Tuesday, October 5, 2010

இவங்களுக்கு ஆப்பு வைச்சாலும் ஏன் அறிவு வரல? - சட்டம் நம் கையில்.

இந்தியாவின் சாபக்கேடு சுயநல, ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவது. அதிலும் கொடுமை மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு. குறிப்பாக வங்கிகள்!. இதில் பணிபுரிபவர்களுக்கு , ஏதோ தாங்கள் கொம்பு முளைத்தவர்கள் என்ற நினைப்பு.

சென்னை முகப்பேரில் வசிக்கும் மாணவர் எஸ். மாறன். இவர் தலித் இனத்தை சார்ந்தவர். இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்பத்தில் முதலாவதாக கல்லூரியில் படிப்பவர். கல்விக்கடன் பற்றி விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இவர் பெற்றோகள் மிகவும் சிரமப்பட்டு முதலாமாண்டு கல்லூரி கட்டணத்தை செலுத்திவிட்டனர். வேறு வழி இல்லாத நிலையில், கல்விக்கடன் பெற முகப்பேரிலுள்ள ஸ்டேட் பாஃங் ஆஃப் திருவிதாங்கூர் வங்கி கிளையில் இந்த ஆண்டு (2-ம் ஆண்டு) விணப்பித்தார். எவ்விதமான பதிலும் வங்கி தெரிவிக்காததால் இந்த ஆண்டுக்குரிய கல்விக்கட்டணத்தை கடன் வாங்கி கல்லூரியில் செலுத்திவிட்டார். இந் நிலையில் அவரது விண்ணப்பத்தை மேற்படி வங்கி நிராகரித்து விட்டது.

இதை ஆட்சேபித்து இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
நீதிமன்றத்தில் வங்கி, மெரிட் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கவேண்டும் என்ற " இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பேங்க்ஸ்" ( ஐ.பி.ஏ) -ன் அறிவுரையின் படி, இந்த மாணவர் தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை கடுமையாக நீதிமன்றம் ஆட்சேபித்தது.

"பரோடா மன்னரின் உதவியை பெற்று படித்து வந்த டாக்டர் அம்பேத்கார் பள்ளியிறுதி தேர்வில் 750 மார்க்கு 287 மார்க் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மன்னர் அவருக்கு தனது உதவியை தொடர்ந்ததால், அம்பேத்கார் என்ற சட்ட நிபுணரை நம்மால் பெற முடிந்தது" என குறிப்பிட்ட உயர்நீதிமன்றம்,  நலிவுற்ற நிலையில் உள்ள பிரிவினர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வங்கி இன்னும் 4 வார காலத்திற்குள் கடன் அனுமதிக்க வேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகம் மாணவரிடமிருந்து பெற்றுக்கொண்ட 2-ம் ஆண்டுக்குரிய கட்டணத்தை திருப்பி அளிக்கவேண்டும் எனவும் உத்தவிட்டுள்ளது.5 comments:

 1. I'm always watching your site. Please do this blog live because we want you..

  ReplyDelete
 2. linelogesh said...

  I'm always watching your site. Please do this blog live because we want you..


  தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து பதிவுகள் வெளி வரும். ஆதரவிற்கு நன்றி

  ReplyDelete
 3. நம்மைப்போல் சிலரால்தான் ஊழல்வாதிகளும், இந்த அரசியல் வாதிகளும் லஞ்ச ஊழலை சட்டமாக்காமல் இருக்கிறார்கள், எதற்காகவும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்... நம்மை ஓர் நாள் உலகம் அறியும்... தொடர்ந்து அநீதியயும்,லஞ்சத்தையும் ஊழலையும் எதிர்துக்கொண்டே............ இருப்போம். ஜெய்ஹிந்த்

  ReplyDelete
 4. இந்த மாணவர் சென்னையில் இருந்ததால் வழக்கு போட்டு கடன் வாங்க வழி செய்துவிட்டார் ....இவர் கிராமத்தில் வசித்து இருந்தால் இந்த ஐடியா வந்து இருக்காது ...இந்த நிகழ்ச்சி பேப்பரில் வந்திருக்க வேண்டும் ... அப்பொழுது தான் எல்லோருக்கும் கோர்ட்டுக்கு போகலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் ..தங்களின் மூலம் இது வெளியே தெரிந்ததால் இந்த மாதிரி பாதிக்க படுபவர்களுக்கு உதவி செய்ய வலி ஏற்பட்டு விட்டது ...நன்றி ஐயா ....

  ReplyDelete
 5. Dear Sir, I read many of your blog articles. Thanks for sharing your experience.

  ReplyDelete