Friday, October 8, 2010

அறிவு கெட்ட முண்டம்

செங்கோட்டையில் பிறந்து, பள்ளியில் படித்து பின் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்த நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை " அறிவு கெட்ட முண்டம்" - இது முட்டாள் என்ற சொல்லுக்கு மாற்று. 1986-ல் நான் சென்னைக்கு வந்து குடியேறும் வரை நெல்லை மாவட்டத்தில்( தூத்துக்குடி உட்பட) புழக்கத்தில் இருந்த ஒரு செல்லமான சொல். இபொழுது அங்கு புழக்கத்தில் உள்ளதா என தெரியவில்லை.

நான் சென்னைக்கு வந்த புதிதில் நடந்த ஒரு சம்பவம் இது. ஒரு நாள் காலை நான் டூ வீலரில் மவுண்ட் ரோடு சென்றிருந்தேன். அப்பொழுது எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பியெட் கார், எந்த அறிவிப்புமின்றி சட் என நிற்க, பின்னால் வந்த நான் அதில் மோதி கீழே விழுந்தேன். நல்ல வேளையாக பெரிய காயம் ஒன்றும் ஏற்படவில்லை. காலிலும், கையிலும் சிறு சிராய்ப்புதான். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. காரை ஓட்டிவந்தவர் கீழே இறங்கினார்.

சிலர் என் டூவிலரை எடுத்து ரோட்டின் சைடில் நிறுத்த, ஒருவர் என்னை கைத்தாங்கலாக, அங்கு அழைத்து சென்றார். காரை ஓட்டி வந்தவர் என்னிடம்    "அடி ஒன்னும் பலமா படவில்லையே?" என்றார். எனக்கொ பத்திக்கிட்டு வந்தது. " அறிவு கெட்ட முண்டம். வண்டிய நிறுத்த போறேனா, சிக்னல் காட்ட வேண்டியதுதானே?" என, உடம்பில் ஏற்பட்ட சிராய்ப்பினால் ஏற்பட்ட எரிச்சலில் கடுப்பில் இருந்த நான் அவரிடம் கத்தினேன்.

இதற்குள், வந்தவன் போனவன் எல்லாம் பஞ்சாயத்திற்கு தயாரா கூடிட்டானுக. தூரத்தில் நின்று கொண்டிருந்த டிராபிக் மாமாவும் வந்துவிட்டார். அவர் காரை ஓட்டிவந்தவரை, காரை ஓரங்கட்ட சொன்னார். காரும் ஓரங்கட்டப்பட்டு விட்டது. 

அடுத்தகட்ட சடங்குக்கு தயாரான மாமா, டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி, டோக்கன், இன்ஸ்யூரன்ஸ் எல்லாத்தையும் செக் பண்ண ஆரம்பித்தார். நான் வண்டியை பார்த்தேன். வண்டிக்கு எதுவும் ஆகவில்லை. ஸ்டார்ட் ஆனது. ஹெட் லைட் கிளாஸ் மட்டும் உடைந்து போயிருந்தது. காரை ஓட்டிவந்தவர், " கார் இஞ்சின் ஆஃப் ஆகிவிட்டது. நான் நிறுத்தவில்லை. திரும்ப ஸ்டார்ட் பண்றதுக்குள்ள, நீங்க வந்து மோதிட்டீங்க" என கூறிவிட்டு, தான் ஜி.ஹெச்-ல் டாக்டர் என்று கூறி, தன் விசிட்டிங் கார்டை தந்தார்.  காரிலிருந்து, ஆயில்மெண்ட், பிளாஸ்டர் எடுத்துவந்து, என் சிராய்ப்புகளை கிளீன் செய்து, மருந்து போட்டார். அப்பொழுது சிரித்துக்கொண்டே என்னிடம் "உங்களுக்கு திருநெல்வேலியா? என்றார். ஆமாம் எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்டேன். " அறிவு கெட்ட முண்டம் நம்ம ஊரு சொல்லாச்சே" என்றார். உண்மைதான். சென்னையில் திருநெல்வேலிக்காரர்களை தவிர வேறு யாரும் இந்த சொல்லை உபயோகித்து நான் கேட்டதில்லை.

நாங்க ரெண்டுபேரும் ராசியானதை பார்த்த போலீஸ் மாமா, கடுப்பாகி போய், கேஸ் புக் பண்ணனும் என்றார். கார் எஞ்சின் ஆஃப் ஆனா அவர் என்ன செய்வார்? நானும் அதை கவனிக்கல. இதுக்கு கேஸ் எல்லாம் வேண்டாம் என கூற, சரியான சாவு கிராக்கி என முனுமுனுத்துவிட்டு போய்விட்டார்.

இந்த சம்பவம் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.


8 comments:

 1. அறிவு கெட்ட முண்டம். மனிதரிடம் அறிவு கேட்டு போனால் அவர்கள் முண்டம் என்பதை குறிக்கும் வாக்கியம் இது. நெல்லை சொல் அழகு சொல்.

  நல்ல நிகழ்வு நினைவு கூறல். எத்தனை அழகாக ஒரு பிரச்சினை முடிந்து போனது. டிராபிக் போலிஸ் என சொல்லி இருக்கலாம்.

  ReplyDelete
 2. V.Radhakrishnan said...

  அறிவு கெட்ட முண்டம். மனிதரிடம் அறிவு கேட்டு போனால் அவர்கள் முண்டம் என்பதை குறிக்கும் வாக்கியம் இது. நெல்லை சொல் அழகு சொல்.///

  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. Mothal kaathalil mudiyum enbaargal, inge natpaai thodangiyathu!
  Innum natpu thodargirathaa?...
  nice.

  ReplyDelete
 4. saigokulakrishna said...

  Mothal kaathalil mudiyum enbaargal, inge natpaai thodangiyathu!
  Innum natpu thodargirathaa?...
  nice.
  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 5. neengalum nammoor dhaana?
  Used to live in VOC quarters in Chidambara nagar!

  ReplyDelete
 6. நல்ல காலம் இந்தியாவாயிற்று, சவூதி அரேபியாவாக இருந்தால் ................

  ReplyDelete
 7. மக்கா ... ...ஏலவுல போறவனே ....எலே ....என்னலே.... நாய்யி ..நாயி...இப்படி நிறைய இருக்குது ...நெல்லை பாசையே.. ஒரு இன்பம் தான் ... நீங்களும் நம்ம உருக்காகவுளா...சரி..சரி ...

  ReplyDelete
 8. ஆஹா ...நீங்க செங்கோட்டையா...நான் பிரானூர் பார்டல் பணிபுரிகிறேன். இன்னிக்கிதான் உங்க வலை பக்கம் வந்தேன்...நல்லாவே எழுதறீய ! !

  ReplyDelete