Tuesday, November 2, 2010

நம்ம கஷ்ட காலம். வேற எதை சொல்ல?

கஷட காலம் வந்துட்டா, அது எப்படி வேண்டுமானாலும் வரும். அந்த நேரத்தில என்ன செய்தாலும் வேலைக்காகாது. சும்மா வேடிக்கைதான் பார்க்கனும். அதைத்தான் நாம இப்ப செய்திட்டு இருக்கோம்!.

விலைவாசி உயர்வு . சும்மா ஜிவ்வுன்னு தூளை கிளப்பிட்டு ராக்கெட் மாதிரி மேலேயே போகுது. நாம கூப்பாடு போட்டா, பிரதமரும், நிதி அமைச்சரும் என்னமோ ஜி.டி.பி அது நல்ல யிருக்கு, விலைவாசி குறையும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஒன்னும் நடக்கல.

பாராளுமன்றத்தில இதுக்காக வெட்டு தீர்மானம் கொண்டுவந்தப்போ, அதுல இருந்து ஆட்சிய காப்பாத்த, லாலு பிரசாத், மாயாவதி மேலே இருந்த வழக்குகளுக்கு ஆதாரம் இல்லன்னு  சி.பி.ஐ.-ஐ சொல்லவச்சு, வழக்கை வாபஸ் வாங்கி, ஆட்சியை காப்பாத்திக்கிட்டாங்க.

நாட்டில நூறு பேருக்கு ஒருத்தன் பட்டினியா கிடக்கிறான். கிலோ ரூ 15 / 16  என்ற விலையில் வரிப்பணத்தில் கோதுமையை கொள்முதல் செய்து, திறந்த வெளியில குப்பைய கொட்டுறமாதிரி கொட்டி அதை நாசமாக்கி, பலமடங்கு வீண் ஆனதா கள்ள கணக்கு காட்டி இந்திய உணவு கழகம் ஊழல் செய்கிறது. இதில் அரசியல்வாதிக்கும் பங்கு. இதை தனியார் தொலைக்காட்சி வீடியோ எடுத்து டி.வி யில போட்டு அம்பலப்படுத்தியது. சொரண கெட்டவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?  "போதுமான கிடங்கு வசதி இல்லை. அதான் காரணம்" உணவு அமைச்சர் இப்படி சொன்னார். அப்ப ஏன் அதிகப்படியா கொள்முதல் பண்ணனும்? இந்த அறிவு ஏன் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் வரல? வீணாக போகும் கோதுமையின் அளவு 168 லட்சம் மெட்ரிக் டன். இவற்றின் மதிப்பு 28,000 கோடி ரூபாய். இந்த கோதுமையை கொண்டு, ஒரு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு உணவளிக்க முடியும். அதாவது இப்பொழுது பட்டினியாக இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் 2 வருடத்திற்கு போதுமானது. ஒரு புண்ணியவான்  உச்சநீதிமன்றத்தில பொதுநல வழக்கு போட்டான். அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம், உடனடியாக வீணாகப்போகும் கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்கள் என கூறியது. அதுவரை வாயை திறக்காமலிருந்த பிரதமர் " அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது" என திருவாய் மலர்ந்தார். மக்கள் பணத்தில் வாங்கிய கோதுமையை வீணாக்குவது, அரசின் கொள்கையாம்!

ஒரு பொருளை விற்கும் போது, அதிக விலைக்கு கேட்பவனுக்கு தானே விற்கனும்? ஆனா, நம்ம தி.மு.க அமைச்சர்  ராஜா '" முதலில் வருபனுக்கு முன்னுரிமை " என்ற வினோத முறையை கொண்டு வந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று 70,000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும். அதனால் ராஜா இன்னும் அமைச்சராகவே உள்ளார்.

காமன் வெல்த் கேமை இந்தியாவில் நடத்த 2003-ல் வாஜ்பாய் அரசு முடிவு செய்து, அனுமதி பெற்றது. அப்போது அதற்கான மதிப்பீடு வெறும் 450 கோடி ரூபாய் மட்டுமே. 2004-ல் பதவிக்கு வந்த காங்கிரஸ், அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் வேண்டும் என்றே கிடப்பில் போட்டது.காரணம் கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்தால் தானே ஊழல் செய்யமுடியும்? ஐந்து ஆண்டுகள் தூங்கிவிட்டு, 2009 கடைசியில் வேலையை ஆரம்பித்தது. இறுதியில் ரூ70,000 கோடி செலவில் ஊழல் விளையாட்டை காங்கிரஸ் நடத்தி முடித்தது. ஊழல் பற்றி ஆணிவேறா, அக்குவேறா மீடியாக்கள் கிழி கிழி என்று கிழித்தவுடன் வேறு வழியில்லாமல், விசாரணை நடத்தப்படும் என கண் துடைப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ். 

இதையெல்லாம் விட மிக கேவலமான ஊழலை ம்காராஷ்டிரா காங்கிரஸ் செய்துள்ளது இப்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. கார்கில் யுத்தத்தில் வீர மரணமடைந்த வீரர்களின் மனைவிகளுக்கு வீடு கட்டும் திட்டம் எனக்கூறி " ஆதார்ஷ்" என்ற அமைப்பு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி, மகாராஷ்டிரா அரசிடம்,  நிலம் வாங்கியது. இடம் எந்த பகுதியில் உள்ளது என்று தெரியுமா? மும்பையில் மிகவும்  விலைமதிப்புள்ள " கொலாபா". அதுவும் கடற்படை தளத்திற்கு அருகாமையில்.முதலில் 6 மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் 31 மாடிக்கட்டிடமாக கட்ட அனுமதிக்கப்பட்டது. கடற்படை தளத்திற்கு அருகாமையில் சட்டப்படி இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கமுடியாது!.மேலும் சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெறப்படவில்லை.

இந்த அடுக்குமாடி வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? 85 லட்சம். ஆனால் அதன் மார்க்கெட் ரேட் 8.5 கோடி. இங்குள்ள 104 வீடுகளை பெற்றுள்ளவர்களில் 3 பேர் மட்டுமே உண்மையிலேயே மரணமடைந்த கார்கில் வீரகளின் மனைவிகள். மீதி உள்ள வீடுகள் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் அஷோக் சவான் உறவினர்கள் (செத்துப்போன அவர் மாமியார் உட்பட) 3 பேருக்கு, முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர்களின் உறவினர்கள், அமைச்சர்களின் உறவினர்கள், ராணுவ தளபதிகள், மத்திய காங்கிரஸ் அமைச்சர், ஐ. ஏ. எஸ். அதிகாரிகளின் உறவினர்கள் என வி.ஐ.பி.களால் பங்கு போடப்பட்டுள்ளது.இந்த விஷயத்திலும் காங்கிரஸ் கண்துடைப்புக்காக, அஷோக் சவானிடமிருந்து பதவி விலகல் கடிதம் வாங்கியுள்ளது. பிராணாப் முகர்ஜி, ஏ.கே அந்தோனி ஆகிய இருவரையும் இது பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறது.  இந்த ஊழலில் பங்குள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால், மகாராஷ்டிரா காங்கிரஸில் எந்த தலைவரும் தப்ப மாட்டார்கள். இப்பொழுதே சவானுக்கு பதில் ஒரு நபரை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லல் படுகிறது காங்கிரஸ்.

பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. நாம் வேறு என்ன செய்யப்போகிறோம்?.  நமக்குத்தான் சொரணையே கிடையாதே!8 comments:

 1. //பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. நாம் வேறு என்ன செய்யப்போகிறோம்?. நமக்குத்தான் சொரணையே கிடையாதே!//

  :(

  ReplyDelete
 2. சுந்தரா said...

  //பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. நாம் வேறு என்ன செய்யப்போகிறோம்?. நமக்குத்தான் சொரணையே கிடையாதே!//
  :( ////

  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 3. ஒரு புண்ணியவான் உச்சநீதிமன்றத்தில பொதுநல வழக்கு போட்டான். அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம், உடனடியாக வீணாகப்போகும் கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்கள் என கூறியது. அதுவரை வாயை திறக்காமலிருந்த பிரதமர் " அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது" என திருவாய் மலர்ந்தார். மக்கள் பணத்தில் வாங்கிய கோதுமையை வீணாக்குவது, அரசின் கொள்கையாம்!


  ...... இந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வருது: "இந்தியா, ஏழை நாடு இல்லை. ஏழை ஆக்கப்பட்ட நாடு!" :-(

  ReplyDelete
 4. என்ன நடக்கும். அடுத்த ஊழல் வெளிவரும் வரை ஊடகங்கள் இதைப்பற்று எழுதும். பின்னர் ஊடகங்களும் மறந்துவிடும், மக்களும் மறந்துவிடுவார்கள. அடுத்த ஊழல் வழக்கு பத்திரகைகளை நிரப்பும்.

  எவ்வளவோ பார்த்தாச்சு. இதையும் பார்ப்போம்.

  ReplyDelete
 5. Chitra said..

  /// .... இந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வருது: "இந்தியா, ஏழை நாடு இல்லை. ஏழை ஆக்கப்பட்ட நாடு!" :- ////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. கதிர்கா said...

  என்ன நடக்கும். அடுத்த ஊழல் வெளிவரும் வரை ஊடகங்கள் இதைப்பற்று எழுதும். பின்னர் ஊடகங்களும் மறந்துவிடும், மக்களும் மறந்துவிடுவார்கள. அடுத்த ஊழல் வழக்கு பத்திரகைகளை நிரப்பும்.

  /எவ்வளவோ பார்த்தாச்சு. இதையும் பார்ப்போம் ///

  ஆமாங்க!

  ReplyDelete
 7. இந்திரா காங்கிரஸ் ஆட்சியென்றாலே ஊழல்தான். அதை மறைக்க மதச்சார்பின்மை முகமூடியை போட்டுக்கொள்வார்கள்.
  மா.மணி

  ReplyDelete
 8. சகோ சித்ரா சரியாக சொன்னார்கள் ....இதை விட வேறு நெத்தியடி வேண்டுமா .......நம் நாட்டில் ஒதுக்கப்படும் நிதிக்கு ஒன்றும் குறைவில்லை ....அனால் அந்த நிதி 20% கூட அந்த திட்டனகளுக்கு செலவழிக்க படுவதில்லை .. ஒவ்வரு முறையும் ரோடு போட நிதி .தருகிறார்கள் ....ஆனால் நம் நாட்டின் ரோடின் நிலைமை என்ன என்பது நமக்கே தெரியும் ....இது நம் கண் முன்னால் நடப்பது ......என்று விடிவு காலம் வரும் ....காத்திருப்போம் ....இன்னொரு காந்தி மாகானோ ..விவேகனந்தரோ வரும் வரை .....தச்சை கண்ணன்

  ReplyDelete