Saturday, October 16, 2010

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒரு(கற்பனை) பேட்டி! - திரவிய நடராஜன்

நிருபர்: வணக்கம் பிரதமர் அவர்களே.

பிரதமர்: வணக்கம்.

நிருபர்: தமிழ் வலையுலகம் சார்பாக தங்களை பேட்டி காண வந்துள்ளோம்.

பிரதமர்: நல்லது.

நிருபர்: காமன் வெல்த் கேம் ஊழல் பற்றி விசாரிக்க நீங்கள் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறீர்களே. அதை பற்றி சொல்லுங்கள்.

பிரதமர்: சோனியா அம்மையார் சொன்னார். நான் அமைத்தேன். அவ்வளவுதான்.

நிருபர்: இந்த கமிட்டி எப்படி செயல்படும்?

பிரதமர்: சி.பி.ஐ போல பாரபடசமில்லாமல் நடு நிலையோடு, நாங்கள் சொல்லுவது போல செயல்படும்.

நிருபர்: எவ்வளவு நாட்களில் விசாரித்து அறிக்கை அளிக்கும்?

பிரதமர்:  நாங்கள் நிறுத்த சொல்லும் வரை விசாரித்துக்கொண்டே இருக்கும்.

நிருபர்: அப்படின்னா?

பிரதமர்:  நாங்க ஆட்சியிலிருக்கும் வரை விசாரித்துக்கொண்டே இருக்கும்.

நிருபர்: ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டால், என்ன செய்வீர்ர்கள்?

பிரதமர்: ஊழல் செய்வது என்பது ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது!

நிருபர்: ஒருவேளை இக்கட்டான சூழ் நிலை ஏற்பட்டால்?

பிரதமர்: சுரேஷ் கல்மாடிதான் பலிக்கடா!

நிருபர்: அதாவது  ஐ.பி.எல் கேசில்  ஷரத் பவாரை விட்டுட்டு சசிதரூரை பலிக்கடா ஆக்கினமாதிரி

பிரதமர்: ஆமாம்.

நிருபர்:  அதுக்கு பின்?

பிரதமர்:  காங்கிரஸ் பாலிசி தான்!

நிருபர்: புரியல

பிரதமர்: நீ எல்லாம் ஒரு இந்தியனா இருக்கவே லாயக்கில்லை. சி.பி.ஐ முதலில் வழக்கு பதிவு செய்யும். அதுக்கு பின் முகாந்திரம் இல்லைன்னு அந்தர் பல்டி அடித்து, கல்மாடிக்கு கிளீன் சிட் கொடுத்திடும். முடுஞ்சிது விஷயம்!

நிருபர்: இந்திய பிரதமராக இருந்தும் எவ்வளவு அடக்கமாக பதிலளிக்கிறீர்கள்!

பிரதமர்: யார் சொன்னது நான் பிரதமர் என்று?  காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் என்பது சோனியா அம்மையாரின் H M V ரிக்கார்டு மாதிரி. அவங்க குரலை மட்டுமே ஒலிப்பேன்! அவ்வளவுதான்.

நிருபர்: அப்படியா?

பிரதமர்: எனக்கு சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது. அம்மையாரிடம் அனுமதி வாங்கவேண்டும். அதனால இதோடு பேட்டியை முடித்துக்கொள்வோம்.

நிருபர்: நல்லது பிரதமர் அவர்களே!  மீண்டும் சந்திப்போம். நன்றி!



7 comments:

  1. வணக்கமுங்க தம்பி..அப்படியே..ஈழத்தைப் பற்றி ஓரு கேள்வி கேட்டு இருக்கலாமே தம்பி.

    ReplyDelete
  2. தாராபுரத்தான் said...

    வணக்கமுங்க தம்பி..அப்படியே..ஈழத்தைப் பற்றி ஓரு கேள்வி கேட்டு இருக்கலாமே தம்பி ////

    வணக்கம் அண்ணாச்சி. பேட்டி இன்னும் தொடரும். என்னா டெல்லியிலிருந்து ஆட்டோ வராதுல்லா!

    ReplyDelete
  3. தேர்தல் நாள் அன்று இவை நம் மனதில் நிற்கிறதா

    ReplyDelete
  4. //நிருபர்: இந்திய பிரதமராக இருந்தும் எவ்வளவு அடக்கமாக பதிலளிக்கிறீர்கள்!

    பிரதமர்: யார் சொன்னது நான் பிரதமர் என்று? காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் என்பது சோனியா அம்மையாரின் H M V ரிக்கார்டு மாதிரி. அவங்க குரலை மட்டுமே ஒலிப்பேன்! அவ்வளவுதான்.//

    மற்ற விசயங்களுக்குத்தான் அப்படி.அம்பானிக்கும் அமெரிக்காகாரனுக்கும் சூ..(shoe) தொடைக்கிற வேலையை மட்டும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் செய்வார்.

    ReplyDelete
  5. ராம்ஜி_யாஹூ said...

    //தேர்தல் நாள் அன்று இவை நம் மனதில் நிற்கிறதா//

    மனதில் நிற்கவேண்டும்!

    ReplyDelete
  6. வானம் said...
    //மற்ற விசயங்களுக்குத்தான் அப்படி.அம்பானிக்கும் அமெரிக்காகாரனுக்கும் சூ..(shoe) தொடைக்கிற வேலையை மட்டும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் செய்வார்.//

    இந்திரா காங்கிரஸ் அமெரிக்காவின் ஏஜண்ட் என்பதுதான் பச்ச குழந்தைக்கு கூட தெரியுமே!

    ReplyDelete
  7. MMS - MOST MANAGED BY SONIA - Man mohan singh
    is it correct??

    ReplyDelete