Wednesday, October 13, 2010

இவர்கள் அங்கு எதை புடுங்குகிறார்கள்? - சட்டம் நம் கையில்.

கேரளாவை சேர்ந்த பீபி லுமாடா என்ற 40 வயது பெண், மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் அந்த வேலை வேண்டாம், ஊருக்கு திரும்பி வந்து விடலாம் என முடிவு செய்து, மஸ்கட்டில் தங்கி இருப்பதற்கான தனது விசாவை ரத்து செய்து விட்டு, தோகா வழியாக சென்னை வரும் "கட்டார் ஏர்வேய்ஸ்" விமானத்தில் பயணம் செய்தார். வரும் வழியில் தோகாவில்அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனதால், அவர் தோகா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். சென்னை வர அனுமதிக்கப்படவில்லை. அதன் பின் விதிமுறைகளின் படி அந்த பெண் வேறு விமானத்தில் மஸ்கட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததாலும், அவருக்கு, வழங்கப்பட்டிருந்த தங்கும் விசாவை அவர் ரத்து செய்து விட்டபடியாலும் அவரை மஸ்கட்டினுள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

இந்நிலையில், விமான நிறுவனம், இந்திய தூதரகத்திற்கு இது பற்றி பலமுறை தகவல் கொடுத்தும், விமான நிலையத்திற்கு வந்து அந்த பெண்ணை சந்திக்கவே இல்லை. விமான நிலைய பகுதிக்குள் (Transit Area) ஹோட்டல் எதுவும் இல்லாததால் விமான நிறுவன அதிகாரிகள், அவருக்கு, உணவு, தண்ணீர், போர்வை போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

ஐந்து நாட்கள் ஆகியும், பல தடவை  இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்திருந்தும் தூதரக அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டது. உடனடியாக அவரை விமான கம்பெனி விமான நிலையத்திலிருந்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். அவர் நிலை மேலும் மோசமானதால் அவர் ஆம்புலன்ஸ் மூலமாக "Bin Sina Psychiatric Hospital" -க்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக, ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும். அதன் காரணமாகவே அவர் இறந்துவிட்டார் என்வும் உயர் நிலை மருத்துவர் கூறியுள்ளார்.

சிறிது கூட வெட்கமோ, மனட்சாட்சியோ இல்லாமல், இந்தியன் அம்பாஸிடர் அனில் வத்வா, பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளே காலதாமத்திற்கு காரணம் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதோடு, அவர் உடல் மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மீடியாக்களால் இச்சம்பவம் வெளிப்படுத்தப்பட்ட பின், வெளியுறவுத்துறை அமைச்சர், இதுபற்றி விசாரிக்க உயர் அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பப்படுவார் என தெரிவித்துள்ளார்.

சில சந்தேகங்கள்.

மக்களுக்காக சட்டங்களும், நடைமுறை விதிகளுமா? அல்லது சட்டங்கள், நடைமுறை விதிகளுக்காக மக்களா?

இதைப்போலவே, சோனியா காந்தி தனது பாஸ் போர்ட்டை தொலைத்துவிட்டு, ஏர்போர்ட்டில் அம்போ என நின்றிருந்தால், இந்த தூதர் நடைமுறை விதியை காரணம் காட்டி இது போலவே, அங்கு சென்று உதவி செய்யாமலிருந்திருப்பாரா? அல்லது தன் மனைவி மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் இப்படி செய்திருப்பாரா?

வெளி நாட்டில் பாஸ் போர்ட்டை தொலைத்துவிட்டு. விமான நிலையத்தில் அம்போ என பரிதவித்த  ஒர் இந்திய பெண்மணிக்கு, இந்தியா திரும்ப வழி செய்ய முடியாத ஒரு தூதர் தேவையா? 

இதைக்கூட செய்யாமல், தூதரும் அவர் அலுவலக அதிகாரிகளும் மஸ்கட்டில் என்னத்தை அங்கு புடுங்கி கொண்டிருக்கிறார்கள்? உங்களை புல் புடுங்கவா தண்ட சம்பளம் கொடுத்து அங்கே அனுப்பியிருக்கிறோம்?

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!

அட போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்!

18 comments:

 1. //பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளே காலதாமத்திற்கு காரணம் //

  தெளிவா இருக்காங்க.. வரிகட்ட மட்டும்தான் நாம..
  நம் உயிரைப்பற்றி துளிகூட அக்கறையில்லாமல்..

  இந்தியா முன்னேறாததற்கு அலட்சியப்போக்கு முக்கிய காரணம்.:(

  ReplyDelete
 2. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் அதி முக்கியமான வேலை “சரக்கு பார்ட்டியில்” கலந்துகொள்வது மட்டுமே. இந்தமாதிரி “பிலடி பெக்கர் இண்டியன்ஸ்”-களுக்கு உதவி செய்ய அல்ல.

  “பாரத் மாதாக்கி ஜே!”

  ”சோனியா ஜீ!“யின் முகத்தில் பாரத் மாதாவை பார்த்துவிட்டு நக்கி பிழைப்பது மட்டுமே தேசபக்தி உள்ள இந்தியனின் கடமை.

  ReplyDelete
 3. இப்பவாவது இந்திய தூதரகங்கள் என்ன அளவில் செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெளிவாகட்டும். இப்போ தனியா இதுக்குனு அமைச்சர் வேற இருக்காராம்.

  ReplyDelete
 4. நிகழ்காலத்தில்... said..

  \\\தெளிவா இருக்காங்க.. வரிகட்ட மட்டும்தான் நாம..
  நம் உயிரைப்பற்றி துளிகூட அக்கறையில்லாமல்..

  இந்தியா முன்னேறாததற்கு அலட்சியப்போக்கு முக்கிய காரணம்.:(///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. seeprabagaran said...

  வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் அதி முக்கியமான வேலை “சரக்கு பார்ட்டியில்” கலந்துகொள்வது மட்டுமே. இந்தமாதிரி “பிலடி பெக்கர் இண்டியன்ஸ்”-களுக்கு உதவி செய்ய அல்ல////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. seeprabagaran said...

  வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் அதி முக்கியமான வேலை “சரக்கு பார்ட்டியில்” கலந்துகொள்வது மட்டுமே. இந்தமாதிரி “பிலடி பெக்கர் இண்டியன்ஸ்”-களுக்கு உதவி செய்ய அல்ல ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 7. ஹுஸைனம்மா said...

  இப்பவாவது இந்திய தூதரகங்கள் என்ன அளவில் செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெளிவாகட்டும். இப்போ தனியா இதுக்குனு அமைச்சர் வேற இருக்காராம் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 8. அய்யா திரவியம்,

  கோபப்படவேண்டாம்....சாதாரண‌
  மக்களுக்கு அதிகார வர்க்கம் என்று
  உதவி செய்திருக்கிறது?.

  அதிலும் நம் நாட்டு தூதரகங்கள்
  மனிதாபம் இல்லாதவர்கள்.யாராவது
  அமைச்சர் அல்லது உள்ளூர்காரர்களிடம்
  "சுயலாபத்திற்கு" அடிபோனவர்கள்.

  பாவம் அந்த அம்மா....?

  ReplyDelete
 9. எண்ணத்துப்பூச்சி said...

  அய்யா திரவியம்,

  கோபப்படவேண்டாம்....சாதாரண‌
  மக்களுக்கு அதிகார வர்க்கம் என்று
  உதவி செய்திருக்கிறது? ///

  கோபப்படாமல் என்ன செய்ய? இயலாதவனின் ஆயுதம் எழுத்து!

  ReplyDelete
 10. இவனுங்களுக்கு தினமும் பார்ட்டிக்கு போய் ஓசி சரக்கு அடிக்குறதுதான் வேலை.பிரச்சனையில இருக்குறவங்களுக்கு உதவுறதா முக்கியம்?
  லுமாடா கொலையால(இது மரணம் இல்ல, கொலை)இவனுங்க அட்டகாசம் கொஞ்சம் வெளியே தெரியுது.

  ReplyDelete
 11. வானம் said...

  இவனுங்களுக்கு தினமும் பார்ட்டிக்கு போய் ஓசி சரக்கு அடிக்குறதுதான் வேலை.பிரச்சனையில இருக்குறவங்களுக்கு உதவுறதா முக்கியம்?
  லுமாடா கொலையால(இது மரணம் இல்ல, கொலை)இவனுங்க அட்டகாசம் கொஞ்சம் வெளியே தெரியுது ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 12. கொடுமையா இருக்கே!

  ReplyDelete
 13. வானம் said...

  இவனுங்களுக்கு தினமும் பார்ட்டிக்கு போய் ஓசி சரக்கு அடிக்குறதுதான் வேலை.பிரச்சனையில இருக்குறவங்களுக்கு உதவுறதா முக்கியம்?///

  உண்மைதான் நண்பரே!

  ReplyDelete
 14. வால்பையன் said...

  கொடுமையா இருக்கே!///

  ஆமாம் வாலு எதாவது செய்யனும்!

  ReplyDelete
 15. ILA(@)இளா said...

  போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!//

  மிகவும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. ஒரு இந்தியர்னு வேண்டாம், மனிதாபிமானம் கூட இல்லாம போச்சே.

  ReplyDelete
 17. தச்சை கண்ணன்// எல்லாம் நம்ம தலை எழுத்து ......NRI களின் பணம் மட்டும் நமக்கு வேண்டும் ....ஆனால் ஒரு வசதியும் செய்து தர மாட்டார்கள் ....ஒரு சின்ன நாடு இலங்கை ...அது நம் மீனவர்களை என்னா பாடு படுத்துது ....மாநில மத்திய அரசுகள் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது ....சீனாக்காரன் போட் ஒன்னு ஜாபன்காரன் போட்டில் இடித்தது என சொல்லி ஜப்பான்காரன் பிடிச்சி வைத்து கொண்டதற்கு ....சீனாக்காரன் என்னா குதி குதித்தான் ....ஆனால் நம் இந்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது ....இதில 2020 ல் நாம் வல்லரசாக வேண்டுமாம் ....நாமும் கனவு காண வேண்டுமாம் ...இந்த அரசுகளின் செயல் பாடுகளால் ...இந்தியன் என் சொல்லவே வெட்க பட வேண்டும் போல் உள்ளது ....இன்று நம் மீனவர்களின் நிலையம் அது தானே ....

  ReplyDelete