Monday, November 29, 2010

எங்க போய் முட்டிக்கிறது? - சட்டம் நம் கையில்.

"காங்கிரஸ் என்றாலே ஊழல்" என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாக  2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டு வகித்த அரசு வங்கிகளின் விபரம் இப்பொழுது வெளி வந்துள்ளது. பொதுவாக வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடனுதவி வழங்கும்  முன் அதன் தலைவரான நிர்வாவாக இயக்குனர் அனுமதி பெறவேண்டும். வங்கியின் தலைவர் பதவி என்பது பதவி உயர்வு பெற்று வரும் பதவி அல்ல. மத்திய நிதி அமைச்சகத்தால் நேரடியாக குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் நியமனமாகும். எதன் அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு எவ்விதமான வழிகாட்டுதல் நெறிமுறைகள்  கிடையாது.

2G ஊழலில் தொடர்புடைய 5 நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய் அரசு வங்கிகள் நிதியுதவி செய்துள்ளது. அவை

1. Swan Telecom
2.Unitech.
3.Loop Telecom.
4.Datacom ( Videocon)
5.STel

நிறுவனங்கள், நிதியுதவி செய்த வங்கிகள், தொகை விபரமும்.

Swan telecom:    
 ஸ்டேட் பாங்க்                       =  747 கோடி
பஞ்சாப் நேஷ்னல் பாங்க்    = 500 கோடி
பாங்க் ஆஃப் பரோடா             = 400 கோடி
ஐ.டி.எப்.சி                                  = 200 கோடி
IL & FS                                         = 70 கோடி          

UNITECH :
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா     = 2,500 கோடி

STel:
ஐ.டி.பி.ஐ வங்கி    = 1538 கோடி

Datacom ( Videocon):   
ஸ்டேட் பாங்க்:       = 8,150 கோடி

Loop Telecom 
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  = 400 கோடி

இந்த கடன் அனைத்துமே ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தாள்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இதற்கு தொலை தொடர்புதுறையே ஜாமின் கையெழுத்து போட்டுள்ளதுதான் கொடுமை. இத்துறை அதிகாரிகள்  A. K. Srivastha , P.K. Mittal ஆகிய இரு தொலை தொடர்பு அதிகாரிகளும் சி.பி.ஐ வளையத்தில் உள்ளனர்.

1,76,000 கோடி ஊழல் செய்ய அரசாங்க வங்கிகளே ஊழல் கம்பெனிகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து இந்த ஊழலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது. 

வாழ்க காங்fகிரஸ் ஆட்சி! 


நாடு நாசமாக போக மறக்காமல் வரும் சட்டசபைதேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள். நமக்கு வாய்க்கரிசி நிச்சயம்!

 

10 comments:

  1. 1,76,000 கோடி ஊழல் செய்ய அரசாங்க வங்கிகளே ஊழல் கம்பெனிகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து இந்த ஊழலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது.


    .....சரியா போச்சு!!

    ReplyDelete
  2. உண்மையில் வயிறு எரிகிறது. இவர்களை அனைவரையும் சந்தியில் நிற்கவைத்து கண்களைக்கட்டிவிட்டு சுட்டுத்தள்ளவேண்டும் போல உள்ளது. நாட்டில் பாதிக்கு மேல் பஞ்சபராரிகளாக வருங்கால இந்தியர்கள்!!

    ReplyDelete
  3. Mr Clean Singh Vz Joker சுப்ரமணிய சுவாமி
    http://www.virutcham.com/2010/11/mr-clean-singh…ப்ரமணிய-சுவாமி/

    ReplyDelete
  4. Chitra said...

    1,76,000 கோடி ஊழல் செய்ய அரசாங்க வங்கிகளே ஊழல் கம்பெனிகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து இந்த ஊழலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது

    .....சரியா போச்சு!! ///
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. கக்கு - மாணிக்கம் said...

    உண்மையில் வயிறு எரிகிறது. இவர்களை அனைவரையும் சந்தியில் நிற்கவைத்து கண்களைக்கட்டிவிட்டு சுட்டுத்தள்ளவேண்டும் போல உள்ளது. நாட்டில் பாதிக்கு மேல் பஞ்சபராரிகளாக வருங்கால இந்தியர்கள் ///
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. Your strong views on irregularities, especially in the 2-G matter are welcome. But referring to the loans given by banks is perhaps not correct. The banks, as is their business, lend monies for projects which are apparently viable. They have lent loans to these companies after their getting licences from the Government for grounding the projects for which they got licences. It has nothing to do with how the licences were issued and whether the Government followed a proper method to issue licences.

    ReplyDelete
  7. vignaani said...

    Your strong views on irregularities, especially in the 2-G matter are welcome. But referring to the loans given by banks is perhaps not correct. The banks, as is their business, lend monies for projects which are apparently viable. They have lent loans to these companies after their getting licences from the Government for grounding the projects for which they got licences. It has nothing to do with how the licences were issued and whether the Government followed a proper method to issue licences///

    பதிவின் நீளத்தை கட்டுப்படுத்த சில தகவல்களை இந்த பதிவில் தரவில்லை.
    2G ஊழல் தொடர்பாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்த பின்னே இந்த கடன்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  8. ’2G ஊழல் தொடர்பாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்த பின்னே’ இந்தக் கம்பெனிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைத்திருக்கின்றன!

    ஒருவேளை சிபிஐ வழக்கு தொடருமளவுக்கு கில்லாடி கம்பெனியாக இருந்தால்தான் பணம் கொடுப்பார்களோ என்னவோ!

    கொடுமைடா சாமி!

    ReplyDelete
  9. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

    ஒருவேளை சிபிஐ வழக்கு தொடருமளவுக்கு கில்லாடி கம்பெனியாக இருந்தால்தான் பணம் கொடுப்பார்களோ என்னவோ!

    கொடுமைடா சாமி //

    வெறும் கொடுமை இல்லை. கொடுமையிலும் கொடுமை சாமி!

    ReplyDelete