Monday, November 15, 2010

ஜெயலலிதா நகர்த்திய காய்

ஒரு வழியாகா ஸ்பெக்ட்ரம் ராஜா அமைச்சர் பதவியை ராஜினா செய்துவிட்டார். 

" நான் பதவி விலக மாட்டேன்"
"என்னை பிரதமர் பதவி விலக சொல்லுவார் என நினைப்பது கற்பனையே" என்றெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பேட்டி கொடுத்தார் ராஜா.

"ராஜா தலித் இனத்தை சார்ந்தவர். அவர் முன்னேற்றத்தை சகிக்க முடியாத உயர் சாதியினரின் குற்றச்சாட்டு"
" ராஜா எந்த ஊழலும் செய்ய வில்லை"
" மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நான் பார்ப்பேன்"
"மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெறும் அறிக்கைதான். அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது"
"ராஜா ஊழல் செய்யவில்லை. அவர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை" என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறிவந்தார்.

ஆனால் நடு இரவில் பிரதமர் இல்லம் சென்று, ராஜா தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டு, "தி.மு.க தலைவரின் அறிவுரையின் படி பதவியை ராஜினா செய்து விட்டேன்"  என நிருபர்களிடம் கூறினார்.

"பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையின்றி நடக்க வேண்டும் என்பற்காகாவே ராஜா பதிவி விலகினார்" என தி.மு.க மீடியாவுக்கு தகவல் தந்தது. ஆனால் இந்த காரணத்தை சிறு பிள்ளைகூட ஏற்றுக்கொள்ளாது என்பது நன்றாகவே தி.மு.க விற்கு தெரியும்.


இதற்கிடையில், ஓய்வுக்காக கொடை நாடு செல்லும் முன்பாக பத்திரிகை ஒன்றிற்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அதில், "ராஜாவை பதவி நீக்கம் செய்தால், தி.மு.க மத்திய அரசிற்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி விடும். அதனால் மந்திரி சபை கவிழ்ந்து விடும் என பயப்படவேண்டாம். 18 எம்.பிக்களின் ஆதரவை நான் தருகிறேன்" என கூறினார்.

ஒரு சில மணி நேரத்தில் கருணாநிதி ஏன் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பது சுவாரசியமான விஷயம்.

சியோலிலிருந்து இந்தியா திரும்பிய மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் "இந்த நிமிடம் வரை தி.மு.க உடனான கூட்டணி தொடருகிறது". "ஜெயலலிதாவின் ஆதரவை பற்றி காங்கிரஸின்  தலைமைதான்  தீர்மானிக்கும்".  இந்த பதிலில், தேவைப்பட்டால் ஜயலலிதாவின் ஆதரவை பெறும் வாய்ப்பு காங்கிசுக்கு உள்ளது என்பதாகும்.  ராஜாவை பதவி விலக்கினால், நாங்கள் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி கொள்வோம் என திமு க, காங்கிரஸை பிளாக்மெயில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதற்கிடையில் காங்கிரசின் உயர் மட்ட குழு  ஞாயிறு காலையில் கூடியது. இக்கூட்டத்தில் மிஸ்டர் கிளீன் மன்மோகன் சிங் சோனியாவிடம் "ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜாவை தனது அமைச்சரவையில் வைத்திருக்க முடியாது. கல்மாடி, சவான் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல இதிலிலும் எடுக்கப்பட வேண்டும். ஊழலுக்கு நான் ஆதவளிக்க தயாராக இல்லை" என தெளிவாக சொல்லி விட்டார். இதில் சரியான நடவடிக்கை எடுத்து கட்சியின் பெயரை காப்பாற்றாவிட்டால், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருமே ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால் ராஜவை பதவி விலக சொல்லுவது என ஒருமனதாக முடிவு செய்தனர்.

காங்கிரஸின் இந்த முடிவை சிதம்பரம், ஏ.கே அந்தோணி, பிரணாப் முகர்ஜி ஆகிய எல்லோருமே  கருணாநிதியிடம் தொலைபேசியில் விளக்கமாக பேசி நிலைமையை புரிய வைத்தனர். இதற்கு மேலும் முரண்டு பிடித்தால்,  மத்தியில் அமைச்சர்கள் பதவியையும், வரும் சட்ட சபை தேர்தலில் காங்கிரசின் ஆதரவையும் இழக்கவேண்டிவரும். உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா எனற நிலை ஏற்படும் என்பதை புரிந்து கொண்டார் கருணாநிதி வேறு வழியின்றி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

 ஆக இவ்வளவுக்கும் காரணம் ஜெயலலிதா நகர்த்திய காய் தான் காரணம்!

அரசியலில் காய் நகர்த்துவதில் தான் மட்டுமே கில்லாடி என இறுமாப்புடன் இருந்த கருணாநிதிக்கு இது ஒரு பெரிய மரண அடி தான்!


1 comment:

  1. இவ்வளவுக்கும் காரணம் ஜெயலலிதா நகர்த்திய காய் தான் காரணம்!

    அரசியலில் காய் நகர்த்துவதில் தான் மட்டுமே கில்லாடி என இறுமாப்புடன் இருந்த கருணாநிதிக்கு இது ஒரு பெரிய மரண அடி தான்!

    உண்மை தான் .....முதல் முறையாக கருணாநிதியின் பிடி தளர்ந்துள்ளது ...அடுத்தது பார்லிமெண்டே போகாமல் இன்னும் மந்திரியாக உள்ள அருமை மகன் அழகிரியும் பதவி விலக வேண்டும் .

    ReplyDelete