Saturday, October 9, 2010

என் சோக கதை ! - சட்டம் நம் கையில்


தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!
பாடி கெடுத்தான் பாரதி.
இங்கே எங்களுக்கு
இருக்க இடமில்லை
உடுக்க உடையில்லை
உண்ண உணவில்லை.
அழித்திடட்டுமா ஜகத்தினை?
இல்லை இல்லை 
இந்த பாரதத்தை!
காமன் வெல்த் கேமாம்!
கோவணத்தை கழற்றி
தலைப்பாகு கட்டலாமா?
சோத்துக்குவழியில்லை
எழுபதாயிரம் கோடியில்
ஊழல் விளையாட்டு!
வீணாபோகும் உணவுப்பொருள்
எங்களுக்கு கொடுக்கலாம்
சொன்னது நீதிமன்றம்
வந்ததே கோபம் பிரதமருக்கு!
வீணாக்குவது அரசு கொள்கையாம்.
காந்தி இங்குவந்தால்
கையில் இருக்காது
கைத்தடி!
அவரும் மாறிவிடுவார்
தீவிரவாதியாக


13 comments:

  1. அடுத்த மாசம் ஒபாமா வேற வர்றாராம் , இன்னும் என்னன்னா கூத்து பண்ணப்போரானுகளோ ?

    ReplyDelete
  2. அட நான்தான் மொதோ வெட்டா ????

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது ..

    ReplyDelete
  4. உங்கள் கோபம் நியாயமானதே

    ReplyDelete
  5. மங்குனி அமைசர் said...

    அடுத்த மாசம் ஒபாமா வேற வர்றாராம் , இன்னும் என்னன்னா கூத்து பண்ணப்போரானுகளோ //

    வாருங்கள் மாங்குனி அமைச்சரே!

    ReplyDelete
  6. S.Sudharshan said...

    நன்றாக இருக்கிறது ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. VELU.G said...

    உங்கள் கோபம் நியாயமானதே///


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. //வீணாபோகும் உணவுப்பொருள்
    எங்களுக்கு கொடுக்கலாம்
    சொன்னது நீதிமன்றம்
    வந்ததே கோபம் பிரதமருக்கு!//

    uyirmaiyl muthtukkumar katturai padiyungkal. vaalththukkal.

    ReplyDelete
  9. சீனியர் சிங்காரம் said...

    நன்றாக இருக்குது!///

    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மதுரை சரவணன் said...

    //வீணாபோகும் உணவுப்பொருள்
    எங்களுக்கு கொடுக்கலாம்
    சொன்னது நீதிமன்றம்
    வந்ததே கோபம் பிரதமருக்கு!//

    uyirmaiyl muthtukkumar katturai padiyungkal. vaalththukkal //

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. You are SIMPLY great!
    உங்களை தொடர்பவர்களில் நானும் ஒருவன்.
    உங்களின் பயணம் சிறக்க - வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  12. சூபர் கவிதை சார் ...என்னா சார் ...இவ்வளவு சரக்குகளை வைத்து கொண்டு ...பொசுக்குனு கோபம் வந்து எழுத மாட்டேன்னு சொல்லிட்டீங்கள... இது ஒவ்வரு இந்தியனுக்கும் உள்ள கோபம்.... சின்ன இலங்கை நாடு ...எவ்வளவு தெனாவட்ட நம்ம எல்லையில் நுழைந்து நம் மீனவர்களை கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான் .....ஏன் இந்தியனுக்கு கோபமே கிடையாதா ...இதில் நாம் வல்லரசாகி என்னத்தை கிழிக்க போகிறோம்

    ReplyDelete