Friday, November 19, 2010

சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.

நாம் கேட்டால் " இதெல்லாம் அரசின் செயல்பாடுகள் ரகசியமானது. ரகசிய தகவல்களை தரமுடியாது"  என கூறிவிடுவார்கள்!. நாம் என்ன பாகிஸ்தான் உளவாளிகளா? சரி விட்டு தள்ளுங்கள். 2G விவகாரத்தில் சி.பி.ஐ-க்கும் வருமானவரித்துறைக்கும் நடந்த கடித பரிவர்த்தனைகள் அதாவது கடிதங்களின் நகல்கள் (அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்) இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு வரவேண்டிய 1,76,000 கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது, இந்த நாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகும். எனவே அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டு என்பதால் அவை இங்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிட்டு பகிரங்கப்படுத்திய தளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

 இந்த கடிதங்களின் நகல்களை நிச்சயம் சாதாரண பாமரனால் பகிரங்கப்படுத்தியிருக்க முடியாது. நாட்டுப்பற்றுள்ள, ஊழலை சகித்து கொள்ள முடியாத, சூழ்நிலை கைதியாக இருக்கும் ஒரு நேர்மையான சி.பி.ஐ -யை சார்ந்தவர் ஒருவர் தான் இதை செய்திருக்க முடியும். நம் நாட்டில் நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.


















10 comments:

  1. தெரியபடுத்தியமைக்கு நன்றி :)

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    இதுவும் கடந்துபோகும்
    எல்லாவற்றையும் செய்தியாக மட்டுமே பார்க்கும் மக்கள் உள்ளவரை. :-((((

    ReplyDelete
  3. நன்றாக எல்லாரையும் தோலுரிக்கிறது இந்த அறிக்கைகள். தெரியப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  4. இந்த கடிதம் சொல்வது என்னவென்று சுருக்கமாகவாவது தமிழில் எழுதியிருந்தால் என்போன்ற பலரும் படிக்க எளிதாக இருக்கும்

    ReplyDelete
  5. Sugumarje said...

    தெரியபடுத்தியமைக்கு நன்றி ://

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. கல்வெட்டு said...

    தகவலுக்கு நன்றி

    இதுவும் கடந்துபோகும்
    எல்லாவற்றையும் செய்தியாக மட்டுமே பார்க்கும் மக்கள் உள்ளவரை. :-((( ///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. தகவல்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    இதை வைத்து இன்னொரு பதிவு போட வேண்டும் போல் உள்ளது..!

    கொல்றானுக ஸார் இவனுக.!

    ReplyDelete
  8. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் யாரையும் கைது செய்யவில்லை. இனியும் யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதில்லை!

    ReplyDelete
  9. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    தகவல்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    இதை வைத்து இன்னொரு பதிவு போட வேண்டும் போல் உள்ளது..!

    கொல்றானுக ஸார் இவனுக.//

    ஆமாம். நாம வேடிக்க பாத்துட்டு இருந்தா, நாட்டையே வித்துவானுக! இவனுகளுக்கு சாவுமணி அடிக்க காந்திய வழியா? அல்லது நேதாஜி வழியா என்பதை சீக்ரமே முடிவு செய்யனும்.

    ReplyDelete
  10. Joe said...

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் யாரையும் கைது செய்யவில்லை. இனியும் யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதில்லை //
    மக்கள் கொதித்து எழாதவரை இவர்கள் அட்டூழியம் தொடரும்!

    ReplyDelete