Saturday, October 23, 2010

உங்கள் வீடு, நிலம் உங்களுக்கு சொந்தமில்லை !

நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய வீடு, நிலம் இவற்றை உங்கள் இஷ்டப்படி நெடுங்காலம் வைத்திருந்து அனுபவிக்கும், சட்ட ரீதியான அடிப்படை உரிமை உங்களுக்கு கிடையாது!. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. சட்டங்களை இயற்றும் பாராளுமன்றம், சட்ட சபை இவற்றின் உறுப்பினர்களுக்கே பெரும்பாலும் இவை தெரியாது. பிறகு எப்படி சாமானியனுக்கு தெரிந்திருக்கும்? உண்மை இதுதான்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொத்து உரிமை (Right to Property) என்பது இந்தியனின் அடிப்படை உரிமையாக (Fundamental Right) இருந்தது. அதன்படி பொது தேவைக்காக மட்டுமே அரசு, நில ஆர்ஜித சட்டப்படி தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த முடியும். பொது தேவை என்பது, ரயில் பாதை அமைத்தல், சாலைகள், அரசு மருத்துவ மனை போன்ற எல்லா மக்களுக்கும் பயன்படும் விஷயங்கள் மட்டுமே.

எனவே, நிலத்தை கையகப்படுத்தும் பொழுது பாதிப்படையும் நில உரிமையாளர்கள், பெரும்பாலும் எவ்வித ஆட்சேபணையின்றி நிலத்தை கொடுத்துவிட்டு அதற்கான நஷ்ட ஈடு தொகையை பெறுவார்கள். அல்லது அதிகமாக நஷ்ட ஈடு கேட்பார்கள்.

இந்த நிலை 1978 க்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் மத்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது சட்டதிருத்தத்தின் மூலம்,  அடிப்படை உரிமையாக இருந்த சொத்து உரிமையை ரத்து செய்தது. அதன் படி அரசு விரும்பினால் எந்த ஒரு திட்டத்திற்காகவும் நிலத்தை கையகப்படுத்தலாம். என்ன கொடுமை!

நாட்டை அடமானம் வைத்து உலகவங்கியில் கடன் வாங்க ஆரம்பித்தார்கள். உலக வங்கியின் அடிப்படி நோக்கமே, வளரும் நாடுகளுக்கு கடனுதவி அளித்து, அவற்றை வளர்ந்த நாடுகளின் உற்பத்தி கேந்திரமாகவும், சந்தையாகவும் மாற்றுவது தான்.

அதற்கு ஏற்ப இந்திய அரசும் தாராளமய கொள்கைக்கு கதவை திறந்தது. அந்நிய முதலீடு என்ற பெயரில் வெளி நாட்டு கம்பெனிகள் இங்கு தொழில் துவங்க வருகின்றன. அவற்றுக்கு தேவைப்படும் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி, சலுகை விலையில் வழங்குகிறது.

1978-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 2007 ஒரு சமூக நல அமைப்பால் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கபாடியா, ராதாகிருஷ்னன் அடங்கிய பென்ச்  ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

எனவே எந்த நேரத்திலும் உங்கள் சொத்து உங்களிடமிருந்து சட்ட ரீதியாக பறிக்கப்படலாம். எச்சரிக்கை!
 
 

6 comments:

 1. பாஸ்,
  நான் கேள்விப்பட்டது என்னன்னா எக்காலத்துலயும் நாம நிலத்தின்,வீட்டின் விலையா நினைச்சு கொடுக்கிற பணம் அதுக்குண்டான இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்,இத்யாதிக்கு கொடுக்கிற குட் வில் தான்.

  தாளி .. இந்த மேட்டர் தெரியாம பிச்சைக்காரனை எல்லாம் வயித்துலடிச்சு சொத்து வாங்கறாய்ங்களே அவிகள என்ன சொல்ல?

  ReplyDelete
 2. சித்தூர்.எஸ்.முருகேசன்said.. /// தாளி .. இந்த மேட்டர் தெரியாம பிச்சைக்காரனை எல்லாம் வயித்துலடிச்சு சொத்து வாங்கறாய்ங்களே அவிகள என்ன சொல்ல?//

  1978-க்கு முன்புவரை நிலம் நமக்கு சொந்தம். நிலத்திற்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் அதாவது புதையல், கனிமம் ஆகிவற்ரின் மீது நமக்கு உரிமை கிடையாஅது. அது அரசுக்கே சொந்தம்.

  ReplyDelete
 3. வாருங்கள் ராம்ஜி! உங்கள் சேமிப்பை என்ன செய்யப்போகிறீர்கள்?

  ReplyDelete
 4. ஐயா ,
  கிரய பத்திரம் யில்லாமல் நில அபகரிப்பு வழக்கு
  போடுவது எப்படி? நகல் , கிரய பத்திரம் காப்பி, இருக்கிறது.
  ஈ சி எனது பெயரில் இருக்கிறது . ஒருவர் கிரய பத்திரம் ஒரிஜினல் என்னிடம்
  இருக்கிறது என மிரட்டுகிறார் . நிலா அபகரிப்பு வழக்கு எப்படி போடுவது?
  நல்ல உள்ள கொண்டவர்கள் தயவு செய்து ஈமெயில் அனுப்பி உதவவும் .
  sakthimangalyam@gmail.com

  ReplyDelete