Wednesday, October 20, 2010

விடை பெறுகிறேன்!

" ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல " சமீபகாலமாக நான் பதிவு போட்டு வருகிறேன். 117 பாலோயர்கள் எனக்கு உண்டு. பதிவே போடாத நாளில் கூட நூறுக்கு மேற்பட்டவர்கள் தினமும் எனது பிளாக்கை பார்வையிட்டு செல்லுகிறார்கள். ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் இல்லை. ஒருவேளை இதற்கு காரணம் எனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ளாதது காரணமாக இருக்கலாம்!.

இதுவரை என் பிளாக்குக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. யாருமே விரும்பாத பதிவுகளை போடுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பதால் இனி பதிவு போடுவது இல்லை என முடிவு செய்துள்ளேன்.

மிக்க நன்றி!. விடைபெறுகிறேன்.

திரவிய நடராஜன்.

44 comments:

 1. பின்னூட்டங்கள் எதிர்பார்த்து எழுதினால் மட்டுமே இத்தகைய நிலைமை வரும்.

  நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள். எவருக்காவது எப்போதேனும் பயன்படலாம்.

  டீ விற்பவருக்கு அது வியாபாரம். அவர் கடைக்கு எவரும் வரவில்லையெனில் அவர் கடை மூடுவதில் அர்த்தம் இருக்கிறது.

  எழுதும் நமக்கு இதுவா வியாபாரம்? ;)

  ReplyDelete
 2. மிக‌ச் ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள் ராதாகிருஷ்ண‌ன் சார்..அவ‌ரின் க‌ருத்தையே நானும் வ‌ழிமொழிகிறேன்..

  ReplyDelete
 3. என்ன அண்ணாச்சி. இப்படி சட்டு புட்டுன்னு கடையை சாத்தினால் எப்படி. கொஞ்சம் டைம் கொடுங்க.

  kannan from abu dhabi.

  www.samykannan.blogspot.com

  ReplyDelete
 4. ஆன் லயன் 15 காட்டுதுங்க. நாங்கெல்லாம் சூசைட் பண்றவங்கள லைவ்வா பாக்குறக் கூட்டமோ. என்னமோப் போங்க.

  ReplyDelete
 5. எதையுமே எதிர்பார்த்து செய்தா இப்படித்தானே எண்ணத்தோனும்..!! :-)

  ReplyDelete
 6. V.Radhakrishnan said...

  பின்னூட்டங்கள் எதிர்பார்த்து எழுதினால் மட்டுமே இத்தகைய நிலைமை வரும்.///

  பின்னூட்டம் வருவது பெருமை என நினைத்து பதிவு எழுதவில்லை. எனது எண்ணங்களின் வடிகால் தான் பதிவு. பின்னூட்டம் என்பது என்னை ஊக்கப்படுத்தும் ஒரு மருந்து அவ்வளவுதான்.

  ReplyDelete
 7. அஹமது இர்ஷாத் said...

  மிக‌ச் ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள் ராதாகிருஷ்ண‌ன் சார்..அவ‌ரின் க‌ருத்தையே நானும் வ‌ழிமொழிகிறேன் //

  பின்னூட்டம் வருவது பெருமை என நினைத்து பதிவு எழுதவில்லை. எனது எண்ணங்களின் வடிகால் தான் பதிவு. பின்னூட்டம் என்பது என்னை ஊக்கப்படுத்தும் ஒரு மருந்து அவ்வளவுதான்.

  ReplyDelete
 8. //பின்னூட்டங்கள் எதிர்பார்த்து எழுதினால் மட்டுமே இத்தகைய நிலைமை வரும்.

  நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள். //அதே! நீங்க எழுதினா நாங்க படிச்சிட்டே இருப்போம்!

  நீங்களே சொல்லுங்க: நீங்க எழுதியிருக்கிற பல பதிவுகளை நான் படிச்சிருக்கேன். நான் எழுதியிருக்கிற பதிவுகளை நீங்க படிச்சதே யில்லைன்னு நான் எழுதறதை நிறுத்தறேனா? இல்லியே! நான் பேசறதை என் புருஷன், பிள்ளைங்க‌ கேட்கப் போறதில்லைன்னாலும், நான் நிறுத்தறேனா? இல்லியே! :) ஆல் இன் தெ கேம் சார்!

  ReplyDelete
 9. எனக்கும் இதே நிலைமை தான். அதனால் என்ன. படிக்கிறாங்களா, அதோட விட்டுடுவோம். பின்னூட்டம் வந்தா நாம பதிலுக்கு பின்னூட்டம் போடணும். பிடிக்குதோ, பிடிக்கலயோ - நல்லா இருக்குன்னு சொல்லணும். வோட்டு போடணும். நமக்கு அந்த சுமை இல்ல. சந்தோஷப்பட்டுட்டு தொடருங்க. எழுதுங்க.

  ReplyDelete
 10. பின்னூட்டங்களுக்காக மட்டுமே எழுத வந்திருக்கீங்கன்னா. கண்டிப்பா கடைய சாத்திடலாம். கூகிள் தேடுபொறிக்கு பின்னூட்ட வசதி கிடையாதுங்க. வளரலை? எல்லாம் நாம என்ன எழுதறோம், மக்கள் என்ன படிக்கிறாங்கிறதுல இருக்குங்க.

  ReplyDelete
 11. If u give information then everyone will only read u'r points. Nowadays its better not to insist for feedbacks as most of the ugly fights happen there only instead of discussion.

  To my opinion start a Q&A session to address readers need if any. Or if u like to have comments then write abt caste,religion and sex which will fill u'r wish.

  ReplyDelete
 12. பின்னூட்டங்கள் வந்தால் படித்தவர்களின் கருத்துக்கள் அறிந்து கொள்ள முடியும்.ஆனால் எல்லோருக்கும் படித்தவை அனைத்திற்கும் பின்னூட்டமிடும் நேரம்,மனநிலை இருக்க இயலாது.100 பேர் பின்னூட்டமிடாமல் பார்வையிடுகிறார்கள் என்பதே உங்கள் எழுத்துக்கு வெற்றிதானே.தொடருங்கள்.

  நண்பர் குழு இருந்தாத்தான் பின்னூட்டம் வரும் என்று உங்களிடம் யார் வத்தி வச்சது:)

  ReplyDelete
 13. ஐயா வணக்கம். தொடர்ந்து எழுதும் படி கேட்டு கொள்கிறோம். நிச்சயமாக பயன் பெறுபவர்கள் உண்டு.

  ReplyDelete
 14. உங்க எழுத்துக்களை தொடர்ந்து படிச்சிட்டு வர்றோமாக்கும். எழுதறதை தொடருங்கள்..

  ReplyDelete
 15. //பின்னூட்டம் வருவது பெருமை என நினைத்து பதிவு எழுதவில்லை. எனது எண்ணங்களின் வடிகால் தான் பதிவு. பின்னூட்டம் என்பது என்னை ஊக்கப்படுத்தும் ஒரு மருந்து அவ்வளவுதான்//
  ஐயா,
  எனக்கு பின்னுட்டம் போட அலுவலகத்தில் வசதியில்லை. படிக்க மட்டுமே உண்டு. உங்க பாலோவர் கணக்கிலிருந்து என்னை எடுத்துவிடுங்கள். லைப் டைம் ஊக்கம் தரும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 16. தொடர்ந்து படித்து வருகிறேன். எழுதவும்.

  ReplyDelete
 17. தொடர்ந்து எழுதுங்கள்.
  நீங்கள் நிறுத்தினால் இழப்பு உங்களுக்கு அல்ல, எங்களுக்குத்தான்.

  ReplyDelete
 18. சார், உங்கப் பதிவு எல்லாம் நான் படிச்சிட்டுத்தான் இருக்கேன். அலுவலகத்தில் இருந்து பின்னூட்டம் இட இயலாத சூழ்நிலைகள் உண்டு. வீட்டிற்கு வரும்பொழுது மறந்து விடும். இது பதிவுலகில் சகஜம். தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 19. Kannan said...

  என்ன அண்ணாச்சி. இப்படி சட்டு புட்டுன்னு கடையை சாத்தினால் எப்படி. கொஞ்சம் டைம் கொடுங்க///

  சரி.

  ReplyDelete
 20. VJR said...

  ஆன் லயன் 15 காட்டுதுங்க.///

  அதான் எனக்கும் புரியல!

  ReplyDelete
 21. ஜெய்லானி said...

  எதையுமே எதிர்பார்த்து செய்தா இப்படித்தானே எண்ணத்தோனும்..!! :-)///

  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 22. // ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் இல்லை. ஒருவேளை இதற்கு காரணம் எனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ளாதது காரணமாக இருக்கலாம்!.
  //

  கொஞ்சம் கிளுகிளுப்பாக எழுதினால் பின்னூட்டம் வரும் :)

  நிறைய பாலோயர் உள்ளப் பதிவர்கள் எனக்கு தெரிஞ்சு 'ஏ' ஜோக் போடுறாங்க. வாசகர் ரசனைதான் பிரச்சனைன்னு நினைக்கிறேன்.

  இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லாமல் எழுதுவோரிலும் நிறைய பாலோயர் பின்னூட்டம் வரும் பதிவர்களும் உண்டு.

  பின்னூட்டம் கொடுக்கல் வாங்கல் போல் தொடர்ந்த பிறகே பலருக்கு நிலைபெற்றிருக்கிறது.

  ReplyDelete
 23. கெக்கே பிக்குணி said..
  நீங்களே சொல்லுங்க: நீங்க எழுதியிருக்கிற பல பதிவுகளை நான் படிச்சிருக்கேன். நான் எழுதியிருக்கிற பதிவுகளை நீங்க படிச்சதே யில்லைன்னு நான் எழுதறதை நிறுத்தறேனா? இல்லியே! நான் பேசறதை என் புருஷன், பிள்ளைங்க‌ கேட்கப் போறதில்லைன்னாலும், நான் நிறுத்தறேனா? இல்லியே! :) ஆல் இன் தெ கேம் சார்///

  நியாயமான கேள்விதான்!

  ReplyDelete
 24. ஒசை. said...

  எனக்கும் இதே நிலைமை தான். அதனால் என்ன. படிக்கிறாங்களா, அதோட விட்டுடுவோம். பின்னூட்டம் வந்தா நாம பதிலுக்கு பின்னூட்டம் போடணும். பிடிக்குதோ, பிடிக்கலயோ - நல்லா இருக்குன்னு சொல்லணும். வோட்டு போடணும். நமக்கு அந்த சுமை இல்ல. சந்தோஷப்பட்டுட்டு தொடருங்க. எழுதுங்க///

  நன்றி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 25. ILA(@)இளா said...

  பின்னூட்டங்களுக்காக மட்டுமே எழுத வந்திருக்கீங்கன்னா. கண்டிப்பா கடைய சாத்திடலாம். கூகிள் தேடுபொறிக்கு பின்னூட்ட வசதி கிடையாதுங்க. வளரலை? எல்லாம் நாம என்ன எழுதறோம், மக்கள் என்ன படிக்கிறாங்கிறதுல இருக்குங்க.///

  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 26. raju said...

  If u give information then everyone will only read u'r points. Nowadays its better not to insist for feedbacks as most of the ugly fights happen there only instead of discussion.

  To my opinion start a Q&A session to address readers need if any. Or if u like to have comments then write abt caste,religion and sex which will fill u'r wish.

  உங்கள் கருத்து யோசிக்கப்படவேண்டியது தான் .மிக்க நன்றி

  ReplyDelete
 27. ராஜ நடராஜன் said...

  பின்னூட்டங்கள் வந்தால் படித்தவர்களின் கருத்துக்கள் அறிந்து கொள்ள முடியும்.///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 28. Chitra said...

  ஐயா வணக்கம். தொடர்ந்து எழுதும் படி கேட்டு கொள்கிறோம். நிச்சயமாக பயன் பெறுபவர்கள் உண்டு.

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 29. உருத்திரா said...

  தொடருங்கள் ///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 30. அமைதிச்சாரல் said...

  உங்க எழுத்துக்களை தொடர்ந்து படிச்சிட்டு வர்றோமாக்கும். எழுதறதை தொடருங்கள் ///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 31. பின்னூட்டம் வரலைனா படிக்கலைனு அர்த்தம் இல்ல.
  படிச்சிட்டுதான் இருக்கேன். எழுதிகிட்டே இருங்க.

  ReplyDelete
 32. அமைதிச்சாரல் said...

  உங்க எழுத்துக்களை தொடர்ந்து படிச்சிட்டு வர்றோமாக்கும். எழுதறதை தொடருங்கள்.///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 33. நீச்சல்காரன் said...ஐயா,
  எனக்கு பின்னுட்டம் போட அலுவலகத்தில் வசதியில்லை. படிக்க மட்டுமே உண்டு. உங்க பாலோவர் கணக்கிலிருந்து என்னை எடுத்துவிடுங்கள். லைப் டைம் ஊக்கம் தரும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.//
  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 34. அகில் பூங்குன்றன் said...

  தொடர்ந்து படித்து வருகிறேன். எழுதவும்///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 35. ராம்ஜி_யாஹூ said...

  தொடர்ந்து எழுதுங்கள்.
  நீங்கள் நிறுத்தினால் இழப்பு உங்களுக்கு அல்ல, எங்களுக்குத்தான்///


  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 36. LK said...

  சார், உங்கப் பதிவு எல்லாம் நான் படிச்சிட்டுத்தான் இருக்கேன். அலுவலகத்தில் இருந்து பின்னூட்டம் இட இயலாத சூழ்நிலைகள் உண்டு. வீட்டிற்கு வரும்பொழுது மறந்து விடும். இது பதிவுலகில் சகஜம். தொடர்ந்து எழுதுங்கள்///

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 37. அண்ணா!
  உங்கள் பதிவுகள் படித்துள்ளேன். அவை எந்த அளவுக்கு எனக்கு உதவுமோ என்று தெரியாத போதும் தங்கள் சமூக அக்கறையை மனதாரப் பாராட்டுவேன். பின்னூட்டுவதில்லை.
  எனக்கு ஒரு சட்ட ஆலோசனை தேவை; அதனால் தங்கள் வலைப்பூவை தொடர்பவனாக பதிவும் செய்தேன்.
  பதிவுலக நண்பர்கள் உதவியை நாடியுள்ளதால் நான் இதுவரை உங்களுடன் பேசவில்லை. விரைவில்
  அவர்கள் கூட என் விடயமாக உங்களுடன் பேசலாம்.
  எனவே பதிவுலகில் இருங்கள்.
  சட்டம் பற்றி எழுதுவோர் மிகக் குறைவு...தொடரவும்.

  ReplyDelete
 38. கோவி.கண்ணன் said...பின்னூட்டம் கொடுக்கல் வாங்கல் போல் தொடர்ந்த பிறகே பலருக்கு நிலைபெற்றிருக்கிறது.////

  இந்த உண்மையை இப்பதான் புரிஞ்சுகிட்டேன்!

  ReplyDelete
 39. அதி பிரதாபன் said...

  பின்னூட்டம் வரலைனா படிக்கலைனு அர்த்தம் இல்ல.
  படிச்சிட்டுதான் இருக்கேன். எழுதிகிட்டே இருங்க.//

  தங்கள் ஆதரவு குரலுக்கு நன்றி

  ReplyDelete
 40. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  அண்ணா!
  உங்கள் பதிவுகள் படித்துள்ளேன். அவை எந்த அளவுக்கு எனக்கு உதவுமோ என்று தெரியாத போதும் தங்கள் சமூக அக்கறையை மனதாரப் பாராட்டுவேன். பின்னூட்டுவதில்லை///

  தங்கள் கருத்துக்கு நன்றி தம்பி.

  ReplyDelete
 41. ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் எடுத்துரைத்தால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் என உங்கள் பணியை தொடரவும் நன்றி.
  அரவரசன்.

  ReplyDelete
 42. NAGA said...

  ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் எடுத்துரைத்தால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் என உங்கள் பணியை தொடரவும் நன்றி.
  அரவரசன் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 43. அண்ணே! எங்கள் பலருடைய புக்மார்க்கில் நீங்கள் இருப்பதே உங்கள் வெற்றிதானே! உங்களுடைய பதிவுலகம் உபயோகமான செய்தி சார்ந்தவை. செய்திகளுக்கு எவரும் பின்னூட்டமிடுவதில்லை. எந்திரன் ரஜினியையோ அல்லது ஜெயமோகன்-சாரு சண்டையையோ பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் குவியும். ஆனால் அந்த பின்னூட்டங்கள் எழுதியவரை சிறப்பிப்பவையில்லை, எழுதப்பட்ட அந்த நபர்களை சிறப்பிப்பவையே. தொடர்ந்து எழுத ஆரம்பித்தற்கு நன்றி.

  ReplyDelete