் மூன்றாக பிரிக்கப்பட்டு, அதில் ராமர் விக்கிரகம் இருக்கும் பகுதி ராம் லாலா என்ற இந்து நிர்வாக குழுவிடம் வழங்கப்படவேண்டும்.

4. ஒரு பகுதி பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்கப்படவேண்டும்.

5. மீதி பகுதி  நிர்மோகி அகோரா அமைப்பிடம் வழங்கப்படவேண்டும்.

6. இந்த  நிலப்பிரிவு 3 மாதங்களுக்குள் செய்யப்படவேண்டும். அதுவரை இன்றைய நிலையே தொடரவேண்டும்.


13 comments:

 1. 1992 செப்டம்பர் 6-ல் கரசேவக் அமைப்பால் மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது. I guess it is December 6

  ReplyDelete
 2. இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அந்த இடத்தில் கோவிலையும், மசூதியையும் கட்டி வழிபாடு செய்யவேண்டும் என முடிவெடுப்பதே சிறந்தது!.
  ////
  mmm mudiyumaa ??!??!

  ReplyDelete
 3. Dominic RajaSeelan said...

  migavum arumaiyaana pathippu anbara ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. carthickeyan said...

  1992 செப்டம்பர் 6-ல் கரசேவக் அமைப்பால் மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது. I guess it is December 6 ////

  தங்கள் வருகைக்கு நன்றி. தவறை சுட்டிகாட்டிய்தற்கு நன்றி. இப்பொழுது அது திருத்தப்பட்டு விட்டது

  ReplyDelete
 5. பிரியமுடன் பிரபு said...

  இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அந்த இடத்தில் கோவிலையும், மசூதியையும் கட்டி வழிபாடு செய்யவேண்டும் என முடிவெடுப்பதே சிறந்தது!.
  ////
  mmm mudiyumaa ??!??!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு வெளியிடப்பட்டுவிட்டது.

  ReplyDelete
 7. உங்கள் கருத்தில் தான் பல போலிகள் சிந்திக்கிறார்கள்[மன்னிக்க உங்களை அல்ல] நாடு சுதந்திரம் பெற்றபோதும் பழைய வரலாற்றுக் கடன்களை நாம் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணம் முன்னிருந்த சாதிக்கொடுமைக்கு இன்று பரிகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்பிருந்த ஆதி வாசிகளுக்கு இன்றும் பெயரளவிலாவது அவர்களது மலை பகுதிகளில் உரிமை காக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஓதிக்கீடும் இந்தமுறையில் தான். அதனால் பழையக் கணக்கானாலும் அதன் பாதிப்புத் தன்மை யறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.

  ReplyDelete
 8. //பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என முடிவெடுப்பதை காட்டிலும், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் அந்த இடத்தில் கோவிலையும், மசூதியையும் கட்டி வழிபாடு செய்யவேண்டும் என முடிவெடுப்பதே சிறந்தது!.//
  இந்த விஷயத்தில் நான் ஒத்துப் போகிறேன். நல்ல முடிவு. தீர்ப்பும் கூட..

  ReplyDelete
 9. இனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.

  இத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. 'இந்திய மதச்சார்பின்மை' எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு. அம்புட்டுதான்.

  ஆனால், நிலம் பெற்றவர்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். உடனடியாய் கோவில் கட்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானையே விரைவில் ஓவர்டேக் செய்வார்கள். அதற்குத்தானே அடித்துக்கொள்கிறார்கள்?

  பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்’என்று சட்டம் வகுத்து விட்டு
  நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை ‘இங்கு தான் ராமர் பிறந்தார்’
  என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

  ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல்
  ‘குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை’ போல சர்ச்சைக்குரிய நிலத்தை
  மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு
  ‘கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த’ கதையாக உள்ளது! அதுவும் பாய் கடை தேங்காய்..!

  இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக்கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்?

  நடத்துங்க.. நடத்துங்க... உங்க ராஜ்ஜியம்தானே...

  ReplyDelete
 10. மொட்டையாக திட்டும் மத வெறியர்களின் கருத்துரை இந்திய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் அனைவரும் சகோதர்கள் என்று [[வதூவசீ]] இந்த கருத்துகாரருக்குப் புரியவையுங்கள்.

  ReplyDelete
 11. smart said...

  உங்கள் கருத்தில் தான் பல போலிகள் சிந்திக்கிறார்கள்[மன்னிக்க உங்களை அல்ல] நாடு சுதந்திரம் பெற்றபோதும் பழைய வரலாற்றுக் கடன்களை நாம் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. வதூவசீ said...

  இனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக ////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete