Monday, October 25, 2010

சாண்டில்யனின் கடல் புறா - மலரும் நினைவுகள்!

சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல் குமுதம் வாரப்பத்திரிகையில்  தொடராக வெளிவந்தது 1965-ல் அல்லது 1964 இறுதியில் என நினைக்கிறேன். அப்பொழுது நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்க வீட்டில் என் அண்ணன் மூத்தவன். எனக்கும் அவனுக்கும் 8 வயது வித்தியாசம். அடுத்து என் அக்கா. அவளுக்கும் எனக்கும் 3 வயது வித்தியாசம். நான் தான் கடைக்குட்டி. கடைக்கு போவது இது மாதிரி வேலையெல்லம் எனக்கு தான். ரெம்ப சந்தோஷமா செய்வேன்.நான் தான் பஸ்டாண்டில் இருக்கும் பேப்பர் கடைக்கு போய் வாங்கி வருவேன். மாலையில்  5-6 மணி வாக்கில் வரும். ஆனால் என்ன கிழமை என்பது நினைவில்லை. அனேகமாக வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன்.அப்பொழுது குமுதத்தின் விலை 25 காசுகள் தான். நம்ப முடியலையா? சந்தேகம் வேண்டாம் இந்த படத்தை பாருங்கள்!.கீழ் பக்கம் அதன் பிரசுர தேதியும், விலையும் போட்டிருக்குது.


 எங்க வீட்டிலிருந்து பஸ்டாண்டுக்கு நடந்து போக 15 நிமிஷம் ஆகும். வேக வேகமா போய் வாங்கிவிட்டு,  கடல்புறா தொடரை படித்துக்கொண்டே ஆடிஅசைந்து  நடந்து வீட்டுக்கு வருவேன். அதுக்குள்ளாக கடல்புறாவை படித்து முடித்துவிடுவேன். வீட்டுக்கு வந்தால்  குமுதம் உடனடியாக படிக்க கிடைக்காது. முதலில் எங்க அம்மா, அதன் பின் என் அண்ணன் என சீனியாரிட்டி கிரமத்தில் தான் கிடைக்கும். சனி, ஞாயிற்று கிழமையில் தான் என் டர்ன் வரும். யாரு பொறுமையா இருக்கிறது? அதான் இந்த குயூக்தி!.

20-25 இதழ்கள் சேர்ந்தவுடன், லீவு நாளில் உக்கார்ந்து, அதில் தொடர் வந்துள்ள பேப்பர்களை எல்லாம் புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்து இதழ் வாரியா அடுக்கி கட்டி வைத்துவிடுவேன். இதர தாழ்களை மட்டும் பேப்பர்காரனிடம் போட தனியாக வைத்துவிடுவேன். தொடர் முடிந்த பின்னோ அல்லது ஒரு பாகம் முடிந்த வுடன், அதை நானே பைண்டிங் செய்வேன். இது நானாக கத்துக்கிட்டது. பைண்டிங் அட்டையில் அந்த தொடரின் முதல் இதழ் அட்டை படத்தை ஒட்டிவிடுவேன். எப்படி நம்ம வேலை?

இப்படி பைண்டிங் செய்த, குமுதத்தில் வந்த கடல் புறா, யவணரானி ஆகியவைகள் இன்றும் என்னிடம் உள்ளது. மாதம் ஒரு முறையாவது இரண்டையும் படிப்பேன். கீழேயுள்ள படம் கடல் புறா முதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.



கடல் புறா மொத்தம் மூன்று பாகங்கள். அதை நான்கு புத்தகங்களாக பைண்டிங் செய்துள்ளேன்.


எனக்கு அப்பப்ப கொஞ்சம் கொஞமா படித்தா, கதை படித்த மாதிரி இருக்காது. அதுனால, ராத்திரி 10 மணிக்கு கடல் புறாவை எடுத்து முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தால், 3 அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டுதான் தூங்குவேன். எப்படியும் இரவு 3-4 மணி ஆகிவிடும். 

சரி வேலை வெட்டி இல்லாம இருந்தால் இப்படி படிக்கலாம்ன்னு நீங்க முனுமுனுக்கிறது எனக்கு கேக்கத்தான் செய்ய்து. என்ன செய்ய? பழக்க தோஷம்!

இந்த பதிவுக்காக ப்த்தகத்தை எடுத்து போட்டோ எடுத்தப்பவே கண் உறுத்திச்சு. அனேகமா இன்னைக்கு ராத்திரி சிவராத்திரி தான்!

மீண்டும் சந்திப்போம்!


4 comments:

  1. குமுதத்தில் வந்து பைண்டிங்க் செய்ததா!!இதுக்குப் பேர்தான் Vintage என்பதா?

    ReplyDelete
  2. ராஜ நடராஜன் said...

    குமுதத்தில் வந்து பைண்டிங்க் செய்ததா!!இதுக்குப் பேர்தான் Vintage என்பதா ///

    ஆமாங்க!

    ReplyDelete