Thursday, November 25, 2010

முக்கிய அறிவிப்பு.

 அறிவிப்பு!


எண்1, காந்தி இல்லம், காந்தி நகர், சொர்க்கம் என்ற முகவரிதாரராகிய காமராஜ், வயது 107, த/பெ. குமாரசாமி என்ற எனது கட்சிக்காரர் சார்பாக தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,

15 ஜூலை 1903 முதல் 2 அக்டோபர் 1975 வரை இந்தியாவில், தமிழ் நாட்டில் எனது கட்சிக்காரர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் மோகன்லால் கரம் சந்த் காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார். அதன் பின் காங்கிரஸ் இயக்கம் 1950-ல் காங்கிரஸ் கட்சியாக மாறியது. அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருந்தார். 1969 ல் காங்கிரஸ் பிளவு பட்ட பொழுது, இந்தியன் நேஷ்னல் காங்கிரஸ் (O) வின் தலைவரானார்.அவர் இந்தியாவில் வசிக்கும் வரை அதாவது 2 அக்டோபர் 1975 வரை அவர் அக்கட்சியின் தலைவராகவே இருந்தார்.

காங்கிரஸ் பிளவு பட்டபோது ஏற்பட்ட மற்றொரு கட்சி இந்திரா காங்கிரஸ் ஆகும். அந்த கட்சிக்கும் காமராஜருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஆனால் இப்பொழுது இருக்கும் இந்திரா காங்கிரஸ் எமது கட்சிக்காரர் தங்கள் கட்சிக்காரர் என்பது போல சித்தரித்து, தேர்தல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

எனது கட்சிக்காரருக்கும் இபோழுது இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே பொது மக்கள் யாரும் பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரியப்படுத்தப்படுகிறது.

Dr.அம்பேத்கார்
வழக்கறிஞர்
காந்தி நகர்
சொர்க்கம்.


14 comments:

  1. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.......

    ReplyDelete
  2. சிரிப்பாய் வருகிறது. உண்மைதான். இன்றுள்ள "பில்லக்கா" பையன்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று பேசும்போது சிரிப்புத்தான் வருகிறது.
    --

    ReplyDelete
  3. Chitra said...

    ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..//

    வாருங்கள்.

    ReplyDelete
  4. கக்கு - மாணிக்கம் said...

    சிரிப்பாய் வருகிறது. உண்மைதான். இன்றுள்ள "பில்லக்கா" பையன்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று பேசும்போது சிரிப்புத்தான் வருகிறது ///

    காமராஜ் ஆட்சியை கொண்டுவரனும்னா இவங்க எல்லோரும் காங்கிரஸை விட்டு விலகி புது காங்கிரஸை ஆரம்பிக்கனும்!

    ReplyDelete
  5. ramalingam said...

    சூப்பர்
    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. Ravi kumar Karunanithi said...

    hmmm ok ok... carry on ///

    வாருங்கள். புது வரவு என நினைக்கிறேன்!

    ReplyDelete
  7. இப்போதைக்குத் தேவையான விளம்பரம்தான் இது..! நன்றி ஸார்..!

    ReplyDelete
  8. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    இப்போதைக்குத் தேவையான விளம்பரம்தான் இது..! நன்றி ஸார்..//

    வாருங்கள் உண்மைதமிழன். இனி அழுகிய முட்டை கூட்டணி, அழுகிய கத்திரிக்காய் கூட்டணி பற்றி நிறைய ந்ழுதுவோம். மயிரை கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் மயிர். அவ்வளவுதான்!

    ReplyDelete
  9. 135ரூபாவை சொத்தென வைத்துவிட்டுப் போனவரை இந்த ஊழலில் கோடி காண்போர், கொண்டாடுவது வேடிக்கை!

    ReplyDelete
  10. உண்மை தான் . காமராஜரே வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ் (இ) வந்தது ...இன்று இவர்கள் காமராஜரை தலையில் வைத்து கொண்டாடுவது வேடிக்கை தான் ...இந்த மாதிரி நல்ல விசயங்களை எப்படி தேடி பிடித்து எழுதுகிறீர்கள் ....ரூம் போட்டு யோசிக்கிரீர்களோ ..

    ReplyDelete
  11. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    135ரூபாவை சொத்தென வைத்துவிட்டுப் போனவரை இந்த ஊழலில் கோடி காண்போர் ///

    இந்த கூத்துக்கெல்லாம் என்னைக்கு விடுவுகாலம் பொறக்குமோ!

    ReplyDelete
  12. murugan said...

    உண்மை தான் . காமராஜரே வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ் (இ) வந்தது ...இன்று இவர்கள் காமராஜரை தலையில் வைத்து கொண்டாடுவது வேடிக்கை தான் ...இந்த மாதிரி நல்ல விசயங்களை எப்படி தேடி பிடித்து எழுதுகிறீர்கள் ....ரூம் போட்டு யோசிக்கிரீர்களோ //

    ரூம் எல்லாம் போட்டு யோசிக்கிறது இல்லைங்க. வயித்தெரிச்சல் அதிகமாகும் போது இது மாதிரி பதிவு போட்டு ஆசுவாசப்படுத்திக்கிறது தான்.

    ReplyDelete