Saturday, October 30, 2010

கிள்ளுருண்டை - சமையல் பகுதி.

கிள்ளுருண்டை என்ற பெயரையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது எங்க ஆச்சி (திருநெல்வேலி மாவட்டத்தில் பாட்டியை ஆச்சி என்றுதான் சொல்லுவோம்) காலத்திலிருந்து எங்க வீட்டில் செய்யப்படும் பலகாரமாகும். நான் சிறுவனாக இருந்த பொழுது பள்ளிக்கூடத்திலிருந்து மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் காப்பியுடன் சாப்பிட பண்டம் எதுவும் இல்லை என்றால் 
இன்ஸ்டண்ட் ஆக என் அச்சி இதை செய்து தருவாள். இது 50 வருடத்திற்கு முந்தய கதை. அது இப்பொழுதும் தொடருகிறது.  ஆச்சி, அதற்கு பின்  அம்மா ,இப்பொழுது மனைவி. அப்பொழுதெல்லாம் மதியம் 3 மணி அளவில்தான் தோசைக்கு அரைப்பார்கள்.


அந்தக்காலத்தில் கிரைண்டர், மிக்ஸி எல்லாம் கிடையாதே. ஆட்டுரலில் தான் அரைப்பார்கள். அரிசி, உளுத்தம் பருப்பு இவற்றை தனித்தனியே ஊற வைத்திருப்பார்கள். காரணம் உளுந்து மாவு நன்றாக அரைபட்டிருந்தால்தான் இட்டலி/ தோசை மிருதுவாக இருக்கும். அதே நேரம் அரிசியை நன்றாக அரைக்க கூடாது. ரஃப் ஆக இருக்க வேண்டும். இல்லை என்றால் இட்டலி/தோசை பசைபோல் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே தேவைப்படும் பக்குவத்தில் அரைக்கவேண்டும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகவே ஊற வைத்து அரைக்கிறார்கள்!.

தயார் செய்யும் முறை

தோசைக்கு உளுந்தை முதலில் அரைக்கும் பொழுது தண்ணிர் குறைவாக சேர்த்து அரைக்கவேண்டும். நன்றாக அரைபட்ட பின் ஒரு கை அளவு ( தேவையான  அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியையும் இதைப்பொலவே தண்ணீர் சேர்த்து அரைத்து பிரு பிரு என அரைபட்டவுடன் ஒரு கை அளவு  (தேவையான அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்.

1. உளுந்து மாவு   -  1 கப்.
2. அரிசி மாவு  - 1 கப்.
3. உப்பு  - தேவையான அளவு.
4. பச்சைமிளகாய் - 1
5. சிறிய வெங்காயம் - 4
6. கறிவேப்பிலை - தேவைப்பட்டால்.

அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாக போட்டு நன்கு பிசையவும். அதில் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சிறியதாக வெட்டிக்கொள்ளவும். விரும்பினால் ஒன்றிரண்டு கறிவேப்பிலை இலையையும் கிள்ளி எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் இருப்பு சட்டியை (கடாய்) வைத்து, அப்பளம் பொறிக்க எந்த அளவு எண்ணை ஊற்றுவோமோ அந்த அளவிற்கு ரீபைண்ட் ஆயிலை ஊற்றி சுடாக்கவும். எண்ணை நன்கு கொதித்தவுடன், உழுந்தவடை போட எப்படி கையால் மாவை எடுப்போமோ அதுபோல கையால் எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக  கொதிக்கும் எண்ணையில் போட்டு வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான். எழுத்து வடிவில் இது பெரியதாக இருந்தாலும் நொடியில் இதை எளிதாக செய்யலாம்.

இந்த பதிவிற்காக புகைப்படம் எடுக்க கிள்ளுருண்டை நேற்று செய்தோம்.

இதை செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள்.



8 comments:

  1. ஹையா .... நெல்லை பலகாரம்..... பில்ட்டர் காபியுடன் சூப்பர் ஆக இருக்கும்!

    ReplyDelete
  2. அருமையாக இருக்கு.அவசரத்திற்கு செய்து அசத்திடலாம்.

    ReplyDelete
  3. Chitra said...

    // ஹையா .... நெல்லை பலகாரம்..... பில்ட்டர் காபியுடன் சூப்பர் ஆக இருக்கும்! //

    என்ன ஊர் நினைவு வந்து விட்டதா?

    ReplyDelete
  4. asiya omar said...

    // அருமையாக இருக்கு.அவசரத்திற்கு செய்து அசத்திடலாம் //

    அவசரத்திற்கு மட்டுமல்ல, எப்பவுமே செய்யலாம்!

    ReplyDelete
  5. Easy and simple recipe

    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  6. Sunitha said...

    /// Easy and simple recipe ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. Thangaraj said...

    /// Nice article ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete