Friday, October 22, 2010

தனியார் பள்ளிகளுக்கு நிணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள்

எனது முந்தைய " விடைபெறுகிறேன்" பதிவிற்கு பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்தை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழ் நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்த ராஜன் கமிட்டி நிணயித்துள்ள கல்விக்கட்டணத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலயில் தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகள் அந்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். அவை பற்றிய விபரங்களை கீழே தந்துள்ளேன்.

அதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

பி. திரவிய நடராஜன்


22 comments:

 1. தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 2. சூர்யா ௧ண்ணன் said...

  மிக்க நன்றி ஐயா!.//

  தங்கள் வர்ருகைஇக்க்கு நன்றி

  ReplyDelete
 3. Chitra said...

  தகவல் பகிர்வுக்கு நன்றிங்க///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. This seems to be a misguided interference from govt.
  it's a democracy. people are here to make money in a legal way which is based on markets and competetion.
  if you set price, you are entering in their internal operations.
  govt. should regulate it generally. it can/shouldn't set the price.

  god,govt,healthcare etc are all priced at the market price. why start with schools.

  ReplyDelete
 5. moe said...

  This seems to be a misguided interference from govt.
  it's a democracy. people are here to make money in a legal way which is based on markets and competetion.///

  மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, கல்வி மக்களின் அடிப்படை உரிமை. அதை சுய லாபத்திற்காக புறக்கணித்ததால்தான் தனியார் இத்துறையில் நுழைந்தனர். தனியார் ஈடுபடும் பொழுது அதை அவர்களால் சேவையாக செய்ய முடியாது. முதலீடுக்கு ஏற்ப லாபம் எதிர்பார்ப்பது நியாயமே. அதில் அரசு தலையிட்டு கட்டணம் நிணயம் செய்வது சர்வாதிகாரமானது, முட்டாள்தனமானது.

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றிங்க சார்

  ReplyDelete
 7. க.பாலாசி said...

  பகிர்வுக்கு நன்றிங்க சார்///

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. நீங்க கொடுத்த சுட்டி firefox ல் திறக்கவில்லை.
  http://www.tn.gov.in/departments/sedu/priv_Sch_Fee.pdf
  தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அதே பட்டியல் தானா?

  அதிகக் கட்டணம் வசூலித்து விட்டு அடிப்படை வசதிகளைக் கூட சரியாகச் செய்யாமல் பிள்ளைகளை ஆட்டு மந்தைகள் கூட்டம் போல் ஒரே அறையில் அடைத்து பாடம் என்ற பெயரில் அவர்கள் வயதுக்கு அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்து போதாததற்கு வீட்டுப் பாடங்கள் அதிகமாகக் கொடுத்து அதை செய்ய பல பெற்றோர்கள் டியூஷன் வைக்கும் கட்டாயத்துக்கு தள்ளும் பள்ளிகள் பற்றி உங்கள் கருத்து ?

  ReplyDelete
 9. virutcham said...

  நீங்க கொடுத்த சுட்டி firefox ல் திறக்கவில்லை.
  http://www.tn.gov.in/departments/sedu/priv_Sch_Fee.pdf
  தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அதே பட்டியல் தானா?///

  அதே தான். நானும் பயர்பாக்ஸ் தான் போட்டிருக்கிறேன். எல்லொருக்கும் திறக்கிறதே!

  ReplyDelete
 10. அந்த கட்டணம் வருடத்திற்கா அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையா தல!?

  ReplyDelete
 11. வால்பையன் said...

  அந்த கட்டணம் வருடத்திற்கா அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையா தல //

  ஒருவருடத்திற்குதான் இருக்கும் என நினைக்கிறேன். நான் பி.எஸ் சி படிக்கும் பொழுது ஒரு டெர்ம் பீஸ் ரூபாய் 60/ மட்டுமே.
  இத பார்க்கும் பொழுது தலையே சுத்துது. இந்த கொள்ளையில இது டெர்ம் பீஸா இருந்தா உருப்பட்ட மாதிரிதான்!

  ReplyDelete
 12. ராம்ஜி_யாஹூ said...

  thanks, vaal payyan lol ///

  வாங்க ராம்ஜி!

  ReplyDelete
 13. கட்டணம் வருடத்துக்கு தான்
  ஆனால் பல பள்ளிகளும் முன் கூட்டியே பணம் வாங்கிட்டாங்க. என் பையன் படிக்கும் பள்ளியில் ஒரு வகுப்பறைக்கான அடிப்படைத் தேவையான சன்னல் கூட இல்லாத அறையில் குறைந்தது ஐம்பது குழந்தைகளை அடைத்து வைத்தே (கிட்டத் தட்ட அப்படித் தான் ) பாடம் நடத்துகிறார்கள். பள்ளியோடு போராடிக் கொண்டுஇருக்கிறேன்

  ReplyDelete
 14. //திரவிய நடராஜன் said...
  மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, கல்வி மக்களின் அடிப்படை உரிமை. அதை சுய லாபத்திற்காக புறக்கணித்ததால்தான் தனியார் இத்துறையில் நுழைந்தனர். தனியார் ஈடுபடும் பொழுது அதை அவர்களால் சேவையாக செய்ய முடியாது. முதலீடுக்கு ஏற்ப லாபம் எதிர்பார்ப்பது நியாயமே. அதில் அரசு தலையிட்டு கட்டணம் நிணயம் செய்வது சர்வாதிகாரமானது, முட்டாள்தனமானது. //


  இலாபம் ஈட்டும் முதலீடு என்றால் ஏன் அவர்கள் இதை சாரிட்டி / ட்ரஸ்ட் ஆக்டின்கீழ் தொடங்க வேண்டும். பி.லிமிடட் ஆக தொடங்கலாமே? மன்னார் அன் கம்பெனி லிமிடட் ஆக பதிவி செய்தி ஒன்னாம் வகுப்பை 1 கோடிக்கு விற்று இலாபம் பார்த்தால்கூட யாருக் கேட்கபோவது இல்லை.

  சாரிட்டி / ட்ரஸ்ட் ஆக்டின்கீழ் தொடங்கிவிட்டு இலாபம் வேணும் என்று சொல்வது தவறு அல்லவா?

  **

  1.அவர்களின் நோக்கம் இலாபம் என்றால் சாரிட்டி / ட்ரஸ்ட் ஆக்டின்கீழ் வருபவனவற்றைத் தொடக்கூடாது.

  2.கல்விதான் எங்கள் தொழில் என்று சொன்னால், அவர்கள் பி.லிமிடட் ஆக கல்வி நிறுவனங்களைத் தொடங்க அரசியடம் சட்டம் இயற்றக் கோரவேண்டும்.

  .

  ReplyDelete
 15. irutcham said...

  கட்டணம் வருடத்துக்கு தான்
  ஆனால் பல பள்ளிகளும் முன் கூட்டியே பணம் வாங்கிட்டாங்க. என் பையன் படிக்கும் பள்ளியில் ஒரு வகுப்பறைக்கான அடிப்படைத் தேவையான சன்னல் கூட இல்லாத அறையில் குறைந்தது ஐம்பது குழந்தைகளை அடைத்து வைத்தே (கிட்டத் தட்ட அப்படித் தான் ) பாடம் நடத்துகிறார்கள். பள்ளியோடு போராடிக் கொண்டுஇருக்கிறேன் ///

  தனியார் செய்யவேண்டிய தொழிலை அரசாங்கமும், அரசாங்கம் செய்ய வேண்டியதை தனியாரும் செய்தால் இந்த நிலைதான் ஏற்படும்.

  சாராயக்கடை ஆரம்பித்தால் கொள்முதலில் கமிஷன் கிடைக்கும். பள்ளிக்கூடத்தில் என்ன கிடைக்கும்?

  இவர்களிடம் பதவியை கொடுக்கும் நாம் தான் இந்த அவலத்திற்கு காரணம்!

  ReplyDelete
 16. கல்வெட்டு said...சாரிட்டி / ட்ரஸ்ட் ஆக்டின்கீழ் தொடங்கிவிட்டு இலாபம் வேணும் என்று சொல்வது தவறு அல்லவா?
  1.அவர்களின் நோக்கம் இலாபம் என்றால் சாரிட்டி / ட்ரஸ்ட் ஆக்டின்கீழ் வருபவனவற்றைத் தொடக்கூடாது.

  2.கல்விதான் எங்கள் தொழில் என்று சொன்னால், அவர்கள் பி.லிமிடட் ஆக கல்வி நிறுவனங்களைத் தொடங்க அரசியடம் சட்டம் இயற்றக் கோரவேண்டும்///

  தங்களின் கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் சொல்ல இயலாது. விரிவாக பதிவே போடுவதாக இருக்கிறேன்.

  ReplyDelete
 17. I see some conflicting views. Some say that the school facilities are not good.
  1. Why are they not good? Because they dont have money.
  2. Why did we enroll our kids there? because we dont like public schools Or public schools are not good.

  Law probably should be changed to allow private companies to start schools.
  Since if it's supposed to be for non profit, no one will run private schools.
  Those in the so called missionary schools have non profit motive, but with hidden agenda.

  In other words, non govt. entities run schools for either profit or for other non monetary returns

  nothing is free in this worls. as i said, even god is priced...

  ReplyDelete
 18. moe said Law probably should be changed to allow private companies to start schools.
  Since if it's supposed to be for non profit, no one will run private schools.
  Those in the so called missionary schools have non profit motive, but with hidden agenda ///

  இங்கு பிரச்சனையே அரசு தானே தேவையான கல்வி நிலையங்களை துவங்காமல் தனியாரை இத்துறையில் அனுமதித்தது தான்!.
  இரண்டாவது, அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று கல்வி வழங்குவது.

  ReplyDelete
 19. அஹமது இர்ஷாத் said...

  Thanks for sharing sir.//

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete